ஹீரோ ஒரு டாக்டர் ( அதென்னமோ தெரியல , இளைய தளபதி , புரட்சித்தளபதி இப்டி எல்லாரும் சமீப படத்துல டாக்டர் ரோலா பண்ணீட்டிருக்காங்க, ஆனா ஹீரோயின் மட்டும் நர்ஸ் ரோல் கிடையாது )
அவருக்கு ஒரு சம்சாரம் , 2 பேரும் அந்நியோன்யமா இருக்கறது நமக்குத்தெரியன்னும்கறதுக்காகவோ , அல்லது இதுதான் சாக்கு ,அனிரூத் டேஸ்ட் பார்த்ததை நாமும் பார்க்கனும் என்ற போட்டி மனப்பான்மையாலோ தெரில 8 லிப் கிஸ் சீன் எல்லாம் வருது, பேய்ப்படத்துல ரொமாண்டிக் சீன் அதிகம் வந்த படம் இதுவாத்தான் இருக்கும்
டாக்டர் வீட்டுக்குப்பக்கத்து வீட்ல ஒரு பொண்ணு பேய்க்கதைகள் எல்லாம் படிச்ட்டு எப்போ பாரு பேய் நினைவாவே இருக்கு , அந்தப்பொண்ணை குணப்படுத்துவதற்காக பொய்யா ஒரு பேய் ஓட்டும் படலம் நடத்தறாங்க.
அங்கே தான் ஒரு ட்விஸ்ட்.. அதை இங்கே சொல்லக்கூடாது, திரையில் காண்க இடை வேளைக்குப்பின் பேய்க்கு வழக்கம் போல் ஒரு ஃபிளாஸ்பேக் சீன், அப்புறம் ஒரு கிளைமாக்ஸ் சீன் ( இங்கே சீன் என்பதெல்லாம் சாதா சீன் என கொள்க )
ஹீரோவா சித்தார்த் . யாரோ இவர் கிட்டே நீங்க கமல் மாதிரி பர்ஃபார்மென்ஸ் பண்றீங்கனு ஒரு பப்ஸ் க்கு ஆசைப்பட்டு ஐஸ் வெச்சிருப்பாங்க போல , திரைக்கதைக்கு சம்பந்தமே இல்லாம ஓவர் ரொமான்ஸ் சீன்கள் , லிப் டூ லிப் கிஸ் சீன்கள் எல்லாம் தயக்கமே இல்லாம அடிச்சு கிளப்பறார், ஆண்ட்ரியாவை தடவுனது , உருட்டுனது போக அங்கங்கே டைம் கிடைக்கும்போது நடிக்கவும் செய்யறார் . ஓக்கே ரகமான நடிப்பு
ஹீரோயினா ஆண்ட்ரியா ,எதுக்கும் /எல்லாத்துக்கும் துணிஞ்ச கட்டை . வழக்கமா தமிழ் சினிமா நாயகிகள் லிப் கிஸ் சீன்களில் ஒரு தயக்கம் , ஒரு நளினம் எல்லாம் காட்டுவாங்க ( உதா - சத்யா கமல் -அமலா சேலைத்திரை மறைத்த இதழ் ஒத்தடம்) ஆனா இங்க்லீஷ் பட ரேஞ்ச்ல அசால்ட்டா ஏகப்பட்ட கிஸ் சீன்கள், எல்லாமே லிப் டூ லிப் தான். மாடு இளைச்சாலும் கொம்பு இளைக்காது பழமொழியை பொய்ப்பிக்கும் விதமா ரொம்ப இளைச்சுப்போய் இருக்கு ஆண்ட்ரியா
இன்னொரு நாயகி நம்ம பிக் பாஸ் ஜூலி மாதிரி ஒரு மாதிரி கஷ்டப்பட்டு ஓவர் ஆக்டிங் எல்லாம் பண்ணுது . பாஸ் மார்க்
அதுல் குல்கர்னி எல்லாம் கோயில் யானைங்க , அவருக்கு பாப்கார்ன் தஃந்தா எப்படி? பாவம்
படத்தில் மருந்துக்குக்கூட காமெடி இல்லை என்பது பின்னடைவே
ஒளிப்பதிவு நல்லாருக்கு , டூயட் காட்சிகள் , பாடல்கள் இல்லை என்பது குறையா தெரியல
கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ் எடுபடலை . பின்னணி இசை ஓக்கே ரகம் , சில காட்சிகளீல் மிரட்டிட்டாங்க
நச் வசனங்கள்
1 சரியான கேள்வி கேட்டாதான் சரியான பதில் கிடைக்கும் #Aval
2 ஒரு பெண்குழந்தையை நரபலி தந்தாதான் எனக்கு ஆண் குழந்தை பிறக்கும்னா அப்டிப்பட்ட குழந்தையே தேவை இல்ல #Aval
3 உட்கார்ந்த இடத்துல சாவை எதிர்கொள்வதை விட வெளில போய் பிரச்சனையை எதிர் கொள்ளலாம் #Aval
சபாஷ் டைரக்டர்
1 ஹீரோ - ஹீரோயின் ரொமான்ஸ் காட்சிகள்
2 கோரமான கொடூரமான ரத்தம் சிந்தும் மாமூல் காட்சிகள் இல்லாதது ஆறுதல்
3 வழக்கமாக பொண்ணுங்களையே பேயாகப்பார்த்து இதில் ஆண் பேய் காட்டியது ஓக்கே ரகம்
4 அந்த சைனீஷ் ஃபேமிலி ஃபிளாஸ்பேக் காட்சி கனகச்சிதம்
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 மலை உச்சியில் அந்த ஜெனி நிக்கும்போது அதை ஃபாலோ பண்ணிட்டுப்போன பேபி உருண்டு புரண்டு பள்ளத்தில் விழும் காட்சி ப்டு செயற்கை , பிடிமானத்துக்கு அந்த பாப்பா ஏதோ ஒரு புல் கற்றையைப்பிடிப்பது எல்லாம் காமெடி
2 புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் , பக்கத்து வீட்டு பெண் நெருக்கம் என தேவை இல்லாமல் கதையின் போக்கை மாற்றி யூகிக்க வைக்கும் ஏமாற்று திரைக்கதை உத்தி எடுபடலை
3 எப்;போ எல்;லாம் தம் அடிக்கனும்னு தோணுதோ அப்ப எல்லாம் இந்த மலைப்பிரதேசத்துக்கு வந்துடுவேன் என ஒரு இடத்தில் ஜெனி டயலாக் பேசுது, ஆனா அடிக்கடி பாத்ரூமில் தம் அடிக்குது . முரண் ( ராம்தாஸ் இந்தப்படத்தை எல்லாம் கண்டிக்க மாட்டார் , ரஜினி படம்னா போதும் )
4 அந்த ஃபிளாஸ்பேக் கதையில் வில்லன் தன் மனைவிக்கு தெரியாமலேயே நரபலி கொடுக்க வாய்ப்பு இருந்தும் ஏன் செய்யலை?
5 இந்தபட கதையின் மையக்கரு ஆண் குழந்தை பிறக்கனும்னா பெண் குழந்தையை நரபலி தரனும் என்ற மூட நம்பிக்கை தப்பு என்பதே , ஆனா அந்த லேடி 8 மாச கர்ப்பிணியா இருக்கும்போது ஆல்ரெடி அது ஆணாவோ , பெண்ணாவோ ஃபார்ம் ஆகி இருக்கும், அதுக்குப்பின் நரபலி கொடுத்தால் எப்படி பால் மாறும் ?
சி.பி கமெண்ட்- அவள் − ஏ சென்ட்டர் ரசிகர்களுக்கான (ஆண்)பேய்ப்படம். முன் பாதி "டெட்" ஸ்லோ.கர்ப்பிணிகள் தவிர்க்கவும்.விகடன் 42 ரேட்டிங் 3 / 5 #Aval