சதுரங்க வேட்டை என்ற ஒரே படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நட்டி. சாய் கார்த்திக் என்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளியான சராசரி த்ரில்லர் இது . கதை , ட்விஸ்ட் இரண்டும் ஓக்கே , ஆனால் திரைக்கதை , இயக்கம் இரண்டிலும் ஏகப்பட்ட சொதப்பல்கள்
ஸ்பாய்லர் அலெர்ட்
ஓபனிங் ஷாட்டில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்படுகிறாள் . அடுத்து சாராயக்கடையில் ஒரு ஆள் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். ஒரு பிரபல எழுத்தாளர் அவர் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்
முதலில் கொலையான இளம்பெண்ணின் பெற்றோர் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர் . அடுத்த நாளில் இருந்து அவர்களைக்காணவில்லை . வீடு பூட்டி இருக்கிறது . இந்த கேசை டீல் செய்யும் போலீஸ் ஆஃபீசர் கொலை செய்யப்படுகிறார்
நகரில் நடக்கும் இந்த தொடர் கொலைகள் செய்வது யார்? என்பதைகண்டு பிடிக்க நாயகன் ஆன சிபிஐ ஆஃபீசர் களம் இறக்கப்புடுகிறார். மேலே சொன்ன அனைத்துக்கொலைகளுக்கும் ஒரு சங்கிலித்தொடர்பு இருப்பதைக்கண்டு பிடிக்கிறார் . கொலைகாரன் யார்? அது போக ந்டக்கும் ஒரு மெடிக்கல் க்ரைம் மாஃபியா பார்ட்டியையும் அடையாளம் காண்கிறார் . அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே மீதி திரைக்கதை
நாயகன் ஆக நட்டி . சுறுசுறுப்பான நடிப்பு வேகமான நடை . லேடி டாக்டர் ஆக வித்யா பிரதீப்க்கு வழங்கப்பட்ட கேரக்டர் டிசைன் அருமை . ஆனால் அவரது நடிப்பை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்
காமெடியன் முனீஸ்காந்த் தண்டம் . கொலை காரனைப்பார்த்தால் பயம் வரவில்லை , பரிதாபம்தான் வருகிறது
ஒளிப்பதிவு , பின்னணி இசை போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சுமார் ரகமே , இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் . மேக்கிங்கில் அனுபவக்குறைவு தெரிகிறது . ஏனோ தானோ என படம் ஆக்கி இருக்கிறார் இயக்குநர்
சபாஷ் டைரக்டர் ( சாய் கார்த்திக்)
1 வில்லியின் பாத்திர வடிவமைப்பு , க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் இரண்டும் அருமை
2 முழு திரைக்கதையை சொல்லாமல் இது ஒரு த்ரில்லர் கதைங்க என மொட்டையாக சொல்லி நாயகனை புக் செய்த சாமார்த்தியம்
ரசித்த வசனங்கள்
1 சிபிஐ கிட்டே சில கேஸ்களை கொடுப்பதே அதை தொட்டில்ல போட்டுத்தாலாட்டி நிரந்தரமா தூங்க வைக்கத்தான்
2 ஒரு கேஸ் ஓவர் நைட் ல முடியனும்னா கொலைகாரனே வந்து ஒத்துக்கிட்டாத்தான் சாத்தியம்
3 நமக்குப்பிடிக்காததை அனுபவித்தால்தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்
4 கடவுளைத்தேடிப்போனா வரம் கிடைக்கும் ,சாத்தானைத்தேடிப்போனா சாபம் / இறப்பு தான் கிடைக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தமிழ்ப்படத்தின் டைட்டில் ஓடும்போது பேக் கிரவுண்டில் ஹிந்தி நியூஸ் பேப்பரில் செய்தி ஓடுதே? இதைப்பார்ப்பது தமிழனா? சேட்டுகளா?
2 வில்லன் அரைக்கிறுக்கனா இருக்கான் , நாயகனைக்கொலை பண்ண 1009 ஈசியான வழிகள் இருக்கும்போது பட்டப்பகல்ல ஆஃபீஸ் ல ( ஜி ஹெச்) அவரு இருக்கும்போது ஷூட் பண்றான்/ நாயகன் ஆஃபீஸ் வாசலில் பைக் நிறுத்தும்போதோ எடுக்கும்போதோ குறி பார்த்தால் ஈசியாக போட்டுத்தள்ளி இருக்கலாம் . இப்படியா வாண்ட்டடா மாட்டுவாங்க ?
3 வில்லன் முன்னால பைக்ல போகும்போது நாயகன் பின்னால பைக்ல துரத்தறாரு. அவரை வில்லன் திரும்பித்திரும்பி பார்த்துக்கிட்டே பைக் ஓட்றாரு/ ரிவர்யூ மிரர் எதுக்கு இருக்கு ?
4 நாயகன் சிபிஐ ஆஃபீசர் அவரு ஏன் நக்கீரன் கோபால் மாதிரி வீரப்பன் மீசைல கொஞ்ச நாள் , சபரிமலை சாமி மாதிரி தாடியோட பல நாள் சுத்திக்கிட்டு இருக்காரு ?
5 பைக்ல போகும்போது ஹெல்மெட் போடும் பழக்கம் தமிழ் சினிமா நாயகர்களிடம் பெரும்பாலும் இல்லை
6 போலீஸ் ஸ்டேஷனில் முனீஸகாந்த் வீடியோ கேம் ஆடுவதும் , ஒரு எஸ் ஐ லாக்கப் ரூமில் தூங்குவதும் ஓவர் . எந்த ஊர்ல அப்டி நடக்குது ?
7 போஸ்ட் ,மார்ட்டம் பண்ணிய டாக்டரிடம் நாயகன் கொலை நடந்து எத்தனை நாட்கள் இருக்கும்?னு கேட்கறார். அப்போதுதான் போஸ்ட் மார்ட்டம் முடித்த டாக்டர் ஒரு நிமிசம்னு ஃபைலைப்பார்த்து பின் 3 டூ 5 டேஸ் இருக்கலாம்கறார். ஃபைலை பார்க்காம அதை சொல்ல முடியாதா?
8 படத்தில் நாயகன் , வில்லன் ., வில்லி ., காமெடியன் இவங்க தண்ணிஅடிக்கற சீன் ,தம் அடிக்கற சீன்ஸ் கட் பண்ணினா அதுல 20 நிமிசம் மிச்சம் ஆகும்
9 கொலைகாரனை நாயகன் பைக்கில் சேஸ் பண்ணும்போது அவன் ஏதோ ஒரு சுருக்குப்பையை நாயகன் மீது வீசுகிறான். அப்படியே நாயகன் ஸ்டன் ஆகி நின்று விடுகிறார். இன்னும் 5 நிமிசம் சேஸ் பண்ணி இருந்தால் பிடித்திருக்கலாம்
10 நாயகன் டாக்டரிடம் பேசும்போது அந்த அறையில் ஜன்னல் , வெண்டிலேட்டர் எதுவும் இல்லை . ஆனால் ஸ்னிப்பர் ஷாட்டில் வில்லன் நாயகனை சுடுவது எங்கே இருந்து ? எப்படி?
11 படத்தின் மேக்கிங் ரொம்பவே சுமார் , நாயகன், அந்த லேடி டாக்டர் தவிர மற்ற அனைவரது நடிப்பும் எடுபடவில்லை
12முனீஸ்காந்த்தின் மொக்கைக்காமெடி செம கடுப்பு
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- 18+ காட்சிகள் உண்டு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - அனுபவம் மிக்க இயக்குநர் கைவசம் இந்தக்கதைகரு சிக்கி இருந்தால் நாம் இந்த இயக்குநரிடம் சிக்கி இருக்க மாட்டோம் . ரேட்டிங் 1 / 5