அமைதிப்படை அமாவாசை மாதிரி ஆர்வக்கோளாறு அதிகம் உள்ள அடியாள் தான் ஹீரோ.. ஊருக்குள்ள மக்கள் தன்னை மதிக்கனும்கறதுக்காக வாலண்ட்ரியா ஒரு அரசியல்வாதி கிட்டே எடுபுடியா சேர்ந்துக்கறாரு.. ஆனா ஓவரா அலப்பரை பண்ராரு.. அது பிடிக்காம அந்த அரசியல்வாதியோட மத்த எடுபுடிங்க எல்லாம் அவனை கழட்டி விட சமயம் பார்த்துட்டு இருக்காங்க.. ஒரு கேவலமான சந்தர்ப்பத்துல அந்த அரசியல்வாதிக்கும், ஹீரோவுக்கும் அடி தடி அளவு தகராறு முத்திடுது.
பொதுவா அழகிரி அண்ணன் கூட ஃபைட் போட்டு வெளீல வந்தா ஸ்டாலின் அண்ணன் கூட ஐக்கியம் ஆகிடனும்.. இதுதான் தமிழனின் பாரம்பரியம்.. அதைத்தான் ஹீரோவும் பண்றாரு.. அவருக்கு ஆப்போசிட் ஆள் கூட சேர்ந்து ஊருக்குள்ள அராஜகம் பண்ணிட்டு இருக்காரு.. ஒரு கட்டத்துல அழகிரியும், ஸ்டாலினும் ஒண்ணு சேர்ந்துடறாங்க.. ஹீரோவை போட்டுத்தள்ளனும்னு பிளான் பண்றாங்க..
இப்படியே போனா இது முழுக்க முழுக்க அரசியல் கதை ஆகிடுமே.. கதைல கிளாமர் வேணாமா? அதனால ஸ்கூல் படிக்குதா? பூக்கடை வெச்சிருக்கா?ன்னு டைரக்டருக்கே குழப்பமான கேரக்டர்ல ஹீரோயின்.. முதல் சீன்ல பாப்பா ஸ்கூல்ல இருக்கு.. அடுத்த சீன்ல பூக்கடை வெச்சிருக்கு.. பார் டைம் ஜாப் மாதிரி காட்டலை. ஃபுல் டைம் ஜாப் மாதிரி தான் காட்டறாரு..
ஊர்ல அழகான, ஆரோக்யமான 1008 பசங்க இருந்தாலும் , இந்த சினிமா ஹீரோயின்கள் மட்டும் கேவலமான ரவுடிகளையும், பொறுக்கிகளையும் தான் லவ்வுவாங்க.. பவுனு பவுனு தான் ஹீரோயின் ரோகினி மாதிரி பாப்பா சாட்சாத் நெஞ்சுலயே ஹீரோவோட கேவலமான பேரை பச்சை குத்தி வெச்சிருக்கு.. ஆனாலும் வெளீல அதை காட்டலை ( ஐ மீன் அவ வெச்சிருந்த ஆசையை )
க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்காக அந்த சீனை வெச்சிருக்காரு போல. ஹீரோ ஒரு முரடனா? ஒரு டைம் வயக்காட்ல பாப்பாவை ஓரம் கட்டி என்னை லவ் பண்றியா ? இல்லையா? ந்னு சல்மான் கான் ஐஸ்வர்யா ராயை மிட் நைட்ல ஹோட்டல் ரூம் வாசல்ல டார்ச்சர் பண்ணுன மாதிரி தண்ணி தொட்டிக்குள்ள முக்கி முக்கி எடுக்கறான்..
அந்த ஹீரோயின் லூசுப்பயலுக்கு பிறந்த கேனக்கிறுக்கி போல.. இல்லை இல்லை லவ் பண்ணலைன்னு சொல்லி செத்தே போயிடுது.. ( அப்புறம் என்ன இதுக்கோசரம் பச்சை குத்தி இருக்கு?) பாப்பா வுக்கு ஒரு தங்கச்சி 10 வயசு.. அது பெருசாகி பாப்பா மாதிரியே ஆகுது ( டபுள் ஆக்ட்)
12 வருஷம் கழிச்சும் ஹீரோ அப்படியே இருக்கான்.. தங்கச்சி ஹீரோயின் கொலைக்கு பழி வாங்க ஹீரோவை கல்யாணம் கட்டி மேட்டர் எல்லாம் முடிஞ்ச பிறகு கொலை பண்ணிடறா..... ( கொலை பண்றவ மேட்டர் நடக்கறதுக்கு முன்னேயே கொலை பண்ணக்கூடாதா? ஹி ஹி )
ஹீரோவா நடிச்சவர் நடிப்பு டாப் ரகம்.. புது முகம் மாதிரியே தெரியலை.. செம நடிப்பு.. ஆனா திரைக்கதையின் குளறுபடிகளால் பல இடங்களீல் எரிச்சல்.. கவனிக்கப்பட வேண்டிய தமிழ் நடிகர்..
ஹீரோயின் சுமாரிலும் சுமார்.. தயாரிப்பாளருக்கு வேண்டியவங்க பொண்ணு போல .. ம் ம்
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. ஹீரோயின் எக்சாம் செண்ட்டர்ல எக்சாம் எழுதும்போது ஹீரோ அவளுக்கு ஹெல்ப் பண்ண மக் செட்டுடன் வாசலில் நின்று பப்ளீக்காக பதிலை மைக்கில் சொல்வது நம்ப முடியாத சீன் என்றாலும் ரசிக்க வைத்தது...
2. பெரும்பாலான நடிகர்கள் கேமராவுக்குப்புதுசு. அனைவரையும் நன்றாக வேலை வாங்கியமைக்கு ஒரு ஷொட்டு
3. ஊரு திரண்டுருச்சு ஒத்துமையா ஆயிடுச்சுநாடு திரண்டுருச்சு கட்டா கட்டழகி - அங்கே கும்மாங்குத்துப்பாட்டு கிராமிய மணம்..கருவாபயலே ....
மீசை இல்லை சூரப்புலி மாட்டிகிச்சு மாட்டிகிச்சுஆசைகளை நெஞ்சுக்குள்ளே பூட்டிகிச்சு பூட்டிகிச்சு ஓக்கே ரகம்.. நான் உன்னைப்பார்தேன்
நீ என்னைப் பார்த்தே.. மெலோடி, தீயே தீயே என்னை தீண்டிவிட்டு போனாய்
வலியே வலியே என்னை கொன்றுவிட்டு போனாய் சோகப்பாட்டு,சிரிக்கிறாளே சிரிக்கிறாளே - என்னைகிறுக்கனாக்கி சிரிக்கிறாளே பாட்டு சோக தெம்மாங்கு,நான் வளர்த்த பச்சை ... ஆ
இன்னிக்கு பாசமாறு ...... ஒப்பாரிப்பாட்டு என எல்லாப்பாடல்களூம் கவனிக்க வைத்தது./. வெல்டன் இசை அமைப்பாளர்
4. ஹீரோவின் அம்மாவாக வருபவர் நடிப்பு செம.. ஹீரோயினும் ( தேவதை) ஓக்கே ரகம் தான்
இயக்குநருக்கு சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்
1. ஹீரோயின் ஸ்கூல் ஸ்டூடண்ட்டா? பூக்காரியா? பார்ட் டைமில் பூக்காரியா? ஒய் குழப்பிங்க்?
2. அவ்வளவு பெரிய அரசியல் தலைவரிடம் ஓப்பனிங்க்லயே அவ்வளவு உதார் விடுவது நம்பவே முடியல..
3. ஹீரோ தனுஷ்க்கு தம்பி மாதிரி இருந்துட்டு காலேஜ் கேம்பஸ்ல போய் 1900 ஸ்டூடண்ட்ஸ் கூடி நின்னு பார்க்க 89 பேரை போட்டு விளாசறாரே? போட்டு கும்மிட மாட்டாங்க?
4. ஹீரோவை அடிச்சவனுக்கு அவனை அடையாளம் தெரியாதா? ஹீரோவை உயிருடன் மறுபடி பார்க்கறவன் ஹீரோ உயிரோடயா இருக்கான்னு ஒரு அதிர்ச்சியை காட்டவே இல்லையே?
5. ஹீரோ கூட அந்த சாமியார் ஜஸ்ட் 2 மாசமாத்தான் கூட இருக்கார்.. ஆனா ஹீரோயின் ஒரு சீன்ல “ நீ எத்தனை வருசமா கூடவே இருக்கே? நீ சொல்லக்கூடாதா?ன்னு கேட்கறார்.
6. ஹீரோயின் தங்கை கிளைமாக்சில் ஹீரோ ஹீரோயினை கொலை செய்யும்போது ஆள் அங்கே இல்லை . ஆனா ஒரு சீன்ல என் கண்ணெதிரே என் அக்காவை கொலை செஞ்சேன்னு வசனம் வருதே?
7. ஹீரோவை கொலை பண்றவன் அடிச்சுப்போட்டு வாய்க்கா மேட்டுல வீசிட்டு போயிடனும்,. எதுக்கு மெனக்கெட்டு லார்வா கூட்டுப்புழு பருவம் மாதிரி சாக்கு மூட்டைல அடைச்சு ஆல மரத்துல தொங்க விடனும்..?
8.ஹீரோ பெரிய தியாகி கிடையாது. ரவுடி, பொறுக்கி.. ஆனா அவன் சாகற சீன்ல ஆடியன்ஸ் சோகமா இருக்கனும், ஃபீல் பண்ணனும்னு இயக்குநர் எதிர் பார்ப்பது ஏன்?
9. ரஜினியே நடிச்சாலும் சோக சீன், அழற சீன் எல்லாம் இந்தக்காலத்துல 2 நிமிஷம் தான் வைக்கனும்.. நீங்க 18 நிமிஷம் வெச்சிருக்கீங்களே? ஏன்?
10. ஹீரோயின் ஏன் தெளிவான முடிவெடுக்காம நயன் தாரா மாதிரி ஆசிலேட்டட் மைண்டாவே இருக்காங்க? ஒரு சீன்ல வெட்கப்பார்வை, அடுத்த சீன்ல கோபப்பார்வை..
11. திரைக்கதைல ஒண்ணா ஒரே சீரா கதை போகனும், அல்லது ஃபிளாஸ்பேக்ல கதை சொல்லனும், அதை விட்டுட்டு 30 நிமிஷம் ஃபிளாஸ்பேக், 10 நிமிஷம் கரண்ட் டைம்னா ஆர்டினரி ஆடியன்ஸ் குழம்ப மாட்டாங்களா?
12. ஹீரோ தன் அப்பாவின் மரணத்துக்கு சரியான டைமில் வர்லை. ஆனா தியேட்டர்ல படம் பார்த்தவங்கள்ல பாதிப்பேரு ( ஐ மீன் 4 பேர் )அப்பாவை கொலை செஞ்சதே ஹீரோதான்னு தப்பா நினைக்கறாங்க.. எடிட்டிங்க் ரொம்ப மோசம்
மனதில் நின்ற வசனங்கள்
..1. அண்ணே, கட்சில தானே இடம் கேட்டேன். கவ்ர்மெண்ட் வேலையா கேட்டேன். ?
2. இங்கே எல்லாம் பூக்கடை வெக்கக்கூடாதும்மா.. ஆர் சி புக் இருக்கா? லைசன்ஸ் இருக்கா?.. டேய்.. போலீஸ கூப்பிடு. மிலிட்ரியை கூப்பிடு
3. எனக்கு சின்ன வீடு இருக்குன்னு ஊருக்கெல்லாம் மைக் போட்டுச்சொல்லுடா ங்க்கொய்யால.
4. காக்காய்க்கு சோறு கம்மியா வெச்சியா? இந்தக்கத்து கத்துது?
டேய். அவர் உன் அப்பாடா..
5. லேடி - யார் நீ?
கர்த்தர் அழைத்தார்.. காற்றாய் வந்தேன்.
6. செல்லம்.. நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னை கை விடுவதும் இல்லை
. 7. நீ பத்தாங்கிளாஸ் படிக்கறப்ப ரோஸி குளிக்கறதை எட்டிப்பார்த்தவன் தானே?
8. காவல் நிலையம் மாடில இருந்து மது அருந்தினான் பச்சை என வரலாறு பேசட்டும்.
9. புள்ள குடுக்கச்சொன்னா, ஆண்டவன் 12 கிலோ தொல்லையை கொடுத்துட்டான் போல.
10. நாங்கள் அயராமல். சளைக்காமல் , உழைக்காமல் போராடுவோம்.
11. யோவ்.. வக்கீல் இனி நீ தான் எனக்கு அரசியல் சட்ட ஆலோசகர். இனி கோர்ட்டுக்கெல்லாம் போக வேணாம். என் கூட வந்துடு..
12. கட்சிக்கு விசுவாசமா இருக்கமோ இல்லையோ. அண்ணனுக்கு விசுவாசமா இருக்கனும்..
13. என்னால நம்பவே முடியலை நேத்து வரைக்கும் எப்படி இருந்த நீ இன்னைக்கு திடீர்னு மாறீட்டியே?
புத்தன் கூட போதி மரத்தடிக்கு வந்த பின் தான் ஞானம் பெற்றான்
14. இப்போ தங்கம் என்ன விலை?
18000
அப்போ இத்தனை நாளா நான் அடமானம் வெச்ச நகைக்கு வட்டி 900 ரூபா குடு.
15. இந்த சொத்து தாத்தா சம்பாதிச்சது.,. எனக்கு அனுபவிக்க மட்டும் தான் உரிமை இருக்கு. அழிக்க இல்லை.
16. பாறை மாதிரி பார்க்கறதுக்கு இருந்தாலும் ஊத்துத்தண்ணி போல அப்பப்ப அன்பு சுரக்குது போல.
17. நாயைக்காசு குடுத்து வாங்கறது எதுக்கு? நம்ம கிட்டே வாலாட்டத்தானே?
18. தலைவரே.. அவனை போட்ரலாமா?
19.
’எல்லோரும் மகிழ்ச்சியாக வாழவே ஆசைப்படுறாங்க நான் இப்போ அதைத்தானே செஞ்சுட்டிருக்கிறேன்?.
20. நான் மட்டும் கொஞ்சம் முந்தி பிறந்திருந்தா, வரலாறுங்கிற பேரை மாத்தி பச்சைன்னு வச்சிருப்பாங்கடே
வேணாம்யா.. புதுசா கல்யாணம் ஆனவன், இன்னைக்கு ஒரு நாள் அவன் மனைவியை தொட்டுக்கட்டும் விடிஞ்சதும் போட்ருங்க..
எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 38
எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்
சி.பி கமெண்ட் - வித்தியாசமான படங்களை ரசிக்கும் ஆண்கள் மட்டும் பார்க்கலாம்.. ஓவர் வன்முறை என்பதால் பெண்கள் தவிர்க்கலாம்..
ஈரோடு ஸ்டாரில் பார்த்தேன்