2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் 2018 ல் ஷூட்டிங் நடத்தி 2019ஆம் ஆண்டு படம் எடுத்து முடிக்கப்பட்டது , ஆனால் ரிலீஸ் ஆனது என்னவோ 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று தான் . பத்திரிக்கைகள் அனைத்தும் இதற்கு பாசிட்டிவ் விமர்சனங்களையே வைத்தன.
100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து ஆக்சன் ஹீரோ கால்ஷீட் வாங்கி கஷ்டப்பட்டு பழைய ஆக்சன் படத்தை ரீமேக்கி நட்டம் ஆக்கும் மசாலாக்குப்பைப்படங்களுக்கு நடுவே ஆரோக்யமாக சொந்தமாக யோசித்து அதிகம் புகழ் பெறாத நடிகர்களை வைத்து படம் எடுத்து நல்ல திரைக்கதையை நம்பும் இயக்குநர்கள் இதே போல் வெற்றி பெற வேண்டும், அந்த வெற்றி தான் ஆரோக்யமான சினிமா உருவாக வழி கொடுக்கும் ஹீரோக்கள் சம்பளம் எகிறுவதும் குறையும்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு வெட்டாஃபிஸ். தன் தாய் மாமா வீட்டில் இருக்கிறான். அந்த ஊரில் எல்லோரும் அவரவர் வீட்டில் கழிப்பறை கட்டி இருக்க வேண்டும். அதற்கு சன்மானமாக ரூ 12,000 கிடைக்கும் என கிராமத்தில் சொல்லப்பட்டு ஊரில் எல்லோரும் கட்டி விட்டார்கள் . நாயகனின் தாய் மாமா மட்டும் கட்டவில்லை
ஒரு ஆளை வைத்து கழிப்பறை கட்ட குழி தோண்டும்போது ஒரு பானையில் தங்கக்காசுகள் புதையல் ஆகக்கிடைக்கிறது . அந்தப்புதையலை மூன்று பேரும் மூன்றாகப்பிரித்துக்கொள்ளலாம் என முடிவு செய்தால் பின் ஒவ்வொருவருக்கும் விஷயம் தெரிந்து பார்ட்னர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது . ஒரு கட்டத்தில் போலீஸ் , ஊர் மக்கள் எல்லோருமே பார்ட்னர்கள் ஆக க்ளைமாக்ஸ் ல என்ன திருப்பம் என்பது பார்த்துத்தெரிந்து கொள்ளவும்
நமக்குப்பழக்கமான சிம்ப்பிளான ஒன் லைன் ஸ்டோரிதான். ஆனால் அதை கலகலப்பான திரைக்கதை ஆக்கி நமக்கு பிரசண்ட் செய்த விதத்தில் மனம் கவர்கிறார் இயக்குநர் ரவி முருகையா
நாயகன் ஆக விதார்த் . இவருக்கு அமையும் படங்கள் எல்லாமே வித்தியாசனமான கதை அம்சம் உள்ள படங்கள் தான், ஆனால் இது வரை ஒரு மெகா ஹிட் அமைய வில்லை . 6 வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட படம் என்பதால் இளமையாகத்தெரிகிறார்
சரவணன் நடிப்பும் அருமை .நாயகி ஆக அருந்ததி நாயர். அதிக வேலை இல்லை , வந்த வரை சிறப்பு .அரிச்சந்திரன் ஆக வரும் ஜார்ஜ் மரியன் நடிப்பும் அட்டகாசம், கைதி படத்துக்குப்பின் இவர் கவனிக்கத்தக்க நடிகராக மாறி வருகிறார்
படத்தில் வரும் அனைத்து சின்னச்சின்ன கதாப்பாத்திரங்களும் உயிர்ப்புடன் உலா வருகின்றன.
பானு முருகனின் ஒளிப்பதிவில் கிராமத்து யதார்த்தமான மனிதர்களை இயல்பாகப்படம் பிடித்திருக்கிறார். இயோகன் இசையில் மூன்று பாடல்கள் , ஒரு பாட்டு செம ஹிட் இரண்டே கால் மணி நேரம் படம் ஓடும்படி எடிட் செய்து இருக்கிறார்கள் . முதல் 20 நிமிடங்களில் கதைக்கு வந்து விடுகிறாகள் . கடைசி 15 நிமிடங்கள் காமெடி கலாட்டா தான்
கலகலப்பான திரைக்கதைக்கு வசனம் எழுதி உயிர் கொடுத்திருப்பவர் ரவி முருகையா
சபாஷ் டைரக்டர்
1 நாயகி டெய்லி காலைல லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடிப்போவதும் அன்று மாலையே ரிட்டர்ன் வந்து ப்ரோகிராம் கேன்சல் என வைத்த லெட்டரை எடுத்து விடுவது நல்ல காமெடி
2 நாயகன் விதார்த் , சரவணன் ஆகிய மாமா , மாப்ளை இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது
3 நாயகனின் பக்கத்து வீட்டுக்காரராக வருபவரின் நடிப்பு சில இடங்களில் ஓவர் ஆக்டிங் என்றாலும் ரசிக்க முடிகிறது .
4 தலையில் அடிபட்டவர் நான் உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என எல்லோரிடமும் சொல்ல ஒவ்வொரு சிச்சுவேஷனிலும் காமெடி ஒர்க் அவுட் ஆன விதம்
5 போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒருவர் அடிக்கடி ஃபோன் பண்ணி ஒரு கொலை நடந்திருக்கு , கண்டு பிடிச்சதும் நானே அப்டேட் தர்றேன் என அடிக்கடி இன்ஃபார்ம் பண்ணி கட் பண்ணுவது செம காமெடி
6 கடைசி 20 நிமிடங்கள் ஊரே ஒன்று திரண்டு ஓடுவது அங்கங்கே ரெஸ்ட் எடுப்பது என காமெடி களை கட்டுகிறது
செம ஹிட் சாங்க்
1 துட்டுக்கு கோவைக்கா , ஹார்ட்டுக்கு கொய்யாக்கா , அவ்வைக்கு நெல்லிக்கா
ரசித்த வசனங்கள்
1 சிகரெட் பழக்கம் எல்லாம் உனக்கு உண்டா? எங்க அம்மா, அப்பா அதெல்லாம் எனக்கு பழக்கலை
எனக்கு மட்டும் பாலில் பான்பராக் போட்டா வளர்த்தாங்க ?
2 வெஸ்ட் இண்டீஸ் தோத்துடுச்சாமே?
நான் சவுத் இண்டியன் பற்றிப்பேசிட்டு இருக்கேன், உன் கடைக்கு ஒரு புது ஆள் வர்றானாமே?
3 நான் கோபக்காரன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்
4 தொழில் பண்ற இடத்துல என்னய்யா நொய் நொய்னு சத்தம் பண்ணீக்கிட்டு
இவரு பெரிய அம்பானி , என்னய்யா பண்றே? அங்கே?
கவுதாரி பிடிக்க உக்காந்திருக்கேன், ஒரு ஜோடி பிடிச்சா 80 ரூபா கிடைக்கும்ங்க
இவனா புதையலைத்திருடி இருப்பான் ?
5 அன்னைக்கு ஸ்டேஷன்ல கேட்டப்போ இவனைத்தெரியாது , பழக்கம் இல்லைனு சொன்னே?
ம் தெரியும், ஆனா பழக்கம் இல்லை
என்னது ?
ஆங்க்.. பழக்கம் உண்டு ஆனா தெரியாது
6 எனக்கு ஒரு ஷேர் குடுங்க
இன்ஸ்பெக்டர் தான் கேட்கறார் இல்லை ? ஒரு பழைய ச்சேர் கொடுத்து அனுப்புங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 ஆயிரம் பவுன் தங்கக்காசுகள் எவ்ளோ வெய்ட் இருக்கும் ? அதை அஸ்தி என பொய் சொல்லும்போது தூக்கிப்பார்க்கும் ஆள் இவ்ளோ வெய்ட்டா இருக்கே? என டவுட் படவே இல்லையே?
2 நாயகியின் அம்மா மளிகைக்கடை வைத்திருக்கிறார். மிக்சர் பொட்டலம் போடனும் வா என மகளை பட்டப்பகலில் கடையை சாத்தச்சொல்லி அழைத்து செல்கிறார். பகலில் கடையை சாத்தினால் வியாபாரம் பாதிக்காதா? கடையை மூடி பின் நைட் டைம் தானே பேக்கிங் பண்ணுவாங்க ?
3 நாயகன் படித்தவர், மயக்கமாக இருப்பவருக்கும், பிணத்துக்கும் வித்தியாசம் தெரியாதா? மூச்சு வருதா? என செக் பண்ண மாட்டாரா?
4 ஒரு காட்சியில் நாயகனும், சரவணனும் டீக்க்டையில் டீ ஆர்டர் பண்ண டீக்கடைக்காரர் இந்த டீயை அவங்க கிட்டேக்கொடு என்கிறார். அந்த ரெண்டு டம்ளரிலும் பால் தான் இருக்கு
5 பொற்கொல்லனிடம் ஒரு காசை மட்டும் காட்டி வேல்யூ பார்க்கும்போது அவன் புதையல் கிடைத்திருக்கலாம் என யூகமாக அடித்து விட அவனுக்கும் ஒரு பங்கு தர முடிவெடுப்பது நம்பும்படி இல்லையே? பொதுவாக திருட்டு நகை அல்லது பொற்காசு இதை உள்ளூரிலா விற்பார்கள் ? வெளியூரில் ஆள் பிடித்து அவர்கள் மூலமாகத்தானே விற்பார்கள் ?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - க்ளீன் யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - காமெடிப்பிரியர்கள் , கிராமத்துக்காமெடியை விரும்புபவர்கள் பார்க்கலாம். தரமான நகைச்சுவைப்படம் . ரேட்டிங் 3 / 5