Showing posts with label இணையம் வழியாக சிடூஎச் படங்கள். Show all posts
Showing posts with label இணையம் வழியாக சிடூஎச் படங்கள். Show all posts

Wednesday, August 19, 2015

சிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன்? - சேரன் பேட்டி

‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை சினிமா டூ ஹோம் திட்டத்தில் வெளியிட்ட இயக்குநர் சேரன், தற்போது ‘ஆக்கி’, ‘ஆறாம் வேற்றுமை’ என்று அடுத்தடுத்து புதிய படங்களை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளார். சிடூஎச் மூலம் படங்களை ரிலீஸ் செய்யும் அனுபவம், அடுத்தகட்ட பயணம் ஆகியவை குறித்து நம்மிடம் பேசியதிலிருந்து…
‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்துக்கு பிறகு சிடூஎச் முறையில் புதிய படங்களை வெளியிடுவதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன்?
சிடூஎச் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு கற்பனையாக சிலவற்றை திட்டமிட்டிருந்தோம். அதை நிஜத்தில் செயல்படுத்தும்போது பல புதிய மாற்றங்கள் தேவைப்பட்டது. ஒரு சினிமாவை எடுத்து அதை 100 திரையரங்குகளில் வெளியிடுவதே பெரிய வேலை. அதே சினிமாவை 2 கோடியே 40 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு போவதென்றால் அது மிகப் பெரிய வேலைதானே. சிடூஎச் தொடங்கிய முதல் முயற்சியில் 60 சதவீதம்தான் வெற்றி யடைய முடிந்தது. நாங்கள் நினைத்ததை நிஜத்தில் கொண்டு வருவதற்கு திட்டமிட்ட காலமாகத்தான் இந்த இடைவெளியை பார்க் கிறேன். 3,500 டீலர்கள், 150 விநியோகஸ்தர்கள் கொண்ட குழுவினருக்கு இந்த வியாபாரத்தை புரிய வைப்பது பெரிய வேலையாகத்தான் இருக் கிறது. ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை வெளியிட்டபோது 25 லட்சம் டிவிடிக்களை விற்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் திட்டமிட்ட அளவுக்கு விற்க முடியவில்லை. பெரிய நட்சத்திரங்கள் நடித்த ஒரு படத்தை சிடூஎச்சில் வாங்கி வெளி யிட வேண்டும் என்றால் அதை 25 லட்சம் டிவிடிக் கள் வரை விற்றால்தான் சரியான மார்க்கெட். அதற்கான வணிகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் அடுத்த திட்டம்.
புதிய படங்களை வெளியிடுவதை லட்சியமாக கொண்டிருந்த சிடூஎச், திடீரென ரிலீஸான படங்களை வாங்கி அதன் டிவிடிக்களை வெளியிட்டது ஏன்?
ரிலீஸான படங்கள் எனும்போது அது குறித்த பேச்சு வெளியே வந்துவிடும். நல்ல படம் என்றால் பிரச்சினை இல்லை. அதே நேரத்தில் படம் சரியில்லை என்றால் ஆபத்துதான். ரசிகர்கள் கண்டிப்பாக வாங்க மாட்டார்கள். இதை சரியாகப் புரிந்து படத்தை பார்த்து வெளியிட வேண்டும். அந்த வகையில் ரிலீஸான படங்களில் சரியாக போகாத நல்ல படங்களை வாங்கி வெளியிட சிடூஎச் முடிவு செய்திருக்கிறது. அந்த வகையில் ‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறோம்.
அந்தப்படம் திரையரங்கில் ரிலீஸானபோது எல்லா தரப்பு ரசிகர்களிடமும் அது போய் சேர வில்லை. அதன் தயாரிப்பாளர் உரிய லாபத்தை பெற்றாரா என்பதும் கேள்விதான். இப்போது நாங்கள் அந்தப்படத்தை வாங்கி வெளியிட்ட போது 3 லட்சம் டிவிடி விற்றிருக்கிறது. இதன் மூலம் அவருக்கு ரூ.30 லட்சம் கிடைக்கவுள்ளது. அந்த வரிசையில் ஏற்கெனவே திரையரங்கில் ரிலீஸான ‘ஆவிகுமார்’, ‘ரொம்ப நல்லவண்டா நீ’ உள்ளிட்ட சில தரமான படங்களை வாங்கி வெளியிடவிருக்கிறோம். இதை கடைகளுக்கு கொண்டுபோகும் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அப்படி செய்ததால் சமீபத்தில் ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் 2 லட்சம் டிவிடிக்களை விற்க முடிந்தது.
டிவிடியைத் தாண்டி இங்கே படம் பார்க்க பல வழி கள் தொழில்நுட்ப ரீதியாக அறிமுகமாகியுள்ளதே. அதனை எப்படி எதிர்கொள்வீர்கள்?
நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்ட விஷ யம் இது. அடுத்தடுத்து பென் டிரைவ், இணை யம் வழியாக சிடூஎச் படங்களை எடுத்துச்செல் லும் வேலைகளும் நடந்து வருகிறது. அதற்கான செலவு அதிகம். அதை எப்படி கொண்டு போக லாம் என்பதன் வேலையும் தற்போது நடந்து வருகிறது. இதையல்லாம் கடந்து சிடூஎச் திட்டம் கல்லூரி மாணவர்களிடமும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் 27 கல்லூரிகளில் முதலில் வெளியிட்ட ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’ டிவிடியை தங்கள் மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகமே வாங்கி கொடுத்திருக்கிறது. அந்த அளவுக்கு நல்ல படத்தை கொடுக்கிறோம் என்பதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்!
சிடூஎச் திட்டத்தை தொடங்கிய பிறகு இயக்கு நரான நீங்கள் ஒரு முதலாளியாகவே மாறிவிட்ட தாக தெரிகிறதே?
நான் சென்னைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. நான் கடந்த காலகட்டத்தில் பார்த்த, அனுபவித்த விஷயங்கள் எல்லாம் என் படைப்புகளில் ஏதாவது ஒரு உருவத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதுவே நான் கடந்த 2 ஆண்டுகளாக சந்தித்து வரும் விஷயங்கள், அது சார்ந்த பணம், வியாபாரம், நெருக்கடி எல்லாம் எனக்கு வேறொரு உலகத்தை காட்டுகிறது. இதை வைத்து இன்னும் 10 படங்கள் எடுக்கலாம். அதனால் இதை எல்லாம் நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் காலமாகவே கருதுகிறேன்.
நீங்கள் மீண்டும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானதே?
நடிப்பதைப் பற்றியெல்லாம் இப்போது நினைத்துப்பார்க்கக்கூட நேரமில்லை.
சிடூஎச் சில் அடுத்ததாக என்னென்ன படங் களை வெளியிடப் போகிறீர்கள்?
‘ஆக்கி’, ‘ஆறாம் வேற்றுமை’, ‘நெடும்பா’ உள்ளிட்ட சில புதிய படங்களை பார்த்தேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மக்களை ஈர்க்கும். ஒவ்வொன்றாக அவற்றை ரிலீஸ் செய்யும் வேலைகள் விரைவில் தொடங்கும்.

  • V Parthiban  
    என்ன தான் ஒரு படத்தை டிவி ல் பார்த்தாலும், தியேட்டர் ல பார்க்குற மாதிரி வராது.
    Points
    455
    about 15 hours ago
     (0) ·  (0)
     
    • Balu Nathan at Rhymer Corp 
      உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
      Points
      1525
      about 16 hours ago
       (0) ·  (0)
       
      • ச‌ங்க‌ர்  
        கதை, ‌திரை‌க்கதை, வசன‌ம், இய‌க்க‌ம், தயா‌ரி‌ப்பு, ‌நி‌ர்வாக‌ம், ‌வி‌நியோக‌ம், ‌விள‌ம்பர‌ம் ......... சேர‌ன்.
        Points
        970
        about 17 hours ago
         (0) ·  (0)
         
        • Mannan Mannen  
          மிக மிக அருமையான வார்த்தைகள் ........"இப்போது படித்துக்கொண்டிருக்கும் காலமாகவே கருதுகிறேன்."......பலர் தவண்டு விடுவார்கள் இவர் சற்றும் தளராமல் இப்பொழுது படித்து கொண்டுஇருக்கும் காலம் என்று சொல்வது பக்குவபட்ட மனிதர் இவர் என்று காட்டுகிறது ........நிச்சயம் இவர் முயற்சி வெற்றி மா பெரும் வெற்றி பெரும் ..........எல்லாம் வல்ல சூட்சம சக்தி இவர் வெற்றிக்கு துணை நிற்கும்
          Points
          39875
          about 19 hours ago
           (0) ·  (0)
           
          • AKArvind Krishnan  
            அடுத்த படங்களுக்கு காத்திருக்கிறோம்.