
தினமலர் விமர்சனம்
"ஒரு கல்லூரியின் கதை", "மாத்தியோசி" என இரண்டு படங்களை இயக்கி பந்தா ஓ... சாரி நந்தா பெரியசாமி, மாத்தி யோசிக்காமல் எடுத்திருக்கும் மற்றும் ஒரு படம் தான் "அழகன் அழகி!"
உங்கள் கையெழுத்தை ஆட்டோகிராப்பாக மாற்றுங்கள் எனும் தாரக மந்திரத்துடன் ஊரில் ஆடு மாடு மேய்ப்பவரில் தொடங்கி அனைத்து தரப்பினரையும் ஆக்டர் (அதாங்க நடிகர்....) ஆக்கிவிடும் உத்தேசத்தில் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்கி இருப்பார் போலும் நந்தா பெரியசாமி! ஒரு திருட்டுப்பய கூட்டம், ஒரு தனியார் தொலைக்காட்சியின் பெயரில் ஊர் ஊராக போய் இளம் திறமை சாலிகளை கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று பண்ணும் கலாட்டா தான் "அழகன் அழகி" கதை மொத்தமும்!
புதுமுகம் ஜாக், ஆருஷி, குண்டு ஆர்த்தி, ரவி மரியா, ஏ.வெங்கடேஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கிறது, வருகிறது, போகிறது! நடிப்பது தான் கம்மி. ஹீ...ஹீ!!

கண்ணனின் இசையில் ஏழு பாடல்கள். (அதில் ஒன்றுக்கு கஸ்தூரியின் ஆட்டம் சூப்பர்ப்!) பாடல்கள் தான் படத்தின் ஆறுதல்! இந்தப்படத்தின் படக்காட்சிகளுக்கு சிகரெட் பிடிக்க போகிறவர்கள், பாடல் காட்சிகளுக்கு சீட்டில் கட்டிப் போட்ட மாதிரி அமர்ந்திருக்கின்றனர் என்றால் பாருங்களேன்...! கண்ணனின் இசை மாதிரியே, பிரபு தயாளின் ஒளிப்பதிவும் ப்ளஸ்!
அழகன் அழகி படத்தின் இண்டர்வெல்லிலேயே முதலில் இப்படத்தின் இயக்குனரது கையெழுத்து ஆட்டோகிராப் ஆகட்டும், அப்புறம் நம்ம கையெழுத்து, தலையெழுத்தை பார்க்கலாம்... என எஸ் ஆகும் கூட்டம் எக்கச்சக்கம்!
அதையும் மீறி படம் பார்க்கும் ரசிகர்கள் "அழகன் அழகி" - "அவதி அவதி" என புலம்புவது உங்களுக்கும் கேட்டிருக்குமே...?!
மொத்தத்தில், "அழகன் அழகி" - "அவஸ்தை அவதி!!"
thanx - dinamalar
