சுசி
கணேசனின் உதவியாளர் ஆனந்த கிருஷ்ணா இயக்கி வரும் படம் "ஆள்". இதில்
விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திகா ஷெட்டி என்ற புதுமுகம் ஹீரோயினாக
நடிக்கிறார்.
சிக்கிம் மாநிலத்தில் பேராசிரியராக வேலை செய்யும் விதார்த், சென்னைக்கு தன் காதலியையும், தாயையும் சந்திக்க வருகிறார். அவரை இங்கு ஒரு கும்பல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஒரு காரியத்தை செய்ய சொல்கின்றனர். அதி பயங்கரமான அந்த காரியத்தை அவர் செய்கிறாரா? அவரை ஏன் அந்த கும்பல் செய்ய வைக்கிறது என்பதற்கு சிக்கிமில் நடந்த ஒரு சம்பவம் காரணம். இதுவே படத்தின் கதை.
இப்படத்தை ஆக்ஷ்ன் கம் த்ரில்லராக இயக்குகிறார் ஆனந்த கிருஷ்ணா. ஜோகன் இசையமைக்கிறார், உதய்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சவுந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜூ தயாரிக்கிறார்.

சேரனின் சி2ஹெச் நிறுவனம்
திரைப்படங்களை டிவிடி களாக மாற்றி வீட்டிற்கே கொண்டு சேர்ப்பதாக சமீபத்தில்
அறிவிக்கப்பட்டது. பல இயக்குநர்களும் பாராட்டு தெரிவித்து மட்டுமல்லாமல்
தங்கள் படங்களின் டிவிடி உரிமையை சி2ஹெச் நிறுவனத்துக்கு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சௌந்தர்யன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் விடியல் ராஜு
தயாரித்த ஆள் படத்தின் டிவிடி உரிமை சி2ஹெச் நிறுவனத்துக்கு இல்லை என்று
கூறியுள்ளார்.
மைனா விதார்த்தின் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கிய
ஆள் படத்தின் தமிழக உரிமையை ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சதீஷ்குமார்
வாங்கி இருந்தார். வேறு சில படங்களையும் அவர் வாங்கி இருந்ததினால் அவற்றை
வெளியிட்ட பிறகு ஆள் படத்தை வெளியிட போவதாக தயாரிப்பாளரிடம் கூறி
இருக்கிறார் சதீஷ்குமார்.
ஆள் படத்தின் தயாரிப்பாளரான விடியல் ராஜு ஆள் படத்தை வெளியிட
சதீஷ்குமார் முயற்சி செய்யவில்லை என்பதால் அவர்களின் ஒப்பந்தத்தை தளர்த்தி
விட்டு, தானே ஆள் படத்தை வெளியிட்ட முடிவு செய்திருக்கிறார். இதற்கிடையில்,
சி2ஹெச் நிறுவனத்துக்கு ஆள் படத்தின் டிவிடி உரிமையை தருவதாக சதீஷ்குமார்
கூறி இருந்தார் ஆனால் விடியல் ராஜு அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.
thanx - dinamalar. dinamani , malaimalar,, all cine magazines