ஹீரோவோட அப்பாவுக்கு 2 சம்சாரம்.இன்னொரு சம்சாரத்தை விட்டுட்டு வந்துடறாரு.பிரிந்த குடும்பம் சேர சில முயற்சிகள் நடக்குது. 3 பசங்களுக்கும் அப்பாவா , ஒரு பொறுப்பான மாமாவா வேலை செய்யறாரு.அதாவது அத்தைங்க 3 பேருக்கும் தலா 1 பொண்ணு ங்க . 3 பசங்களும் தலா 1 அத்தை பொண்ணை கரெக்ட் பண்ணனும். இந்த உயரிய லட்சியத்தை நிறைவெற்ற 3 பசங்களும் கிளம்பறாங்க , இடைவேளை
3 பேரும் அத்தை பொண்ணை கடத்திட்டு வர்றதுக்குப்பதிலா அத்தை யையே கடத்திட்டு வந்துடறாங்க.யாரும் ஜெர்க் ஆகவேணாம் . விபரீதமா எதுவும் நடக்கலை. இது ஒருதமாசுப்படம், அதனால 3 பேரும் 3 பொண்ணுங்களை கரெக்ட் பண்றதுதான் மிச்ச மீதிக்கதை .
ஹீரோவா ஆம்பள விஷால். பாண்டிய நாடு , நான் சிகப்பு மனிதன் அப்டினு தொடர்ந்து 2 ஹிட் படங்கள் கொடுத்து ஹாட்ரிக் அடிக்க பூஜை போட்டாரு. தப்பிப்போச்சு. இதுவும் அண்ணனுக்குக்கை கொடுப்பது டவுட் தான் .
ஃபைட் சீன்கள் ல 25 அடி உயரம் பறக்கறார். ஜெட்லீக்குப்போட்டியா ட்ரை பண்றார் போல . செம ,
ஹீரோயினா அமுல் டப்பா பூஸ்ட் பாப்பா இண்ட்டர் நேஷனல் லக்சா அஞ்சரை அடி சந்தன தேக்சா ( சின்ன அண்டா = தேக்சா). இவரோட கிளாமரை நம்பிதான் பாதிப்படம் ஓடுது. இவர் ரொம்ப சிக்கனவாதியா டிரஸ் ரொம்ப கம்மியாப்போட்டு வாங்குன சம்பளத்துக்கு வஞ்சகம் இல்லாம வந்துட்டுப்போறாரு. எப்போ பாவாடை கட்டிட்டு வந்தாலும் நெட்டுக்கா 4 இடத்துல கிழிச்சு விட்டுக்கறார் . ஃபேஷன் போல . 10 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி எம்பி எம்பி குதிக்கறார் . 5 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி லோ கட் ஜாக்கெட் போட்டு கீழே குனியறார். இதைவிட குணச்சித்திர நடிப்பை ஒரு நாயகி எப்படித்தர முடியும் ?
அத்தைங்களா ரம்யா கிருஷ்ணன் , கிரண் , ஐஸ்வர்யா 3 பேரும் . எங்கே ஹீரோ கூட சேர்ந்து கும்மி அடிக்கற டூயட் கனவு பாட்டு வந்துடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் நல்ல வேளை அப்படி எதுவும் படுக்கலை . சாரி நடக்கலை
பிரபு ஹீரோவோட அப்பா . ஓக்கே ரகம் .
காமெடிக்கு சந்தானம் முதல் 20 நிமிசம் மட்டும் வர்றார். அவரது காமெடி டிராக் புத்திசாலித்தனமா இணைக்கப்பட்டிருக்கு . பின் பாதியில் படத்தை முடிக்க அவர் பங்களிப்பு சிறப்பு
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 நான் அரசியலுக்கு கூட்டம் சேர்க்கறவன்.ஆனா கூட்டத்தை வெச்சு அரசியல் பண்ண மாட்டேன் # ஆ
2 சந்தானம் = காவி டிரஸ் போட்டவன் எல்லாம் கலர் கலரா பிகரை கரெக்ட் பண்ணும்போது காக்கி சட்டை போட்ட நான் கரெக்ட் பண்ணக்கூடாதா? #ஆ
3 கலரா இருக்கற பொண்ணுங்களுக்கு எல்லாம் கறுப்பா இருக்கற பசங்களைத்தான் பிடிக்குது # ஆ
4 இந்தக்கால பொண்ணுங்க கிளாஸ் பார்க்கறதில்லை.மாஸ் தான் பார்க்கறாங்க # ஆ
5 உனக்குப்பின்னால
பெரிய கூட்டத்தையே சேர்த்துட்டே போல ன்னு ஒரு வசனம் வருது.பின்னால
திரும்பிப்பார்த்தா தியேட்டர்ல 36 பேர்.அடேங்கப்பா # ஆ
6 ஓடிப்போன என் சம்சாரம் திரும்பி வந்துட்டா
சந்தானம் = உன் மூஞ்சியே தேவலைன்னு அவ வந்தா ன்னா கூட்டிட்டுப்போனவன் மூஞ்சி எப்டி இருந்திருக்கும்
7 மனோபாலா = எப்டி நம்ம செட்டப்பு?
சந்தானம் = பல்லுக்குத்தும் குச்சிக்கு பப்பாளிப்பழம் எதுக்கு?
மனோபாலா =,மாசமானா என்னைத்தேடி வருவான்
சந்தானம் = இவ எப்போ மாசம் ஆவா? அவன் எப்போ வருவான்?
9 இந்தா 10 ரூபா.டீ வாங்கி சாப்டு
சந்தானம் = பின்னே இந்தக்காசை வெச்சு தங்க பஸ்பமா சாப்பிட முடியும்?
சந்தானம் =,அந்த வீணாப்போன மூஞ்சிக்கு டீனா ன்னு பேரா?
11 சந்தானம் = பல்சர் பின்னால போன பிகரைப்பார்த்திருக்கேன்.பல்லுப்போன கிழவி பின்னால போற பையனை இப்போ தான் பார்க்கறேன்
12 சதீஷ்
= சாங் ல சேர்ந்த குடும்பத்தைப்பார்த்திருக்கேன்.சரக்குல சேர்ந்த
குடும்பத்தை இப்போ தான் பார்க்கறேன் .அப்பா பசங்க 3 பேரு எல்லாரும் 1
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
ஆம்பள ரன்னிங் டைம் =144,இது ல ஏதாவது குறியீடு இருக்குமோ?
சுந்தர் சி படத்துல ஹரி எப்போ ஜாயின் பண்ணாரு? 45 ஜீப் பறக்குது
3 ஹன்சிகா ஜாகிங் போகுது ,எம்பிக்குதிக்குது ,மழைல நனையுது .நவ ரசமும் தெரியுது நடிப்பில்.அடடே!
4 இத்துப்போன மர பெஞ்ச்சை ஹீரோ தூக்கி வீசறாரு.அது பட்டு 35 பேரு கீழே விழுந்துட்டாங்க
5
விஷால் விஜய்க்குப்போட்டியா வருவார்னு பார்த்தா சிம்பு க்குப்போட்டியா ஹன்சிகா வை கரெக்ட் பண்ணிட்டு இருக்காரு # ஆ
அட்டர் பிளாப் படத்துக்கான சகல அம்சமும் தெறிக்குது # ஆம்பளடா
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 ஹன்சிகாவுக்கு 10 லட்சம் ரூபா சம்பளம் குடுத்து 20 லட்சம் ஒர்த்துக்கு குணச்சித்திர கண்ணிய நடிப்பை காட்ட வெச்சது
2 ஹீரோ ஒரே ஒரு சீன்ல போலீஸ் யூனிஃபார்ம்ல வரும் டுபாக்கூர் சீனை வெச்சு இது ஒரு போலீஸ் கதைன்னு ஜனங்களை , டிஸ்ட்ரிபியூட்டர்சை நம்ப வெச்சது
3 ஹரி படங்களுக்கு இணையா ஜீப்களை களம் இறக்குனது
4 தாய் மாமன் , மாமன் மகள் படங்கள் ல இருந்து சாமார்த்தியமா காட்சிகளை உருவினது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 படம் காமெடியாத்தான் இருக்கு, ஆனா 1980 ல வந்திருக்கனும். இன்னும் திரைக்கதை நாலெட்ஜே இல்லாம பம்மாத்து பண்ணினா மக்கள் ஏத்துக்குவாங்களா?
2 பிரபுவோட முதல் காதலி செத்துட்டாங்கனு வந்த தகவலை அவர் எப்படி நம்பறாரு>? டெட் பாடியை கண்ணால கூடப்பார்க்காம?
3 ஹீரோ விஷாலும் அவர் தம்பியும் புது ஊர் ல குளத்துல குளிக்க ப்போகும்போது தன் லக்கேஜை முன் பின் தெரியா த ஆள் கிட்டே ஒப்படைச்சு ஏன் ஏமாறனும் ? ஒருவர் லக்கேஜைப்பார்த்துக்கிட்டு இன்னொருவர் போய் ரெடி ஆகிடலாமே?
சி பி கமெண்ட் -ஆம்பள - பிரமாதமான காமெடி டிராமா, ஆனா 1980 ல வந்திருக்கனும், டூ
லேட்,இதுக்கு மேல சொல்ல விரும்பல - விகடன் மார்க் - 38 , ரேட்டிங் = 2.25 /
5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 38
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = சுமார்
ரேட்டிங் =2.25 /
5
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்