Showing posts with label இன்று நீ நாளை நான் (1983) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா ). Show all posts
Showing posts with label இன்று நீ நாளை நான் (1983) - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா ). Show all posts

Sunday, July 17, 2022

இன்று நீ நாளை நான் (1983)- சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா )




மேஜர்  சுந்தர்ராஜன்  இயக்கிய  அந்த  ஒரு  நிமிடம்  படத்தை  கலாய்த்ததில்  கமல்  ரசிகர்களை  விட மேஜர்  சுந்தர்ராஜன்   ரசிகர்கள்    உறவினர்கள் , நண்பர்கள்  எல்லாரும்  பொங்கிட்டாங்க. கமல்  தலையீட்டால்தான்  அப்டி  ஆகிடுச்சு . காக்கிச்சட்டை  ஹிட்டுக்குப்பின்  வந்த  படம்  என்பதால்  அதீத  எதிர்பார்ப்பு  பேக்  ஃபயர்  ஆகிடுச்சு அவரோட  டைரக்சன்  திறமையைப்பார்க்கனும்னா  இன்று நீ நாளை  நான்   பாருங்க  , கமர்ஷியலாவும்  நல்லா  போச்சு  விமர்சன    ரீதியாவும் பாராட்டு  பெற்றதுன்னாங்க . சரி  எத்தனையோ  குப்பைகளைப்பார்க்கிறோம், பத்தோட  பதினொண்ணு  அத்தோட  இதுவும்  ஒண்ணுனு  இதையும்  பார்த்திடுவோம்னு   களம்  இறங்கியாச்சு 


சி  ஏ  பாலன்  எழுதிய  தூக்கு மர  நிழலில்  என்ற  நாவலின்  தழுவல்  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


ஹீரோ  ஒரு  தூக்கு  தண்டனைக்கைதி   விடிஞ்சா  தூக்கு., அவரைப்பார்க்க  அவரோட  அண்ணி  வர்றாங்க .  அவரை  செக்கப்  பண்ணி  சர்ட்டிஃபிகேட்  தரும்  டாக்டரிடம்  தன்  ஃபிளாஸ்பேக்  கதையை  சொல்கிறார்


 ஹீரோ  அவரோட  அண்ணன்  இருவரும்    அந்தக்குடும்பத்தில்  மெயின் .  காடு  தோட்டம்  எல்லாம்  இருக்கு  செம  வசதி . இருவரும்  பேச்சிலர்ஸ் (  அண்ணன்னா  சொந்த  அண்ணன்  இல்ல.  அண்ணன்  மாதிரி )

 அண்ணன்  அரசியல்வாதி  அரசியல்ல  ரொம்ப  ஈடுபாடு  கொண்டவர். அந்த  தொகுதி  எம் எல் ஏ  ஆகனும்னு  ட்ரை பண்றாரு 


   அவருக்கு  பெண்  பார்க்க  ஹீரோ  கிளம்பறாரு  தோழிகள்  இருவரை  கிராமத்தில்  சந்திககிறார். அவருக்குப்பிடிச்சுப்போய்டுது.( இதுல  முக்கியமான  விஷயம்  ஹீரோவுக்கும்  ஹீரோயினுக்கும்  பரஸ்பரம் ஒருவரை  ஒருவர்  பிடிச்சுப்போய்டுது. ஆனா  மேரேஜ்  அண்ணனுக்கு   அப்டினு  சொல்லிடறார்)


மேரேஜ்  நடக்குது. ஆனா  சாந்தி  முகூர்த்தம்  நடக்கலை., கட்சி  விஷயமா  திடீர்னு  வெளீல  கிளம்பிடறார். அதுக்குப்பின்னும்  ஒரு  மாசம்  தேர்தல்ல  சீட்  வாங்க  சென்னை  போய்டறார். எலக்சன்ல  தோல்வி . அதை  அவரால  ஜீரணிச்சுக்க  முடியல. தண்ணி  அடிக்க  ஆரம்பிக்கறார் 


 இதுக்கு  இடைல  ஹீரோவுக்கும்  மேரேஜ்  ஆகிடுது அண்ணியோட  தோழிதான்  பெண்

ஹீரோவுக்கு  ஒரு  குழந்தை பிறக்குது.


 நமக்குப்பின்  மேரேஜ்  ஆன  ஜோடிக்கு  குழந்தை  பிறந்துடுச்சு  நமக்கு  ஒரு  வழி  பிறக்கலையேனு   அண்ணிக்கு  ஏக்கம்


இதுக்குப்பிறகு  யாருமே  எதிர்பாராத  திருப்பம்  நட்க்குது.அது  என்ன? ஹீரோ  எப்படி    ஜெயிலுக்குப்போனார்?  அவருக்கு  தண்டனை  ரத்து  ஆனதா?  என்பதை  திரையில் காண்க 


 ரிலீஸ்  ஆன போது  இது  கமர்ஷியலா  ஹிட்  ஆச்சு  எனவும்  விமர்சன  ரீதியா  சில  சிக்கல்களை  ச்ந்தித்த்து  என்றும்  கேள்வி 


ஹீரோவா  சிவக்குமார்.. கிராமத்து  ஆளா  வாழ்ந்திருக்கார். அண்ணனுக்குபொபார்த்த  பெண்  தனக்கு  கட்டிக்க  ஆசை  ஆனா  தகுதி  வச்தி  இல்லை  என  நினைத்து  ஒதுங்குவது  , சிறையில்  ஆவேசப்படுவது  அண்ணி  ப்ரப்போஸ்  செய்யும்போது  தயங்குவது  மகளிடம்  நான்  கொலைகாரன்  இல்லை  என  கதறுவது  எல்லாமே  பாராட்டத்தக்க  நடிப்பு 


 அண்ணனாக  ஜெய்சங்கர்.  என்ன  ஒரு  அனுபவம்  மிக்க  நடிப்பு ? அரசியலில் சாதிக்கனும்  என  நினைப்பதும்  பின்  குடிகாரன்  ஆவதும்  உருக்கமான  நடிப்பு 


 ஹீரோவுக்கு  அண்ணியா  ஹீரோயினா  லட்சுமி  கிளாசிக்கான  நடிப்பு   சிறை , ஒரு  மலரின்  பயணம்  உதயகீதம்  வரிசையில்  குறிப்பிடத்தக்க  கேரக்டர்.ஒரு  இளம்  விதவையா  கொழுந்தனிடம்  பிரப்போஸ்  செய்யும்  காட்சி  அருமை 


ஹீரோவுக்கு  மனைவியா  சுலக்சனா . சிந்து   பைரவி  அளவுக்கு  இல்லைன்னாலும்  கொடுத்த  கேரக்டருக்கு  நியாயம்  செய்த  நடிப்பு 


டாக்டராக  வரும்  தேங்காய்  சீனிவாசன் - மனோரமா ஜோடி  காமெடி  டிராக்  சுமார் தான் 


 இசை  இளையராஜா .  5  பாடல்களில்  3 பாட்டு  செம  ஹிட் 

1  பொன் வானம்  பன்னீர்  தூவுது

2  தாழம்பூவே  கண்ணுறங்கு    தங்கத்தேரே கண்ணுறங்கு 


3  மொட்டு  விட்ட  முல்லைக்கொடி


ஒளிப்பதிவு  எடிட்டிங்  ஓக்கே ரகம்  பின்னணி  இசை  நல்லாருக்கு 


 சபாஷ்  டைரக்டர்


 1   அந்தக்காலத்தில்  விதவை  திருமணம்  பற்றி  துணிச்சலாக  கருத்து  சொன்ன  படம். 2006ல்  ரிலீஸ்  ஆன  சாமி  இயக்கிய  உயிர்  ( கொழுந்தன்  மேல்  ஆசைப்பட்டு  கணவனைக்கொலை  செய்த  பெண்ணின்  கதை , கலாபக்காதலன் (  தன்  சகோதரியின்  க்ணவன்  மேல்  ஆசைப்படும்  நாயகி கதை   போன்ற  படங்களுக்கு  எல்லாம்  முன்னோடி 


2   ஃபிளாஸ்பேக்  உத்தியில்  கதை  சொன்ன  விதம்  அப்படி  சொல்லாமல்  நேரடியா  கதை  சொல்லப்பட்டிருந்தால்  இந்த  அளவு  சுவராஸ்யம்  இருந்திருக்காது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்  சில  நெருடல்கள் 


1      கதையின்  முக்கியமான  டர்னிங்  பாயிண்ட்  விதவையான  அண்ணி  ஹீரோவிடம்  என்னைக்கல்யாணம்  பண்ணிக்க்றீங்களா? என  கேட்பதில்  தொடங்குது. இது  ஆக்சுவலா  ஒரு  கோயில்ல   அல்லது  வீட்டில்  இருக்கும்போது  கேட்டிருக்கலாம், ஆனால்  மழையில்  நனைந்து  ஒரு  மார்க்கமாக  இருவரும்  நடந்து  சென்று  ஒதுங்கும்போது  கேட்பது  நெருடுது. ஒரிஜினல்  கதைல  அப்படி  இருந்திருக்காது  சினிமாவுக்காக  மாத்தி  இருப்பாங்க 


2  அண்ணி  ப்ரப்போஸ்  பண்ணுனதும்  ஹீரோ  முகத்துல  ஒரு  பதட்டமோ  பதைபதைப்போ  வர்லை  அண்ணன்  எப்போ   எந்திரிப்பான், திண்ணை  எப்போ  காலி  ஆகும்  மொமெண்ட்ல  ரெடியா  இருக்காரு.


3 அதுக்கு  என்  மனைவி  சம்மதிக்கனுமே>  என  கேட்கும்போதே  ஹீரோ  கேரக்டர்  அடி  வாங்கிடுது,  அண்ணி  அதெல்லாம்  நான்  சமாதானப்படுத்திடறேன்  என  சொன்னதும்  மேரேஜ்க்கு  இருவரும்  ரெடி  ஆவது  எப்படி? சம்மதம்  வாங்காமல்  2  வது  மணம்  செய்வது  சட்டப்படிதப்பு  ஆச்சே??


4  மேரேஜ்  ஆன  அன்னைக்கு 60 கிமீ  காரில்  ரொம்ப  தூரம்  போய்ட்டு  வந்ததால்  டயர்டா  இருக்கு  என  ஜெய்சங்கர்  சொல்லி  முதல்  இரவை  கேன்சல்  பண்ணுவது  நம்பும்படி  இல்லை., 1000  கிமீ  ட்ராவல்  பண்ணாலும்  ஆண்கள்  புத்தி    எப்படி  இருக்கும்னு  நமக்குத்தெரியாதா?


5  சர்  முதல்  இரவு  தான்  நடக்கலை  அதுக்குப்பின்  வரும் 545  நாட்களுமா  நடக்காம  இருக்கும்?  இது  வேணும்னே  வலிய  திணிச்ச  மாதிரி  இருக்கு ., நடந்திருந்தா  தான்  என்ன?  இளம்  விதவை  என்ற  ஒரு  பாயிண்ட்  போதாதா?  கன்னி  க்ழியாத  என்ற  லேபிள்  எதுக்கு ?


6   மொடாக்குடிகாரன்  பரம்பரை  குடிகாரன்  எல்லாம்  சர்வசாதாரணமா  60  வயசு  வரை  உயிர்  வாழறான் , ஆனா  ஜெய்சங்கர் குடிப்பழக்கமே  இல்லாதவர்  திடிர்னு  ப்ழகி  ஒரு  வருசத்தில்  உயிரை  விடுவது  நம்பும்படி  இல்லை  அட்லீஸ்ட்  கேன்ச்ர்னாவது  சொல்லி  இருக்கலாம் 


7  சுலக்சனா  2வ்து  பிரசவத்துக்கு  அம்மா  வீட்டுக்குப்போவது  நம்பும்படி  இல்லை  கணவன்  இளம்  விதவை  பஞ்சு  நெருப்பு  பத்திக்கும்னு  தெரியாதா>  அம்மாவை  இங்கே  வரவெச்சு  இருக்கலாமே?  


8  தூக்கு  தண்டனைக்கைதியைப்பார்க்க  வரும்  விசிட்டரை  நல்லா  செக்  பண்ணி  தான்  அனுப்புவாங்க  லட்சுமி  ஒரு  துப்பாக்கியை  எடுத்துட்டு  வருவது  எப்படி ? 


9  தற்கொலை  என்பது  ஒரு  உணர்ச்சி  வேகத்தில்  எடுக்கும்  முடிவு தான்  ஆனா 1  வயசு  குழந்தை   1மாசக்கைக்குழந்தை  இருக்கும்    சுலக்சனா  தற்கொலை  செய்வது  நம்பும்படி  இல்லை 


10  வில்லன்  ஒரு  எம் எல்  ஏ.  அவரு  நினைச்சா  1008  பொண்ணுங்களை  வளைச்சுப்போடலாம், ஆனா  லட்சுமி  கிட்டே  வந்து  உன்னை  மேரேஜ்  பண்ணிக்கறேன்  என  சொல்வது  நம்பற  மாதிரியே  இல்லை 


11   வில்லன்  பிரபோஸ்  பண்ணுனதும்  லட்சுமி   ஒண்ணு  ஓக்கே  சொல்லனும்  இல்லை  நோ  சொல்லனும், அவர்  காட்டும்  ரீ  ஆக்சன்  ஓவரா  இருக்கு  


  சி பி  எஸ்  ஃபைனல்  கமெண்ட்  -   ரிலீஸ்  ஆன  காலகட்டத்தில்  இது  ஹிட்  படம்  அந்தக்காலத்தில்  விதவை  திருமணம்   பற்றிய  படம்  என்பதால்  பார்க்கலாம்.   ரேட்டிங்  2.75 / 5