தமிழ் சினிமா பெருமைப்படும் அளவுக்கு படங்கள் தருபவர்கள் மிகக்குறைவு, மாமூல் மசாலாப்படங்கள் , கமர்ஷியல் படங்கள் எடுக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு பெண் இயக்குநர் இவ்வளவு நீட்டாக ஒரு படம் எடுக்கத்துணிந்ததே பெரிய விஷயம் , அதை மிகச்சரியாக சொல்ல வந்ததை இம்மி குறையாமல் நச் என்று சொன்ன விதம் அபாரம், வார்ம் வெல்கம் டூ கோலிவுட்
ஹீரோ ஒரு பாக்சிங் கோச்சர். அவரது சம்சாரம் இன்னொரு பாக்சரோட ஓடிப்போய்ட்டதால ஏகப்பட்ட வெறுப்பு , கோபம், இயலாமையுடன் ஆனால் திமிர்த்தனம் மாறாமல் இருக்கும் ஆள்
இவர் எதேச்சையாய் மீன் விற்கும் மீனவக்குடும்பத்துப்பெண்ணிடம் பாக்சிங்க் திறமை இருப்பதைப்பார்க்கிறார். அவருக்கு கோச்சிங்க் கொடுத்து
உலக சாம்பியன் ஆக்கத்துடிக்கிறார்.
வில்லன் 2 ரூபத்தில், முதல் வில்லி ஹீரோயினின் அக்கா, அவரும் ஒரு பாக்சர் தான் , தனக்குக்கிடைக்காத வாய்ப்பு தன் தங்கைக்குக்கிடைக்குதே என பொறாமையில் சதி செய்கிறார்,
இன்னொரு வில்லன் கமிட்டி தலைவர். தனக்கு இணக்கமாக நடக்கவில்லை என்பதால் பழி வாங்கக்காத்திருக்கார்
எதிர்ப்புகளை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே திரைக்கதை
ஹீரோவா மாதவன். சாக்லெட் பாய் இமேஜை ஆல்ரெடி ரன் படத்தில் தகர்த்து எறிந்து ஆக்சன் ஹீரோ ஆகி தம்பி படத்தில் இப்போ என்ன செய்ய என மிரட்டியவர்
ஜிம் பாடி , சோக தாடி, என ஆளே மாறி அசத்தல் நடிப்பை அள்ளி வழங்கி இருக்கார்.
ஹீரோயினா ரித்திகா சிங். வரலட்சுமி மாதிரி நடிப்புச்சூறாவளி,மீன் மார்க்கெட்டில் வசனம் பேசி கலாய்ப்பதில் இருந்து ஹீரோவை நம்பாத பார்வை பார்ப்பது, பாக்சிங் கோச்சிங் , க்ளைமாக்ஸ் ஃபைட் சீன்மை எல்லாம் அருமை
காக்கிச்சட்டை யில் கமல் ஓப்பனிங் சீனில் ஒற்றைக்கையால் தண்டால் எடுப்பாரே அதே சீனை அசால்ட்டாக செய்கிறார். அந்த சீனில் மாதவன் மிரள்வது பிரமாதம், பிஜிஎம் அந்த சீனில் அடக்கி வாசித்து விட்டது. மிரட்டி இருக்கலாம்
ஹீரோயினின் அக்காவாக வருபவர் பொறாமை , கோபம், இயலாமை எல்லாவற்றையும் அட்டகாசமாக வெளிப்படுத்தி இருக்கார்
வில்லன் ஓகே ரகம்
சுதா கொங்கரா தான் திரைக்கதை , இயக்கம்..
ஒரு சீன் கூட போர் அடிக்காத அளவில் பின்னி எடுத்து விட்டார்
ஆனால் வசனம் எழுதும்போது ( தமிழில் வசனம் வேறு ஒருவர்) அதை இன்னும் நாகரீகமா சொல்லி இருக்கலாம்.
கோபத்தை வெளிப்படுத்த கெட்ட வார்த்தம்னு பேசனும்னு அவசியம் இல்லையே? மவுனம் , முறைப்பு கூட கோபத்தின் வெளிப்பாடே
இசை சந்தோஷ் நாராயணன். பாடல் காட்சிகளில் முதல் வகுப்பு, பின்னணி இசையில் டிஸ்டிங்க்சன்
சில காட்சிகளில் கை தட்டல் வர வைக்கும் அளவு பிரமாதப்படுத்த வேண்டிய இசை அடக்கி வாசித்தாற்போல் இருந்தது. இதே தவறை என்னை அறிந்தால் படத்தில் கவுதம் செய்திருந்தார்.
வசனத்தில் பாலீஷ் , பிஜிஎம்மில் கமர்ஷியல் என இன்னும் செதுக்கி இருந்தால் படம் வேற லெவல்
ஒளிப்பதிவு கன கச்சிதம்

மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 150 கோடி மக்கள் தொகை நாட்டில் வருசத்துக்கு.1 சாம்பியன் தான் உருவாகறான் ஏன் ?
1 150 கோடி மக்கள் தொகை நாட்டில் வருசத்துக்கு.1 சாம்பியன் தான் உருவாகறான் ஏன் ?
பாலிடிக்ஸ் இல்லைன்னா தெருவுக்கு தெரு சாம்பியன் உருவாவான்# இ
3 இருக்கறவனுக்கு ஒரு பொண்டாட்டி.
இல்லாதவனுக்கு 1000 பொண்டாட்டி #இறுதிச்சுற்று
4 குத்துச்சண்டைல சாகற வரை அடிக்கனும்.இது நான் சொல்லல.முகமது அலி சொன்னது #,இ சு
5 சரக்கு அடிச்சா லிவர் கெட்டுடும்
தெரியும்.அதான் லிவர் சாப்டுட்டே சரக்கடிக்கறேன்.சாப்பிடற லிவர் கெடும்.நம்ம லிவர் தப்பிடும்.எப்டி ஐடியா?#இ
6
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 இறுதிச்சுற்று = 112 நிமிடங்கள்.மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு ( கீர்த்தி = புகழ்)
1 இறுதிச்சுற்று = 112 நிமிடங்கள்.மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு ( கீர்த்தி = புகழ்)
2 விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்ற ,மாதவன் ன் புது கெட்டப்பில் இறுதிச்சுற்று @ திருவனந்த புரம் ஸ்ரீ குமார்
3 ஒரு பெண் இயக்குநர் இயக்கி இருந்தும் வசனங்கள் ரொம்ப போல்டாக அதீத கோபத்துடன் இருப்பது அதிர்ச்சி + ஆச்சர்யம் # இ
4 ஹீரோயின் கேரக்டரைசேசன் பிரமாதம் ,நடிப்பு பின்னுது # இ
5 ஹீரோயின் அபாரமான ந்டிப்பில் இயக்குநரின் கச்சிதமான இயக்கத்தில் இறுதிச்சுற்று இடைவேளை வரை குட்
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 ஹீரோயின் பாத்திரப்படைப்பு , அவர் நடிப்பு எல்லாம் செம
2 ஹீரோயின் அக்கா கேரக்டரைசேசன் அழகு. வில்லி போல் காட்டி பின் நார்மல் மனுஷி ஆவது குட்
3 ஸ்போர்ட்சில் நடக்கும் அவலமான பாலிடிக்சை சொன்ன விதம்
1 ஹீரோயின் பாத்திரப்படைப்பு , அவர் நடிப்பு எல்லாம் செம
2 ஹீரோயின் அக்கா கேரக்டரைசேசன் அழகு. வில்லி போல் காட்டி பின் நார்மல் மனுஷி ஆவது குட்
3 ஸ்போர்ட்சில் நடக்கும் அவலமான பாலிடிக்சை சொன்ன விதம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 மிக வித்தியாசமான இந்தக்கதையில் ஹீரோயின் ஹீரோ மேல் காதல் கொள்வது எதுக்கு? தேவை இல்லாத திணிப்பு. வயசு வித்தியாசம் 25 வருசம்.
2 ஹீரோயின் கைகளில் வில்லி ஏற்படுத்திய காயத்துடன் பாக்சிங் களத்தில் இறங்குவது எப்படி? டாக்டர் எப்படி அனுமதித்தார்?
3 ஹீரோயின் அக்காவுக்கு ஏற்பட்ட பொறாமை பாக்சிங் சான்ஸ் தங்கைக்குக்கிடைத்தது என்பதாலா? ஹீரோவின் காதல் அவளுக்குக்கிடைத்தது என்பதாலா? என்பதில் இன்னும் தெளிவு காட்டி இருக்கலாம்
4 க்ளைமாக்ஸ் ஃபைட் சீனில் ஹீரோயின் வெல்வது இன்னும் மாஸ் சீனாகக்காட்டி இருக்கனும்
சி பி கமெண்ட் = இறுதிச்சுற்று - சர்வதேச தரத்தில் ஒரு தமிழ்சினிமா, நாயகி நடிப்பு, இயக்கம், இசை பிரமாதம், ஏ செண்ட்டர் ஃபிலிம், விகடன் -46 , ரேட்டிங்-3.5 / 5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 46
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = நன்று
ரேட்டிங் =3.5 / 5
திருவனந்த புரம் ஸ்ரீகுமார் ல படம் பார்த்தேன்
Theatrical release poster
| |
Directed by | Sudha Kongara |
---|---|
Produced by | S. Sashikanth C. V. Kumar (Tamil) R. Madhavan (Hindi) Rajkumar Hirani (Hindi) |
Written by | Sudha Kongara Sunanda Raghunathan Arun Matheshwaran(Tamil dialogues) |
Screenplay by | Sudha Kongara |
Story by | Sudha Kongara |
Starring | R. Madhavan Ritika Singh |
Music by | Santhosh Narayanan |
Cinematography | Sivakumar Vijayan |
Edited by | Sathish Suriya |
Production
company | |
Distributed by | Dream Factory (Tamil) Rajkumar Hirani Films Tricolour Films (Hindi) |
Release dates
|
|
Country | India |
Language | Tamil Hindi |