ஸ்பாய்லர் அலெர்ட்
ஹீரோயின் ஒரு ரைட்டர் .சில கதைக0்ள் , சில நாவல்கள் எழுதி இருக்காங்க. ஹீரோவை எதேச்சையா மீட் பண்றாங்க , பார்த்த கொஞ்ச நாள்லயே ஹீரோ 143 சொல்றாரு.. ஹீரோயினுக்கு அது பிடிக்கலை .காதலுக்கு 144 போட்டுடறாரு இதயம் முரளி மாதிரி பம்மிக்கிட்டே இருக்கனும்னு நினைச்சாரோ என்னவோ? சாரி , எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்குனு பொய் சொல்லிடறாரு . ஹீரோ அமைதியா அவர் வழில போய்டறாரு /
சில வருடங்கள் கழிச்சு எதேச்சையா இருவரும் மீட் பண்றாங்க . எங்கே உங்க ஆள்/னு கேட்க நான் சும்மா ப்ரூடா விட்டேன் , எனக்கு ஆளே இல்லைங்கறார். இப்பொ 2 பேருக்கும் பத்திக்குது . லவ் பண்றாங்க .
வில்லன் ஒரு சைக்கோ ஆள் . அதாவது ஜோடியை துன்புறுத்தி அதில் இன்பம் காண்பவன் . 2002ல் ரிலீஸ் ஆன செகரெட்டரி பட ஹீரோ மாதிரி 2015ல் ரிலீஸ் ஆன ஃபிஃப்ட்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே பட ஹீரோ மாதிரி ..இப்படிப்பட்ட வில்லன் கூட ஹீரோயின் ஏன் சேரனும் ? ஏன்னா ஹீரோயினுக்கு அவனையும் பிடிச்சிருக்கு . அவன் பண்ற சாடிசம் கூட விரும்பி ஏத்துக்கறா.
கொஞ்சம் குழப்பமா இருக்கில்ல? தெளிவா சொல்லிடறேன். ஹீரோயின் மனதளவில் மனசார ஹீரோவை காதலிக்கறா. உடல் அளவில் அல்லது உடல் தேவைக்கு வில்லனை காதலிக்கறா.காதல் வேற காமம் வேற ரெண்டையும் குழப்பிக்கக்கூடாதுனு எண்ணம் உள்ளவ. ஹீரோவையும், ஆடியன்சையும் குழப்பறா
இந்த விஷயம் ஹீரோவுக்கு தெரிய வருது. அடச்சீ.. நீ எல்லாம் ஒரு பொண்ணா? அப்டினு கண்டபடி திட்டிட்டு அவன் பிரேக்கப் பண்ணிடறான்
இப்போ ஹீரோயின் தன் மனசை புண்படுத்திய ஹீரோவையும் , தன்னை உடல் அளவில் துன்புறுத்திய வில்லனையும் பழி வாங்க நினைக்கறா.2014 ல் ரிலீஸ் ஆன GONE GIRL நாயகி மாதிரி
இந்த இடத்துல ஹீரோயின் கேரக்டர் ஸ்கெட்சை நல்லா புளி போட்டு விளக்கிடறேன் 1990ல் ரிலீஸ் ஆன ஹென்றி அண்ட் ஜூன் பட நாயகி மாதிரி அவ ஒரு நாவல் எழுதறான்னா அந்த கேரக்டரா வாழ்ந்து பார்த்துடுவா . உதாரணமா “ முன் பின் அறிமுகம் இல்லாதவனுடன் உறவு என்ற டைட்டிலில் ஒரு நாவல் எழுதனும்னா அந்த மாதிரி ஒரு அனுபவத்தை ஏற்படுத்திக்குவா
இப்படிப்பட்ட நாயகி கம் ரைட்டர் ஒரு நாள் அவளோட அப்பார்ட்மெண்ட்ல கொலை செய்யப்பட்டுக்கிடக்கறா. போலீஸ் வருது , விசாரிக்குது. நாயகியைக்கொலை செய்தது ஹீரோவா? வில்லனா? அல்லது மூன்றாவது வேறு நபரா?னு விசாரிக்குது . அந்த விசாரணை தான் மொத்தப்படமும்
ஹீரோயினா அம்ருதா சீனிவாசன் அபாரமான நடிப்பு . குடும்பப்பாங்கான முகம் . பெண்ணின் பாலியல் சுதந்திரம் பற்றிய அவரது கருத்துகள் விவாதத்துக்கு உரியவை என்றாலும் ரசிக்கும்படி செய்திருக்கிறார் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் உண்டு
ஹீரோவாக விக்னேஷ் சண்முகம் ஆரம்பத்தில் ஏதோ ரவுடி மாதிரி தெரிந்தாலும் ஃபிளாஸ்பேக்கில் பிரமாதமாக நடித்து கவனம் ஈர்க்கிறார். 3 விதமான் கெட்டப்பில் வருகிறார்
வில்லனாக ஹீரோயின் கூட லிவ் இன் டுகெதராக வாழ்பவராக ஸ்ரீ ராஜூ நடிப்பு கனகச்சிதம்
போலீஸ் ஆஃபீசராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன் யதார்த்தமான நடிப்பு .பெண் போலீஸாக வரும் கிரிஜா அழகிய முகம் . நல்ல நடிப்பு . இவர் கொலையாளீயாக இருக்குமோ என்ற போலீஸ் ஆஃபீசர் சந்தேகப்படுவதும் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமையும் காட்சிகளும் ஒரு சஸ்பென்ஸ் படத்தில் திரைக்கதை எப்படி அமையனும் என்பதற்கு கட்டியம் கூறுகிறது
சபாஷ் டைரக்டர் ( மனோ கண்ணதாசன்)
1 க்ரிஸ்பான திரைக்கதையை புதுமுகங்களை வைத்து ஒன்றரை மணி நேரத்தில் பக்காவாக எடிட் பண்ணிய விதம் அபாரம்
2 கத்தி மேல் நடப்பது போன்ற எசகுபிசகான கதை ஆனால் ஒரு காட்சி கூட முகம் சுளிக்கும்படி இல்லை ,குடும்பப்பெண்களும் ரசிக்கும்படி எடுத்த விதம்
3 ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசை சுமார் ரகம் , ஒளிப்பதிவு ரசிக்கும்படி . டெக்னிக்கல் அம்சங்கள் எல்லாமே சராசரிக்கும் மேலே , இத்தனைக்கும் இது ஒரு மினிமம் பட்ஜெட் படம்
4 புத்தகத்தின் கடைசி பக்கம் என்பதற்கான க்ளூவை தன் மகளுக்கு பாடம் நடத்தும்போது எதேச்சையாக கண்டுபிடிக்கும் போலீஸ் ஆஃபீசர்
5 ஹீரோ வும் நண்பனும் சாமார்த்தியமாக கான்ஃபரன்ஸ் காலில் போலீசிடம் பேசுவதும் சந்தேகப்பட்டு போலீஸ் ஹீரோவிடம் ஃபோனை உங்க ஃபிரண்ட் கிட்டே கொடுங்க அவர் என்ன கலர் சர்ட் போட்டிருக்கார்? எனக்கேட்டு மடக்குவதும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள் \
1 வில்லன் மேல் சந்தேகப்பட்டு போலீஸ் விசாரிக்கும்போது அவர் ரொம்ப ஓவரா துள்ளறார். எந்த வித அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படி எல்லாம் போலீஸ் முன் கை நீட்டிப்பேச முடியாது நொங்கு எடுத்துடுவாங்க
2 விசாரணை செய்யும் போலீஸ் ஆஃபிசர் சாதா பேசிக் மாடல் நோக்கியா 1100 வெச்சிருக்கார். அவருக்குக்கீழ் பணி ஆற்றுபவர் , வில்லன் உட்பட பலரும் காஸ்ட்லி ஃபோன் வெச்சிருக்காங்க . ஒரு சீனில் கூகுள் லொக்கேச்ன் உங்க வாட்சப்க்கு அனுப்பி இருக்கேன்னு வசனம், வேற வருது
3 வாடகைக்கொலையாளிக்கு அட்வான்ஸ் தொகை அனுப்புவது ஓக்கே . பேலன்ஸ் பணம் எப்படி செட்டில் செய்யப்பட்டது ?
4 வில்லனின் அம்மாவுக்கு வில்லனின் ஃபோனில் இருந்து அவசரமா பணம் அனுப்புங்க என யாராவது மெசேஜ் அனுப்பினா கால் பண்ணி மகனிடம் பேசி கன்ஃபர்ம் பண்ணாமயா அவ்ளோ பெரிய தொகையை ட்ரான்ஸ்ஃபர் பண்ணுவாங்க ?
5 குற்றவாளியை விசாரிக்கும்போது அல்லது கைது செய்யும்போது அவ்ளோ உயரமான இடத்தில் அசால்ட்டாவா போலீஸ் இருக்கும் ? தற்கொலை செய்ய குதிச்சிடுவான் என தெரியாதா?
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அபாரமான சஸ்பென்ஸ் த்ரில்ல்ர் . புதுமுகங்கள் நடித்திருந்தும் கவனம் ஈர்க்கிறது டோண்ட் மிஸ் இட் அமேசான் பிரைம் ல கிடைக்குது ரேட்டிங் 3 / 5