பொதுவா பொண்ணுங்க பொசுக் பொசுக்னு புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க .ஹீரோவோட அக்கா தன் வீட்டை எதிர்த்து செஞ்சுக்கிட்ட லவ் மேரேஜ்லயும் சின்ன விஷயத்துக்கு கோவிச்சுக்கிட்டு மதுரையில் இருக்கும் அம்மா வீட்டுக்கு வர அக்கா வீட்டுக்காரரை சமாதானப்படுத்த கோவை போறாரு ஹீரோ .
எதிர் வீட்டில் ஹீரோயின் . பார்த்ததும் கட்டுனா இவளைக்கட்டனும் ,இல்லைன்னா கட்டினவன் காலை த்தொட்டுக்கும்பிடனும்னு முடிவு பண்ணி ரூட் விட்டுட்டு இருக்காரு
ஹீரோயின் கூடவே ஒரு ஃபிரண்ட் கழுகு மாதிரி சுத்திட்டு இருக்கான். எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு அவன் வெயிட்டிங்க் . ஹீரோ அவனைப்பத்தி எச்சரிச்சும் ஹீரோயின் நம்பலை . பொதுவா பொண்ணுங்க நல்லவனை நம்ப மாட்டாங்க .
இவங்க 2 பேர் காதல் சக்சஸ் ஆச்சா? என்பதை காமெடி , ஃபேமிலி செண்டிமெண்ட் ஸ் கலந்து சொல்லி இருக்காரு சுந்தர பாண்டியன் இயக்குநர்
ஹீரோவா உதயநிதி ஸ்டாலின். இவர் தான் தயாரிப்பாளரும் கூட . இவர் கிட்டேப்பிடிச்சதே தான் ஒரு தயாரிப்பாளரா இருந்தும் கூட இந்த பஞ்ச் டயலாக் , ஓப்பனிங்க் பில்டப் சீன் எல்லாம் வைக்காம எதார்த்தமான கேரக்டர்ல வருவது தான் . சபாஷ் . முதல் படத்தை விட நல்ல முன்னேற்றம் . பாடல் காட்சிகளில் நடன அசைவுகளில் சமாளிக்கிறார். டயலாக் டெலிவரியும் ஓக்கே. சில காட்சிகளீல் காமெடி கூட ட்ரை பண்ணி இருக்காரு .
ஹீரோயின் நயன் தாரா .மாமழை போற்றும் , பல மாநிலம் ஏற்கும், மாநிற அழகி . குடும்பப்பாங்கான தோற்றத்தில் யாரடி நீ மோகினி யில் வந்தவர் அதே பாணியில் கண்ணியமாக வந்து போகிறார். நடிப்புக்கான ஸ்கோப் கம்மி என்றாலும் வந்தவரை ஓக்கே . பாடல் காட்சிகளில் கோடம்பாக்க விதிகளின் படி கிளாமர் டிரஸ் .
ஹீரோவுக்கே உண்டான பில்டப்புடன் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் ஓப்பனிங்க் சாங்குடன் வரும் சந்தானம் இதில் வழக்கம் போல் ஹீரோவுக்கு நண்பன் . காதலுகு ஐடியா குடுக்கும் ஐடியா அய்யா சாமி. ஓக்கே ஓக்கே வில் 117 ஜோக்குகளுடன் கலகலப்பு ஊட்டியவர் இதில் 47 ஜோக்ஸ் உடன் நிறுத்திக்கொண்டதுக்குக்காரணம் இயக்குநர் ஃபேமிலி எண்ட்டிமெண்ட்ஸ்க்கு காட்சிகள் ஒதுக்கியதே . இவருக்கு ஒரு ஜோடியும் உண்டு
தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி ஹீரோயின் தோழியாக வரும் கேரளா பொண்ணு ஹீரோயினை விட அழகாக இதிலும் இருக்கார் . இவர் சந்தானத்துக்கு ஜோடி . இவர்களுக்கு ஒரு பாட்டு சீன் வெச்சிருக்கலாம் , ஜஸ்ட் மிஸ்டு
மயில் சாமி க்ளைமாக்ஸ் டிராமா மிமிக்ரிக்கு வர்றார் . ஓக்கே .
படத்தில் வரும் கேரக்டர் ரோல்ஸ் எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . குறிப்பா சரண்யா வெரிகுட்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை மெலோடி சாங்க்ஸ் ஆக போட்டிருக்கார். எல்லாம் ஓக்கே . ஆனா பின்னணி இசை ரொம்ப சாதாரணமா இருக்கு . ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கதைக்களம் கோவை , மதுரை என்பதால் பரிச்சயமான இடங்களைப்பார்ப்பது கொங்கு மண்டல ரசிகர்களுக்குப்பிடிக்கும்
ஒரு பாடல் காட்சியில் ( அன்பே அன்பே ) தாமரைக்குளத்தில் தாமரை இலை மீது சிட்டுக்குருவி நிற்பது கண் இமைக்கும் நேரத்தில் மின்னி மறையும் ஓவியக்காட்சி , பிரமாதம்
நச் டயலாக்ஸ்
1/. நடை சாத்துன பிறகு கோயிலுக்குப்போலாம்னு கூப்பிடறதும் ,கடை சாத்துனபின் கட்டிங் அடிக்கலாமா?னு கூப்பிடறதும் உன் பழக்கம்டா #,சந்தானம்
2 இப்பவெல்லாம் பொண்ணுங்க பொய்யா கவிதை சொல்றவனைத்தான் நம்புதுங்க # சந்தானம்
3 பொண்ணுங்க புடவை மாத்தத்தான் லேட் பண்றாங்க.டக் டக் னு பையனை ஈசியா மாத்திடறாங்க - சந்தானம்
4 புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கனும் ,பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கனும் # சந்தானம்
5வேற ஒருத்தன் உஷார் பண்ணின பொண்ணுங்க ளைக்கூட கரெக்ட் பண்ணிடலாம் , ஆனா எப்பவும் உஷாரா இருக்கும் பொண்ணை கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம்
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
1. தமிழ் நாட்டின் அடுத்த சி எம் மே! னு ஒரு குரல் # நயன் தாரா இன்ட்ரோ # இது கதிர் வேலன் காதல்
2 பகுத்தறிவுப்பகல்வர் தமிழ் இனத்தலைவர் பேரன் ஆஞ்ச நேய பக்தராக ஓப்பனிங் சீன் லயே சாமி கும்பிடற இன்ட்ரோ # தமிழா தமிழா
3 அரங்கம் அதிரும் கரகோஷத்துடன் சந்தானம் இன்ட்ரோ.ஓப்பனிங் சாங் உடன் .பல்லாக்கு தேவதை # இ க கா
4 நயன் வரும்போதெல்லாம் மெல்லிய இசை # ஹாரீஸ் ராக்ஸ்
5 ஹலோ டைரக்டர் சார்.எந்த கேரளா பிகர் சந்தனக்கலர் ஜரிகைக்காட்டன் சேலைக்கு சம்பந்தமே இல்லாம சிவப்பு ஜாக்கெட் போட்டதைப்பாத்தீங்க?
6 இயற்கை தேவதை அளித்த அழகிய புருவத்தை ட்ரிம் பண்ணி அழகைக்குறைப்பது ஏனோ? #நயன் ன் திருத்தப்பட்ட புருவம்
7 டைரக்டர் கம்யூனிஸ்ட்டா? எல்லா லேடி கேரக்டர்சும் சிவப்பு ஜாக்கெட்டா போட்டுட்டு வராங்க?
8 திருடா திருடி மன்மதராசா டான்ஸ் ஸ்டெப் எல்லாம் ரொம்ப கஷ்டம் ப்ரோ. உதயநிதி சார்.
9 இது கதிர் வேலன் காதல் @ இடை வேளை .இதுவரை டைம் பாஸ்.ஓகேஓகே பாகம் 2 ,ம் ம்
10 ஹீரோயின் நயனை விட தோழியா வரும் கேரளா பிகர் 10 மார்க் கூட
11 ஹாரீஸ் இசையில் எல்லாப்பாட்டும் மெலோடி.நல்லா தான் இருக்கு.ஆனா தியேட்டர்ல கத்தறாங்க # தமிழேண்டா ஏண்டா?
சில கேள்விகள்
1. மயில் சாமி மிமிக்ரி டிராமா ரொம்ப ரொம்ப நாடகத்தனமா இருக்கு . என்ன தான் எதிர் வீடுன்னாலும் இந்த வீட்டு ஹால் ல பேசுவது அங்கே கேட்பது , மனம் மாறுவது நம்ப முடியல ( ஆனா ஆடியன்ஸ் ரசிக்கறாங்க )
2 கூடவே ஒரு வருசமா பழகிட்டு வர்ற ஆள் பார்வை , நோக்கம் பற்றி நயனுக்குத்தெரியாம இருக்குமா? பொண்ணுங்களுக்கு இயற்கையாகவே ஒரு விழிப்புணர்வு , ஜாக்கிரதை உணர்வு இருக்குமே?
3 சும்மா கரெக்ட் செஞ்சா போது , நோ லவ் நோ மேரேஜ்-னுஇருக்கும் வில்லன் நயனுக்கு ஈசியா போதை மருந்து கலந்து கொடுத்தோ, மயக்க மருந்து செலுத்தியோ எண்ணத்தை நிறைவேற்றி இருக்கலாமே? ஏன் அழகிரியைத்துரத்தி விட்டு கேப்டனுக்கு தூண்டில் போட்ட கதையா சுத்தி வளைக்கனும் ?
சில கேள்விகள்
1. மயில் சாமி மிமிக்ரி டிராமா ரொம்ப ரொம்ப நாடகத்தனமா இருக்கு . என்ன தான் எதிர் வீடுன்னாலும் இந்த வீட்டு ஹால் ல பேசுவது அங்கே கேட்பது , மனம் மாறுவது நம்ப முடியல ( ஆனா ஆடியன்ஸ் ரசிக்கறாங்க )
2 கூடவே ஒரு வருசமா பழகிட்டு வர்ற ஆள் பார்வை , நோக்கம் பற்றி நயனுக்குத்தெரியாம இருக்குமா? பொண்ணுங்களுக்கு இயற்கையாகவே ஒரு விழிப்புணர்வு , ஜாக்கிரதை உணர்வு இருக்குமே?
3 சும்மா கரெக்ட் செஞ்சா போது , நோ லவ் நோ மேரேஜ்-னுஇருக்கும் வில்லன் நயனுக்கு ஈசியா போதை மருந்து கலந்து கொடுத்தோ, மயக்க மருந்து செலுத்தியோ எண்ணத்தை நிறைவேற்றி இருக்கலாமே? ஏன் அழகிரியைத்துரத்தி விட்டு கேப்டனுக்கு தூண்டில் போட்ட கதையா சுத்தி வளைக்கனும் ?
சி பி கமெண்ட் - இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே 2 + செண்ட்டிமெண்ட்ஸ், சராசரிக்காதல் கதை , லேடீஸ்க்குப்பிடிக்கும்
எதிர்பார்க்கும் விகடன் மார்க் =41 ,
ரேட்டிங் =2.75/5
குமுதம் ரேங்க்கிங் = ஓக்கே
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்