தமிழனோட பாரம்பரியமான பழக்க வழக்கத்துல முக்கியமான 1 பந்தயம் கட்டுவது.அஞ்சாங்கிளாஸ் படிக்கும்போதே அஞ்சனா டீச்சர் கிட்டே ஐ லவ் யூ சொல்றேன் என்ன பெட்? அப்டிம்பான். கடைசில அஞ்சனா கிட்டே சொல்லலைன்னாலும் அட்லீஸ்ட் அஞ்சனா தங்கச்சி நாலணா கிட்டேவாவது சொல்லிடுவான். அவன் லட்சியம் எப்படியாவது பந்தயத்துல ஜெயிக்கனும்.கிரிக்கெட் பெட்டிங் பேமஸ் ஆனது இப்டித்தான். சரி நம்ம கதையை விடுங்க . படத்தோட கதைக்கு வருவோம்.
பல வருசங்களுக்குப்பின் ஸ்கூல்மேட்ஸ் 4 பேரு ஒரு இடத்து;ல சந்திக்கறாங்க.பேய் இருக்கா? இல்லையா?னு ஒரு டாபிக் ஓடுது.3 பேரு பேய் இருக்குன்றாங்க. 1 ஆள் மட்டும் பேய் இல்லைங்கறாரு.பேய் இருக்குன்னு நிரூபிச்ட்டா அவரோட சொத்துல பாதி அதாவது 60 கோடி ரூபா .அடேங்கப்பா . இதுவல்லவோ பந்தயம்?அங்கங்கே 100 கோடி வசூல் ஆச்சுன்னு சும்மா அடிச்சு விட்டுட்டு இருக்கும் கால கட்டத்துல நிஜமாவே 60 கோடி அடிக்கப்போகுதுன்னா சும்மாவா?சரி டீல் ஓக்கே .சாலிட் ப்ரூஃபோட வர்றோம்னு மத்த 3 பேரும் கிளம்பறாங்க .
5 வெவ்வேற சூழல்ல வெவ்வேற பேய்களை சந்திக்கறாங்க .ஆனா வீடியோ எடுக்க முடியல.அவங்க அந்த சவால்ல ஜெயிச்சாங்களா? இல்லையா? என்பதே மிச்ச மீதிக்கதை.
பொதுவா பேய்க்கதைன்னா ஒரு பாழடைஞ்ச விடு அல்லது பங்களா ல ஒரு பேய் வாடகையே கொடுக்காம ரொம்ப நாளா குடி இருக்கும்.ஊர்ல 1008 வீடு காலியா இருந்தாலும் நம்ம ஹீரோ அல்லது ஹீரோயின் கரெக்ட்டா அங்கே போய் தங்குவாரு.பேயால ஏற்படும் பிரச்னைகள் தான் கதையா இருக்கும்.பிரேக் த ரூல்ஸ் என்பதுதான் இளைய தலைமுறையினரின் தாரக மந்திரம் ஆச்சே? இதுல திரைக்கதைல வித்தியாசம் காட்டி இருக்காங்க .
ஹீரோவா விஜய் டி வி புகழ் கோகுல்;இவர் மானாட மயிலாட ல கூட டான்ஸ் பண்ணி இருக்கார்.அம்புலி படத்தில் அம்புலியா மிரட்டி இருப்பார். மிகத்திறமையான ஆள். வெல்டன் . ஓப்பனிங் சாங்க் ல ஒரு டான்ஸ் நல்லா பண்ணி இருக்கார். ஆனா நடிப்பு , டயலாக் டெலிவரி எல்லாம் சுமார் தான்.
வில்லனா ஜிகிர்தண்டா வில்லன் கம் ஹீரோ சின்ஹா . கொஞ்ச நேரமே வந்தாலும் மிரட்டலான நடிப்பு .இன்னும் பல சாதனைகள் புரிவார் .
நண்பர்கள் 3 பேர்ல ஒரு பொண்ணு வருது . சுமார் ஃபிகர்தான்.
ஆனா முக்காடு போட்ட பூக்காடா சுடர்க்கொடி மாதிரி ஒரு பொண்ணு வருது . பேய் கேரக்டர். கண்கள் 2ம் சூப்பர் . என்னடா வர்ணிப்பு ரொம்ப கண்ணியமா இருக்கேன்னு யோசிக்காதீங்க . பர்தா போட்டிருப்பதால் கண் மட்டும் தான் காட்டுது.
எம் எஸ் பாஸ்கர் ஒரு கேரக்டர்ல அபாரமான நடிப்பை வழங்கி இருக்கார். பல பேய்ப்படங்களில் வருவது போல் கோரமான முகம் , ரத்தம் , அருவெறுப்பான காட்சிகள் எல்லாம் இல்லை . மிக நாகரீகமான படமாக்கம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 வில்லன் பந்தயப்பணமா எதுக்கு 60 கோடி வைக்கனும்? எதிர் முனைப்பந்தயம் சாதா யமஹா பைக் தானே? பணத்திமிர்ல வெச்சாக்கூட 10 லட்சம் அல்லது ஒரு கோடி போதுமே?
2 வில்லன் ஆல்ரெடி நாயகியிடம் லவ் பிரபோஸ் பண்ணி ஏமாந்தவன். அவன் கிட்டே நாயகி தனிமையில் போய் கடன் கேட்பது ஏன்? அவன் கை வைக்க மாட்டான்னு தெரியாதா? கூட தன் லவ்வரையோ , நண்பர்களையோ கூட்டிட்டுப்போக மாட்டாரா?
3 ஏடிஎம் ல 20,000 ரூபாய் எடுத்த ஆள் அப்பவே ஒரு விபத்துல இறக்கிறார். அந்த 20,000 ரூபாயை திருடும் பாஸ்கரைக்கொல்ல அல்லது மிரட்ட பேய் துடிப்பது ஏன்? நியாயமாப்பார்த்தா தன் சாவுக்குக்காரணமான வாகன டிரைவரைத்தானே பழி வாங்கனும் ?
4 க்ளைமாக்சில் வரும் காரில் டிவிடி பார்த்து சாகும் காட்சி யாவரும் நல கதையின் காப்பி. அதுல டிவி சீரியலில் ஓடும் காட்சி நிஜ வாழ்வில் வரும் . இதில் காரில் பார்க்கும் டிவிடி காட்சி நேரில் வருது . நடக்குது.அந்த கிளைக்கதையில் காரில் வருபவர்கள் எந்தத்தப்பும் செய்யவில்லை. தப்பு பண்ணாதவங்களுக்கு எதுக்கு தண்டனை ?
5 பர்தா போட்ட அந்த கில்மா மோகினிப்பேய் அந்த வழியாப்போகும் ஆம்பளைங்களைக்கண்டா விடாது அப்டினு வசனம் வருது . ஆனா காட்சில அந்த மோகினி எந்த ஆணையும் எதுவும் செய்யறதில்லை.அட்லீஸ்ட் 4 பேரையாவது ரேப் பண்ணாத்தானே ஒரு நம்பகத்தன்மை வரும் ? ( சீனுக்கு சீனும் ஆச்சு ) அந்த கிளைக்கதை பேசிக் இன்ஸ்டிங்க்ட் பாகம் 2ல் வரும் கதை.அந்த க்ளைமாக்ஸ்ல ஹீரோ வக்கீல் . வீல் சேரில் இருப்பார் .இதில் மோகினியின் கணவன் வீல் சேரில்.
6 எந்தக்காதலனாவது தன் காதலி 2 நண்பகளுடன் ஜப்பான் , டோக்கியோ அப்டி சுத்த அனுமதிப்பானா? கூட அவனும் போக மாட்டானா? அவன் என்ன வெட்டி முறிச்சுக்கிட்டா இருக்கான். காதலி பந்தயத்துல ஜெயிச்சா கிடைக்கும் ஷேர் 20 கோடி ஆச்சே?
7 வீடியோ ஆதாரம் பென் டிரைவ்ல இருக்குன்னு பாஸ்கி சொன்னதும் 5 லட்சத்துக்கு பேரம் பேசுவது அவர் 20 லட்சம் , 40 லட்சம் கேட்பது செயற்கை. அப்பவே பெண்டிரைவை அவர் கிட்டே வாங்கி எங்க கூடவே வாங்க . பார்ட்டி கிட்டே போட்டு காட்டிட்டு ஹாட் கேஷ் வாங்கிக்குங்கன்னா மேட்டர் ஓவர் . அவரும் ரிட்டையர்டு மிலிட்ரி தான் . சும்மா தான் இருக்காரு. வரமாட்டாரா?
அடிப்பாவி.ரூம்ல இருந்த அழகழகான பொண்ணுங்க போட்டோ எடுத்துட்டு பேய் போட்டோ ஒட்டி வெச்சிருக்கே?
2ம் 1 தான் # ஆ
மிஸ்! இப்போ பேய் பத்தி சொன்ன கருத்தை எங்கே கேட்டாலும் சொல்வீங்ளா?
யா.
அப்போ வாங்க.காபி ஷாப் போவோம்.
இடியட்.
ஒயின்ஷாப் னா ok?#ஆ
பொண்ணுங்களுக்கு விழிப்புணர்வு ஜாஸ்தி.ஒரு பெண் பேய் " என்னை வீடியோ எடுக்காதே!"ங்குது #ஆ
கடலை போடறவங்களை கடல் ல தள்ளுனாலும் திருந்த மாட்டாங்க # ஆ
டேய்.ஜப்பான் ல ஜட்டி போடாம சுத்திட்டு இருக்கியா?
நான் தேவல.பேன்ட் போட்டிருக்கேன்.அவ பாரு.வெறும் ஜட்டி மட்டும் தான் போட்டிருக்கா ! #,ஆ
நிழலைத்துரத்த்த்தான் முடியும்.எப்பவும் பிடிக்கவே முடியாது .பேய் னு 1 கிடையவே கிடையாது !,#ஆ
பேய் இருக்கறது உண்மை ன்னா கடவுள் இருப்பதும் உண்மைதானா?#ஆ
ஊர் ல பெரிய பெரிய தப்பு் பண்ணுனவன் எல்லாம் நிம்மதியா இருக்காங்க.ஒரே ஒரு சின்ன தப்பு தப்பு பன்றவன் தான் நிம்மதி இல்லாம இருப்பான் #ஆ
திருடி தான் சம்பாதிக்கனும்னா நாம படிச்ச படிப்பு எதுக்கு?எல்லாம் வீண் தானா?#ஆ
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
விஜய் டி வி புகழ் கோகுல் தான் ஹீரோ.அம்புலி புகழ் #ஆ
விறுவிறுப்பான திரைக்கதை ,திகில் கிளப்பும் பிஜிஎம் ,கச்சிதமான ஒளிப்பதிவு,எடிட்டிங் என பேய்ப்படத்துக்குண்டான அனைத்து + களுடன் ஆ இடைவேளை
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 படத்தின் திரைக்கதை மாறுபட்ட வடிவில் வழக்கமான பேய் படங்களில் இருந்து விலகி இருப்பது
2 வெவ்வேறு 5 கதைகளிலும் ஒரு திகிலை , பதை பதைப்பை உண்டாக்குவது
3 பாத்திரத்தேர்வு கன கச்சிதம் . பேய்ப்படங்களுக்கே உண்டான ஸ்பெஷல் ஒளிப்பதிவு , இசை , எடிட்டிங் எல்லாம் கன கச்சிதம்
சி பி கமெண்ட் - திகில் பட விரும்பிகளுக்கு பிடித்தமான ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான மாறுபட்ட கோஸ்ட் த்ரில்லர் . பார்க்கலாம்.சங்கராபுரம் பர்கத் தியேட்டரில் பார்த்தேன். 3 டி எஃபக்ட் இல்லை. அதில் இனும் நல்லாருக்கும் என நினைக்கிரேன்
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 43
குமுதம் ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே
ரேட்டிங் = 3 / 5