ஸ்பாய்லர் அலெர்ட்
முதல் கதை - நாயகன் ஒரு பிரம்மச்சாரி .தீவிரமாக பெண் பார்த்துக்கொண்டு இருப்பவர் .இவர் ஒரு அனாதை .ஒரு கல்யாண மாலை மாதிரி லேட்டஸ்ட் திருமண தகவல் மையம் ல பணி செய்கிறார் . எங்கே பெண் பார்க்கப்போனாலும் மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கா?என கேட்பதால் லோன் வாங்கி ஒரு வீடு வாங்கி இருக்கிறார்
கல்யாண புரோக்கர் ஒருவர் நாயகனிடம் ஒரு பெரிய ஜமீன் குடும்பம் இருக்கு , முடிச்சிடலாமா?என்கிறார்.அடிச்சுதடா லக்கி பிரைஸ் என நாயகனும் பெண் பார்க்கப்போக ஓவர் பில்டப் ஒலகநாதன் போல அந்த ஜமீன் குடும்பம் திருமணத்தையே முடித்து விடுகிறது . பிறகு தான் தெரிகிறது அது ஒரு டுபாக்கூர் குடும்பம் . நாயகியின் அப்பா , தம்பி இருவரும் நாயகனின் வீட்டோடு விருந்தாளியாக தங்கி விடுகிறார்கள் . இதனால் செம கடுப்பான நாயகன் தன் மனைவியிடம் சரிவர பேசாமல் இருக்கிறார்
இதை வைத்து காமெடியாக முதல் பாதியை கலகலப்பாகக்கொண்டு போகிறார்கள்
இரண்டாம் கதை
நகரில் வெடிகுண்டு வைக்க வரும் தீவிரவாதி கும்பல் ஒன்றில் மெயின் வில்லன் எதேச்சையாக நாயகன் வீட்டுக்கு வர ஆக்சிடெண்ட்டல் ஆக அவர் இறந்து போகிறார். அந்த டெட்பாடியை டிஸ்போஸ் பண்ண படாத பாடு படுகிறார் நாயகன்
பிறகுதான் டி வி யில் நியூஸ் வருகிறது . தீவிரவாதியை உயிரோடோ , பிணமாகவோ பிடித்துக்கொடுத்தால் ரூ 50 லட்சம் பரிசு . உடனே டிஸ்போஸ் செய்த டெட் பாடியை மீண்டும் தன் வசம் ஆக்க நாயகன் முனைகிறார். வில்லன் க்ரூப்பும் ஒரு பக்கம் துரத்துகிறது . பிறகு என்ன ஆனது ?என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆக சந்தானம் , வழக்கமான காமெடி ஒன்லைனர்கள் இதிலும் அவருக்குக்கை கொடுத்திருக்கின்றன மாதவன் ரேஞ்சுக்கு டூயட் எல்லாம் போடுகிறார். ஆக்சன் ஹீரோ ஆக அவதாரம் எடுத்து ஃபைட்டும் போடுகிறார். காமெடி ஹீரோவாக மட்டும் செய்தால் தேவலை . ஃபைட் போட இங்கே 1000 பேர் இருக்கிறார்களே?
நாயகி ஆக புது முகம் ப்ரியாலயா .அழகான முகம். மிதமான நடிப்பு . கண்ணியமான உடை பாஸ் மார்க் வாங்குகிறார் . இவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை . இன்னமும் இவரை பயன்படுத்தி இருக்கலாம்
தம்பி ராமய்யா தான் நாயகனின் மாமனார் . இவர் காமெடி செய்யா விட்டாலும் பரவாயில்லை ஓவர் சவுண்ட் விடுவதைக்குறைத்தாலே போதும். ரொம்ப டார்ச்சர் செய்கிறார்.. நாயகனையும் ஆடியன்சையும்
நாயகனின் மச்சினன் ஆக பால சரவணன் ஓக்கே ரகம். டெட் பாடியாகப்படுத்திருக்கும் காட்சியில் சிரிக்க வைக்கிறார்
நாயகனின் ஹையர் ஆஃபீசர் ஆக , தீவிரவாதியாக இரட்டை வேடங்களில் விவேக் பிரசன்னா . கச்சிதம் . மகளிர் மட்டும் நாகேஷ் காமெடி போல இவரை வைத்து ஒரு டெட் பாடி காமெடி டிராக் இருக்கிறது. மிக சிரமப்பட்டு நடித்திருக்கிறார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை
டெட் பாடியை வைத்து பிஸ்னெஸ் செய்யும் பாடி பல்ராமாக முனீஷ் காந்த் பெரிய அளவில் இவருக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை
அதே போல தான் வரும் எந்த ஒரு காட்சியிலும் தன் முத்திரை பதிக்கும் லொள்ளு சபா மாறன் இதில் குறைவான நேரம் வ்ந்தாலும் நிறைவான பங்களிப்பு என சொல்ல முடியாதபடி சொதப்பி இருக்கிறார். அவர் மேல் தவறில்லை , அவருக்கு போர்சன் பலமாக இல்லை
லொள்ளுசபா சேஷூ , சுவாமிநாதன் , மனோபாலா , கூல் சுரேஷ் அனைவரும் உள்ளேன் ஐயா என அட்டெண்டென்ஸ் போடுகிறார்கள்
இசை டி இமான் . மாயோனே செம ஹிட்டுப்பாட்டு .அதற்கான டான்ஸ் கொரியோகிராஃபர் பிர,மாதப்படுத்தி இருந்தார் . சந்தானமும் நன்றாகவே டான்ஸ் ஆடி இருந்தார்
எழிச்சூர் அர்விந்தன் திரைக்கதை எழுத இயக்கி இருப்பவர் ஆனந்த் நாராயணன்
சபாஷ் டைரக்டர்
1 டெட் பாடியை வைத்துக்கொண்டு நாயகன் அண்ட் ஃபேமிலி லிஃப்டில் படும் பாடு செம காமெடி . லிஃப்டில் ஏறும் ஒரு ஆள் எல்லோரும் ஒரே மாதிரி சிரிப்பதைக்கண்டு கடைசியில் ஹேப்பி ஸ்மைலி டே என வாழ்த்து சொல்வது செம
2 போலியாக டெட் பாடியாக பால சரவணன் நடிக்கும்போது டாக்டர் செக் பண்ணாமலேயே பேடு ஸ்மெல் வரும்போதே தெரியல ? இது டெட் பாடி தான் செத்து நாலு நாள் ஆகி இருக்கும் என சொல்லும்போது பால சரவணனின் முகம் போகும் போக்கு கலக்கல் காமெடி
3 நாயகன் அண்ட் பால சரவணன் க்ளைமாக்சில் வேனில் போகும்போது அவர்களை ஃபாலோ பண்ணும் வில்லன் க்ரூப்புக்கு ரூட் சொல்வதும் கூகுள் மேப்ல குட இவ்ளோ டீட்டெய்ல் ஆக சொல்ல மாட்டாங்க , வழி காட்ட மாட்டாங்க என வில்லன்கள் சிலாகிப்பதும் செம
4 ஒரு எசகு பிசகான நேரத்தில் நாயகி எல்லோரும் கண்ணை மூடிக்குங்க என சொல்லி விட்டு நாயகனுக்கு கிஸ் கொடுப்பது ரணகளத்துலயும் ஒரு கிளு கிளுப்பு மொமெண்ட்
செம ஹிட் சாங்க்ஸ்
1 மாயோனே
ரசித்த வசனங்கள்
1 பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்கே? ரொம்ப அடக்கமோ?
வீடியோ கேம்ஸ் விளையாடிட்டு இருக்கா மாப்ள
2 ரூ 50,000 கொடுத்தா ஒரு மில்லியன் ஃபாலோயர்ஸ் அரேஞ்ச் பண்ணித்தர்றாங்க
ஓஹோ , இப்படித்தான் பலருக்கும் சோசியல் மீடியாக்களில் ஃபாலோயர்ஸ் சேருதா?
3 ஸ்வீட் கடைல வேலை செய்யறவன் கடைல இருந்து ஸ்வீட் எடுத்து சாப்பிடறதில்லையா? சலூன் கடைல வேலை செய்யறவன் ட்ரிம்மரை எடுத்து ட்ரிம் பண்ணிக்கறதில்லையா? அந்த மாதிரி தான் நானும். திருமண தகவல் மையத்துல வெலை செய்யும்போது வர்ற ஆஃபர்ல ஒண்ணு ரெண்டு டிரை பண்றேன்
4 எனக்குத்தெரிஞ்ச ஒரு பொண்ணு இருக்கு , ரெஃபர் பண்ணட்டா?
நீயே இங்கே ஆஃபருக்கு அலையறே, நீ எனக்கு ரெஃபர் பண்றியா?
5 நான் உனக்குக்காட்டப்போகும் பொண்ணு ஃபிரெஷ், இன்னும் கல்யாணமே ஆகலை
யோவ், கல்யாணம் ஆகலைன்னாத்தான் அது ஃபிரெஷ் . மேரேஜ் புரோக்கர் மாதிரி நடந்துக்க , பொம்பளை புரோக்கர் மாதிரி நடந்துக்காத
6 ரத்னபுரி கேள்விப்பட்டு இருக்கீங்களா?
நோ
ரத்னபுரி ஜமீன்?
யோவ் , ரத்னபுரி யே தெரியாதுன்னுட்டேன் , ரத்னபுரி ஜமீன் மட்டும் எப்படித்த்ரியு ம்?
7 யோவ் மீன் முள்ளு இங்கே வாய்யா
8 பந்தியோட எண்ட்ல இலை வைக்க வேண்டிய ஆளு எண்ட்ரில பன்னீர் தெளிச்சுட்டு இருக்காரே?
பேங்க் மேனேஜருங்க அவரு
9 இன்னைக்கு பேங்க் , போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் லீவ்
ஆனா சாராயக்கடை மட்டும் லீவ் விட மாட்டாங்களே?
10 ஆமா , இது ஒண்ணும் காமெடியே இல்லையே? எதுக்கு இப்படி சிரிக்கிறே?
11 நீங்க நிஜமாவே பொண்ணுக்கு அப்பாவா? பூதமா? டக் டக்னு ஏற்பாடுகள் எல்லாம் ரெடி பண்றீங்க ?
12 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு நினைச்சேன் , கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நீ?
13 என்னடா இது ? வயசான கிழடு கிட்டேப்போய் கடன் வாங்கி இருக்கே?
வாங்கும்போது இளசாத்தான் இருந்துச்சு , அப்புறமா வயசாகிடுச்சு
14 எனக்கு பணத்தேவை இருந்துச்சு , ஆனா பணத்தாசை கிடையாது
15 கடன்லயே அவன் சாகலை , கரண்ட் ஷாக்லயா சாகப்போறான் ?
16 நம்ம மேட்ரிமோனியல் சைட்ல ஒரு லட்சம் பேருக்கு மேரேஜ் பண்ணி வெச்சிருக்கேன்
அத்தனை பேர் குடியைக்கெடுத்து இருக்கே?
17 இனி எங்கே தங்கறது >எதை திங்கறது ?
18 அய்யோ ,அவனை எழுப்புங்க
முடியாது , அவன் செத்துட்டான்
நல்ல வேளை , அடிச்சது நாம தான்னு தெரியாது
ஆனா போலீசுக்கு தெரியுமே?
19 சூப்பர் டீலக்ஸ் , ரமணா , பஞ்ச தந்திரம் , ம்களிர் மட்டும் - டெட் பாடியை வெச்சு எத்தனை படம் ?
20 அவரு ஏன் ராத்திரி நேரத்துல கூலிங்க் கிளாஸ் போட்டு இருக்காரு ?
ஸ்டைலுக்கு
ஆனா வரும்போது அது இல்லையே?
அப்போ நீ அவரு வரும்போதே அவர் கிட்டே கேட்டிருக்கனும்
21 சா வி எங்கே? நு தேடி பதட்டப்படாதீங்க ., நான் தான் வீட்டைப்பூட்டவே இல்லையே?
22 பேய்க்குக்கால் இருக்கே?
அவனுக்கு முதலில் இருந்தே கால் இருந்த்து , சம்மணம் போட்டு உக்காந்து இருந்தான்
23 செத்தாலு ம் என்னால டெட் பாடியா மட்டும் நடிக்க முடியாது
அப்போ செத்துடு
இல்ல இல்ல நடிச்சுடறேன்
24 என்ன சரக்குடா இது ?பிணத்தை விட பயங்கரமா நாறுது
25 ஒரு நாளுக்கு ஓருத்தி வீட்டுல படுத்து இருப்பியே இப்போ மார்ச்வரில வந்து படுத்திருக்கியே ராசா
26 நானும் உங்க கூட வர்றேன் , நானும் உங்க கூட வர்றேன்
ஏன் உன் வண்டி என்ன ஆச்சு/
செல்ஃப் எடுக்கலை
வண்டியுமா?
27 இந்த டபரா மூஞ்சிக்கு டபுள் ஆக்சன் கொடுத்ததாலதான் இவ்ளோ பிரச்சனை
28 டெட் பாடியை எடுக்க நாலு பேர் வேணும்,நாம மூணு பேர் தானே இருக்கோம் ?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி சமையல் செய்து சாம்பாரை இடது உள்ளங்கையில் ஊற்றி டேஸ்ட் பார்க்கிறார். வலது கைல தானே அப்படிப்பார்ப்பாங்க ? ஒரு வேளை நாயகி இடது கைப்பழக்கம் உள்ளவரா? எனப்பார்த்தால் அதுவும் இல்லை
2 நாயகி லஞ்ச் பாக்ஸ்ல எதுவும் வைக்கலை , காலி , அதை நாயகன் ஆஃபீசுக்கு எடுத்துட்டுப்போறான். தூக்கும்போதே அது காலினு தெரியாதா?
3 வில்லனான டெட் பாடியை க்ளோசப்பில் காட்டும் ஒவ்வொரு ஷாட்டிலும் சிரித்த முகமாக இருக்கிறார்.லாங்க் ஷாட்டில் காட்டும்போது சிரிப்பு இல்லை
4 வில்லனின் கம்பெனில ஒர்க் பண்றவங்க தன் பாஸ் முகம் டி வி யில் காட்டும்போது பரபாப்பு ஆகலையே?
5 டெரரிஸ்ட் முன் வைக்கபப்ட்ட டீ கப்பில் நாயகன் எதோ கலக்கிறார். அதை அவன் பார்க்கும்போதே அளவு கூடுதலா இருக்கே என டவுட் வராதா?
6 சாதாரண டேட்டிங் சைட்டில் ஒர்க் பண்ணும் நாயகனுக்கு 25 லட்சம் எல்லாம் கடன் தருவாங்களா?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கலகலப்பான முதல் பாதி , சுமாரான பின் பாதி , சந்தானம் ரசிகர்கள் பார்க்கலாம் ., ரேட்டிங் 2.75 / 5