Showing posts with label ஆள் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆள் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, September 20, 2014

ஆள் - சினிமா விமர்சனம்

a

ஹீரோ  ஒரு எஞ்சினியர் காலேஜ் புரொஃபசர் . சிக்கிம் ;ல ஒர்க் பண்றார். அவரோட  காதலி  சென்னை ல  இருக்கு . இவர் இங்கே  தனியா  இருக்கார் . காலேஜ்ல  ஒரு முஸ்லீம் மாணவன் மீது நடக்கும்   தாக்குதல் கண்டு   பரிதாபப்பட்டு அவருக்கு அடைக்கலம்  தர்றார். 2 பேரும்  ஒரே   வீட்டில்  தங்கறாங்க . முன்  பின்  அறிமுகம்  இல்லாதவங்க  கிட்டே ஜாக்கிரதையா  இருக்கனும்னு அவருக்கு காலேஜ்ல யாரும்  சொல்லித்தர் ல  போல . 


காதலி   வீட்ல அவங்க  லவ் மேட்டர்  தெரிய  வர  ஹீரோவை  சென்னைக்கு வரச்சொல்றா காதலி  சென்னை வந்து  ஏர்போர்ட் ல இறங்குனதுல  இருந்து  ஹீரோக்கு அஷ்டமத்துல சனி . எவனோ  ஒரு பரதேசி அவரை  சும்மா   ஃபோன் ல டார்ச்சர்  பண்ணிட்டே இருக்கான் . ஹீரோவோட  அம்மா , தங்கை யை எல்லாம் கடத்தி வெச்சுக்கிட்டு   ஹீரோவை  அலைய  விடறான் 


 ஹீரோவை அங்கே  வா இங்கே வா  என அலைக்களிக்கறான் . என்ன நடக்குது ? எதுக்காக அப்படி பண்றான்? -னு  தெரியறதுக்குள்ளே  இடைவேளை வந்துடுது . 


 இடைவேளைக்குபின்  தான் உண்மை  தெரியுது . காலேஜ் ல அடைக்கலம்  கொடுத்தாரே  ஒரு முஸ்லீம் மாணவன் அவன் ஒரு தீவிரவாதி . அவன் மூலமா தான் ஆபத்து வலியனா வந்திருக்கு . இப்போ மேட்டர் என்னான்னா  வில்லன் கம் தீவிரவாதி  கிட்டே  இருந்து   கொடுக்கப்பட்ட   டைம் பாம் உள்ள  சூட்கேசை   ஒரு பஸ் ல வெச்சுட்டு  வரனும் . இதுதான்  ஹீரோவுக்கு  தரப்பட்ட பிராஜக்ட் . 


 ஹீரோ ஒரு சாதா ஆள். அவர் எப்படி இந்த சவாலை  எதிர் கொள்கிறார் ? என்பதே  விறு விறுப்பான  பின் பாதி கதை 


 விதார்த் தான் ஹீரோ .  ஆள்  ஜம்னு  கோட் சூட் ல  கலக்கறார் 
இடைவேளை  வரை  இவரது  குழப்பமான  முகம்  கேரக்டரை  உயர்த்துது . பின் பாதியில் ஆக்சன் காட்சியில்   நல்லா பண்றார்  . படம் பூரா  ஓடிட்டே  இருக்கும்   வேலை . ரொம்ப தடுமாறுகிறார்  . தனுஷ் , சித்தார்த் மாதிரி ஆட்கள் கிட்டே  கொடுத்திருந்தா  கலக்கி  இருப்பாங்க  

  ஹீரோயினா  ஹர்திகா   ஷெட்டி . குட்டி  ஷோக்கா தான்  கீது . ஆனா பாருங்க இந்த  சப்ஜெக்ட்ல  லவ் பண்ண  டைமே  இல்லை . அய்யோ பாவம் . பாப்பாவும்  பின்னே நாமும் . ரசிக்க  நேரம்  இல்லை . புருவம்  ரொம்ப   மெல்லிசா  இருக்கு  உதடு கன கச்சிதமா  இருக்கு ( இவர் பெரிய  ரவி வர்மா . அப்டியே பார்ட் பார்ட்டா வரையறார் _)


வில்லனா  வரும்   விடியல்  ராஜூ   மிரட்டலான  நடிப்பு  .  இவர் தெலுங்கு ஹிந்தியில்  எல்லாம்  கலக்க வாய்ப்பு  இருக்கு 


 எடிட்டிங்க் , திரைக்கதை  எல்லாம்  கன  கச்சிதம் . ஆனால் லேடீசைக்கவராது . 








இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1   ஹீரோ  கெத்தாக  இருக்கனும் என்பதற்காக படம் பூரா அவரை கோட் சூட்டோட உலா வர வைக்க  அவர் திரைக்கதையில் செய்த  நகாசு வேலை  குட் 


2  முன்  பாதி   திரைக்கதையில்  சஸ்பென்ஸ் சரியாக  கையாளப்பட்டிருக்கு 


3   ஒரு த்ரில்லர்  சேசிங்க்  மூவிக்குத்தேவையான   பிஜிஎம்   மிரட்டல் 


4   இசை  ஜோஹன் . பி ஜி எம் மில் கலக்கிய அளவு   இசையில்  கலக்கவில்லை. சுமார் இசை தான் 


5  ஒளிப்பதிவு அருமை . சிக்கிம்  நகரின்  குளுமையை அழகாகப்படம்  பிடித்திருக்கிறார் 




இயக்குநரிடம் சில கேள்விகள் 


1 சாமான்யனான    ஹீரோ ஏன்   போலீஸ்  கிட்டே  போகக்கூட யோசிக்கலை ? 


2  க்ளைமாக்சில்   அவர்  எடுக்கும்  முடிவு  ஆடியன்சிடம்  கை தட்டல் வாங்க  வேணா  யூஸ் ஆகலாம். ஆனால் நிஜத்தில் ? இன்னும்  புத்திசாலித்தனமாய் யோசித்திருக்கலாம் 



3   முன் பாதி  பூரா  ஹீரோ  ஓடிக்கொண்டே  இருப்பதால்  லேசாய்  சலி[ப்பு தட்டுகிறது (  கூடவே   ஹீரோயினையும்  ஓட விட்டிருந்தா அவரையாவது  வேடிக்கை பார்த்துட்டு  இருந்திருக்கலாம் ) 


4  வில்லன் எப்போ பாரு   ஹீரோ கிட்டே  போன் ல பேசி  மிரட்டிட்டே  இருக்காரு . அந்த தம்மாந்தூண்டு  வேலையை செய்ய ஆளா இல்லை >?  அவர் கிட்டேயே அடியாளுங்க  40 பேருக்கும்   மேல இருக்காங்க  . அவங்களை  எல்லாம் விட்டுட்டு  பாம் வைக்க  ஹீரோவை ஏன் டார்ச்சர் பண்றாரு  ? 



மனம் கவர்ந்த வசனங்கள்


நீ சந்திச்ச எல்லார் முகமும்  எனக்கு அத்துபடி.ஆனா என் முகம் எப்டி இருக்கும்?னு யாருக்கும்  தெரியாது

எல்லோரது வாழ்விலும் மோசமான நாள் னு 1 வரும்.என் நாள் இது தான்

எல்லா தப்புக்கும் பழி வாங்கனும்னா கடவுள் இந்த  உலகை விட்டு வெச்சிருக்கவே மாட்டார்

இஸ்லாம் பத்தி தப்பா யாராவது பேசுனா அவனை அல்லா பாத்துக்குவார்.ஆனா தமிழனைப்பத்தி தப்பா பேசுனா நாமதான் தட்டிக்கேட்கனும்

உனக்கு வேணும்கறது உனக்குக் கிடைக்கனும்னா நீ பயமுறுத்தனும்

அமீர் னா தலைவன் னு அர்த்தம்.உன் ஆளுங்களுக்கு நீ தலைவனா என்ன செஞ்சே

எல்லாரும் அவங்கவங்க வேலையை மட்டும் பார்த்தா  இந்த உலகமே அமைதி ஆகிடும்

நாம சாகும்போது நமக்குப்பிடிச்ச விஷயத்தை பாத்துக்கிட்டே சாகனும்



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  


சி பி கமெண்ட்

ஆள் = ஆமீர் ஹிந்திப்பட தழுவல் .டெரரிஸ்ட் த்ரில்லர்

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் =  40

குமுதம் ரேட்டிங்க் = ok  A  சென்ட்டர் பிலிம்

 ரேட்டிங் =  2.25  /  5

டிஸ்கி  =ஆடாம ஜெயிச்சோமடா - சினிமா விமர்சனம்

http://www.adrasaka.com/2014/09/blog-post_28.html



அரண்மனை -சினிமா விமர்சனம்




http://www.adrasaka.com/2014/09/blog-post_38.html
   




a







a





Hardhika Shetty  


 
 a