Showing posts with label ஆரம்பம். Show all posts
Showing posts with label ஆரம்பம். Show all posts

Wednesday, October 16, 2013

‘ஆரம்பம், -400+ , ஆல் இன் ஆல் அழகு ராஜா 300 + -தீபாவளி ரேஸ் - டிரைலர் @ THE TAMIL HINDU

அஜித்தின் ‘ஆரம்பம், கார்த்தி யின் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', விஷாலின் 'பாண்டிய நாடு' ஆகிய மூன்று படங்கள் தீபாவளி ரேசுக்கு தயாராகி நிற்கிறது. இந்த மூன்று முன்னணி நாயகர்களின் முந்தைய படங்கள் வசூலில் கொஞ்சம் பின்தங்கியதால் தீபாவளிக்கு வெற்றிச் சரவெடி அடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் தீபாவளிக்காக இப்படம் எப்படி தயாராகி வருகிறது என்று ஒரு சிறிய முன்னோட்டம். சினிமா பாஷையில் சொன்னால், டிரைலர்.

'ஆரம்பம்' படத்தில் நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா
ஆரம்பம்


அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என ஒரு நட்சத்திர பட்டா ளத்தைக் கொண்டு விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கும் படம். ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார். தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக அக்டோபர் 31ம் தேதியே வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அஜித் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். இதனால் ‘தல’யின் மாறுபட்ட கதாபாத்திரத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக இருக்கி றார்கள். இறுதிக்கட்ட இசைக் கோர்ப்பு பணிகள் முடிந்து தற்போது தணிக்கை குழுவுக்கு படத்தை திரையிடும் வேலைகள் நடந்து வருகின்றன.


அதே நேரத்தில் இப்படத்துக்கு ஒரு சிக்க லும் காத்திருக்கிறது. ஏ.எம்.ரத்னம் 'கேடி' படத்தினை தயாரித்த போது வாங்கிய பணத்தை தராமல் இழுத்தடிக்கிறார் என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதற்கு “படத் தின் தயாரிப்பாளர் நானில்லை. ரகுராம் தான்.” என்று கூறிவருகிறார் ஏ.எம்.ரத்னம்.


பொதுவாக அஜித் படம் என்றாலே வெளியான 4 நாட்களுக்குள் கல்லாப் பெட்டியை நிரப்பிவிடலாம். இதனால் இந்தப்படத்திற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவிவந்தது. இறுதியில் என்.எஸ்.சி ஏரியாவை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றியது. 400 தியேட்டர்களுக்கு மேல் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிக்கல் இல்லாமல் வந்தால் இப்படம் ‘தல’ ரசிகர்களுக்கு தீபாவளி விருந்துதான்.

'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை காஜல் அகர்வால்
ஆல் இன் ஆல் அழகுராஜா


பாக்ஸ் ஆபிசின் சமீபத்திய செல்லப் பிள்ளை கார்த்தி. இதனால் இப்போதே ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வுக்கு 300 திரையரங்குகள் கிடைத்திருக்கிறது.


கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, சரண்யா பொன்வண்ணன் நடிக்க 'காமெடி சரவெடி' இயக்குநர் ராஜேஷ் இயக்கியிருக்கும் படம். ஞானவேல்ராஜா தயாரித்திருக்கிறார். காமெடி வகை படங்களில் மகுடம் சூட்டிய ராஜேஷ் இப்படத்தில் இருப்பது கூடுதல் பலம். சந்தானம் இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நகைச்சுவை ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார் என்கிறது படக்குழு. படத்தொகுப்பு வேலைகள் முடிந்து, இதர பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறன.


 படத்தின் விநியோக உரி மையை பொறுத்தவரை எந்தொரு பிரச்னையுமில்லை. இதுவரை சுமார் 300 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு 50 திரையரங்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அனைத் துமே முடிவு செய்தப்படி நடைபெற்றால் நவம்பர் 1ம் தேதி காமெடி சரவெடியாக அனைத்து இடங்களிலும் வெடிக்க இருக்கிறான் இந்த 'ஆல் இன் ஆல் அழகுராஜா'
'பாண்டியநாடு' படத்தில் நடிகர் விஷால் மற்றும் நடிகை லட்சுமி மேனன்

பாண்டியநாடு


விஷால், லட்சுமி மேனன், பாரதிராஜா நடிக்க சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம். விஷால் முதன் முறையாக இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகி இருக்கிறார். படத்தினை வேந்தர் மூவிஸ் வெளியிட முடிவு செய்திருக்கிறது. பொள்ளாச்சி யில் இப்போதுதான் படப்பிடிப்பு முடிந்து, இசை வெளியீடும் முடிந்திருக்கிறது. படத்தின் எடிட்டிங், இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி நெருங்கிவிட்டதால் படத்தின் பணிகள் படு ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.


thanx - the tamil hindu

Monday, October 07, 2013

ஆரம்பம் , வேகம் , அதகளம் - அல்டிமேட் ஸ்டார் அஜித் பேட்டி @ த தமிழ் ஹிந்து

காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். | 


அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்' ஷூட்டிங்கில் அஜித் பிஸி. படங்கள், உடல்நிலை, போட்டோகிராபி, பைக் ரேஸ் என அஜித்துடன் The Hindu நாளிதழுக்காக நிகில் ராகவன் பேசியதிலிருந்து... 


" 'ஆரம்பம்', 'வீரம்' படத்துல என்ன ரோல்ல நடிக்கிறீங்க?" 



"இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது. 'பில்லா', 'மங்காத்தா' படம் மாதிரி 'ஆரம்பம்' படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.
'வீரம்' படத்துல அப்படியே 'ஆரம்பம்' படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான். 'அட்டகாசம்' படத்துலதான் கடைசியா இந்த மாதிரி ரோல் பண்ணேன். 'ஆரம்பம்', 'வீரம்' இரண்டு படங்கள்லயுமே ஆக்‌ஷன் ரோல்தான்." 



"ஒரு கதாபாத்திரத்துல நடிக்க ஒப்புக்க, என்னென்ன இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க?" 



"நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது. ரொமான்டிக் ஹீரோவா ஆரம்பிச்சு, அப்பறம் ஆக்‌ஷன் ரோல்ல நடிச்சு, இப்ப கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதைக்கான ஸ்கிரிப்ட்ட நான் நம்பறேன். ஆனா, பல நேரத்துல நாம நினைக்கறது நடக்கறதில்லை. சில நேரம் இயக்குநரோட திறமைய நம்பிதான் இறங்கணும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை." 


 
"நீங்க இயக்குநரின் நடிகரா? படத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?" 


"படத்துல இயக்குநர்களோட நோக்கத்தைதான் நான் நிறைவேத்தறேன். ஒரு நடிகனா, நான் என் ஆலோசனைகளை சொல்லுவேன். இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!" 


"ரொமான்டிக் ஹீரோ, ஆக்‌ஷன் ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம்... எந்த ரோல் உங்களுக்கு மன திருப்தி தந்திருக்கு?" 



"என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்... நரைத்த முடி உள்பட. அதிர்ஷ்டவசமா, மங்காத்தா, பில்லா-2 ரெண்டும் அமைஞ்சது. இப்ப 'ஆரம்பம்', 'வீரம்' படங்கள்லயும் இது தொடருது. வில்லத்தனம் கொண்ட ரோல்ல நடிக்கறதால ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லாம போகாது. எனக்கு சௌகர்யமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். வேலை செய்யறேங்கறது தான் எனக்கு உற்சாகத்தை குடுக்குது, அது எந்த கதாபாத்திரமா இருந்தாலும் சரி." 



"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. 


 அவங்களை நாங்க மதிக்கறோம். ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது." 
 

"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன். சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை... ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க?" 



"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை." 


"நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்..." 


"ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். 'ஆரம்பம்', 'வீரம்' ரெண்டு படமும் முடிஞ்ச பிறகு, கால்ல ஒரு சின்ன ஆபரேஷன் பாக்கி இருக்கு, அதை பண்ணிக்கப் போறேன். அதுக்கப்பறம் ஆறு மாசத்துக்கு புது படம் ஒத்துக்கப் போறதில்லை. கால் சரியா குணமாகறதுக்காக மட்டும் இல்லை, அந்த ஆறு மாசத்துல ஏரோ மாடலிங்ல ஈடுபடப்போறேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!" 

 

"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது.. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?" 



"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க.. அவங்களை நாங்க மதிக்கறோம்.. ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க.. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க.. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை கொடுக்கக் கூடாது." 



"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க.. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..." 



"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன்.. சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்." 



"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை.. ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க..?" 


"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை.என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை."


thanx - tamil the hindu