Showing posts with label இந்தியன் 2 ( தமிழ் ) - 2024 - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இந்தியன் 2 ( தமிழ் ) - 2024 - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, July 13, 2024

இந்தியன் 2 ( தமிழ் ) - 2024 - சினிமா விமர்சனம் ( ஆக்சன் மசாலா )

     



             

  இயக்குநர் ஷங்கருக்கு  ஒரு  ராசி  உண்டு , அவரது படங்களின்  டைட்டில்  “ ”ன்”  என்ற  எழுத்தில்  முடிந்தவை  எல்லாம்  மெகா  ஹிட் . உதா - ஜெண்டில் மேன் , காதலன், இந்தியன் , முதல்வன் , அந்நியன் , எந்திரன் .  அவரது  இந்த  “ ”ன்”   செண்ட்டிமெண்ட்டை  மீறி  வந்த  படங்கள்  எல்லாம்  சுமார்  அல்லது  மீடியம்  ஹிட்  உதா  பாய்ஸ் , ஜீன்ஸ் , ஐ .  டூ பாயிண்ட் ஓ .    சிவாஜி  ,ன்  வரிசையில் சேராத  மெகா  ஹிட் . நண்பன்  3  இடியட்சின்  ரீமேக் என்பதால்  அது  கணக்கிலேயே  வராது . . தமிழில் மெகா ஹிட்  ஆன  முதல்வன்  படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன  நாயக்  தோல்வி ,    இந்த  பட்டியலில்  இல்லை .  இப்போது  ரிலீஸ்  ஆகி  இருக்கும்  இந்தியன்  2  எந்த  கேட்டகிரியில் சேரப்போகிறது  என்பது  மில்லியன்  டாலர்  கொஸ்டின் 


ஷங்கர் அளித்த பேட்டியில்  என்  திரை  உலக வாழ்க்கையில் முதன் முதலாக  ஒரு  படத்துக்கு மூன்று  வசனகர்த்தாக்களை  (திரைக்கதைக்கும்)   பயன்படுத்தி  இருக்கிறேன்  என்று  சொன்னபோதே  அடேங்கப்பா  , ஒரு  பாலகுமாரனோ , ஒரு  சுஜாதாவோ   செய்ய  வேண்டிய  ஒரு  அரிதான வேலையை  மூவர்  பங்கு  போடும்போது  அதன்  தரம்  எந்த  அளவுக்கு  உயர்ந்து  இருக்கும்  என்ற  எதிர்பார்ப்பில்  தான்  படம்  பார்த்தேன் . ஏ ஆர்  ரஹமான்  , சுஜாதா , கவுண்டமணி செந்தில்  காமெடி  இல்லாமல்  ஷங்கர்   சமாளித்தாரா? என்பதைப்பார்ப்போம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  யூ ட்யூப்  போராளி. தன்  நண்பர்கள் மூவருடன் சேர்ந்து சமூக  அவலங்களைப்படம்  பிடித்து  மக்கள்  பார்வைக்குக்கொண்டு  சென்று  லைக்ஸ்  வாங்குபவர் . ஆனால் பாதிக்கப்பட்ட  ஆட்கள்  அரசியல்  செல்வாக்கும், பணபலமும்  உள்ளவர்களாக  இருப்பதால் போலீசை  ஏவி  ஈசியாக  நாயகன்  அண்ட் கோ வை  லாக்கப்பில்  தள்ளி  விடுகிறார்கள் .


  நம்மால  இது  ஆகாது . இந்தியன்  தாத்தா  மாதிரி  ஒருவர்  அல்லது  இந்தியன்  தாத்தாவே  வந்தால்  தான்  சரி  வரும்  என  நினைத்து ட்விட்டரில் கமான் இந்தியன்  என  ஹேஸ்டேக்  ஆரம்பிக்க  அது  ஹிட் ஆகி  எங்கேயோ  இருக்கும்  இந்தியன்  தாத்தா  பார்வைக்குப்போகிறது 


 அவரும்  வருகிறார். அவங்கவங்க  வீட்டில் இருக்கும்  குப்பைகளை  சரி  செய்தால்  நாடு  சுத்தமாகும்  என்கிறார். இதனால்  நாயகன்   தன்  அப்பாவை , நாயகனின்  நண்பர்கள்  அவரவர்  வீட்டில்  இருக்கும்  அம்மாவை , அண்ணனை , மாமாவை  இப்படி  நெருங்கிய  உறவினர்களை தப்பு  செய்பவர்களை  சாட்சியுடன்  போலீசில்  மாட்டி  விட  குடும்பத்தில்  கலகம்  உண்டாகிறது . இந்த  எல்லாப்பிரச்சனைகளும்  இந்தியன்  தாத்தாவால்  தான்  வந்ததன  என  இப்போது  கோ பேக்  இந்தியன்  என  ஹேஸ்டேக்  போடுகிறார்கள் , இதற்குப்பின்  என்ன  ஆனது  என்பது  மீதி   திரைக்கதை 


  நாயகன்  ஆக  சித்தார்த்  நடித்திருக்கிறார். அருமையான  நடிப்பு . அப்பாவை  போலீசில்  மாட்டி  விட்டதும்   அம்மா  தற்கொலை  செய்து  கொள்வதால்  மனம்  உடைந்து  கதறும்  காட்சியில்   உணர்ச்சிப்பிழம்பாக நடித்திருக்கிறார் 


   அவரது   நண்பர்களாக   ப்ரியா  பவானி சங்கர் , ஜெகன்   கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் . அவரது  காதலியாக  ரகுல் ப்ரீத்தி சிங்க்  இரு  காட்சிகளில்  வருகிறார் . 


இந்தியன்  தாத்தாவாக   கமல்  தான்  பாவம்  கம்பீரம்  இல்லாமல்  வருகிறார். முதல்  பாகத்தில்  அவர்  வரும்  ஒவ்வொரு  சீனும்  செம  கெத்து , ஆனால்  இதில்  பார்க்கவே  பரிதாபம் வரவைக்கும்  ஒப்பனை . அதில்  ஒரு  வாசகம்  சொன்னாலும்  திருவாசகம்  போல  சொல்வார் காரணம்  வசனம்  சுஜாதா . இதில்  லொட  லொட  என  பேசிக்கொண்டே  இருக்கிறார், காரணம்  வசனம்  ஜெயமோகன் 


  சிபிஐ  ஆஃபிசர்  ஆக  வரும்  பாபி  சிம்ஹா  24  மணி  நேரமும்  கூலிங்க்  கிளாஸ்  போட்டு  வரும்  கேரக்டர் . அவரது  உதவியாளர்  ஆக  விவேக் 


 இவர்கள்  போக  மனோபாலா , எஸ்  ஜெ  சூர்யா ,  நெடுமுடி வேணு , டெல்லி  கணேஷ் , மனோபாலா , ரேணுகா  என  ஒரு  நட்சத்திரப்பட்டாளமே  நடித்துள்ளன 


  இசை  அனிரூத். படத்தின்  மிகப்பெரிய  மைனஸ்  இவர்  தான் .  முதல்  பாகத்தில்  ஏ  ஆர்  ஆர்  பிஜிஎம்மில்  பின்னி  எடுத்திருப்பார். இதில்  க்ளைமாக்சில்  மட்டும்  பிஜிஎம்  சுமாராக  இருக்கிறது 


தாத்தா  வர்றார்  என்ற  ஒரே  ஒரு  பாடல்  மட்டும் ஹிட்  பாட்டு 


 ரவிவர்மனின்  ஒளிப்பதிவு  அட்டகாசம். சிட்டிசன் , தசாவதாரம்  ஆகிய  படங்களீல்  எ3ப்படி  கெட்டப்கள்  எல்லாம்  நகைப்புக்கு  உரியதாய்  ஆனதோ  அதே  போல்  இதில்  கமல்  வரும்  ஐந்து  விதமான  கெட்டப்களும்  சுமார்  தான் 


 ஒரே  ஒரு  காட்சியில்  சேனாபதி  வேட்டி  சட்டையில்  வரும்போது  கெத்தாக  இருக்கிறார் 


ஸ்ரீகர்  பிரசாத்தின்  எடிட்டிங்கில்  படம்  3  மணி  நேரம்  ஓடுகிறது . இரண்டே கால்  மணி  நேரமாக  ட்ரிம்  பண்ணி  இருக்கலாம்


சபாஷ்  டைரக்டர்


1    அரசியல்வாதிகளின்  இலவசத்தால்  தான் மக்கள்  கெடுகிறார்கள்  என்று  சொல்லி  அதிமுக  ஆட்சியில்  இலவசமாகக்கொடுக்கப்பட்ட   டேபிள்  ஃபேன் , கிரைண்டர் , மிக்சி  இவற்றை  எல்லாம்  காட்டி  திமுக  ஆட்சியில்  கொடுக்கப்பட்ட  (கலைஞர்) டிவி யைக்காட்டாமல்  விட்ட  சாணக்கியத்தனம்   (  ஏன்  எனில்  தயாரிப்பு  ரெட் ஜெயண்ட்  மூவிஸ்) 


2    விஜய் , அஜித்  படங்களில்  எல்லாம்  அனிரூத்தின் பிஜிஎம்  பிரமாதமாகப்பேசப்பட்டதால்   ட்ரெண்டுக்கு  ஏற்றபடி  அவரை  புக்  பண்ணி  விட்டு   அது  ஒர்க்  அவுட்  ஆகாததால்  முதல்  பாகத்தின்  ஏ ஆர்  ஆர்  பிஜிஎம்மை  பல  இடங்களில்  யூஸ்  செய்த  சாமார்த்தியம் 


3  இரண்டாம்  பாகத்தை  முடிக்காமல்  ஜவ்வு  இழுப்பாய்  இழுத்து  மூன்றாம்  பாகம்  வரை  கொண்டு  போன  லாவகம்  ( டபுள்  வருமானம் ) 


4     ஷூட்டிங்  நடக்கும்போதே  இறந்து  போன  கலைஞர்கள்  ஆன   விவேக்  , மனோபாலா , நெடுமுடி வேணு   ஆகியோர்  போர்சனை   ஏ ஐ  டெக்னாலஜி  மூலம்  பிசிறிலில்லாமல்  முடித்தது 


5      முதல்  பாகத்தில்  வர்மக்கலை  பெரிதாகப்பேசப்பட்டதால்   அந்த  ஒரு  விஷயத்தை  வைத்தே  நான்கு  புதுப்புது  கோணத்தில்  கொலைகள்  செய்யும்  காட்சியை  வைத்து  ஒரு  மணி  நேரம்  இழுத்தது


6    பிரபல  கார்ட்டூனிஸ்ட்   ஆர்  கே  லட்சுமணின்   சாகா  வரம்  பெற்ற   சாமான்யன் கேரக்டரை  படம்  முழுக்க  உலாவர விட்டது 


7  உலக  நாயகன்  கமல்  என  டைட்டிலில்  பெயர்  வரும்போதும்  , இந்தியன்  2  டைட்டில்  வரும்போதும்   கையாணட  உத்தி  அருமை 


6   நெடுஞ்சாலை  ஓர   மட்டமான ஹோட்டல்களில்  பஸ்  சை   நிறுத்தி  பஸ்  கண்டக்டர்  ,,  டிரைவர்  இருவரும்  கமிஷன்  வாங்கிக்கொண்டு   செய்யும்  அட்டூழியங்கள்  , கொடுமைகளை  காட்சிப்படுத்திய  விதம் 


9  2017 ஆம்  ஆண்டு  டூ  2023  ஆம்  ஆண்டு   7  வருடங்கள்  கிடப்பில்   இருந்த  படம்  என்றாலும்  அதிக  டேமேஜ்  இல்லாமல்  கண்ட்டினியூட்டி  மிஸ்  ஆகாமல்  கரை  சேர்த்த  விதம் 


10   மக்களுக்கு  விஜய்  மல்லய்யா  மேல்  இருக்கும்  வெறுப்பைப்பயன்படுத்தி  அவர்  கேரக்டரை  வில்லனாகக்காட்டிய  விதம் 


  ரசித்த  வசனங்கள்   (  ரைட்டர்  ஜெயமோகன் , கபிலன்  வைரமுத்து , லட்சுமி சரவணக்குமார் ) 


1      பார்த்துப்போடா   நாயே 


 பாத்ரூம்ல  போடா  (  ஓப்பனிங்  சீனில்  என்ன  ஒரு  தத்துவம் ) 


2    நான்  காமன் மேன் , ஓட்டுப்போடும்  மிஷின் 


3   முன்னாடி  எல்லாம்  3  லட்சம்  ஊழல் ,   5  லட்சம்  ஊழல்  என்று  தான்   பேசுவோம், இப்போ 1000 கோடி  ஊழல்  என  பேச  ஆரம்பித்து  விட்டோம் 


4   நீங்க  எல்லாம்  கரப்ட்டட், கரப்பான்  பூச்சிகள், அணுகுண்டே  போட்டாலும்  அழிக்க  முடியாது 


5     எலக்சன்ல   வோட்  சேஞ்ச்  இல்லை  எக்சேஞ்ச் 


6   என்ன    நக்கலா ?


 இல்லை  நிக்கல் , தாய்வான்  50  ரூபா  காயின்  (  இந்த   வசனம்  சுஜாதாவின்  எந்திரன் டயலாக் )


7   கழிப்பறைல   எழுதிட்டு  இருந்தவங்க  எல்லாம்  இப்போ ஃபேஸ்புக்ல  எழுதிட்டு  இருக்காங்க   (  இந்த  டயலாக்கை  ரைட்டர்    ஜெயமோகன்  தான்  எழுதி  இருப்பார் ) 


8   என்ன  கர்மம்  சார்  இது ?


 கர்மம்  இல்லை  வர்மம்  ( இந்த  டயலாக்  அதிதி  சங்கர்  ஆக  இருக்கலாம் , அவர்  தான்  மேடைகளில்  மொக்கை  ஜோக்  சொல்வார் ) 


9   எல்லாரும்  குடும்பத்துக்காக  எதை  வேண்டுமானாலும்  விட்டுக்கொடுப்பாங்க, ஆனா  குடும்பத்தை  யாரும்  விட்டுக்கொடுக்க மாட்டாங்க 


10  லஞ்ச   ஒழிப்புத்துறைக்கே  லஞ்சமா? எத்தனை  இந்தியன்  வந்தாலும்  திருந்த  மாட்டீங்க 


11   ஈ  சேவை  மையம்  ல  வேலை  செய்யும்  கொசு


12    என்ன  கால்ல  சுளுக்கா ?


 இல்லை  நான்  கூட ........  (  டபுள்  மீனிங் ) 


13   நீ  சாப்பிட்டதால  வெயிட்  போடலை , பலரது  சாபத்தால தான் வெயிட்  போட்டிருக்கே 


14    சின்ன  வயசுல  பொய்  சொல்லாதே , திருடாதே  என  சொல்லிக்கொடுத்துட்டு  இப்போ   அதை  எல்லாம் செஞ்சாதான்  வாழ  முடியும்  என  சொன்னால்  எப்படி ? 


15  வீட்டை  சுடுகாடு  ஆக்கிட்டு  நாட்டை  வளமாக்கி  என்ன  பண்ணப்போறோம்? ? 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   பலமான  வில்லன்  கேரக்டர்  இல்லாதது .  இந்தியன்  தாத்தாவுக்கு  ஆபத்து  வருமோ  என்ற  பதைபதைப்பே  படம்  முழுக்க  இல்லாதது  


2   சித்தார்த்  அண்ட்  கோவின்  குடும்பங்களில்  நடக்கும்  சம்பவங்களால்  அவர்கள்  மனம்  மாறுவது  ஒரு  நெகடிவ்  வைப்ரேசனை  எழுப்பியது  பின்னடைவு 


3   முதல்  பாகம்  போல  கவுண்டமணி  செந்தில்   காமெடி  டிராக்கோ , நகைச்சுவையோ மருந்துக்குக்கூட  இல்லாதது .  இரண்டு  நாயகிகள்  படத்தில்  இருந்தும்  ஒரு  டூயட்  கூட  இல்லாதது 


4  முதல்  பாகத்தில்  கமலுக்கு  மணீஷா , ஊர்மிளா  என  இரு  ஜோடிகள்  உண்டு , அது  போக  சுகன்யா . இரண்டாம்  பாகத்தில் கமலுக்கு  ஜோடியே  இல்லை  டூயட்டும்  இல்லை 


5  க்ளைமாக்சில்  ஒத்தை   வீல்   சைக்கிள்  மாதிரி  எதுலயோ  கமல்  எஸ்கேப்  ஆகும்  காட்சி  அநியாய   நீளம்  35  நிமிடங்கள் 


6  எல்லாவற்றையும்  விடக்கொடுமையானது  இந்த  மொக்கையான   15  டயலாக்சை  எழுத  மூவருக்கு  தலா  ரூ 25  லட்சம்  , ஆக  மொத்தம்  75  லட்சம்  சம்பளமா? அய்யோ 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்   - கண்ட்டெண்ட்டுக்கே  பஞ்சம், இதுல  அடல்ட்  கண்ட்டெண்ட்  தான்  குறைச்சலா?  



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரிலீஸ்  அன்று  வந்த  நெகடிவ்  விமர்சனங்கள்  போல படம்  அவ்ளோ  மொக்கையாக  எல்லாம்  இல்லை . பரவாயில்லை , ஆனால்  முதல்  பாகம்  போல்  10 %  கூட  இல்லை . ஆனந்த  விகடன்  மார்க்  43   குமுதம்  ரேங்க்கிங்  சுமார்   . அட்ரா  சக்க  ரேட்டிங்  2.5 / 5 


 ஈரோடு   சண்டிகாவில்  படம்  பார்த்தேன். இவ்ளோ  நெகடிவ்  விமர்சனங்கள்  வந்தும்  தியேட்டரில் 240  பேர்  ஆடியன்சாக  பார்த்தது  ஆச்சரியம்  கமல்  ஃபேன்ஸ்  ராக்கிங் 


Indian 2
Theatrical release poster
Directed byS. Shankar
Written byS. Shankar
Dialogues byB. Jeyamohan
Kabilan Vairamuthu
Lakshmi Saravana Kumar
Screenplay byS. Shankar
Story byS. Shankar
Produced by
Starring
CinematographyRavi Varman
Edited byA. Sreekar Prasad
Music byAnirudh Ravichander
Production
companies
Distributed bysee below
Release date
  • 12 July 2024
Running time
180 minutes[a]
CountryIndia
LanguageTamil
Budget150 crore[b]