1959 ஆம் ஆண்டு வாசன் இயக்கிய ஹிந்திப்படமான பைகம் ( செய்தி) படத்தின் அஃபிசியல் தமிழ் ரீமேக் தான் இரும்பு திரை. ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன இப்படம் தமிழில் ஹிட் என்ற அளவில் தான் அமைந்தது 175 நாட்கள் ஓடியது
தமிழில் டைட்டில் வைத்ததற்கு சுவராஸ்யமான கதை உண்டு. வாசன் ஹிந்திப்படத்தை ரீமேக் செய்ய அறிவித்து தமிழில் டைட்டில் வைக்க ஒரு போட்டி வைத்தார். அவரது அலவலர்கள் யார் வேண்டுமானாலும் ஐடியா தரலாம் என்றார். ஒரு சிறுவன் ஆஃபீஸ் பாய் மட்டும் 2500 டைட்டில்கள் சொன்னானாம், அதில் ஒன்று தான் இரும்பு திரை. அந்த சிறுவனுக்கு பல பரிசுகளை அளித்தாராம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அம்மா ஒரு கைம்பெண்.நாயகனுக்கு ஒரு அண்ணன், அவருக்கு திருமணம் ஆகாத ஒரு மகள் உண்டு அண்ணன் ஒரு மில்லில் வேலை செய்கிறார். நாயகன் கல்கத்தாவில் பொறியியல் கல்லூரியில் படிக்கிறார். படிப்பு முடிந்தபின் அண்ணன் வேலை செய்யும் அதே மில்லில் வேலை கிடைக்கிறது
நாயகன் அந்த மில்லில் வேலை செய்யும் டைப்பிஸ்ட்டைக்காதலிக்கிறார்.மில் ஓனரின் மகளுக்கு நாயகனின் காதல் விஷயம் பிடிக்கவில்லை . அவர் நாயகனை அடைய நினைக்கிறார்
மில் ஓன்ர் தொழிலாளர்களைஏமாற்றி கையெழுத்து வாங்கி 3 மாத போனஸ்க்குப்பதிலாக ஒரு மாத போனஸ் மட்டுமே கொடுத்து மூன்று மாதம் தந்ததாக பொய்க்கையெழுத்து வாங்குகிறார்.இது போல கடந்த ஆறு வருடங்களாக தொழிலாளர்களை ஏமாற்றி வருகிறார்
மில்லில் வேலை செய்யும் ஒரு தொழிலாளர்க்கு விபத்தில் காயம் ஆக இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய முடியாதவாறு நேர்கிறது . இந்த விஷயத்திலும் தொழிலாளரை மில் ஓனர் ஏமாற்றுகிறார்
இதனால் நாயகன் யூனியன் ஒன்றைத்துவங்குகிறார். இது அண்ணனுக்குப்பிடிக்கவில்லை , எஜமான் விசுவாசம் உள்ளவர் . இதனால் கருத்து வேற்றுமை கொண்டு நாயகன் ஆன தம்பியை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார்
அண்ணன் மகள்: திருமணம் நடக்க இருக்கிறது. ஆனால் யூனியன் ஸ்ட்ரைக்கை வாபஸ் பெற வேண்டும் என மில் ஓனர் நிபந்தனை விதிக்கிறார்
நாயகன் - டைப்பிஸ்ட் காதல் நிறைவேறியதா? வில்லியாக இருக்கும் மில் ஓனர் மகள் என்ன செய்தாள் ? தொழிலாளர் பிரச்சனையில் மில் ஓனர் - நாயகன் எப்படி மோத நேர்ந்தது ? அண்ணன் - தம்பி இணைந்தார்களா? இவற்றுக்கெல்லாம் பின் பாதி திரைக்கதை பதில் சொல்கிறது
நாயகன் ஆக சிவாஜி கம்பீரமான நடிப்பு , இது ம்லையாளத்தில் டப் செய்யப்பட்டிருந்தால் கம்யூனிச மாநிலத்தில் நன்றாக ஓடி இருக்கும்.
நாயகி ஆக வைஜெயந்திமாலா துடிப்பான நடிப்பு . இன்னொரு நாயகியாக சரோஜா தேவி அழகு மயில்
திரைக்கதை முன்று விதமாகப்பிரயாணிக்கிறது . தொழிலாளர் - முதலாளி பிரச்சனை , நாயகனின் காதல் ,அண்ணன் - தம்பி பிரச்சனை
மூன்று மணி நேரம் படம் ஓடுகிறது , ஆனால் போர் அடிக்கவில்லை
செம ஹிட் சாங்க்ஸ்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - சிவாஜி ரசிகர்கள் பார்க்கலாம் , பொறுமை வேண்டும் . ரேட்டிங் 2.75 / 5