Showing posts with label அறம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அறம் - சினிமா விமர்சனம். Show all posts

Saturday, November 11, 2017

அறம் - சினிமா விமர்சனம் #aramm

Image result for aram tamil movie

நாட்ல நடக்கற பரபரப்பான உண்மைச்சம்பவத்தை வெற்றிகரமான திரைப்படமா தருவதில் விற்பன்னர்கள்  ஆர் கே செல்வமணி ., ஏ ஆர் முருகதாஸ் , கார் வண்ணன் , ஆபாவாணன் , அவர்கள் லிஸ்ட்ல இப்போ கோபி நாயினாரும் சேர்ந்துட்டார் , பிரமாதமான கமர்ஷியல் , சோசியல் அவார்னெஸ் டேலண்ட்டட் டைரக்டர்.  எ வார்ம் வெல்கம் சார்


 இந்தப்படத்தோட ட்ரெய்லர் பார்த்தப்ப இது ஒரு கிராமத்தின் தண்ணீர் பிரச்சனையைப்பற்றிய படம் , கே பாலச்சந்தரின் தண்ணீர் தண்ணீர் மாதிரி இருக்கும், கமர்ஷியலா போகாது என நினைத்தேன், ஆனா கதை வேற , மேக்கிங் ஸ்டைல் அபாரம். ஆல் சென்ட்டர் ஹிட் ஆகும்


ஹீரோயின் ஒரு கலெக்டர் . அவர் மீது ஒரு என்கொயரி . அவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததா.   ஃபிளாஸ்பேக்கில் என்ன பிரச்சனை , அவர் எப்படி அதை டீல் பண்றார் என்பதே பரபரப்பான திரைக்கதை


 ஹீரோயினா லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா . எப்படி ரஜினியை கமர்ஷியலுக்காக பல டைரக்டர்கள் யூஸ் பண்ணிக்கிட்டாங்களோ அப்டி நயனை கிளாமரா  பில்லா , வில்லு டைப் படங்கள்ல வேஸ்ட் பண்ணிட்டாங்க். இதுல அவர் காட்டும் கலெக்டர் கெத்து அபாரம்


 அரசியல்வாதி கிட்டே வாக்குவாதம் செய்யும் போது , அதிகாரிகளுக்கு ஆணை இடும்போது , மக்களிடம் கன்வின்ஸ் செய்யும்போது அவர் பாடி லேங்குவேஜ் ஓபிஎஸ், பச்சோந்தி போல் டக் டக் என மாறுவது பிரமாதம் 


பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நடிப்பு பிரமாதம் . கிராமத்து ஆட்கள் உணர்வை கண் முன் நிறுத்துது.


ஆழ்குழாயில் குழந்தை விழுந்த பின் ஆக்சுவலா திரைக்கதை விழுந்திடும்னு யூகிச்சா அதுக்குப்பின் தான் திரைக்கதை பிரமாதபடுத்துது .

 மீட்புப்பணிகளை , அதில் ஏற்படும் பிரச்சனைகளை  அருமையா எடுத்திருக்காங்க . இந்த மீடியாக்கள் பண்ற அலம்பல்களை அப்பட்டமா காட்டி இருக்காங்க 



Image result for aram tamil movie
நச் டயலாக்ஸ்

உத்யோகம்கறது ஜனங்களுக்கு நல்லது பண்ற கருவியா இருக்கனும்னு நினைக்கறேன் ( நயன் கலெக்டர் கெத்து கெட்டப்)



2 டாக்டர்,தண்ணீர் தாகமே எடுக்காத அளவு சொட்டு மருந்து எதுனா இருந்தா குழந்தைக்கு போட்டு விடுங்க



அதிகாரிங்க எந்த லட்சணத்துல வேலை செய்யறாங்கனு களத்துல இறங்கி உயர் அதிகாரிங்க பாத்தாதான் தெரியும்


தரைல விழுந்த மீன் துள்ளிக்குதிப்பதைப்பார்க்கும் நீர் நிலை மீன் அது உயிரோட இருக்கறதா,இருக்கப்போறதா நினைச்சுக்கும்


மக்களுக்கு எது தேவையோ அதைத்தான் சட்டமாக்கனும்.ஏதோ ஒரு சட்டத்தை உருவாக்கிட்டு அதுல ஜனங்களை திணிக்கக்கூடாது

உயிர்களோட மதிப்பு தெரியாத உயர் அதிகாரிங்க வாழ்ற இந்த நாடு நாசமாத்தான் போகப்போகுது

இந்தியாவில் அலட்சியத்துக்கான விலையை நாம குடுத்துத்தான் ஆகனும்

கிராம மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி,நகர மக்கள் உயிருக்கு ஒரு மாதிரி னு நீதியும் ,சட்டமும் இருக்கலாமா?

அசாதாரணமான சூழ்நிலைல நீங்க சிக்கினா உங்க வில் பவர் உங்களை காப்பாற்றும்

10 ஆழ்துளைக்கிணற்றில் ஒரு குழந்தை விழுந்துட்டா அதைக்காப்பாத்த எந்த உபகரணமும் நம்ம கிட்ட இல்லை என்பது கசப்பான உண்மை

11 ஆளுங்கட்சி ஆளை அரெஸ்ட் பண்ணினா அரசாங்கத்துக்குத்தான் அவமானம்

12 நிலவுக்கு போய்ட்டு வந்தவரை விட ஆழ்துளைக்கிணறில் சிக்கியவரைக்காப்பாற்ற போகிறவர் முக்கியமானவர்

13 என் வேலை அரசியல்வாதிகளை கன்வின்ஸ் பண்றதில்லை.மக்களுக்கு சர்வீஸ் பண்றது




தியேட்டரிக்கல் அப்டேட்டட் ட்வீட்ஸ்


படம் போட்ட 20 நிமிஷத்துலயே இது ஒரு ஹிட் மூவி னு தெரிஞ்சிடுச்சு


கத்தி பட கதை என்னுடையது என உரிமை கொண்டாடினாரே அவர்தான் இப்பட டைரக்டர்.சீன் பை சீன் படம் தெறிக்குது

நயன்தாரா வின் கெத்து நடிப்பு ,பரபரப்பான இசை ,ஒண்டர்புல் ஒளிப்பதிவு,,சமூக அக்கறையுடன் கூடிய நச் வசனங்கள் அடிபொலி


ஆக்சிசன் சிலிண்டர் இருப்பு இல்லை மேட்டர் முன்னிலைப்படுத்தப்படுவதால் பாஜக பிரச்னை பண்ண வாய்ப்பு

பாலம் இயக்கிய கார்வண்ணன் திரைக்கதை உத்தி ,Rk செல்வமணி ,ஏ ஆர் முருகதாசின் வியாபார டெக்னிக்,கே பாலச்சந்தரின் சமூக அக்கறை = கோபிநாயனார்

ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச்சம்பவம்தான் இக்கதை. இடைவேளை.பக்கா


போலீசே கலவரம் ஏற்படுத்தும் சீன்.தில்லு.சென்சார்ல எப்டி விட்டாங்க?

நயன் தாரா கலெக்டர் போஸ்ட்டை ரிசைன் பண்ணிட்டு அரசியல்ல குதிக்க முடிவெடுக்கற மாதிரி க்ளைமாக்ஸ்.கமல் கவனிக்க.2 வகைல யூஸ் பண்ணிக்கலாம்

நல்ல வேளை.அறம் கதையை இயக்குனர் கோபி முருகதாஸ் கிட்டே சொல்லலை.அதையும் ஆட்டையைப்போட்டிருப்பாரு





Image result for director gopi nainar


சபாஷ் டைரக்டர்


1 இந்தப்படத்தின் கதை ,  திரைக்கதை , வசனங்கள் அபாரம். பிஜிஎம் கூட மிரட்டி இருக்கு , ஒளிப்பதிவு , லொக்கேஷன் செலக்சன் எல்லாம் அடிபொலி


2  நாயகியாக நயன் தாராவை தேர்ந்தெடுத்தது , பிரமாதமான  நடிப்பை திரையில் கொண்டு வந்தது அருமை 


3  பாஜக வை சீண்டிப்பார்க்கும் வசனங்கள் கலக்கல், தமிழிசை அக்கா, ஹெச் ராஜா வுக்கு பிபி எகிறும் , மகிழ்ச்சி

4  டூயட் சீனோ , லூஸ்தனமான காதல் காட்சிகளோ படத்தில் இல்லாதது ஆறுதல்



லாஜிக் மிஸ்டேக்ஸ்   திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1  ஒரு கலெக்டர் மிலிட்ரி ஆஃபீசர்களுக்கு எல்லாம் ஆர்டர் போட முடியுமா?

2  மீட்புப்பணியில் அந்தக்குழந்தை கயிற்றைப்பிடித்து மேலே வருகையில் கை வலிக்குது என பிடி நழுவ விடுது. கொஞ்ச நேரம் வலது கை , பின் இடது கை என மாற்றி பிடிக்க முடியாதா?

3      94 அடி பள்ளத்தில் விழும் சிறுமிக்கு7 காலில் ஃபிராக்சர் ஆகாதா?


4  சிறுவனை தலைகீழாக ஆழ்துளை கிணற்றில் விடுவது எப்படி? நேராகம் இ றக்குவதுதானே சேஃப்டி



சி.பி கமெண்ட் -அறம் − முதல்வன் படத்துக்குப்பின் பரபரப்பான திரைக்கதை.நயன் நடிப்பு கெத்து.விகடன் 46 ,ரேட்டிங் 3.25 / 5.மீடியாக்கள் கொண்டாடப்போகும் படம்


 ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் ( கணிப்பு) - 46


குமுதம் எதிர்பார்ப்பு ரேட்டிங் ( யூகம்) - 4/5



ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன், ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் அட்டகாசம்