Showing posts with label ஆக்சன் -சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஆக்சன் -சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 15, 2019

ஆக்சன் -சினிமா விமர்சனம்

சுந்தர் சி  விஷால்  காம்போ ல இது 3 வது படம், மதகஜ ராஜா எப்போ  ரிலீஸ் ஆகும்கறதும் ரஜினி எப்போ அரசியலுக்கு வரப்போறாரு , நம்ம இரண்டாம் கலைஞர் எப்போ முதல்வர் ஆகப்போறார்ங்கறதும்  யாருக்கும்  தெரியாது



மாநில முதல்வர்க்கு 2 பசங்க ( உடனே கலைஞர் , ஸ்டாலின், அழகிரி ரெஃப்ரென்ஸ்னு குதிக்கக்கூடாது)ஒருத்தரு மிலிட்ரி ஆஃபீசர் , இன்னொருத்தர் நாளைய முதலவர் . இவங்க கட்சி கூட கூட்டணி பேச்சு வார்த்தைக்கு மத்திய கட்சில இருந்து ஒரு பெரிய கட்சித்தலைவர் வர்றாரு , அவரை தீவிரவாதிகள் போட்டுத்தள்ளிடறாங்க ( ராஜீவ் காந்தி  கொலை ரெஃப்ரென்ஸ்)

 கொலைப்பழி மாநில முதல்வர் குடும்பம் மேல விழுது .இதை மாநில முதல்வரின்  மகனான ஹீரோ  எப்படி கொலைப்பழியில் இருந்து காப்பாற்றி வில்லன்களை பிடிக்கிறார் என்பதே க்தை 


 விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் , ஹாலிவுட் படங்கள் பலவற்றில் இருந்து அட்லீ ஒர்க் ( திருட்டு வேலை ,கவுரவமா சொல்லனும்னா இன்ஸ்பைரேஷன்) பண்ணி இருக்காரு இயக்குநர்   சுந்தர் சி 


ஹீரோவா புரட்டாசி தளபதி விஷால் . மிலிட்ரி ஆஃபீசர் என்பதால் மிலிட்ரி கட்டிங் ஜிம் பாடி , ஜம் ஃபைட் என அசத்தறார். விக்ரம் , டிக் டிக் டிக் படத்துல கமல் ஓடிட்டே இருப்பாரே  அது மாதிரி படத்துல பாதி நேரம் இவருக்கு ஓடறது துரத்தறதுதான் வேலை . நல்லா பண்ணி இருக்கார் 

 ஒரு ஹீரோயின் ஐஸ்வர்ய லட்சுமி . சுமார் ஃபிகர்  50 மார்க் போடலாம். அதிக காட்சிகள் இல்லை

 இன்னொரு நாயகி  லெமனா பள பளக்கும் தமனா.  அயர்ன் பாக்ஸ் அழகி என இளைஞர்களால் அழைக்கப்படுபவர் அதை பொய்யாக்க  என்னென்னமோ டைட் டாப்ஸ் எல்லாம் போட்டு கிளாமர் காட்றார். எந்த கேவலமான கட்சி கூட்டணிக்கு வந்தாலும் வேணாம்னு அனுப்பாம சேர்த்துக்கற நம்ம தானைத்தலைவர் கட்சி மாதிரி நாங்க எல்லாம் எந்த நடிகை கிளாம்ர் காட்னாலும் வருக வருக முடிஞ்ச வரை சீன் தருக என வரவேற்போம்

தமனாவுக்கு ஆக்சன் காட்சிகளும் உண்டு, சேசிங்கும் உண்டு 


டி வி ஃபிகர் ச்மோஷா பூரி சாரி சன்சா பூரி தான் வில்லி . நல்ல ஃபிகர், என்னைக்கேட்டா இந்த ஃபிகரை மெயின் ஹீரோயினா போட்டிருக்கலாம்


 காமெடியன் கற பேர்ல யோகி பாபு 4 சீன் வந்து 2 ஜோக் சொல்றாரு, சி செண்ட்டர் ஆடியன்ஸ் அவர் வரும்போது கை தட்னாங்க 


பழ கருப்பையா  , ராம்கி , சாயாசிங்  என நட்சத்திரப்பட்டாளம் உண்டு 


 படம் செம ஸ்பீடா போகுதுனு எல்லாரும் சொல்லனும்கற்துக்காக படம் பூரா நாயகன் நாயகி ஓடிட்டே இருக்காங்க 


இசை ஹிப்ஹோப் தமிழா , எடுபடலை பாட்ல்கள் . பின்னணி இசை பரவால்லை

 ஆக்சன் காட்சிகள் நல்லா பண்ணி இருக்காங்க  குறிப்பா ஹீரோ வில்லி  ஃபைட் சீன்   அருமை . அதை ஏதோ ஹாலிவுட் படத்துல இருந்து உருவி இருக்காங்கனு பட்சி சொல்லுது

சுந்தர் சி யின் டச் எங்கேயும் இல்லை, வில்லிக்கு ஒரு லோ கட் சீன் உண்டு ஆனா சைனீஷ் படங்களில் சீன் வரும்போது அலை அலையா போட்டு மறைக்கற மாதிரி சாதா க்ளிடவேஜ் சீனைக்கூட  மறைக்கும் உத்தியை வன்மையாகக்கண்டிக்கிறேன்

லண்டன் ,ம் இஸ்தான்ஃபுல் , பாகிஸ்தான்  அல்கோர்னியா  என ஃபாரீன் லொக்கேஷன்கள்  ஒளிப்பதிவு அருமை 

 ஆக்சன் ரசிகர்களுக்குப்பிடிக்கும்





 நச் வசனங்கள்

1  திருடறதுக்கு பயப்படறவன் பிச்சை எடுப்பான் ,பிச்சை எடுக்க கூச்சப்படறவன் திருடுவான்.இந்த இரண்டையும் செய்ய கூச்சப்படாதவன்தான் லஞ்சம் வாங்குவான் #action

2  ஹீரோயின் = ஒரு மாசத்துக்கு முன்ன நீங்க தூங்கறப்ப உங்களுக்குக்குடுத்த முத்தத்தோட கறையே இன்னும் போகல,அதுக்குள்ள அடுத்த முத்தமா?
கறை போகாத இடம் எதா இருக்கும்?
கண்டுபிடிங்க


3 கறுப்பா இருக்கற பசங்களுக்குத்தான் களையான பிகருங்க மாட்டுது #action


4 நெருப்பை அப்புறமா அணைக்கலாம்னு விட்டுடக்கூடாது #action


5  ஓடறவனுக்குப்பல வழி,ஆனா துரத்தறவனுக்கு ஒரே வழி தான் #action

6  என் கிட்ட வில் பவர் தவிர எந்த பவரும் இல்ல #action

7 உனக்கு அவ ஒருத்தி கிடைக்கலைனு கவலைப்படறே!எனக்கு ஒருத்தி கூட
கிடைக்கலைனு கவலை #action


8  உங்களுக்கு சிவப்பா இருக்கற பொண்ணுங்களை விட கறுப்பா/மாநிறமா இருக்கற பொண்ணுங்களைத்தான் பிடிக்கும்,சரியா?
எப்டி கரெக்டா சொல்றே?
கரெக்ட் பண்றவனுங்க பூரா இந்தபார்முலாவைத்தானடா யூஸ் பண்றீங்க? #action


9  வில்லன் பஞ்ச்−நான் 1000பேரை எதிர்த்து நின்னு இருக்கேன் ,ஆனா ஒரே ஒரு ஆளைக்கூட எதிர்பார்த்து நின்னதில்லை #action


 


தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  கேரளா ,கோட்டயம் தன்யா 63 ஆடியன்ஸ் சூழ புரட்டாசித்தளபதியின் "ஆக்சன்" #action


காமெடி சிச்சுவேஷன் இல்லாத படம் எடுக்கும்போதெல்லாம் சுந்தர்.சி சந்தேகத்துக்கு ஆளாகிறார்,இயக்கியது அவர்தானா?மண்டபத்துல யாராவது உதவி பண்ணாங்களா?னு. உதா அன்பே சிவம் #action


இன்ட்டர்வெல் பிளாக் இணைந்த கைகள் இடைவேளை சீன் போல #action


4  மோடி பார்முலாவை சுந்தர்.சி பாலோ பண்றாரு,வில்லன் முஸ்லீம்,பாகிஸ்தான் அடைக்கலம்குடுக்குது.ஹீரோ தனி ஆளா நாடு விட்டு நாடு போய் அங்கே இருக்கற 42658 அடியாட்களை அடிச்சுப்போட்டுட்டு வில்லனைப்பிடிக்கறாரு #action







சபாஷ் டைரக்டர்

1  குறைவான சம்பளம் தந்து 3 நாயகிகளை புக் பண்ணினது . முடிஞ்சவரை கிளாம்ர் காட்டவெச்சது


2  தயாரிப்பாளர் காசுலயே  ஓசி டூர் போனது


3  தன் மனைவி குஷ்பூ காங் கட்சியில் இருந்தாலும் அதன் கூட்டணிக்கட்சியான  திமுக வை நக்கல் பண்ணூவது போல் காட்சிகள் வைத்தது


 லாஜிக் மிஸ்டேக்ஸ்., திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1   பிரதமரை , முதல்வரைக்கொல்ல போடப்படும் பிளானை ஹீரோ முறியடிப்பது ஆல்ரெடி பல படங்கள்ல வந்தாச்சு , தவிர்க்கலாம், அல்லது திரைக்கதையில் ஜிம்மிக்ஸ் காட்டலாம், இப்படி  அரைச்ச மாவை வேகவேகமா அரைக்கக்கூடாது


2   ஓப்பனிங்க்ல  ஹீரோயின் கீழே கார் ஷெட் வந்து ஃபோனைஒ  எடுத்து  ரிட்டர்ன் போறப்ப அடியாட்கள் அவர் குரல் வளையை கட் பண்ணிடறாங்க . ஹீரோ எண்ட்ரி ஆகும்போது அவரால பேச முடியல 5 அடி தூரத்துல  ஹீரோ . தன் கைல இருக்கற செல் ஃபோனை ஹீரோ முதுகு  மேல எறிஞ்சிருந்தா திரும்ப வெச்சிருக்கலாமே?


3   டைட் செக்யூரிட்டி .4 அடுக்கு பாதுகாப்பு என்றால்  எப்படி இருக்கும்னு தயவு செஞ்சு இயக்குநர் உணரனும் முதல்ல 


4   பாகிஸ்தான் , இஸ்தான் ஃபுல் பேங்க்  இங்கே எல்லாம் ஒர்க் பண்ற ஆஃபீசர்கள் மடையர்களா நினைக்கக்கூடாது

5  போலீஸ்  ஆஃபீசர்ஸ் மிலிட்ரி ஆஃபீசர்ஸ் எல்லாருக்கும் ஹேக்கிங் பண்ற தொழில் வித்தை எல்லாம் தெரியாது









 விகடன் மார்க் ( யூகம்)   39

 குமுதம் ரேட்டிங் ( யூகம்)   3/5


 அட்ராசக்க பொதுக்குழு ரேங்க்   2.25 / 5 ( இதுவும் கழகத்தின் பொதுக்குழு மாதிரிதான், நான், என் சொந்த சம்சாரம்,மச்சினிங்க 3 , நங்கையா 2  அம்மா, அக்கா , அக்கா பசங்க , எதிர் வீட்டு ஆண்ட்டி,  பக் வீட் ஆண்ட்டி கொண்ட குழு)


 C.P.S  கமெண்ட்-ஆக்சன் − சுந்தர்.சி ,விஷால்,தமனா 3 பேரும் புரொடியூசர்"காசுல பாகிஸ்தான்,லண்டன் னு பல நாடுகளை சுத்திப்பார்க்கறதுக்காக எடுத்த"படம் போல,காமெடி சுத்தமா இல்ல,ஒரு தமிழ்நாட்டுக்கு ஒரு அட்லீ போதாதா?காதுல 10 முழம் பூ, விகடன் 39 ,ரேட்டிங் 2.25 / 5 #action