கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல
இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வதாக காட்டும் வீடியோ
காட்சிகள் கன்னட தொலைக்காட்சியில் சனிக்கிழமை ஒளிபரப் பானது. இதனால்
அதிர்ச்சியடைந்த அவருடைய பக்தர்கள் அவருடைய ஆசிரமத்தை முற்றுகையிட்டனர்.
குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ (32) கோலார் மாவட்டம் முல்பாகலைச்
சேர்ந்தவர்.கடந்த 3 ஆண்டுகளாக பெங்களூரில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட்டில்
'தேவி ஸ்ரீ திவ்ய ஜோதிட நிலையம் மற்றும் ஆசிரமம்' நடத்தி
வருகிறார்.கைரேகை,ஜோதிடம்,ஹோம பூஜைகள்,வாஸ்து,நவகிரக சிறப்பு பூஜைகள்
உள்ளிட்ட பலவிதமான பூஜைகள் செய்து பிரபலமானார்.
பெரும்பாலான கன்னட தொலைக்காட்சிகளில் ஜோதிடம், பூஜைகள் குறித்த
நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.இதனால் கர்நாடகாவில் சில அரசியல்,சினிமா
பிரபலங்கள் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீசாமியாரின் பக்தர்களாக மாறினர்.
இந்நிலையில் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ பல இளம்பெண்ணிடம் பாலியல்
ரீதியாக அத்துமீறி நடந்துகொள்வது போன்ற வீடியோ காட்சிகள் ஒரு தனியார் கன்னட
சேனலில் சனிக்கிழமை ஒளிபரப்பானது. இந்த காட்சிகள் 27-04-2013 அன்று
அவருடைய ஜோதிட நிலையத்தில் பதிவு செய்யப்பட்டவை என தெரியவருகிறது. ஒரு
கன்னட அமைப்பின் மூலம் இந்த வீடியோ சிடி கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதிர்ச்சி அடைந்த அவரது பக்தர்களும், நவநிர்மாண் உள்ளிட்ட கன்னட
அமைப்புகளும் அவருடைய ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். சாமியார் தப்பியோடி
விட்டதால்,பூட்டப்பட்டிருந்த அவரது ஜோதிட நிலையத்தின் கதவுகளையும் உடைக்க
முற்பட்டனர். சாமியாருக்கு எதிராக கோஷமிட்ட கன்னட அமைப்புகளை
சேர்ந்தவர்கள்,அவரின் புகைப்படத்தை கொளுத்தினர்.
பாலியல் வன்கொடுமை
தன்னைத் தேடி வரும் இளம்பெண்களுக்கு தோஷம் கழிப்பதாகக் கூறி சாமியார்
பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். பெங்களூர் வரு வதற்கு முன்பாக கோலாரில்
பல இளம் பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட தால், அங்கிருந்து விரட்டப்பட்டார்.
பாதிக்கப் பட்ட பலர் தங்களுடைய எதிர்காலத்தை கருதி, புகார் அளிக்க
முன்வருவதில்லை'' என்று கூறப்படுகிறது.
மறுப்பு
பல்வேறு கன்னட அமைப்புகளும்,பெண் மகளிர் அமைப்புகளும் சாமியார் குருஜி ஸ்ரீ
ராமசுவாமி தேவி ஸ்ரீ மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சாமியார் குருஜி ஸ்ரீ ராமசுவாமி தேவி ஸ்ரீ தலைமறைவாகி உள்ளார்.அவரால்
பாதிக்கப்பட்டவர்கள் யாரும் காவல்நிலையத் தில் புகார் அளிக்காததால்,
இன்னும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவரது தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு
கொண்டபோது,அவர் பேச மறுத்துவிட்டார். அவருடைய இணையதளத்திலோ,'அந்த
வீடியோவில் இருப்பது நான் இல்லை.அது மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோ' என
அறிவித்துள்ளார்.
- Alagesan from Milpitasகுற்ற சாட்டு உண்மையல்ல என்று கூறுபவர் தைரியமாக வெளியில் வந்து தன் நிலையை பாதுகாக்க வேண்டும் ; படங்கள் எல்லாம் "மார்பிங்" என்பதை நிரூபித்து அவர்கள் மீது சரியான தண்டனை வழங்க நீதி மன்றம் போகலாமே ? அழகேசன் கோவைabout a month ago · (0) · (0) · reply (0)
- P.Padmanabhan from Coimbatoreசாமியார், சோதிடம் தோஷம் எல்லாமே படு முட்டாள்தனமான மரபுகள். தமிழக முதல்வர போன்றோர் சோதிடம், பரிகாரம், யாகம் தோஷம் என்று நமபிக்கையில் செய்பவை செய்பவைகள் செய்திகளாகும் போது சாதாரண மக்களும் கவரபடுகிறார்கள். ஏமாறவும் செய்கிறார்கள.about a month ago · (0) · (0) · reply (0)
- kabirபடைத்த இறைவனை நம்பாமல் எப்போது மனிதன் சாமியாரை நம்புகிறானோ அவனுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். உண்மையான பெரியவர்களை நம்புவதும் இல்லை , அவர்களது பேச்சை கேட்பதும் இல்லை. போலி ஆட்களிடம் ஏமாறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் ஒரு கொடுமையான விஷயம் என்ன என்றால் , ஏமாருபவர்களில் பலர் படித்தவர்கள்.about a month ago · (3) · (0) · reply (0)
- கி. Krishnamurthyஅரசியலில் மதத்தை கலந்ததால் வருகின்ற கோளாறு இது. மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் கட்சிகள் தங்களை எப்படியும் காப்பாற்றி விடும் என்கின்ற துணிச்சல் காரணமாகவே இத்தகைய போலிச் சாமியார்களின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன.about a month ago · (2) · (0) · reply (0)
- Vasudevan Venugopal from Chennaiஇதில் புரியாத விஷயம் என்னவென்றால், சாமியார்களில் பெரும்பாலோர் தங்களிடம் வரும் பெண்களிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக்கொண்டிருந்தும் என் இந்தப் பெண்கள் அந்த மாதிரியான இடங்களுக்குப் போகிறார்கள் என்பது. இதைவிடக் கொடுமை குஜராத்தில் துராக்ரகம் செய்துகொண்டிருந்த ஒரு சாமியார் கைது செய்யப்பட்ட போது, இப்படிப்பட்ட ரிஷிகளை எல்லாம் கைது செய்யக் கூடாது என்று போராட ஆரம்பித்தார் ஒரு பிரபலமான மதவாதப் புள்ளி என்பதுதான்.about a month ago · (2) · (0) · reply (0)BKK Up Voted
- NIRAIMATHI Mathi at My Family from Coimbatoreஇந்தப்பெண்கள் எப்போதுதான் திருந்துவார்களோ. நம்ம ஊர் எல்லாத்திலயுமே பெருமாளும் சிவனும் கதவைத்திறந்து வச்சு ராத்திரி எட்டு மணி வரைக்கும் உங்கள் குறைகேட்க தீர்த்துவைக்க காத்திருக்கிறார்களே. இந்த மானிடப் பதர்களிடம் ஏன் போய்த் தொலைகிறீர்கள்?about a month ago · (5) · (0) · reply (0)
- Mohamed from Abu Dhabiஇன்னும் ஆயிரம் பிரேமானதா வந்தாலும் இந்த மக்கள் திருந்தவே மாட்டாங்க...நன்றி - த இந்து