Showing posts with label இன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, June 27, 2015

இன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்

கிரிக்கெட்ல ஓப்பனிங்க் பால்லயே சிக்சர் அடிப்பதும் , காதலியுடனான முதல் தனிமை சந்திப்பிலேயே லிப் கிஸ் அடிப்பதும் , சினிமாவின் முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைவதும்  படு சுவராஸ்யம்.தமிழ் சினிமா அதிகம் கையாளாத  டைம் மிஷின் கான்செப்ட்டில்  காமெடி , ஆக்‌ஷன் கலந்து கட்டி பிரமாதமான  திரைக்கதை அமைத்துப்படம் பண்ணி இருக்கும் திருப்பூர் ரவிக்குமார்க்கு ஒரு பூங்கொத்து.



2065 ல் கதை நடக்குது. ஒரு சயிண்ட்டிஸ்ட் ஒரு டைம் மிஷினை கண்டு பிடிக்கறார். அந்த  டைம் மிஷினை  வெள்ளோட்டம் பார்க்க நம்ம ஊர் ல மெட்ரோ ரயில் வெள்ளோட்டம் விட ஜெயிலில் இருந்து ஜெ வரனும்கற அவசியம் போல் எந்த  நிர்ப்பந்தமும் இல்லாம டக்னு அவர் சவுகர்யத்துக்கு ஒரு நாயை டைம் மிஷின்ல உட்கார வெச்சு 2015 கால கட்டத்துக்கு அதாவது நம்ம  நிகழ்காலத்துக்கு அனுப்பறார்


ஹீரோ வழக்கம் போல்  வேலை  இல்லாதவரு ,நாட்ல வேலை இல்லாதவன் லட்சக்கணக்கில் இருந்தாலும் காதலியோ கேர்ள் ஃபிரண்டோ இல்லாதவன் ரொம்ப ரொம்ப கம்மி ( நம்ம ட்விட்டர் பிரபலங்கள்  கவிதையின் காதலன், மழைக்காதலன், சிவா ,சட்டம்பி ஸ்டாலின்  எல்லாம் அவங்க கடலை போடும் ஃபிகர்சை எண்ணிப்பார்க்கவே ஐ மீன் கவுண்ட் பண்ணிப்பார்க்கவே 2 நாள் ஆகுமாம் ) என்பதன் சித்தாந்தத்தில் ஒரு தொழில் அதிபர் மகளை லவ்வறார்.  ஹீரோயினோட அப்பா கிட்டே  இண்ட்ரோ  குடுக்கும்போது ஷேர் மார்க்கெட் டீலிங் பண்றார்னு சும்மா அடிச்சு விட்டுடுது . உண்மை தெரிஞ்சுதும் ஹீரோவை விரட்டி விட்றார் ஹீரோயினோட அப்பா . 

 ஹீரோவோட  ஃபிரண்ட் நம்ம நல்ல நேரம் சித்தோடு சதீஷ் மாதிரி ஒரு பிரபல ஜோசியர் 

இவங்க  2 பேர் கைக்கும் அந்த  டைம்  மிஷின்  கிடைக்குது. அதை  வெச்சு வியாபாரம் பண்றாங்க.  எப்டின்னா காணாமப்போன பொருட்களை  தொலைச்ச இடம், நேரம்  சொன்னா இவங்க டைம் மிஷின்ல போய்  அதை கண்டு பிடிச்சு எடுத்துக்கொடுத்து  ஃபீஸ்  வாங்கிக்குவாங்க .

இப்படி ஜாலியா லைஃப்  போய்ட்டிருக்கும்போது ஒரு சிக்கல் . போலீஸ் என்கவுண்ட்டர்ல  போட்டுத்தள்ளப்பட்ட ஒரு ரவுடியை தவறுதலா கடந்த காலத்தில் போய்  ஹீரோ அண்ட் கோ  பிழைக்க வெச்சுடறாங்க .பிழைச்ச  வில்லன் ஹீரோயினோட அப்பாவை   கொலை பண்ண  நினைக்கறான். அவனை எப்படி சமாளிகறாங்க , மீண்டும்  கடந்த காலத்தில் போய் அவங்க  செஞ்ச  தப்பை சரி செய்ய  முடிஞ்சுதா? என்பதுதான்  படத்தின்  பிரமாதமான  திரைக்கதை 


 படத்தின்  முதல்  ஹீரோ  திரைக்கதை  தான். அல்பசொல்பமான ஆட்கள் இல்லை. நம்ம பிரபல பதிவர்கள் திரைக்கதை  நாலெட்ஜ் உள்ள கருந்தேள் கண்ணாயிரம் , இயக்குநர் செல்வராகவனால் பாராட்டப்பட்ட ராஜன்  மற்றும்5 பேர்  கொண்ட  குழு தான் திரைக்கதை படைப்பாளிகள் 

  ஜீரோ கிலோமீட்டர்  எனும் குறும்படம்  மூலம் நாளைய இயக்குநர்  நிகழ்ச்சியில் வென்ற  திருப்பூர்  ரவிக்குமார்  தான்  இயக்குநர். 


ஹீரோவா  விஷ்ணு . மிக இயல்பான  நடிப்பு காதலி முன்  ஹாலில் அவமானப்படும்  காட்சியிலும்  பின் பாதி ஆக்சன்  சீக்வன்சிலும் அசத்துகிறார். காதலியுடனான  ரொமான்சில் கமல் , மோக\ன், கார்த்திக்  போல் மனம்  கவர்கிறார்.நல்ல  திறமை உள்ள  தமிழ்  சினிமா  ஹீரோக்களில்  முக்கியமானவர் 

 ஹீரோயினா மியா ஜார்ஜ் . சும்மா சார்ஜ் ஏத்தி விட்ட எமர்ஜென்சி லைட் போல  தக தகனு மின்னுது ஃபிகரு  ஆல்ரெடி அமரகாவியம் படத்தில் ஆர்யாவின்  தம்பிக்கு ஜோடியா நடிச்சவர் தான்.கர்லிங் ஹேர் கட்டழகி வாடாமல்லிக்கலர் லிப்ஸ்டிக் உதட்டழகி ,அயர்ன் பண்ணின பட்டர் கேக் மாதிரி அபாரமான ஷைனிங் உள்ள ஃபிகரு ( அயர்ன் பண்ணா கருகிடாது?) 


நாயகனுடனான  ரொமான்ஸ்  காட்சிகளில் கலக்கறார். அப்பாவிடம் காதலனுக்காக  வாதிடும் காட்சிகள்   நல்லாருக்கு 


 காமெடியனாக  ஹீரோவின்  நண்பரா  வரும்   கருணா  கலக்கறார்.இயல்பான  காமெடி  வசனங்கள்  பிளஸ் 


 ஹிப் ஹோப் தமிழா  தான்  இசை . பிஜிஎம்மில் கலக்கறார் . படத்தில்  பாடல் காட்சிகள்  கம்மி  என்பதால்  பிஜிஎம்மில்  ஸ்கோர்  பண்றார்  போல . வார்ம் வெல்கம் 


ஒளிப்பதிவு  , எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கல்  விஷயங்கள்  எல்லாமே சராசரி  தரத்துக்கு  பல படி மேலே 


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

ரிஸ்க் எடுக்க பயப்படுபவன் தான் வேலைக்குப்போவான்


பீச்ல சுண்டல் விற்கும்/ வியாபாரம் செய்பவனின் வருமானம் ஐடி யில் ஒர்க் பண்றவங்க சம்பளத்தை விட அதிகம் # இநேநா

3 என் அனுபவத்தில் கத்தி பேசி மிரட்றவனையும் பாத்திருக்கேன்.கத்தி யை காட்டி மிரட்றவனையும் பார்த்திருக்கேன் # இநேநா


4 அதெப்பிடிடா பொண்ணுங்க அழுதா மட்டும் உங்களுக்கு வலிக்குது.பிரண்ட் அழுதா கண்டுக்கவே மாட்டேங்கறீங்க? # இநேநா

5 நாலெட்ஜ் உள்ள பியூப்பிள் எப்பவும் அமைதியாதான் இருப்பாங்க.சில சமயம் முட்டாள்கள் கூட அமைதியா இருப்பது போல் நடிப்பாங்க # இநேநா உள்குத்து வசனம்


6 பொண்ணுங்க கிட்ட ஒரு ரகசியம் சொல்றதும் FB ல ஸ்டேட்டஸ் போடறதும் ஒண்ணுதான் # இநேநா

7 உசுரா இருக்கட்டும் தொழிலா இருக்கட்டும் அவனவனுக்கு அவனவனுது முக்கியம் # இநேநா

8 பொண்ணு செம சிவப்பு , ஓக்கே வா?

ம்ம்ம்


நான் உனக்கு கேட்கலை , பொண்ணுக்கு ஓக்கேவா?ன்னு கேட்டேன்

9 சார், நீங்க பையனையும் கூட்டிட்டே வந்திருக்கலாம்

அட, மேரேஜே எனக்குதாங்க


10 இனிமே புடவையே ( காய) போட மாட்டேன் போதுமா?

நிஜமாவா?

யோவ்


11 பயப்படாத , எங்கப்பா கஷ்டமான கேள்வி எதும் கேட்கமாட்டார்

உங்கப்பா என்ன கேள்வி கேட்டாலும் அது எனக்கு கஷ்டம் தான்


12 கொள்கையை தளர்த்திக்கலாம்னு இருக்கேன்

அது என்ன லுங்கியா?


13 பத்து லட்சம் ரூபா லோன் வேணுமா? நீ என்ன முதலீடு பண்றே?

உழைப்பு தான் என் முதலீடு

ம்க்கும் கால்ல போட்றாத


14 சார் உங்க ஃபிரண்ட் கோமால இருந்து கண் விழிச்சு ட்டார்


விழிச்சுட்டார்னா மூடி படுக்க வைங்க நர்ஸ்


15 2 அவர்ஸ் கழிசசு ஃபீல் பண்ணுவீங்க


ஏன் இந்த ஹாஸ்பிடல் வந்தொம்னா?




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

ஹீரோயிசம் இல்லாத ,மாமூல் மசாலாவாக இல்லாமல் மக்களுக்கு புதிய அனுபவத்தைத்தரும் வித்தியாசமான திரைக்கதையை வரவேற்போம்

பிரபல பதிவர்கள் கருந்தேள் கண்ணாயிரம் ,ராஜன் கதை விவாதக்குழுவில் # இநேநா


3 காமெடியன் பேரு புலி வெட்டி 6 முகம் #,இநேநா. ஏதாவது குறியீடா? அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாரும் அஜித் ரசிகர் போல

4 சுவராஸ்யமான திரைக்கதையில் இயல்பான நகைச்சுவையில் ஏ சென்ட்டர் ஆடியன்சின் அமர்க்கள வரவேற்பில் இடைவேளை இநேநா # திருப்பூர் ரவிக்குமார் ராக்கிங்


5 இன்று நேற்று நாளை பட இயக்குநர் நண்பர் திருப்பூர் ரவிக்குமார் " வாழ்த்துவோம்







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1   தமிழ் சினிமாவில்  டைம் மிஷின் கதைகள் , ஃபேண்டசி படங்கள் கம்மி .அலாவுதீனும் அற்புத விளக்கும் , அதிசயப்பிறவி ,இரண்டாம் உலகம், ஆயிரத்தில்  ஒருவன் ,லக்கிமேன் நாளை மனிதன் , அதிசய மனிதன் ,மை டியர் குட்டிச்சாத்தான், புலி  போன்ற  படங்கள் ஃபேண்டசி வகையறாப்படங்கள் என சொல்லலாம். அந்த  வரிசையில்  தமிழ்  சினிமாவில் இன்னும்  ஒரு ஃபேண்ட்டசி படம்  தந்ததற்கு வாழ்த்து 



2   டைட்டிலில்  கதை விவாதக்குழு  என பணியாற்றிய அனைவருக்கும்  க்ரெடிட்  கொடுத்ததற்கு  நன்றி.சக  பதிவர்களை அப்படிப்பார்ப்பதில்  மகிழ்ச்சி


3 பக்காவான  திரைக்கதை  ஒரு இடத்தில்  கூட சோர்வே  வராத  கட்டமைப்பு . 


4  படத்தின்  மெயின் கேரக்டர்கள்  ஹீரோ ஹீரோயின்  , நண்பன், அப்பா, வில்லன்  எல்லோரும்  மிக இயல்பாக  நடித்து  ஒரு சம்பவத்தை  நேரில் பார்ப்பது  போன்ற அனுபவம் தந்தது 


5  ஜீவா , முண்டாசுப்பட்டி  பட வரிசையில்  பெயர் சொல்லும் விதமாக  விஷ்ணு வுக்கு அமைந்த  படம் 


6  வில்லன்  குழந்தை வேலுவாக வரும்   ரவி சங்கர் , அப்பாவாக வரும்  ஜெயப்பிரகாஷ் இவர்களின் அபார  நடிப்பு பலம் 


7 ஹீரோ  ஷேர்  மார்க்கெட் சமாளிப்புக்காட்சியில்  மிக  இயல்பான நடிப்பு . படம் பார்ப்பவர்களையும்  பதட்டம் தொற்றிக்கொள்ளுது 

8 ஜோதிடர்கள்  எக்சாம் காட்சி    கலக்கல்  காமெடி 


9  ஹீரோயின்  அவரது  குழந்தைப்பருவத்துக்கு  டைம் மிஷினில் போய்  தனக்கே அதாவது  ஹீரோயின்  குழந்தையாய்  இருப்பாரே அந்தக்குழந்தைக்கே  ஹீரோயின்   முத்தமிடும்  காட்சி  தமிழ்  சினிமாவுக்கு  புது சு



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   பேக்    டூ த  ஃபியூச்சர்  ,   ஆக்‌ஷன் ரீப்ளே  ( ஹிந்தி) படங்களின்  சாயல் ஆங்காங்கே  தெரியுது / குறிப்பா அந்த  பார்த்த சாரதி  கேரக்டர்  , கெட்டப்  எல்லாம்  டிட்டோ


2  ஒரு சீனில்  பார்த்த சாரதி  ஹீரோவுக்கு  ஃபோன் பண்ணி  டைம் மிஷின்  ரெடி  நீ உடனே  வா  என்கிறார். அதுக்கு  ஹீரோ  வர்றேன்  வர்ல  என ரிப்ளை  கொடுக்காமயே ஃபோனை  கட் பண்றார்.  இதோ  இப்பவே  வர்றேன். எங்கேயும்  போய்டாத  என  அந்த இடத்தில்  வசனம்  இருந்திருக்க வேண்டாமா? 


3  படத்தின்    மெயின்  ரசிப்பே  டைம் மிஷின்  போர்ஷன்  தான் . ஆனா  கடைசியில்  நம்ம  வாழ்க்கை  அதன் போக்கில்  இருந்தால்  தான் நல்லாருக்கும்  என்ற  திணிப்பான  போதனை  வசனம்  எதுக்கு ? 



4   ஹீரோயின்  அம்மாவுக்கான பிரசவ  காட்சியில்  ஃபோன்  ஒயரை  கட் பண்ணி  கடந்த  கால பாதிப்பை  ஏற்படுத்தும்  காட்சி  பிரசவத்துக்கு  ஹீரோ ஹீரோயின்  உதவுவது  பி சி  செண்ட்டர்  ரசிகர்களை  குழப்பக்கூடும் 



சி  பி  கமெண்ட்-இன்று நேற்று நாளை = முன் பாதி டைம் மிஷின் காமெடி கலாட்டா பின் பாதி ஆக்சன் அதகளம்.விகடன் மார்க் =43 ,ரேட்டிங் = 3 / 5

ஃபேமிலியுடன் பார்ப்பதற்கு நல்ல தொரு எண்ட்டர்டெய்னிங் மூவி . சி செண்ட்டர் ல எப்படிப்போகும்னு கணிக்க முடியல . ஏ , பி செண்ட்டர்கள்ல நல்லாப்போகும் . முதலீட்டைப்போல் 3 மடங்கு லாபம் சம்பாதிக்கும் .




ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 43 



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே 



 ரேட்டிங்=3 / 5

ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்