அல்போன்சா காதல் குழப்பத்தில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல, 3வது முறையாகும். இதில் 2 முறை அவர் தற்கொலைக்கு முயன்று மீண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி - சூசயிடு அட்டெம்ப்ட்டா? பிரெட்டெண்ட் டு பி சூசயிடு அட்டெம்ப்ட்டா? நல்லா விசாரிங்கப்பா. ( தற்கொலை முயற்சியா? தற்கொலை முயற்சி செய்வது போல் நடிப்பி பயிற்சியா? - நன்றி மேஜர் சுந்தர்ராஜன்)
அன்னக்கிளி செல்வராஜ் மூலம் கதாநாயகியாகத்தான் தமிழ்
சினிமாவுக்குள் வந்தார் அல்போன்சா. இவரது தந்தை பெயர் ஆண்டனி. இவர் ஒரு டான்சர். தாயார் பெயர் ஓமனா. இரண்டு அண்ணன்கள், ராபர்ட் என்கிற தம்பி அல்போன்சாவுக்கு உண்டு. வீட்டில் இவர் ஒரே பெண் என்பதால் செல்லம் ஜாஸ்தி. கேரளாவிலிருந்து வந்தவர் என்பதால் தமிழ் சினிமாவில் பட்டுக்கம்பளம் போட்டுத்தான் வரவேற்றார்கள். ஆனால் ரசிகர்கள் அல்போன்சாவை கதாநாயகியாக ரசிக்கவில்லை. அதையும் தாண்டி அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கவர்ச்சிதான் மேலோங்கி தெரிந்தது. இதனால் அவர் கவர்ச்சி நாயகியாக மாறினார்.
சி.பி - வர்ற படங்களில் எல்லாம் மேல் அங்கி விலகியே இருந்ததால் கவர்ச்சி மேலோங்கி இருந்தது ஹி ஹி
பாட்ஷா படத்தில் அவர் பாடிய கவர்ச்சிகரமான பாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரும் பிரேக்காகவும் அமைந்தது. அதன் பின்னர் அல்போன்சாவின் கவர்ச்சி நடனத்துக்கு கூட்டம் சேர்ந்தது, அவரும் பிசியாக ஆடிக் கொண்டிருந்தார்.
அப்போதுதான் அவருக்கும் சாகர் என்ற நடிகருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் இந்த காதல் படு வேகமாக காலியாகிப் போனது. சாகர் இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு ஒதுங்கினார். ஆனால் இந்த நிராகரிப்பால் அதிர்ந்தும், ஏமாந்தும் போன அல்போன்சா, தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.
இந்த நேரத்தில்தான் அல்போன்சாவின் தம்பி ராபர்ட் தலையெடுத்தார், டான்ஸ் மாஸ்டரானார். அல்போன்சாவும் மெதுவாக கிரேஸ் குறைந்து படங்களிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். நோபள் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். குழந்தையும் பிறந்தது.
இந்தத் திருமண வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, நோபளுக்கும், அவருக்கும் பிரச்சினை வெடித்தது. அதற்குக் காரணம், வினோத்குமார் மீது அல்போன்சாவின் பார்வை படர்ந்ததே என்கிறார்கள். வினோத்குமாருடன் அல்போன்சா நெருங்கிப் பழக ஆரம்பித்ததால் வெகுண்ட நோபள், தனது மனைவியையும், மகளையும் விட்டு விட்டு துபாய் போய் விட்டார். அது அல்போன்சாவுக்கு வசதியாகிப் போய் விட்டது.
விருகம்பாக்கத்தில் பிளாட்டை வாடகைக்குப் பிடித்து அங்கு வினோத்துடன் குடும்பமே நடத்த ஆரம்பித்து விட்டார். அல்போன்சாவுடன் இணைந்தது முதல் தனது குடும்பத்தினரைக் கூட மறந்து விட்டார் வினோத்குமார். இப்படியாக இருவரும் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.
இந்த செயலை இருவரது வீட்டாரும் ஆரம்பத்திலேயே கண்டித்து சரி செய்திருந்தால் ஒரு உயிர் பறி போயிருக்காது. ஆனால் அதைச் செய்யாமல் ஆளாளுக்கு அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் அல்போன்சாவும், வினோத்குமாரும் தங்கள் இஷ்டத்திற்கு நடந்து கொண்டு இப்படி ஒரு உயிரைப் பறி கொடுக்க நேரிட்டுள்ளது.
தற்போது போலீஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார் அல்போன்சா. இதில் என்ன விசேஷம் என்றால், முதல் முறையாக அவர் தற்கொலைக்கு முயன்று எந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரோ, அங்கேயேதான் தற்போதும் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
சி.பி - அந்த ஹாஸ்பிடல்தான் அவரோட ரெகுலர் சூசயிடு அட்டெம்ப்ட் ட்ரீட்மெண்ட் ஹாஸ்பிடலாம் ஹி ஹி
"என் மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை; நடிகை அல்போன்சா குடும்பத்தினர், திட்டமிட்டு கொலை செய்துள்ளனர், என, வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறினார். அல்போன்சா உள்ளிட்ட மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்க, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
நடிகை அல்போன்சா வீட்டில், அவரது காதலன் வினோத்குமார், மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிக அளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நடிகை அல்போன்சா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாள் சிகிச்சை முடிந்து, நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். வினோத்குமாரின் மரணம் குறித்து, பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில், காதலன் வினோத்குமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என, அவரது தந்தை பாண்டியன், போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து பாண்டியன் - என் மூத்த மகன் வினோத்குமார், சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். என் மைத்துனர் பாலு வீட்டில் தங்கி, சினிமா தொடர்பான பயிற்சிக்கு சென்று வந்தார். கவசம் என்ற படத்தில், கதாநாயகனாக நடித்தார். படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்து, திரையிடத் தயாராகவுள்ளது.
என் மகன் நடனத் திறமையை வளர்த்துக் கொள்ள, நடன இயக்குனர் ராபர்ட் என்பவரிடம் பயிற்சிக்கு சேர்ந்தார். நான்கு மாதமாக, அவரது வீட்டிலேயே தங்கினார். என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் பணம் பெற்று, ராபர்ட்டிடம் கொடுத்தார். ராபர்ட் அவரது நண்பருடன் சேர்ந்து, சங்கு என்ற படம் எடுப்பதற்கான தயாரிப்பு செலவுக்கு, 50 லட்சம் ரூபாயை என் மகனிடம் கேட்டுள்ளனர். என் மகன் தர மறுத்து விட்டான். இது பற்றி என்னிடமும் கூறினான்.
சி.பி - கோடம்பாக்க செண்ட்டிமெண்ட் தெரியாதா? சங்கு-ன்னு யாராவது டைட்டில் வைப்பாங்களா? அதான் சங்கு ஊதிடுச்சு .. அவ்வ்வ்
அந்த படத்தில், ஒரு கதாநாயகனாக உன்னை போடுகிறேன் என கேட்டும் பணம் தராத நிலையில் தான், எதிர் வீட்டில் குடியிருந்த அவரது அக்கா, நடிகை அல்போன்சாவை மகனுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர் மூலமாக பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தான், கடந்த 4ம் தேதி, நள்ளிரவு திடீரென, மகனின் மொபைல் போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய அல்போன்சா, "உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார் என கூறி வைத்து விட்டார். நாங்கள் பதறியடித்து அங்கு சென்ற போது, கார் "பார்க்கிங்கில், தரையில் போட்டு வைத்திருந்தனர். அவனது மூக்கு, வாய் பகுதியிலும் ரத்தம் இருந்தது.
அவனது அறைக்கு சென்று பார்த்த போது, சுவரில் ஆங்காங்கே ரத்தம் படிந்திருந்தது. சம்பவத்தன்று, இரவு 7.30 மணிக்கு என்னிடம் பேசினான். தான் நன்றாக இருப்பதாகவும், மாத்திரைகளை நேரம் தவறாமல் சாப்பிடுமாறு, எனக்கு அறிவுரையும் கூறினான். அடுத்த இரண்டு, மூன்று மணி நேரத்தில், என் மகன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை.
"பணம் தர மறுத்ததால், என் மகனை, அல்போன்சா, அவரது தம்பி ராபர்ட், அவரது அம்மா மூவரும் சேர்ந்து, திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விருகம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், கமிஷனரிடம் புகார் செய்தேன். என் மகன் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓய மாட்டேன்.