Showing posts with label இதய வீணை (1972) -தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label இதய வீணை (1972) -தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, April 13, 2023

இதய வீணை (1972) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி மெலோ டிராமா)


திமுக வில்  இருந்து  வெளியே  வந்து  அதிமுக  எனும்  புதிய  கட்சியை  ஆரம்பித்த  பிறகு  எம் ஜி ஆர்  நடிப்பில்  வெளி  வந்த  முதல் படம்  இது  என்பதால்  ஏகப்பட்ட  எதிர்பார்ப்புடன்  ரிலீஸ்  ஆகி  100 நாட்கள்  வெற்றிகரமாக  ஓடிய  படம்  இது . ஆனந்த விகடன்  வார  இதழில்  இதயம்  பேசுகிறது  மணியன்  எழுதிய  தொடர்கதையின்  திரைக்கதை  வடிவம் இது . தொடர்கதையின்  டைட்டிலும், படத்தின்  டைட்டிலும் ஒன்றே!மணீயனின்  சொந்தப்படம்  இது

 ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்னவயசுல  சேர்க்கை  சரி  இல்லாம  ஒரு  ரவுடிப்பையன் கூட  சேர்ந்து     கெட்ட  பழக்கம்  எல்லாம்  பழகறான், அதனால  அப்பா  கண்டிக்கிறார். அப்பா  கண்டிக்காம  இருக்கனும்னா  இதை  அவர்  குடிக்கும்  பாலில்  கலந்து  கொடு  என  அந்த  வில்லங்கச்சிறுவன்  சொல்ல  நாயகன்  அதன்படி  செய்ய  முற்பட  அப்பாவுக்கு  அது  விஷம்  என  தெரிந்து  நாயகன்  சிறுவனாக  இருக்கும்போதே  வீட்டை விட்டு  துரத்தி  விடுகிறார்.


இப்போ  ஃபிளாஸ்பேக்  முடிந்து  நாயகன்  இண்ட்ரோ , ஒரு  கல்லூரி   டூர்  விழாவில்  உணவு  அருந்தும்போது  ஒரு  பெண்  மட்டும்   நாயகன்  குடும்ப  வழக்கப்படி  பிரார்த்தனை  செய்வதைக்கண்ட  நாயகன்  அது  தன்  தங்கை  என  அறிந்து  கொள்கிறான். தன்  குடும்பத்தைக்காண  காஷ்மீரில்  இருந்து  தமிழகம்  வருகிறான்


தான்  யார்  என்று  காட்டிக்கொள்ளாமல்  தன்  பெற்றோரை  நாயகன்  சந்திக்கிறான்.   தன்  தங்கையின்  காதலனுடன்  தங்கைக்கு  திருமணம்  நிகழ  உதவுகிறான். இதற்குப்பின்  நாயகன்  தன்  குடும்பத்துடன்  எப்படி  மீண்டும்  சேர்ந்தார்    என்பதுதான்  கதை 


நாயகனாக  எம் ஜி ஆர்.  வழக்கமாக  எம் ஜி ஆர்  படங்களில்  அம்மா  செண்ட்டிமெண்ட்  அல்லது  தங்கை  செண்ட்டிமெண்ட்  நிச்சயம்  இருக்கும், இதில்  தங்கை செண்ட்டிமெண்ட். அப்பாவுடனான  செண்ட்டிமெண்ட்  காட்சிகளில்  கவனம்  ஈர்க்கிறார்.சொந்த  அண்ணனான  எம்  ஜி  சக்ரபாணியே  அப்பா  ரோலில்  வருவதால்  முகத்தோற்றம், சாயல்  ஒற்றுமை எல்லாமாகச் சேர்ந்து  கதைக்கு  வலு  சேர்க்கிறது 


நாயகியாக  மஞ்சுளா. டூயட்  பாட  மட்டும்  அல்லாமல்  படம்  முழுக்க  ரவுண்ட்சிலேயே  இருக்கிறார்


நாயகனின்  தங்கையாக  லட்சுமி . நடிக்க  நல்ல  வாய்ப்பு  உள்ள  கேரக்டர்.   இவரது காதல்  கணவராக  சிவக்குமார் , கிட்டத்தட்ட  சைடு  வில்லன்  ரோல்  ,இவருக்கான  விக் தான்  சகிக்க வில்லை 


அண்ணன் - தங்கை  என  தெரியாமல்  அவர்களைத்தொடர்பு படுத்தி  சந்தேகப்படும்  கேரக்டர்  என்பதால்  வெறுப்பை  சம்பாதிக்கும்  ரோல் 


தேங்காய்  சீனிவாசன்  காமெடிக்கு..  ஆனால்  படம்  பூரா  வாத்தியாரே  வாத்தியாரே  என  நாயகனை  அழைக்கும் எடுபுடியாகத்தான்  வருகிறாரே  தவிர  காமெடியைக்காணவில்லை 


வில்லனாக  நம்பியார் . நாயகன்  போல்  உடை  அணிந்து  கொள்ளை  அடித்து  பழியை  அவர்  மேல்  போடும்  கேரக்டர் .  அந்த  காட்சிகள்  எல்லாம்  இப்போது  பார்க்க  சிரிப்புதான்  வருகிறது 


பாடல்கள்  எல்லாம்  செம  ஹிட்டு  சங்கர்  கணேஷ்  தான்  இசை . படத்தின்  க்ளை மாக்ஸ்  ஃபைட்  சீனில் மாறுபட்ட  இசை வேண்டும்  என  30  வீணைகளை  இசைக்க  வைத்து  பி ஜி எம்  ஆக  பயன்படுத்தினார்களாம் 




சபாஷ்  டைரக்டர் ( கிருஷ்ணன்  பஞ்சு )


1  அம்மா  கேரக்டர்  இருந்தும்  ஒரு  சீனில்  கூட  ஹீரோ  அம்மா  என  அழைத்து  பாசம்  காட்டாத  ஒரே  எம் ஜி ஆர்  படம்  இதுதான் 


2    ஹீரோ  பில்டப்  காட்சிகள்  ஹீரோ  துதி  பாடும்  காட்சிகளை  தாராளமாக  ஆங்காங்கே   வைத்தது 

3   ஹீரோ  எவ்ளோ  ஏழ்மையான  சூழ்நிலையில்  இருந்த  போதும்  ஏழையாக  இருக்கும்போதும்  டாட்டா , பிர்லா  போல  டிரஸ்  போட  வைத்தது 


4   படத்தின்  நாயகி  மஞ்சுளா ,  நாயகனின்  தங்கை  லட்சுமி  என  இரு  பெண்  கேரக்டர்களும்  வரும்  பெரும்பாலான  காட்சிகள்  இருவருமே ஸ்லீவ்லெஸ்  ஜாக்கெட்  தான் 

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  காஷ்மீர் , பியூட்டிஃபுல்  காஷ்மீர்  ( ஹீரோ  ஓப்பனிங்  சாங் )


2  பொன்னந்தி  மாலைப்பொழுது  பொங்கட்டும்  இன்ப  நினைவு ( ட்ரீம்  சாங் - 

  டூயட்) 


3  திருநிறைச்செல்வி  மங்கையர்க்கரசி  திருமணம்  கொண்டாள்  இனிதாக  (  தங்கை  மேரேஜ்  வாழ்த்துப்பாடல்) 


4  ஆனந்தம் , இன்று  ஆரம்பம், மெல்லச்சிரித்தால்  என்ன , இதழ்  விரித்தால்  என்ன? 


5  ஒரு  வாலும்  இல்லை  நாலு  காலும்  இல்லை  (  அரசியல் அவல சுட்டிக்காட்டல் பாட்டு ) 


6   நீராடும்  அழகெல்லாம்   நீ  மட்டும்  பார்க்கலாம், நீர்  தொட்ட  மேனியை நீ  தொட்டுப்பார்க்கவா?   (கிளாமர்  சாங் )

  ரசித்த  வசனங்கள் 


1  உலகத்துலயே  பெரிய  தியாகி  அம்மாதான்,  ஏன்  எனில்  குழந்தைக்கு  அப்பாவின் பெயரில்  உள்ள  எழுத்துதான்  இனிஷியல் ஆக   வைக்கப்படுகிறது. அதுக்கு  அம்மா  நான்  பத்து  மாசம்  சுமந்தேனே  என  மறுப்பு  தெரிவிக்காமல்  அனுமதி  அளிக்கிறாளே? அதுவே  தியாகம்  தானே?


2  ஒரு  ஆண்  தவறு  செஞ்சா  அது  வீட்டை  விட்டு  வெளில  எங்கயும்  போகாது , ஆனா  ஒரு  பெண்  தவறு  செஞ்சா அது  வெளில  இருந்து  வீட்டுக்குத்தான்  முதல்ல  போகும் 


3  உடையை  வெச்சு  யாரையும்  எடை  போடாதீங்க . கமண்டலத்துக்கு  உள்ளேயும்  கருநாகம்  இருக்கும், விபூதிக்குள்ளேயும் விஷம்  கலந்திருக்கும் 


ஆமா, பொய்   ஊரெல்லாம்  சுத்தி  வரும்போது  உண்மை  கால்  உடைஞ்சு  வீட்டோடு  இருக்கும் 


4  பொண்ணையும் , பூவையும்  ஒண்ணா  ஏன்  பார்க்கறோம்னா  இரண்டையும்  சுலபமா  பறிச்சுடலாம்


5  ஒரு  ஆண்  எப்போது  சமையல்  செய்யக்கத்துக்கறானோ  அப்பவே  அவனுக்கு  கல்யாணம்  செய்ய  தகுதி வந்துடுச்சுனு  அர்த்தம் 


6  ஒருத்தன்  நல்லா  இருக்கறதுக்கும், கெட்டுப்போறதுக்கும்  அவன்  பக்கத்துல  இருக்கறவங்க  தான்  காரணம் 


7  ஏழையா  இல்லாதவங்க  யார்  தெரியுமா? இதுவரை  இந்த  உலகத்துல  பிறக்காதவங்க  தான்


8  நாம  ஒரு  மணி  நேரம்  சிரிக்கனும்னா  மத்தவங்க  23  மணி  நேரம்  அழுதாலும்  நாம  கவலைப்படக்கூடாது  ( வில்லன் ) 


9  மனுசங்க  உடுத்தும்  உடைக்கும், அவங்க  நடத்தைக்கும்  சம்பந்தம் இல்லை 


10  நீங்க  மலைக்கள்ளன்  ஆக  காட்டுக்குள்  சுத்த  வேண்டிய  அவசியம்  இல்லை . எங்க  வீட்டுப்பிள்ளையா  நாட்டுக்கு  வந்துடுங்க 


11  அடேய் , அண்ணாமலை , பின்  விளைவுகளை  எண்ணாமலே  நீ எங்க  தலைவரை  எதிர்த்துட்டு  இருக்கே  ( ரஜினி  ரசிகர்கள்  பொறுத்திருக்கவும் ) 


12   அடியே  வசந்தா , உன்  கையை  அய்யா  வசம்  தா  ( வசனம்  டி ராஜேந்திரா?) 


13  இந்த  நேரத்திலும்  உங்களால  எப்படி  சிரிக்க  முடியுது ?


எந்த  நேரத்திலும்  என்னால  சிரிக்க  முடியும், ஆண்டவன்   எனக்கு  தந்திருக்கும்  வரப்பிரசாதம்  அது 


14  உன்னை  யார்  இங்கே  வரச்சொன்னது ?


 துப்பு  துலக்க  வந்திருக்கேன் 


 பாத்திரம்  கூட  ஒழுங்கா  துலக்க  மாட்டே  ( இதெல்லாம்  ஆணாதிக்க  வசனம்னு  அந்தக்கால  மாதர்  சங்கங்கள்  கூப்பாடு  போடலை போல ) 


15    சுந்தரம்,  என்னை  மன்னிச்சிடு , உன்னை  தப்பா  நினைச்சுட்டேன்


 நீங்க  மட்டுமா எல்லாருமே  ஆரம்பத்துல  என்னை  தப்பாதான்  நினைக்கறாங்க  (  அரசியல்  உள்  குத்து  வசனம் )


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரெண்டு  பொண்ணுங்களை  ரெண்டு  ரவுடிகள்  தூக்கிட்டுப்போய்  பாலியல்  பலாத்காரம்  பண்ண  முயலும்போது  நம்ம  ஹீரோ  டக்னு  அங்கே  வந்து  காப்பாத்தறார், அவங்க  கூட  ஃபைட்  போட்டுட்டு  இருக்கார் . பொண்ணுங்க  ரெண்டு  பேரும்  அந்த  இடத்தைக்காலி  பண்ண  வேண்டியதுதானே?  ஃபைட்டை  வேடிக்கை  பார்த்துட்டு  அங்கேயே  நிக்கறாங்க . அந்த  ரவுடிகளில்  ஒருத்தன்  மீண்டும்  ரேப்  பண்ண  வர்றான்.இப்படியே  10  நிமிஷம்  அந்த  சீன்  ஜவ்வா  இழுக்குது


2  பாலில்  மயில்  துத்தம்  கலந்தா  பால்  கலர்  மாறும். நீலக்கலரில்  இருக்கும். டவுட்  வராதா? 


3  ஹீரோ  கோட்  ஷூட்  பூட்  எல்லாம்  போட்டுட்டு பெரிய  தொழில்  அதிபருக்கே  லோன்  கொடுக்கும்  செல்வந்தர்  மாதிரி  இருக்காரு . வண்டி  ஓட்டத்தெரியும், டிரைவர்  வேலை  கிடைக்குமா?னு  கேட்கறாரு 


4  அப்பாவான  எம் ஜி  சக்ரபாணி  பல  வருடங்களுக்குப்பின்  தன்  மகனை ( எம் ஜி ஆர்)  சந்திக்கிறார்.ஆனால்  அவர்தான்  மகன்  என  தெரியாது . ஆனால் இருவரும்  ஒரே  முகச்சாயலில்  இருக்கிறார்கள். டவுட்  வராதா? 


5   சிவகுமார்  லட்சுமியைக்கூட்டிட்டு  சினிமா  தியேட்டருக்கு  வர்றார். பால்கனில  அவங்களைத்தவிர  வேற  யாருமே  இல்லை . எல்லா  டிக்கெட்டையும்  அவரே  எடுத்துக்கிட்டாரா? கரெக்டா  இடை  வேளை  விடும்போது  எம்  ஜி ஆர்  அங்கே  வர்றார். படம்  போட்டு  15  நிமிடங்கள்  கழித்து  ஒரு  பெல்  அடிப்பாங்க . அதுக்குப்பின்  யாரும்  தியேட்டருக்குள்  வர  முடியாது அந்தக்காலத்தில்  எல்லாம். நம்மாளு  மட்டும்  எப்படி  உள்ளே  வந்தாரு ?


6  பஸ்  டிரைவரான  ஹீரோ  திடீர்னு  வேலையை  ரிசைன்  பண்றேன்னு  பஸ்  சாவியை  ஒப்படைச்ட்டு  கிளம்பறார். பஸ்சை  செட்ல  கொண்டு  போய்  விட  மாட்டாரா? இப்படித்தான்  நடு  ரோட்ல  அம்போனு  விட்டுட்டுப்போறதா? 


7  ஹீரோ  வெங்காயம்  அரிந்ததால்  கண்களில்  கண்ணீர்  வர  இருக்கிறார். அப்போது  ஹீரோயின்  எண்ட்ரி  ஆகி  ஹீரோ  கண்களை  முந்தானையில்  துடைத்து  ஊதுகிறார். தூசு  விழுந்தாத்தானே  ஊதுவாங்க ? வெங்காயம்  அரிஞ்சதுக்குக்கூடவா  ஊதுவாங்க ? 


8   ஹீரோ  சின்னப்பையனா  இருக்கும்போது  அவரோட  அப்பாவுக்கு  விஷம்  கொடுக்கச்சொன்ன  பையனை  பெரியவன்  ஆனதும்  தேங்காய்  சீனிவாசனா  சந்திக்கிறார். அப்பவே  அவரை  அப்பாவிடம்  கூட்டிட்டுப்போய் நடந்த  சம்பவத்தை  சொல்லி  இருந்தா  அப்பவே  படம்  முடிஞ்சு இருக்குமே? ஏன்  சொல்லலை? ரெண்டரை  மணி  நேரம்  ஓடும்  படம்  ஒரு  மணி  நேரத்தில்  முடிஞ்சிடும்னா? 


9  டிரைவரான  ஹீரோவை  சிக்க  வைக்க  வில்லன்  பிரேக்  பிடிக்காத  லாரியை  திடீர்  என  வழிமறித்து  தந்து  நீ  இந்த  வண்டியை  எடுத்துட்டுப்போனுன் சிக்க  வைக்கப்பார்க்கும்போது  ஹீரோ  வண்டில  பிரேக்  பிடிக்குதா?னு  செக்  பண்ண  மாட்டாரா? வண்டியை  ஓட்டி  10  நிமிசம்  கழிச்சுத்தான்  பிரேக்கையே  பிடிச்சுப்பார்க்கறார். ஒரு  நல்ல  டிரைவர்  வண்டியை  ஸ்டார்ட்  பண்ணும்போது  பிரேக்  கண்டிசனை  செக்  பண்ண  வேண்டாமா?


10  ஹீரோவை  போலீஸ்  துரத்துது.  தப்பிக்க  ஓடும்  அவர்  எதேச்சையா  ஒரு  பங்களாவுக்குள்  நுழைகிறார், இதுவரை  ஓக்கே , ஆனா  லட்சுமியின்  பாத்ரூம்க்குள்  அவர்  இருப்பதும்  கணவன்  வரும்போது  கள்ளக்காதலனோ  என  சந்தேகப்படுவதும்  நம்பவே  முடியாத  கதை . ஒளிய  வந்தவர்  புதர், தோட்டம்  என  ஒளிவாரா? பாத்ரூமுக்குள்  வருவாரா? 


11   வில்லன்  ஹீரோயினை  மானபங்கப்படுத்த  அதாங்க  ரேப்  பண்ண  ட்ரை  பண்ணிட்டு  இருக்கான், அப்போ  அங்கே  வந்த  ஹீரோ டக்னு  வில்லனைத்தடுக்காம  அங்கே  இருக்கும்  வில்லனின்  கோட்  ஷீட்  எல்லாம்  டிரசை  மாத்திப்போட்டுட்டு  மாறுவேஷம்  போட்டுட்டு  வந்து  அப்புறமா  வில்லனைத்தடுக்கறார். அதுக்குள்ளே  பாதி  ரேப் பிராசஸே  முடிச்சிருப்பானே  வில்லன் ? 


12   ஹீரோ  மாறு  வேஷம்கற  பேர்ல  துக்ளியூண்டு  தாடியை  ஒட்ட  வெச்சுட்டு  வர்றார். ஹீரோயின்  மனசாட்சியே  இல்லாம  நீ யாரு? என  அடையாளம்  தெரியாம  திகைக்கிறார்


13   ஹீரோவே  பூவாவுக்கு  வழி  இல்லாம  காட்டுக்குள்  தலை  மறைவு  வாழ்க்கை  நடத்திட்டு  போலீசுக்கு  பயந்து  வாழ்ந்துட்டு  இருக்கார் , இந்த லட்சணத்துல தங்கையான  லட்சுமியின்  அட்டுக்குழந்தையை  தூக்கிட்டு  காட்டுக்கு  வந்துடறார்.எப்படி  தாய்ப்பால்  கொடுக்க? யார்  அதை  பார்த்துக்கறது ? எதுக்கு  இந்த  வேண்டாத  வேலை ? 


14  வில்லனான  நம்பியார்  காட்டுக்கு  ஹீரோவை  சந்திக்கப்போறார். போறது  ஃபைட்  போட  ஆனா  என்னமோ  பிராஜெக்ட்  மேனேஜர்  இண்ட்டர்வுயூக்குப்போற  ஐ டி  ஊழியர்  மாதிரி  டை  கட்டி  டக்  இன்  சர்ட்  போட்டுட்டு  அந்த  கெட்டப்ல  அடி  வாங்கிட்டு  வர்றார்,,,


15  மெயின்  கதையான  அம்மா, அப்பாவை  நாயகன்  எப்படி  சமாதானபபடுத்தி சேர்கிறார்  என்ற  விஷயத்தை  விட்டுட்டு  25  கிமீ  விலகி  தங்கை  செண்ட்டிமெண்ட். தங்கை  குழந்தை ,  தங்கயின்  கணவன்  சந்தேகபுத்தி  என சுற்றி  வளைத்து  திரைக்கதை  எங்கெங்கோ  சுத்தி  அலையுது 


16  வில்லனான  நம்பியார்  நகரத்தில்  இருக்கும்போது  நாயகி மஞ்சுளாவை அ டைய  அடிக்கடி  முயற்சி  பண்றார். அட்டெம்ப்ட்  ரேப்  எல்லாம்  ட்ரை  பண்றார். ஆனா  காட்டுக்குள்  நாயகி  வில்லனிடம்  சிக்கும்போது  லூஸ்  மாதிரி  நாயகியை  கட்டிப்போட்டுட்டு  போயிடறார். அப்போ  ரேப் பண்ணி  இருக்கலாமே? 

17  நாயகன்  ஜெயிலுக்குள்  இருக்கும்போது  சில்க்  சட்டை  ரேமாண்ட்  பேண்ட் எல்லாம்   போட்டுட்டு  இருக்கார். என்னதான்  நாயகன்  எம் ஜி ஆர்னாலும் இப்படியா?  கைதின்னா  வெள்ளை  டிராயர்  வெள்ளை  சட்டைதானே? 


18   திருமணம்  ஆன  லட்சுமி  பாத்ரூம்ல  குளிக்கும்போது  கதைக்கு  சம்பந்தமே  இல்லாம  நீராடும்  அழகெல்லாம்   நீ  மட்டும்  பார்க்கலாம், நீர்  தொட்ட  மேனியை நீ  தொட்டுப்பார்க்கவா?   அப்படினு  ஒரு  கிளாமர்  பாட்டுக்கு  டான்ஸ்  ஆடறார். அப்போ  கழுத்தில்  தாலி  இல்லை , ஆனா 6  பவுன்  நெக்லஸ்  மட்டும் போட்டிருக்காரு , ஒரு  வேளை  அந்தக்காலத்துல  தாலியைக்கழட்டினாலும்  நெக்லசைக்கழட்டாம  குளிப்பாங்களோ ? 

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - படம்  யூ  தான், ஆனா  லட்சுமிக்கு  ஜம்பு  பட  ஸ்டைலில்  ஒரு  குளியல்  காட்சிப்பாட்டல்  இருக்கு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   அந்தக்காலத்தில்  ஃபேமிலி   செண்ட்டிமெண்ட்ஸ்க்காக  ஓடிய  படம்  இந்தக்காலத்தில்  மஞ்சுளா , லட்சுமி  கிளாமருக்காகவும் , செம  ஹிட்  பாட்டுக்காகவும்  பார்க்கலாம். ரேட்டிங்  2.5 / 5 





இதய வீணை
இதய வீணை.jpg
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்கிருஷ்ணன்–பஞ்சு
எழுதியவர்கே. சொர்ணம்
உற்பத்திஎஸ்.மணியன்
வித்வான் வி.லட்சுமணன்
நடிக்கிறார்கள்எம்.ஜி.ராமச்சந்திரன்
லட்சுமி
மஞ்சுளா
ஒளிப்பதிவுஏ.சண்முகம்
திருத்தியவர்எம். உமாநாத்
இசைசங்கர்-கணேஷ்
தயாரிப்பு
நிறுவனம்
உதயம் புரொடக்ஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 20 அக்டோபர் 1972 [1]
நேரம் இயங்கும்
146 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்