விஜய் ஆண்ட்டனி முதல் படமான நான் படத்தில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் திரைக்கதையின் பலத்தில் சிக்சர் அடித்தார் . அடுத்து வந்த சலீம் படத்தில் ஃபோர் அடித்தார் . படிப்படியாக இறங்கு முகம் என்றாலும் கவனிக்க வைக்கும் வெற்றிதான் இதிலும்.
ஹீரோ , ஹீரோயின் இருவரும் லாயர்ஸ் . இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே வீட்டை ஒன் பை டூ ஷேர் போட்டு வாடகைக்கு தங்கறாங்க. இருவரும் எலியும் , பூனையுமா , டாம் அண்ட் ஜெர்ரியுமா அடிச்சுக்கிட்டாலும் உள்ளூர காதல் இருவருக்கும் . ஆனா ஈகோ பிரச்னை குஷி படம் மாதிரி
இருவரும் கேஸ் பிடிக்க அலைவதும் , சந்திபுகளும் ஒரு டிராக்
வில்லன் என்கவுண்ட்டர் எனும் போர்வையில் ஒரு கொலை பண்றார். போலீஸ் ஆஃபீசரான அவர் செய்யும் கொலை ஒரு சிடி யில் பதிவாகி இருக்கு . அந்த சி டி ஹீரோயின் -ஹீரோ கிட்டே மாட்டிக்குது.இரு தரப்புக்கும் இடையே நடக்கும் சேசிங்கை காமெடியா சொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க.
ஹீரோவா விஜய் ஆண்ட்டனி . முதல் படத்தில் கேரக்டரே அப்படி என்பதால் இறுக்கமான முகம் ஓக்கே , எல்லா படங்களுக்கும், எல்;லா கேரக்டருக்கும் ஒரே மாதிரி போஸ்னா எப்படி பாஸ்? இது முழுக்க முழுக்க காமெடி பேஸ்டு ஸ்டோரி, அண்ணனுக்கு சிரிப்பே வர மாட்டேங்குது .பாடல் காட்சிகளில் , காதல் காட்சிகளில் சமாளிக்கிறார்.
ஹீரோயின் புதுமுகம் சுஷ்மா ராஜ் .வெளுத்துப்போன மெது வடை மாதிரி கலர் . பஞ்சு முட்டாய் உதடு ( ஐ மீன் பிங்க் கலர் லிப்ஸ்டிக் ) டிரஸ்சிங் சென்ஸ் அபாரம் ,. நஸ்ரியா , லட்சுமிமே்ணன் வ்பரிசையில் இவரும் இடுப்பு தெரியாமல் இருக்க துணி போட்டு கவர் பண்ணீக்கறார். அவரது எச்சரிக்கை உணர்வில்க் இடி விழ . ஆனால் அதையும் மீறி டூயட் காட்சியில் இடை தெரிகிறது , ஒளிப்பதிவாளருக்கு வந்தனம் . புதுமுகம் என் ற அளவில் ஓக்கே ரகம் ( நாம நாட் ஓக்கே அப்டினு எந்த நடிகையைத்தான் ரிஜக்ட் செஞ்சோம் ?
படத்தில் காமெடியனாக விஜய் டி வி ஜெகன் . செம மொக்கை போடறார்.
காளி க்ளைமாக்சில் வெளுத்துக்கட்டும் காமெடி
பசுபதி , எம் எஸ் பாஸ்கர் , மனோபாலா மூவரும் தான் படத்தின் உயிர் நாடி
வீணடிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர் ஊர்வசி . பன்னிமூஞ்சி வாயரையும் இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம்
வில்லன் நடிப்பு குட் .
இசை சராசரி / 2 பாடல்கள் தேறுது / பிஜிஎம் சுமார்தான்
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 பூரி புஷ்னு இல்ல?
எத்தனை நாளுக்கு உப்பி இருக்கும்?
ஆ! பழசா?
PAST FOOD னு போர்டு இருக்கே பாக்கல?# இ பா
2 என்னய்யா?வடை ல நூல் இருக்கு?
பிஞ்சுடுச்சுனு தெச்சிருக்கோம் #,இ பா
3 ஜெகன் = இரு.அந்த ஒப்பாரி வாயன்ட்ட கேட்டு சொல்றேன் # இ பா
4 போட்டி எங்கே வேணா இருக்கலாம்.ஆனா பக்கத்துலயே இருக்கக்கூடாது # இ பா
5 சொந்தக்காசுல நான் சரக்கு அடிக்கறதில்லை.ஏன்னா கைல காசு இருக்கும்போதெல்லாம் அடிக்கத்தோணும்.அதனால ஓசி தான் # இ பா
6 லாயர் = மேடம்.நீங்க கேஸா?
டிக்கெட் = ஆமாய்யா
சரி.நான் டீல் பண்றேன்.அட்வான்ஸ் குடுங்க.
நீதான்யா குடுக்கனும்.5000 ரூபா.
அய்யய்யோ. #,இ பா
7 காபி ஏன் இவ்ளவ் கேவலமா இருக்கு?
ஒரே பிளாஸ்க்ல காபியும் டீ யும் வாங்கிட்டு வந்துட்டேன் # இ பா
8 நீ நீ நம்ம பாவாடை தானே?
ஜெகன் = நோ.என் பேரு ஹரிதாஸ்
பொய்.
டவுடனா செக்.பாவாடை என் கிட்டே இல்ல # இ பா
9 ஒரு பொண்ணைப்பத்தி அடுத்தவங்க கிட்டே தப்பா பேசறதே கேவலம் தான்.அதுவும் கூடவே பழகுன பொண்ணை #,இ பா
10 ஹலோ! நான் தான் மிஸ் மெல்லினா பேசறேன்.
ஏன்?கொஞ்சம் சத்தமா பேசறது?
ஹய்யோ.என் பேரே மெல்லினா தான் # இ பா
11 உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்.
ஜெகன் = நீ கொஞ்சம் பீர் கூட குடுக்க மாட்டே.உயிர் கொடுக்கவா போறே? # இ பா
12 பிறப்பு ,இறப்பு ,கல்யாணம் 3 ம் கடவுளால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது.எவ்ளவ் பக்கத்தில் இருந்தாலும் நம்மால கண்டுபிடிக்க முடியாது # இ பா
13 இந்த சிடி ல கொலை சம்பந்தப்பட்ட எவிடென்ஸ் இருக்கு.இதை ஒரு காபி போடனும்.
ஓ.சரி.நான் போய் பால் வாங்கிட்டு வரேன் # இ பா
14 வில்லன் = என்னோட காதலுக்கு மரியாதை டிவிடி எங்கே?
அப்ப அது விஜய்யோடது இல்லையா?# இ பா
15 உனக்கு அழகு னு பேர் வெச்சது யாருடா?
அது எங்க அப்பா வெச்சது.
அப்பா வைக்கலை.தப்பா வெச்ட்டாங்க #,இ பா
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 இந்தியா பாகிஸ்தான் (விஜய் ஆன்ட்டனி) = 157 நிமிடங்கள்
2 புதுமுகம் சுஷ்மாராஜ் கர்லிங் ஹேர் (கூந்தல்)கட்டழகி # இ பா
4 அனுஷ்கா முகச்சாயல் ,ஷாலினி பாடி லேங்குவேஜ் ,இதயத்தை திருடாதே கிரிஜா பாவனை = சுஷ்மாராஜ் # இ பா
5 ஒரு பொண்ணு பாத்தேன் மாமா.அவ என்னைக்கொன்னு போட்டா ஆமா - விஜய் ஆன்ட்டனி குத்தாட்டம்.ஆ!! # இ பா
6 ஹீரோயின் பேசிக்கலி ஜமீன் பரம்பரை போல.சுடி ல துப்பட்டாவை ஒன் சைடா அங்கவஸ்திரம் போல் போட்டிருக்கு.அதுவும் கிக்காதான் இருக்கு # இ பா
7 கமல் நடிக்க இருந்து பின் ட்ராப் ஆன கண்டேன் சீதையை கதைக்கரு + வணக்கம் சென்னை திரைக்கதை = இந்தியா பாகிஸ்தான்
8 வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கித்தாரேன்
வந்தா உன்னை நானும் பொண்டாட்டி ஆக்கப்போறேன் - விஜய் ஆண்ட்டனி குத்தாட்டம் # இ பா
9 ஒருத்தன் 3 பொண்ணுங்களோட வந்திருக்கான்.3 பேருக்கும் கேன்ட்டீன் ல என்னென்னமோ வாங்கித்தாரான்.500 ரூபா ஆகிடுச்சு இதுவரை
10 பல கோடிப்பெண்களில் உன்னைத்தேடி காதலித்தேன் குட் மெலோடி # இ பா.
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 ஹீரோ ஈ ஓட்டும் காட்சி
2 கோர்ட் வளாகத்தில் ஐயிட்டம், என தெரியாமல் ஹீரோ கேஸ் என நினைத்து உரையாடும் ஏ கிளாஸ் காமெடி
3 ஹீரோ - ஹீரோயின் எதேச்சையாய் காதலுக்கு மரியாதை டிவிடி எடுப்பதும் அது பின்ன்னால் திரைக்கதையில் கொலைக்கான எவிடென்ஸ் ஆவதும்
4 பசுபதி எம் எஸ் பாஸ்கரின் கலக்கலான காமெடி எபிசோட் அது படமாக்கப்பட்ட விதம் அனைவரின் நடிப்பும்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஹீரோ ஹீரோயின் ஒரே வீட்டில் வாடகைக்கு எடுத்து ஷேர் செய்வது இப்போதானே வணக்கம் சென்னை யில் வந்தது? 2 பேரும் ஒரே டிவிடியைப்பார்த்து சுட்டுட்டீங்களா?
2 ஒரு போலீஸ் ஆஃபீசர் ஆள் அனுப்பாமல் தானே வீட்டில் போய் சாட்சி டிவிடி எடுக்க போவாரா?
3 ஓப்பனிங் சீனில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் பணியாட்கள் எல்லோரும் கழுத்தில் டேக் மாட்டி ஐ டி கார்டு வெச்சிருக்காங்க .ஆனா அது இல்லாமல் இருக்கும் ஹீரோவை வீடியோ கடை ஆள் என நினைத்து ஹீரோயின் எப்படி பேசறார்?
4 காதலியைப்பத்தி நண்பர்கள் தப்பா பேசுனதும் எந்தக்கூமுட்டையனாவது அப்படி ஒரு ஆசிட் டெஸ்ட் ஹீரோயினுக்கு வைப்பானா? அவனுக்குத்தெரியாதா>
சி பி கமெண்ட் -இந்தியா பாகிஸ்தான் - விஜய் ஆண்ட்டனியின் ஹாட்ரிக் ஹிட்- பி செண்ட்டர் ரசிகர்களுக்கான காமெடி மெலோ டிராமா - விகடன் = 40, ரேட்டிங் =2.75 / 5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 40
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே
ரேட்டிங் =2.75 / 5
ஈரோடு விஎஸ் பி யில் படம் பார்த்தேன்