Showing posts with label ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, February 22, 2014

ஆஹா கல்யாணம் - சினிமா விமர்சனம் 34+

 


"நான் ஈ படத்தில் "ஈ ஆக நடித்த டோலிவுட் ஹீரோ நானி நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு வெற்றி திரைப்படம் தான் "ஆஹா கல்யாணம்

கதைப்படி, காலேஜ் ஹாஸ்டல் சாப்பாடு போரடிப்பதால் சேட்டு வீட்டு கல்யாணத்திற்கு திருட்டு தனமாக சாப்பிட போகும் ஹீரோ சக்தி எனும் நானி, அங்கு ஹீரோயின் ஸ்ருதி சுப்ரமணியம் எனும் வாணி கபூரின் கிண்டல் கேலி பேச்சுக்கு ஆளாகிறார். படித்து கொண்டே "பார்ட்டைமாக பெரிய இடத்து திருமணங்களை பிரமாண்டமாக நடத்தி தரும் "மேரேஜ் பிளானர் நிறுவனங்களில் தொழில் கற்கும் வாணி கபூருக்கு படிப்பு முடிந்ததும் சொந்தமாக நிறுவனம் ஆரம்பித்து தொழில் தொடங்கி பல பெரிய திருமணங்களை நடத்தி வைக்க வேண்டுமென்பது ஆசை! 
 
 
அதுமாதிரி ஆசை, லட்சியம் எல்லாம் எதுவுமில்லாமல் மீண்டும் கிராமத்திற்கு போய் அப்பா சொல்படி விவசாயம் பார்த்துவிடக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருக்கும் ஹீரோ நானி, முதலில் ஓசி சாப்பாடு, வித்அவுட்... என தன்னை கலாய்த்த வாணியை தேடிப்பிடித்து காதலுடன் சுற்றுகிறார்.

தெளிவாக இருக்கும் வாணிக்கு காதல் வர மறுக்கிறது. ஆனாலும் நட்பாகிவிடும் இருவருக்கும் படிப்பும் முடிகிறது. இருவரும் சேர்ந்து நகரத்தின் பெரிய திருமண திட்டமிடலாளர் சிம்ரனிடம் உதவியாளராக சேருகின்றனர். ஒரு பெரிய இடத்து வைபவ திருமணத்திற்கு கோடிகளில் பணம் வாங்கிவிட்டு அதில் எல்லாவற்றிலும் கமிஷனும் அடிக்கும் சிம்ரனை வெறுத்து ஒதுக்கும் இருவரும் அவரிடமிருந்து பிரிந்து வந்து தனியாக "கெட்டி மேளம் எனும் திருமணதிட்டமிடல் நிறுவனம் ஆரம்பிக்கின்றனர்.


ஆரம்பத்தில் நடுத்தரவர்கத்து திருமணங்களை சில லகரங்களில் சிறப்பாக நடத்தி தரும் இருவரும் படிப்படியாக உயர்ந்து 2 கோடி மதிப்பிலான பெரிய இடத்து திருமணங்களையும் வெகு சிறப்பாக நடத்தி பேரும் புகழும் சம்பாதிக்கும்போது இருவருக்குள்ளும் எதிர்பாராமல் ஒருசேர காதலும் காமமும் அரங்கேறுகிறது. 
 
 
 
 அப்புறம்? அப்புறமென்ன? காதல், காதலைத் தொடர்ந்து வரும் ஊடல் ஊடலைத் தொடர்ந்து ஈகோ மோதல்... என சிக்கித்திணறும் இருவரும் "ஹேப்பி வெட்டிங்... எனும் பெயரில் புதிய நிறுவனத்தையும் ஆரம்பித்து நடத்துகின்றனர். இருவரும் பிரிந்ததும் தொடர்ந்து தொழிலும் தோல்வியை தழுவி கடனாளி ஆகின்றனர். இந்நிலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பெரிய இடத்து திருமண ஆர்டர்,இருவரும் மீண்டும் இணைந்தால் உண்டு எனும் நிலையில் இருவரும் மீண்டும் தொழிலும், வாழ்க்கையிலும் இணைந்தனரா இல்லையா? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கப்பட்டிருக்கும் மீதிக்கதை!

நானி, நான் "ஈ மட்டுமல்ல, நான் ஆ, ஓ, ஓஹோ, ஆஹா எனும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருக்கிறார். அதிலும் ஒரு மாதிரி தமிழில்(தெலுங்கர் பேசும் தமிழில்...) அவர் பண்ணும் அலப்பறைகள் தியேட்டரை சிரிப்பில் அதிரவைப்பது படத்திற்கு பெரும் பலம்! நீ ஸ்ருதி சுப்ரமணியம் தானே சுருதிஹாசன் ஒண்ணும் கிடையாதே... என ஹீரோயினை இவர் கிண்டல் அடிக்கும் போதும் சரி, இவரை(நானியை) டேய் முதல்ல... தமிழை ஒழுங்கா பேசுடா... என கல்லூரி நண்பர் கிண்டல் அடிக்கும் போதும் சரி... மனிதர் ரசனையாக நடித்திருக்கிறார். சபாஷ்!

வாணி கபூர், மீசை முளைக்காத சிறுவர்கள் முதல் மீசை நரைத்த முதியவர்கள் வரை சகலரது வாயோரமும் ஜொள்ளு வர வழைக்கிறார். அத்தனை அழகு, கவர்ச்சி, நடிப்பில் முதிர்ச்சி, நடனத்தில் நல்ல தேர்ச்சி. அதிலும் நானியுடனான இண்டர்வெல்லுக்கு முந்தைய அந்த முத்தக்காட்சியிலும், படுக்கையறை காட்சிகளிலும் மனுஷி, ரசிகர்களை உண்டு, இல்லை என செய்துவிடுகிறார். வாவ், வாரே வா!


சிம்ரன், படவா கோபி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

வேணுபதன் குமாரின் அசரடிக்கும் ஒளிப்பதிவு, தரண்குமாரின் மயங்கடிக்கும் இசை உள்ளிட்ட ப்ளஸ்பாயிண்ட்டுகளுடன் புதியவர் ஏ.கோகுல் கிருஷ்ணனின் எழுத்தும்-இயக்கமும் ஆஹா கல்யாணத்திற்கு பெரிய ப்ளஸ்!

ஆரம்பகாட்சிகளில் சேட்டு வீட்டு கல்யாணத்தில் சிக்கன் பீஸ் போடுவது...(மார்வாடிகள் பியூர் வெஜிடேரியனாக்கும் என்பது மறந்து...) உள்ளிட்ட ஒரு சில ஓட்டை உடைசல்கள் குறைகள் இருந்தாலும்,
 
 
 பைனான்ஸூம், ரொமான்ஸூம் ஒன்று சேருதல் கூடாது எனும் தத்துவம்,
 
 
 
வாழ்க்கையில் சில தவறுகளை ரப்பர் வைத்து அழிச்சுட்டு ஜாலியா வாழ பழகிக்கணும்... எனும் போதனை.
 
 
.. "தூக்குறேன் டி... என சண்டையில் சவால் விடும் ஹீரோவிடம் தூக்கிகாட்டு எல்லோரும் பார்க்கட்டும் என ஹீரோயின் போகிறபோக்கில் அடிக்கும் காமெடி ப்ளஸ் காமநெடி பன்ச்,
 
 
 எல்லாவற்றுக்கும் மேலாக கவித்துமான அந்த படுக்கையறை காட்சி, 
 
 
 
இடையில் பிரிந்த நாயகனும், நாயகியும் இறுதியில் ஒன்று சேர வேண்டுமே என ரசிகர்கனை தவிக்கவும், துடிக்கவும் வைத்த இயக்குநரின் திறமையான திரைக்கதை அமைப்பு 
 
 
உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் "ஆஹா கல்யாணத்தை ஆஹா ஓஹோ கல்யாணமாக தூக்கி நிறுத்தி விடுகின்றன!

மொத்தத்தில், ''ஆஹா கல்யாணம்'' - செம பிரமாதம்! ரசிகனுக்கு ருசி போஜனம்!! நிச்சயம் தயாரிப்பாளருக்கு வசூல் பிரளயம்!!!
 
 
  • நடிகர் : நானி
  • நடிகை : வாணி கபூர்
  • இயக்குனர் :கோகுல் கிருஷ்ணா

 
நன்றி - தினமலர் (தினமலர் விமர்சனம்)
 
 
படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்
 
 
1. சேட்டு வீட்டுக்கல்யாண கலாட்டாக்களுடன் டாப் ஆங்கிள் கேமரா இளமைத்துள்ளலுடன் ! ஆஹா கல்யாணம்



===================



2 ஹீரோவுக்கு ஹீரோயின் வெச்ச செல்லப்பேரு வித் அவுட்டு # காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா @ ஆகா கல்யாணம்



=============


3 க்ளோசப் ஷாட் ல ஹீரோயின் ஒரே ஒரு பனியன் மட்டும் போட்டிருந்துச்சு.பாத்ரும் அல்லது பெட்ரூம் னு பந்தயம் கட்னா ஏமாந்தோம்.பப்ளிக் கா பஸ் ல


================


4 அய்யோ சிம்ரன் சார் கெஸ்ட் ரோல் சார் .ட்ரான்ஸ்பரன்ட் மிடி சார்



================


5 சிம்ரனே 170 செமீ க்கு கிட்டே இருக்கும்.ஹீரோயின் அவரை விட ஹைட்டா இருக்கே குதிரை மாதிரி



================



6 ஹீரோவும் ஹீரோயினும் ஜஸ்ட் பிரண்ட்ஸ். ஒரே ரூம் ல தங்கறாங்க. ஒண்ணா உக்காந்து கில்மாப்படம் பாக்கறாங்க.ஆனா எதும் நடக்கல



================


7 மணப்பெண்ணை கூடைல வெச்சு தூக்கி வராங்க.இது எந்த இன மக்களின் கலாச்சாரம்? நல்லாருக்கே?


================


8 ரெஸ்ட் எடுக்கனும் னு சொல்லி ஹீரோயின் ஹீரோவை கட்டிப்பிடிக்குது.அய்யய்யோ



===============



9 ஆரவாரமான கரகோஷ்த்துடன் மான் கராத்தே ட்ரெய்லர்.ஹன் சிகா ,சிவகார்த்திகேயேன் செம குத்தாட்டம்



===============






10 குக்கூ தியேட்டரிக்கல் ட்ரெய்லர் பனியால் கழுவிய கண்ணாடி போல்.அபாரமான ஒளிப்பதிவு



==============


11 கஹானி ஹிந்தி ரீமேக் நயன் ன் நீ எங்கே என் அன்பே ட்ரெய்லரில் வித்யா பாலனை அசால்ட்டாக முந்துகிறார் நயன் தாரா.பேக் டூ பார்ம் ,FRONT also



===============


12 டைரக்டர் ஒரு பேட்டில தமிழுக்குத்தக்கபடி மாத்தி இருக்கேன்னு அடிச்சு விட்டார்.1 இஞ்ச் கூட மாத்தலை


================


13 ஹீரோ ஹீரோயின் 2 பேரும் காதலை சொல்லிக்கவே இல்லை.தண்ணி அடிச்ச மப்பு ல தெரியாம அறியாம தப்பு பண்ணிடறாங்க # அய்யோ பாவம்



=================


14 வாடா போடா னு கூப்ட்டுட்டு இருந்த ஹீரோயின் மேட்டர் முடிஞ்சதும் வாங்க போங்க ங்குது # மரியாதை நடந்துக்கற விதத்துல இருக்கு.அவ்வ்



================

15 ஒரு லட்சம் செவந்திப்பூக்களுடன் கலர் புல் கலக்கல் பாட்டு.அபாரமான ஒளிப்பதிவு



=============


16 சன் டி வி ல சத்யா னு ஒரு தொடர் சில வருடங்களுக்கு முன் வந்ததே அந்த சாயல் திரைக்கதைல இருக்கு # ஆகா கல்யாணம்


===






================


நச் வசனங்கள்




1. பைனான்ஸ் ம் ரொமான்சும் என்னைக்கு
ஒண்ணு சேர முடியாது # ஆஹா கல்யாணம்


=========================


2 செத்தாலும் அவ கிட்டே சாரி கேட்க மாட்டேன். லூஸ் மாதிரி பேசாதே.செத்தபின் எப்டி சாரி கேட்பே? # ஆஹா கல்யாணம்



==========


3 நான் உன்னை லவ் பண்ணது உண்மை தான்.நாம சந்தோசமா இருந்ததும் உண்மை தான்.ஆனா நீ என் காதலை மதிக்கலை . # ஆஹா கல்யாணம்


==============




4 என் மேல நம்பிக்கை வெச்ச முத ஆள் நீ தான்.எங்கப்பா கூட அவ்வளவு மதிக்கலை.# ஆஹா கல்யாணம்



==================




சி  பி கமெண்ட் - ஆஹா கல்யாணம் - முன் பாதி ஆட்டம்பாட்டம்கொண்டாட்டம் ,பின் திரைக்கதை யில் தொய்வு -



விகடன் மார்க் =40 


, ரேட்டிங் = 2.5 / 5 


குட் லவ் ஸ்டோரி

லவ்வர்ஸ்க்குப்பிடிக்கும்.பெண்கள் பார்க்கலாம், ஆனா அவங்கவங்க பெற்றோருடன் சேர்ந்து போய் பார்க்க முடியாது , ஓவர் கிளாமர்,டபுள் மீனிங்க் டயலாக்ஸ் , எக்செட்ரா