Showing posts with label இயக்குநர் ராஜேஷ். Show all posts
Showing posts with label இயக்குநர் ராஜேஷ். Show all posts

Tuesday, November 10, 2015

தூங்காவனம்'

கமலஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், யூகி சேது, மதுஷாலினி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'தூங்காவனம்'. ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
* தனது சரக்கை திருடிய போலீஸ் அதிகாரியின் மகனை கடத்தும் போதைப்பொருள் கும்பலின் தலைவன். சரக்கை திரும்பத் தருமாறு மிரட்டுகிறான். தன்னையும் தன் மகனையும் காப்பாற்ற போலீஸ் தந்தை போடும் திட்டமே படம் 'தூங்காவனம்'.
* கமல், த்ரிஷா, கிஷோர் மூவரும் போலீஸ் அதிகாரியாகவும், பிரகாஷ்ராஜ் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனாகவும் நடித்திருக்கிறார்கள். த்ரிஷா நடிப்பில் வெளியாக இருக்கும் 50-வது படம் இது.
* 60 நாட்களில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு படப்பிடிப்புகளையும் முடித்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்குச் சொல்லும் முன்பு படக்குழுவினர் அனைவருக்குமே நடிப்புப் பயிற்சியில் பங்கேற்றதால் தான் விரைவில் முடிக்க முடிந்தது என்கிறது படக்குழு
* தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். படத்தில் வரும் காரின் நம்பர் ப்ளேட், போலீஸ் உடை என அனைத்தையுமே மாற்றி தெலுங்கு படத்துக்கான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
* முரட்டுத்தனமாகாவும் அதே வேளையில் ஸ்டைலாகவும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். அப்போது, தமிழ் மக்களுக்காக நடைபெற்ற ஒரு போராட்டத்தில் இதே போன்றதொரு தோற்றத்தில் இருந்திருக்கிறார். கமலிடம் "உங்களது தோற்றம் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும்" என்று அந்த போராட்டத்தின் போது எடுத்த புகைப்படத்தைக் காட்டியிருக்கிறார். இயக்குநர் சொன்னதும், கமல் சரி என்று ஒப்புக் கொண்டார்.
* படப்பிடிப்பு நடைபெறும்போது எடிட்டிங்கும் அங்கேயே நடைபெற்று இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள் இடைவெளி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் முதல் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டார்கள். எடிட்டிங்கிற்கு என்று தனியாக எந்த ஒரு நாளையும் படக்குழு செலவிடவில்லை.
* ஒரு நாள் விபத்துக் காட்சிக்கு ஒப்பனை செய்ய ஒப்பனைக் கலைஞரை படக்குழுவினர் அழைக்கவில்லை. ஆனால் அந்த கலை கமலுக்குத் தெரியும் என்பதால், அவரே அன்று ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி இருக்கிறார்.
* இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் மதுஷாலினி. இப்பாத்திரத்துக்கு மதுஷாலினி இருந்தால் நன்றாக இருக்கும் என சிபாரிசு செய்திருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
* படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கதைப்படி கிடையாது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமலே பாடியிருக்கிறார்.
* ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படத்துக்காக ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் பெரிய பார் செட்டப் போடப்பட்டு, அதனுள் பிரத்யேக காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு இருக்கிறது.
* இப்படத்தில் த்ரிஷாவின் வேடத்துக்கு பல்வேறு மேக்கப் செய்து பார்த்தார்கள். போலீஸ் வேடம் என்பதால் இறுதியில் எந்த ஒரு மேக்கப்பும் போடாமல் நடித்திருக்கிறார். கண்ணுக்குக் கூட மேக்கப் போடப்படவில்லை.
* 'ஸ்லீப்லஸ் நைட்' என்ற ப்ரெஞ்ச் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் 'தூங்காவனம்'. ப்ரெஞ்ச் படத்தில் பணியாற்றிய சண்டைக் கலைஞர்கள் அனைவருமே இப்படத்திலும் பணியாற்றி இருக்கிறார்கள்.
* பாரில் உள்ள சமையல் செய்யும் இடத்தில் கமல் - த்ரிஷா - கிஷோர் மோதும் ஒரு சண்டைக்காட்சி இப்படத்தில் இடம்பெற்று இருக்கிறது.
* படப்பிடிப்பு தளத்தில் பிரம்மாண்டமான விளக்குகள் எல்லாம் போடாமால், படப்பிடிப்பு தளமே முழுக்க விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த வெளிச்சத்தில் மொத்த படத்தையும் படமாக்கி இருக்கிறார்கள்.
* வேறு ஒரு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கும் போது, இயக்கத்தில் தலையிடுவார் கமல் என்பார்கள். அது குறித்து இயக்குநர் ராஜேஷிடம் கேட்டால், "கமல் சாரிடம் இந்தக் காட்சி எப்படி வந்திருக்கிறது பாருங்கள் என்று கேட்டால், படத்தின் இயக்குநர் நீங்கள் தான், அதைப் பார்க்கத் தான் உங்களுக்கு சம்பளம் கொடுத்திருக்கிறேன்" என்று கமல் சொன்னதாக தெரிவித்தார்.
* இப்படத்துக்கான ஒலிவடிவமைப்பை லாஸ்-ஏஞ்சல்ஸ் நகரில் செய்திருக்கிறார்கள். இதற்காக ஒரு பெரும் தொகையை படக்குழு செய்திருக்கிறது.
* படத்தில் பார் காட்சிகள் அதிகமாக இடம்பெற்று இருப்பதால் சென்சார் அதிகாரிகள் 'U/A' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் பெற்றிருக்கிறது.
* இதுவரை கமலின் தெலுங்கு படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தான் டப்பிங் பேசியிருக்கிறார். கமல் முதன் முதலில் தெலுங்கில் டப்பிங் பேசிய படம் இது தான்.
* தெலுங்கில் நாகார்ஜுன் மகன் அகிலின் படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாவதால், 'தூங்காவனம்' தெலுங்கு பதிப்பு நவம்பர் 20-ம் தேதி வெளியாகிறது. அதுவரை ஆந்திராவில் இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு பதிப்புகளின் வெளியீடுமே இல்லை என்கிறது படக்குழு.
* 13 வருடங்களுக்குப் பிறகு ஒரே நாளில் கமல் - அஜித் படம் வெளியாகிறது. 'தூங்காவனம்' - 'வேதாளம்' படங்களுக்கு முன்பாக ஒரே நாளில் வெளியான கமல் - அஜித் படம் 'பம்மல் கே.சம்பந்தம்' - 'ரெட்'.

-thanx- the hindu

Thursday, October 08, 2015

'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன்

'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
'தூங்காவனம்' இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மத்தியில் கமல்ஹாசன் பேசிய போது | படம்: எல்.சீனிவாசன்
கொஞ்சம் திட்டமிட்டால், குறைந்த நாட்களில் முழு திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட முடியும் என்று 'தூங்காவனம்' இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் 'தூங்காவனம்' படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீடு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பாடலாசிரியர் வைரமுத்து, த்ரிஷா, மதுஷாலினி உள்ளிட்ட படக்குழுவினரோடு தனுஷ், ஸ்ருதிஹாசன், கெளதம் மேனன், பாண்டிராஜ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கமல்ஹாசன் பேசியது, "'தூங்காவனம்' திரைப்படம் 40 நாட்களில் எடுத்தார்கள், 30 நாட்களில் எடுத்தார்கள் என வெவ்வேறு நம்பர்கள் சொல்லப்படுகின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். பல காட்சிகள் இருமுறை செய்யப்படுவதாகவே அமைந்தன. கார் உருளும் காட்சிகள் மற்றும் போலீஸ்காரர்கள் வரும் காட்சி என அனைத்துமே இரண்டு முறை காட்சிப்படுத்தினோம். இப்படி எல்லாமே இரண்டு முறை பண்ணியதால், இது இரண்டு படங்கள் என திண்ணமாக சொல்லலாம்.
இந்த இரண்டு படங்களையும் நாங்கள் முதலில் 52 நாட்களில் முடிக்க தீர்மானித்தோம். எடுத்த படத்தைப் போட்டு பார்த்துவிட்டு சில திருத்தங்கள் செய்ய வேண்டியது இருந்ததால், மேலும் 8 நாட்கள் அதிகமாகின. மொத்தம் 60 நாட்களில் 2 படங்கள். பிரித்துக் கொண்டால் 30 நாட்களில் 1 படம் என்று சொல்லலாம்.
இதை ஏன் பெருமையாக சொல்கிறேன் என்றால் நானே 200 நாட்களுக்கு படம் பண்ணியிருக்கிறேன். கொஞ்சம் திட்டமிட்டால், அவ்வளவு நாட்கள் தேவையில்லை என்பது என் கருத்து. இதைச் சொல்லும் போது, பல்வேறு நபர்கள் இந்தக் காலத்தில் முடியாது என்று சொன்னார்கள். செய்யும் முடியும் என்று தீர்மானித்து, கடந்த 5, 6 வருடங்களாக ஒரு நல்ல அணியை அமைத்திருக்கிறோம்.
அந்த அணியின் வெற்றி தான் இந்தப் படம். நான் சொல்லிவிட்டேன் என்பதால் பண்ணிய படம் அல்ல. இதற்கு முன்பு 'ராஜபார்வை' என்ற படம் 55 நாட்களில் 2 படங்கள் பண்ணினோம். அத்தனை நபர்களும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக சாத்தியம் தான்.
ஒரு சி.டி மாதிரியான வட்டை கையில் கொடுத்து இதுதான் பாட்டு என்று நிரூபிக்க வேண்டிய காலம் இல்லாமல், இப்போது நான் பேசிக் கொண்டிருக்கும் போது ஐ-டியூன்ஸில் பாடல் வெளியாகிவிட்டது. அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது" என்று கமல்ஹாசன் பேசினார்.
இவ்விழாவின், இறுதியாக சி.டியை வெளியிட கேட்டார்கள், இல்லை அது வேண்டாம் என்று கமல் மறுத்துவிட்டார்.
'தூங்காவனம்' படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் இருக்கிறது. அப்பாடலை வைரமுத்து எழுத, கமல்ஹாசன் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ehidu
thanx-thehinndu

Monday, April 20, 2015

ஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில்லர்

'மன்மதன் அம்பு' படத்தில் கமல் மற்றும் த்ரிஷா | கோப்பு படம்
'மன்மதன் அம்பு' படத்தில் கமல் மற்றும் த்ரிஷா | கோப்பு படம்
கமல்ஹாசன் - த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ராஜேஷ் இயக்கவுள்ளதாக தெரிகிறது. இவர், கமல் உடன் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணியாற்றி வந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
'உத்தம வில்லன்' மே 1-ம் தேதி வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 'பாபநாசம்' வெளியீட்டு தேதியை முடிவு செய்ய இருக்கிறார்கள். தனது அடுத்த படத்தை இயக்கி, நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் கமல் என்று செய்திகள் வெளியானது.
இந்நிலையில், "முதலில் தானே இயக்கி நடிப்பது என முதலில் கமல் முடிவு செய்திருந்தார். தற்போது தன்னிடம் நீண்ட நாட்களாக இணை இயக்குநராக பணியாற்றி வரும் ராஜேஷை இயக்க சொல்லியிருக்கிறார்.
'மன்மதன் அம்பு', 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' உள்ளிட்ட படங்களில் கமலுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் ராஜேஷ்" என்று படக்குழு தெரிவித்தது.
'ஓர் இரவு' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் முழுக்க மொரீஷியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
"இப்படத்தின் கதை குறித்து த்ரிஷாவுடன் கமல்ஹாசன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அவரும் இப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறார். விரைவில் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்படுவார்" என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.
இப்படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாகும். உலகளவில் உள்ள முக்கிய ஸ்டண்ட் கலைஞர்களை இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார் கமல்.
இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தமாகி இருக்கிறார். கமல் - ஜிப்ரான் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் 4-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி  -த இந்து