Showing posts with label ஆடு ஜீவிதம் (2024)- மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆடு ஜீவிதம் (2024)- மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Wednesday, April 03, 2024

ஆடு ஜீவிதம் (2024)- மலையாளம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சர்வைவல் டிராமா)

 


  2008ஆம்  ஆண்டு  மலையாளத்தில்  வெளி  வந்த  நாவலான  ஆடு  ஜீவிதம் அந்த  ஆண்டில்  அதிக  விற்பனை  ஆன  நாவலாக  பரபரப்பாகப்பேசப்பட்டது . உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  எழுதப்பட்ட  நாவல்  அது 80 கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  எடுக்கப்பட்டு  இதுவரை  50  கோடி  மட்டுமே  வசூல்  ஆகி  உள்ளது


 தமிழ்  சினிமாவில்  கேரக்டர்  அல்லது  கெட்டப்க்காக தங்கள்  உடலை  வருத்தி  உருமாற்றிய  வல்லமை  கொண்டவர்கள்  மூவர் . 1  சேது  விக்ரம்  2  வாரணம்  ஆயிரம்  சூர்யா  3  அபூர்வ  சகோதரர்கள் கமல் . அந்த  வரிசையில்  மலையாள  நடிகர்  பிருத்விராஜ்  சுகுமாறன்  படத்துகாக 92  கிலோ  எடையுடன் ஒரு  கெட்டப்  பின்  உடல்  இளைத்து  31  கிலோ  குறைத்து 61 கிலோ  எடையுடன் ஒரு கெட்டப்பில்  தோன்றி  ரசிகர்களிடையே  வரவேற்புப்  பெற்றார்


இந்தப்படத்துக்காக  முதலில்  இயக்குநர் அணுகியது  சூர்யாவைத்தான். ஆனால்  கால்ஷீட்  பிரச்சனை  காரணமாக  அவர்  நடிக்க  முடியாமல்  போனது. 2015ல்  இருந்தே  இதை  எடுக்க  மிகவும்  சிரமப்பட்ட  இயக்குநர் 2020ல்  கோவிட்  பிரச்சனையால்  ஃபாரீனில்  மாட்டிக்கொண்டு  பின்  மீண்டு  வந்து  படம்  இயக்கினார், விமர்சன  ரீதியாக  மீடியாக்கள்  பாராட்டைப்பெற்றாலும்  கமர்ஷியலாக  இது  பிரம்மாண்ட  வெற்றியைப்பெறவில்லை . சுருக்கமாகச்சொன்னால்  கமல்  படம்  மாதிரி  பேரு  கிடைச்சுது , ஆனா  சோறு  கிடைக்கலை  (  விதி விலக்கு -  விக்ரம், சகலகலாவல்லவன், அபூர்வசகோதர்கள்  ETC)


    ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன் ஒரு  மிடில்  கிளாஸ்  வாழ்க்கை  வாழ்ந்து  வருபவன்.மனைவியுடன்  இல்வாழ்க்கை நடத்தி  வருபவன்  வெளிநாடு  போய்  வேலை  செய்து  அதிக  பொருள்  ஈட்டி  இங்கே  ஜாலியாக  செட்டில்  ஆகலாம்  என  நினைக்கிறான், இதனால்  தன்  சொந்த  வீட்டை  அடமானம்  வைத்து  ரூ 30,000   ஒரு  புரோக்கரிடம்  கட்டி  துபாய்  போகிறான்


 ஆனால்  அங்கே  அவனை  ரிசீவ்  பண்ண  உரிய  நபர்  வரவில்லை . இவராக ஒரு  துபாய்  ஷேக்கை  ஓனராக  நினைத்து   ஏமாறுகிறார். அந்த  ஷேக்  இவரையும், நண்பரையும்  ஒரு   பாலைவனத்துக்கு  அழைத்து  செல்கின்றார் . அங்கே  ஆடு  மேய்க்கும்  வேலை . ஏதோ  ஹெல்ப்பர்  வேலை    என  நினைத்து  வந்த  நாயகனுக்கு  இது  அதிர்ச்சி .அதனால்  அங்கே  இருந்து  எஸ்கேப்  ஆக  முயற்சி  செய்கிறார்  , முடியவில்லை 


 மிக  சிரமப்பட்டு  திட்டம்  போட்டு  அந்த  இடத்தை  விட்டு  நாயகன்  தப்பிக்கிறான். ஆனால்  பாலைவனத்தைக்கடப்பதற்குள்  பல  பிரச்சனைகளை , பாலைவனப்புயல் , பாம்பு , கழுகு , கானல்  நீர்  என  சந்தித்து  எப்படி  கரை  சேர்ந்தார்  என்பது  மீதி  திரைக்கதை 


 நாயகன்  ஆக  உயிரைக்கொடுத்து  நடித்திருப்பவர்  பிருத்விராஜ் . ஆள்  தோல்  நிறம் , எடை  எல்லாம்  மாறிப்போய்  பரிதாபமாகத்தோற்றம்  அளிக்கிறார். சிறப்பான  நடிப்பு 


நாயகி  ஆக  அமலா  பால், அதிக  வாய்ப்பில்லை , வந்தவரை  ஓக்கே 

படத்தில்  நடித்த  அனைத்து  துணைக்கதாபாத்திரங்களும்  உணர்ந்து  நடித்திருக்கிறார்கள் 


ஏ  ஆர்  ரஹ்மான்  இசை  பெரிதாக  சோபிக்கவில்லை . கொஞ்ச  நேரம்  அமைதியாகத்தான்  இரேம்ப்பா  என  பிஜிஎம்  டார்ச்சரால்  சொல்ல வைக்கிறார். இளையாராஜாதான்  மவுனம்  ஒரு  மொழி  என  உணர்ந்தவர் , நமக்கு  உணர்த்தியவர். இண்டர் நேஷனல்  மார்க்கெட்டிங்க்கிற்காக  இவரை  புக்  பண்ணி  இருப்பார்கள்  போல 


கே  எஸ்  சுனில்  தான்  ஒளிப்பதிவு.முழுக்க  முழுக்க  பாலைவனத்தில்  லைவ்  லொக்கே ஷனில்  படம்  பிடித்திருக்கிறார்கள் ,சவாலான  பணி  தான்

ஏ  ஸ்ரீதர்  தான்  எடிட்டிங்.கிட்டத்தட்ட  3  மணி  நேரம்  படம்  ஓடுகிறது .எப்போதான்  முடிப்பீங்க  ?என  சலிப்பை  ஏற்படுத்துகிறது . சர்வைவல்  டிராமா  எனில்  2  மணி  நேரம் கிரிஸ்ப்பாக  இருக்க  வேண்டும் 


ஒரிஜினல்  நாவல்  ஆசிரியர்  பென் யாமின்.திரைக்கதை  , இயக்கம்  பிளெஸ்ஸி


சபாஷ்  டைரக்டர்


1 கமர்ஷியலாக  போகாத  மிக  ரிஸ்க்  ஆன  கதையைப்படம்  எடுக்க  தயாரிப்பாளரை   ஓக்கே  சொல்ல  வைத்த  சாமார்த்தியம் 


2  பாலைவனம் மாதிரி  செட்டிங்ஸ்  எல்லாம்  போடாமல்  நிஜ  பாலைவனத்துக்கே  போய்  படம்  பிடித்தது


  ரசித்த  வசனங்கள் 


தமிழ்  டப்பிங்கில்  இருந்தாலும்  70% வசனங்கள்  அரபு  மொழிதான் . சப்  டைட்டில்  பல  இடங்களில்  காணவில்லை, ஆனால்  குத்து  மதிப்பாகப்புரியும்படிதான்  காட்சிகள்  அமைக்கப்பட்டுள்ளன. வசனமே  புரியாமல்  ரசித்த  வசனம்  எப்படிப்போட? 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  எனக்கு  ஹிந்தி  தெரியாது  போடா, இங்க்லீஷூம்  தெரியாது  போடா  க்ரூப்பைச்சேர்ந்தவன்  ஆக  நாயகன்  இருக்கிறான், ஆனால்  என்ன  தைரியத்தில்  துபாய்  போக  ஆசைப்பட்டான்  என்பதில்  விளக்கம் இல்லை.அங்கே  போய்  மொழி  புரியாமல்  எப்படி  சமாளிப்போம்  என்ற  அறிவு  வேண்டாமா? இதனால்  இந்த  கேரக்டர்  மேல்  பரிதாபம்  வருவதற்குப்பதில்  எரிச்சல்  வருகிறது


2   ஃபாரீன்  போகிறோம்  என்றால் அங்கே  யாரை  சந்திக்க  வேண்டும்?  கம்பெனி  பெயர்  என்ன?  புரோக்கர்  பேரு  என்ன ?  அங்கே  தெரிந்த  நபர்கள் வேறு  யாராவது  இருந்தால்  அவர்கள்  விபரம்,  ஃபோன்  நெம்பர்  எதுவுமே  தெரியாமல் என்  புருசனும்   கச்சேரிக்குப்போனான்  கதையாக  நாயகன்  போய்  மாட்டிக்கொள்வது  அபத்தம் 


3   போனது  போயாச்சு ,  வேலைக்கு  சேர்ந்த  முதல்  நாளிலேயே  எந்த  வேலையும்  செய்யாமல் நான்  ஊருக்குப்போறேன் என  அடம்  பிடிப்பது  நமக்கே  கடுப்பை  வரவைக்குது.அட்லீஸ்ட்  10  நாட்களாவது  வேலை  செய்வதாக  காட்டி  விட்டு  அடுத்த  நாள்  இந்தக்காட்சியை  வைத்திருக்கலாம் 


4   நாயகன்  தப்பிக்க  முடிவெடுத்த  பின்  50  ஆடுகள்  மீதும்  மிகுந்த  பாசம்  கொண்டவர்  போல  நான்  ஊருக்குப்போறேன்  எனப்புலம்புவது , பிரியா  விடை  பெறுவது  ஒட்டவில்லை 


5    நாயகன்  நாயகி  உடன்  சந்தோஷமாக  இருந்த  தருணங்கள்  படம்  ஆரம்பித்து  முதல்  அரை  மணி  நேரம்  ஒரே யடியாகக்காட்டி  இருக்க  வேண்டும்.அப்படி  இல்லாமல்  10  நிமிசம்  பாலைவனக்காட்சி , 10 நிமிசம்  ஃபிளாஸ்பேக்  காட்சி  என  இயக்குநர்  பேலன்ஸ்  செய்த  ஐடியா  ஒர்க் அவுட் ஆகவில்லை 


6 இடைவேளைக்குப்பின்  பாலைவனத்தில்  தப்பிக்கும்  காட்சி மிக  நீளம்.  இன்னும்  ட்ரிம்  பண்ணி  இருக்க  வேண்டும், சீக்கிரம்  முடிங்கப்பா  என  புலம்ப  வைத்து  விட்டார்கள் 


7  நாயகனின்  சொந்த பந்தம்  யாரும்  அவரைத்தேடும்  முயற்சியில்  ஈடுபட மாட்டார்களா?  அட்லீஸ்ட்  தூதரகத்தில்  போய்  புகாராவாது  கொடுப்பது போல  காட்சி  வைத்திருக்க  வேண்டும் 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஃபாரீன்  மோகம்  கொண்டு  இருக்கும்  ஆண்கள் , ஃபாரீன்  மாப்ளையைத்தான்  கட்டிக்குவேன்  என  அடம்  பிடிக்கும்  பெண்கள்  பார்க்க  வேண்டிய  படம் . பொறுமை  மிக  மிக  அவசியம். ரேட்டிங்  2.25 / 5 



ஆடுஜீவிதம்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
இயக்கம்ப்ளெஸி
மூலம் திரைக்கதைப்ளெஸி
அடிப்படையில்
பென்யாமினின் ஆடுஜீவிதம் , நஜீப்பின் நிஜ வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது
உற்பத்தி
நடித்துள்ளார்
ஒளிப்பதிவுசுனில் கே.எஸ்
திருத்தியவர்ஏ. ஸ்ரீகர் பிரசாத்
இசைஏஆர் ரஹ்மான்
உற்பத்தி
நிறுவனங்கள்
  • விஷுவல் ரொமான்ஸ் பட தயாரிப்பாளர்கள்
  • ஜெட் மீடியா தயாரிப்பு
  • அல்டா குளோபல் மீடியா
மூலம் விநியோகிக்கப்பட்டதுபிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் (மலையாளம்)
ரெட் ஜெயண்ட் மூவிஸ் (தமிழ்)
மைத்ரி மூவி மேக்கர்ஸ் (தெலுங்கு )
ஹோம்பலே பிலிம்ஸ் (கன்னடம்)
ஏஏ பிலிம்ஸ் (ஹிந்தி)
வெளிவரும் தேதி
  • 28 மார்ச் 2024
நேரம் இயங்கும்
173 நிமிடங்கள் [1]
நாடுகள்
  • இந்தியா
  • அமெரிக்கா
மொழி
  • மலையாளம்
பட்ஜெட் 80 கோடி [2]
திரைப்பட நுழைவு சீீட்டு விற்பனையகம்மதிப்பிடப்பட்ட ₹50 கோடி [3]