Showing posts with label ஆத்மா 3டி. Show all posts
Showing posts with label ஆத்மா 3டி. Show all posts

Monday, May 16, 2011

HAUNTED 3D - பேய்ப்படமா? கில்மாப்படமா?- ஹிந்திப்பட விமர்சனம்

http://mimg.sulekha.com/hindi/haunted-3d/stills/haunted-3d-stills-011.jpg


நான் எழுதும் கன்னிப்பேய் பட விமர்சனம். அதுக்காக அந்தப்பேய் கன்னி என உனக்கு எப்படித்தெரியும்னு கேட்டுடாதீங்க.. முதன் முதலா ஒரு பேய்ப்படத்துக்கு விமர்சனம் எழுதறேன்.கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. படிக்கறவங்கள்ல பயப்படும் மனோ பாவம் உள்ளவர்கள் ,ஜேசுதாஸ் பாவம் இல்லாதவர்கள் எல்லாம் எதுக்கும் (அவங்கவங்க)சம்சாரத்தோட கையை பிடிச்சுக்கிட்டே படிங்க.. சம்சாரமே பேய் மாதிரி தான் என் கண்ணுக்குத்தெரியறா என சொல்பவர்கள் தனியாவே படிங்க.. ஹி ஹி

ஃபாரீன்ல இருந்து ஒரு பங்களாவை சேல்ஸ் பண்ணறது சம்மந்தமா ஒரு லேண்ட் புரோக்கர் இந்தியா வர்றார். அந்த பங்களாவுல பேய் இருக்குன்னு கண்டு பிடிக்கிறார். ( அது ஏன் பேய்ங்க எல்லாம் பங்களாவுலயே குடி இருக்கு?குடிசைப்பேய் ஒண்ணு கூட நான் பார்த்ததே இல்லை)வழக்கமா எல்லா பேய்ப்படங்கள்லயும் வர்ற ,மாதிரி அலறல் சத்தம், டபார்னு ஒரு உருவம் ஓடறது, தனி தலை மட்டும் குப்பைக்கூடைல கிடக்கறதுன்னு ஓப்பனிங்க் பில்டப் முடிஞ்சதும் இயக்குநர் கதைக்கு வர்றார்.


அந்த பெண் பேய் தன்னோட ஃபிளாஸ்பேக்கை டைரி மூலமா சொல்லுது.. ( வழக்கமா ஆண் பேய்க்கதைன்னா எவனும் சீண்ட மாட்டான்னு எல்லாருக்கும் ஒரு நம்பிக்கை)

http://imedia.cinebasti.com/cb/galery_movies/medium/Haunted_3d_movie_still1.jpg





18 வயசு ஃபிகரு..70 மார்க் ( டென்த்லயா? பிளஸ்டூலயா?ன்னு கேட்கற அப்பாவிகளெல்லாம் ஒன் ஸ்டெப் பேக் மேன்).. அம்மா அப்பா ஊர்ல இல்ல.. தனியா இருக்கு.. ( அட்ரஸ் பிளீஸ்..னு  யாரும் எஸ் எம் எஸ் பண்ணாதீங்க.. இது கதை..)பியானோ கத்துக்குடுக்கற புரொஃபசர் இப்போ எண்ட்ரி ஆகறார். ( தியேட்டர்ல ஒரு பையனாவது கண்ணை இமைக்கனுமே?)ஆண்டாண்டு காலமா வில்லன் ஹீரோயினை என்ன பண்ணுவானோ  அதே மேட்டரை இவனும் பண்ண ட்ரை பண்றான். ( எதுக்கு நடந்ததை  டைரக்ட் ஸ்பீச்ல சொல்லாம இண்டைரக்ட் ஸ்பீச்?ல சொல்றென்?ஏன்னா இது ஒரு கண்ணியமான பிளாக்.. ஹி ஹி )

பொதுவாவே ஹீரோ கூட பிரமாதமா ஃபைட் போடற வில்லன்க எல்லாம் ஹீரோயின் கிட்டே தோத்துடுவாங்க.. ( நற நற..)ஹீரோயின் வில்லன் தலைல மடார்னு ஒரு லேம்ப் போஸ்ட்டால ஒரு போடு போடறா.வில்லன் அவுட்.. ( அட போங்கப்பா.. சுவராஸ்யமும் அவுட்..)


வில்லன் ஆவி ஆகிறான்.( ஒரு பாவி ஆவி ஆகிட்டான் அடடே,... ஆச்ச்சரியக்குறி )இப்போ வில்லன் பேயா மாறியும் திருந்தலை... ( அதானே நமக்கு வேணும்..?)


வில்லன் ஹீரோயினை ரேப்பிடறான்.. ( என்ன கண்றாவி தமிங்கிலீஷ் வார்த்தை இது..?)தினத்தந்தி ரசிகர்கள் மட்டும் ரேப்புக்கு முன்னால கதறக்கதற என்ற வார்த்தையை சேர்த்துக்கவும்.இப்போ தான் டைரக்டர் ஒரு காமெடி பண்றார்.. இந்த புனித வேலையை வில்லன் 80 வருஷமா கண்ட்டினியூ பண்றாராம்.நான் தெரியாம தான் கேட்கறேன்.. போர் அடிக்காது? ஒரே பங்களாவுல ஒரே ஃபிகரை மடக்கி வெச்சு எந்த மடையனாவது 80 வருஷம் ரேப் பண்ணிட்டே இருப்பானா?http://g.ahan.in/hindi/Haunted%203D%20Movie%20Special%20Show/Haunted%203D%20Movie%20Special%20Show%20(4).jpg





இதுல தான் இயக்குநர் தன் புத்திசாலித்தனத்தை காட்றார்.பேய்க்கு வயசே ஆகறது இல்லையாம். சேம் ஏஜ்.. ( லாஜிக்கு..?)

ஃபிளாஸ்பேக் முடிஞ்சதும் ஹீரோ கடந்த காலத்துக்குப்போய் அந்த கொலையை தடுக்க ட்ரை பண்றார்.. ( காதுல பூ)ஆனா முடியலை.. அவர் கண் முன்னால அதே சம்பவங்கள் மீண்டும் நடக்குது..

அப்போ தான் ஒரு மத போதகர் ஹீரோயினிடம் நீ இரண்டற கலந்து விட்டால் பேய் கிட்டே வராது.. ( இரண்டற கலக்கனும்னா 2 டைம் கலக்கனுமா? #டவுட்டு )


சரி.. இப்பவாவது சீன் உண்டுன்னு ஆர்வமா பார்க்கறவங்க எல்லாம் டூயட் சீன் பார்த்து கடுப்பாகிடறாங்க..

அப்புறம் பாலமித்ரா, அம்புலிமாமா கதைல வர்ற மாதிரி ஹீரோ ஹீரோயினை எப்படி காப்பாத்தறார்ங்கறது தான் மிச்ச சொச்ச திரைக்கதை..

http://www.celluloidtamil.com/wp-content/gallery/haunted-3d/haunted-3d.jpg



இயக்குநர் சபாஷ் பெறும் இடங்கள்



1. ஹீரோ முதன் முதலா பங்களாவுல எண்ட்ரி ஆனதும் திடீர்னு ஒரு உள்ளங்கை மட்டும் கண்ணாடிக்கதவுல ரேகை பதிச்சு ஆ என அலறும் சத்தம் எடுக்கப்பட்ட விதம் கிளாசிக்.. தியேட்டர்ல அலறாதவங்க கம்மி..

2. தட்டு முட்டு சாமான்கள் வைக்கப்பட்ட அறைக்குள் ஒரு பெண்ணின் வெட்டப்பட்ட தலையை மட்டும் காட்டும் இடத்தில் எழும் பகீர் உணர்வு.. ஹார்ட் பேஷண்ட்ஸ் இந்தப்படம் பார்ப்பதை தவிர்க்கவும்.


3. திடீர் என தூக்கில் தொங்கியபடி ஊசலாடும் பெண்ணின் பிணம் ( ஒளிப்பதிவு செம)





http://img.india-forums.com/wallpapers/1280x1024/124046-twinkle-bajpai-and-mimoh-chakraborty-in-the-movie-haunted-3d.jpg

--


வசனங்களில் பளிச் வசனங்கள்



1. துஷ்ட தேவதையோட அல்லது ஆவியோட பெயரை சொன்னா அதனோட சக்தி அதிகம் ஆகிடும்.. ( இனிமே சம்சாரம் கூட சண்டைன்னா அவ பேரை சொல்லக்கூடாது #நீதி)


2. கண்ணா.. லட்டை மிஸ் பண்ணீட்டே.

3, வம்பு பண்ணனும்னு நினைச்சிருந்தா அப்பவே வம்பு பண்ணி இருப்பனே? என்னை நம்பு.. ( நம்ப முடியாது.. நீ லேட் பிக்கப்போ என்னவோ?)


4. நான் உனக்கும், உன் தலை எழுத்துக்கும் நடுவுல இருக்கேன்.. (நீ என்ன பிரம்மாவோட செகரட்ரியா?#டவுட்டு)

5. பேய்க்கு எழுதப்படிக்கத்தெரியாது... ( ஏன் எல்லா பேய்களும் அன் எஜூக்கேட்டட்டா இருக்க்கு? #டவுட்டு)

6. பொதுவா பேய்ங்களுக்கு விடிகாலைல 3 மணிக்கு பலம் அதிகம் ஆகும், மதியம் 3 மணிக்கு பலவீனம் ஆகிடும்.. ( அப்போ மிட் நைட்ல 12 மணிக்கு பயப்பட வேண்டியது இல்லையா?)


 இயக்குநர் பல்பு வாங்கிய இடங்கள்


 1. மிக சிறப்பாக திரைக்கதை அமைத்த இயக்குநர் க்ளைமாக்ஸ் ஆவி ஒழிப்பு சீனில் சொதப்பியது... படமே முடிஞ்சாச்சு என நிம்மதிப்பெரு மூச்சு விடும்போது 2வது க்ளைமாக்ஸ் வைத்து போர் அடித்தது..

2. தனிமைல இருக்கற பொண்ணு மாஸ்டர் பியானோ கத்துக்க வர்றார்னு தெரிஞ்சும் அவ்வளவு லோ கட் ஜாக்கெட் போடுவாளா?
( துப்பட்டா கூட போடலை)

3.வில்லன் ஹீரோயின் பின்னால நின்னு 10 நிமிஷம் உரசிட்டு கூந்தலை மோப்பம் பிடிச்சுட்டு நிக்கற வரை ஹீரோயினுக்கு எதுவுமே தோணலையா?( இதை ஏன் கேட்கறேன்னா பெண்களுக்கு முன் ஜாக்கிரதை உணர்வும், விழிப்புணர்வும் ஜாஸ்தி.. டக்குன்னு கண்டு பிடிச்சுடுவாங்களே..?)

4. மத போதகர் புனித நீர் ஜக்கு எடுத்துக்குடுத்து பேய் வந்தா யூஸ் பண்ணிக்குங்க.. ஆனா இது டெம்ப்ரவரி தான்.. பர்மணண்ட் கிடையாது அப்படிங்கறார்.. கடவுளின் பவர்ல கூட அப்படி டெம்ப்ரவரி, பர்மணண்ட் என 2 வித பவர் இருக்குமா?


5. ஹீரோயின் கழுத்துல இருக்கற செயினை கிணத்துல போட்டுட்டா பேய் செத்துடும். செயினை தூக்கி கிணத்துல போட்டாச்சு.. ஆனா அது தண்ணீல விழாம ஒரு கல்லுல இருக்கு. இது ஹீரோ , வில்லன் 2 பேருக்கும் தெரியும்.. அப்போ வில்லன் பேய் முத வேலையா அந்த செயினை பறிக்கத்தானே முயற்சி செய்யும்? ஆனா படத்துல 80 வருஷமா பல தடவை ரேப் பண்ணூன ஹீரோயினை மறுபடி 2756 வது தடவையா ரேப் பண்ண ட்ரை பண்ணிட்டிருக்கே? அது ஏன்?

6. ஹீரோ கடந்த காலத்துல  போய் வில்லனை அழிச்சிடறார் ஓக்கே.. ஆனா ஹீரோயின் வேற ஒருவரை கல்யாணம் பண்ணிடறதா காட்றாங்களே அது எப்படி? டைம் மெஷினோட லாஜிக் படி இறந்த காலத்துல போனா எந்த சேஞ்சும் பண்ணிடக்கூடாது என்பது தானே?



மொத்தத்துல படத்துல லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் இது ரசிக்க வேண்டிய பேய்ப்படம் தான். ஆனால் பெண்கள், கர்ப்பிணிகள், பயந்த சுபாவம் உள்ளவர்கள், சிறுவர் , சிறுமியர்கள்,மாணவர்கள் இந்தப்படத்தினை பார்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்ப்படுகிறார்கள்.

 சில ஊர்களில் இது ஆத்மா 3டி என தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது .


ஈரோட்டில் ஸ்ரீலட்சுமி தியேட்டரில் போட்டிருக்காங்க..  


டிஸ்கி 1 - கீரை வகைகளும் சமையல் செய்யும் முறைகளும்  

டிஸ்கி 2 -சிட்டுக்குருவி லேகியம் ஏன் கிடைப்பதில்லை? 

 டிஸ்கி 3 - அழகர் சாமியின் குதிரை - அழகிய கிராமம்+பழகிய காதல் - சினிமா விமர்சனம்