Showing posts with label அரசுப்பள்ளி. Show all posts
Showing posts with label அரசுப்பள்ளி. Show all posts

Tuesday, September 25, 2012

அரசுப்பள்ளி -சாட்டை அடி வசனங்கள்

1.பசங்க நம்மள நம்புறாங்க சார். ஆனா பெத்தவங்க நாமதான் அவங்களை நம்புறது இல்லை .


--------------------------


2. பிடிச்சிருக்கோ, பிடிக்கலையோ எல்லா பொண்ணுங்களும் பசங்களை திரும்பிப் பார்க்கத்தான் செய்வோம் ஏன்னா சனியன் இன்னும் இருக்கா போயிருச்சான்னு பார்க்கத்தான்”


-----------------------------


3. ஏணியை கூரை மேல போடாதீங்க வானத்துக்கு போடுங்க



---------------------


4. 18 வருசமா இங்கேதான் குப்பை கொட்டிட்டு இருக்கேன் ..


 நிறைய சேர்ந்திருக்குமே? 



----------------------


5. நம்ம நாட்டுல அன்றாடங்காய்ச்சிகளைத்தவிர எல்லாருமே தனியார் ஸ்கூல்லதான் நம்ம குழந்தைகளை சேர்த்தறோம்,இந்த நிலை மாறனும்



-------------


6. இந்த ரூம்ல பேடு ஸ்மெல் வருதே?


 நாட் ஒன்லி திஸ் ரூம், டோட்டல் ஸ்கூல்லயே வருது


----------------------



7. ஹார்ஸ் ஆன ஸ்டூடண்ட்ஸ் வெச்சுக்கிட்டு ஹானஸ்ட்டான ரிசல்ட்டை எதிர்பார்க்கறது எந்த வகைல சார் நியாயம்?



----------------------


8. திறமையான ஸ்டூடண்ட்ஸை மட்டும் ஸ்கூல்ல சேர்த்தி 100 % ரிசல்ட் காட்டறதுதான் நல்ல ஸ்கூலுக்கான இலக்கணமா?



-------------------------


9. எவனோ எப்படியோ போய்ட்டுபோறான்னு நினைக்கறீங்களே. நம்ம பசங்களா இருந்தா இப்படியே விட்ருவோமா?


--------------------


10. அடப்பாவி, வாத்தியார் அடிக்குப்பயந்து ஒரே ஆள் இத்தனை டவுசராடா போடறது?



----------------------


11. நேத்து என்னமோ மாத்தறேன்னீங்க. இப்போ லட்டு தர்றீங்க? 

 இந்த லட்டை உதிர்த்தா பூந்தி, மறுபடி பிடிச்சா மறுபடி லட்டு. மாற்றம் நிலையானது 



--------------------



12. பிடிச்சு வெச்சா பிள்ளையார், வீசி எறிஞ்சா சாணி, எல்லாமே நாம கையாள்வதைப்பொறுத்தே இருக்கு.. 



---------------



13. சார் சார் அப்படியே அவ அட்ரசும் கேளுங்க சார்.. 


 டேய். யூ ஆர் மிஸ்யூசிங்க் மீ 



====================


14. டேய் பார்த்துப்போடா , வழுக்க போகுது.. 

 சார் உங்களைத்தான் வழுக்கைனு மறைமுகமா திட்டறான்



------------------


15. கமூகதே கவி அப்டின்னா என்ன ?


 கட் ஆல் க.. மூதேவின்னு அர்த்தம் 



---------------------


16. பெரும்பாலும் எல்லாருக்கும்  வலது மூளைதான்  அதிகம் யூஸ் ஆகும் இடது மூளையும் அதே அளவு வேலை செஞ்சா அதாவது யூஸ் பண்ணிக்கிட்டா எல்லாரும் மாஸ்டர் ஆகிடலாம்



 டீ மாஸ்டராவா? 



---------------------


17. அந்தப்பொண்ணு இருக்கும்போது எதுக்குடா  என்னை அடிச்சே?


 சும்மா வெயிட் காட்ட.. 



-------------------------


18. ஐஸக், நீ ஏண்டா இப்போ க்ளாஸ் ரூமை வெட்டு வெளீல போனே\?


 ஐ செட், யூ கெட் அவுட்னு சொன்னீங்களே? சார்.. 


 உஷ் அப்பா அது உன்னை இல்லைடா. 



--------------------


19. இவன் பண்ணுன தப்புக்கு ஏண்டா ஜாதியை இழுக்கறே? 



----------------



20. லேடீஸ் டாய்லெட்டை இனி எட்டிப்பார்க்க மாட்டேன்னு 1008 தடவை இம்ப்போசிஷன் எழுத வச்சா அது அவன் மனசுல ஆழமாப்பதியுமா? மறையுமா? அது என்ன பைபிளா? குரானா?




---------------------


21. எதுக்குடா ஸ்கூல் பெஞ்ச்சை எடுத்துட்டு போறீங்க? 



காதுகுத்துக்கு


 டேய், இது கவர்மெண்ட் பிராப்பர்ட்டிடா.. 



-------------



22. எதிரிகளை கற்பனையிலாவது உருவாக்கிக்குங்க, அப்போ உன் தகுதிகள் தானா உயரும்  




--------------------------


23. கம்ப்யூட்டர் படிச்சு அவங்க என்னத்தை கிழிக்கப்போறாங்க?

 கொடுத்துப்பார்த்தாத்தானே தெரியும்? 




----------------------



24. பசங்களுக்கு படிப்பு மேல விருப்பு இல்லாம கூட இருக்கலாம், ஆனா வெறுப்பு வர்ற மாதிரி நாம பண்ணிடக்கூடாது




--------------------


25. உங்க கிட்டே டியூஷன் வர்லைங்கறதுக்காக நீங்க பழி வாங்கறதில்லை?



----------------------



26. இப்போ நாம திருத்த வேண்டியது பசங்களை இல்லை, வாத்தியாருங்களை




----------------



27. இந்தியாவை ஆண்டுகொண்டிருப்பது சட்டம் இல்லை, சட்டத்துல இருக்கற ஓட்டைகள் தான்



-----------


28. ஹேவ் யூ ஃபினிஸ்டு யுவர் லஞ்ச்?


 யா ஃபுல், ஹவுஸ் ஃபுல்



-----------------



29. மாங்காய் ஊறுகாய்னா பொட்டாசியம் சல்பேட் தானே? 




-------------------


30. எனக்கு ஒருத்தரை பிடிக்கலைன்னா அவனுக்கு பேனா கிஃப்டா கொடுப்பேன், இப்போ புரியுதா? நான் ஏன்  உனக்கு பேனா தந்தேன்னு.?



-----------------------


31. ஒரு பொண்ணு வயசுக்கு வந்த பின் பார்க்கும் முதல் ஆணை எப்படி மரக்க முடியாதோ அதே மாதிரி அவளை முதன் முதலில் கட்டிப்பிடிச்ச ஆணையும் மறக்க மாட்டா. 


-------------------


32. நீயாவது + 2 படிக்கும்போது வாத்தியார் கையை பிடிச்சே, நான் டென் த் படிக்கும்போதே வாத்தியார் கையை உடைச்சேன்



-------------------


33. நூத்துக்கு 4 மார்க்கா? வெரி குட்  போன டைம் 2 இப்போ 4 நல்ல முன்னேற்றம் தானே? 




 ----------------------

34. தப்பே செய்யலைன்னாலும் சில விஷயங்கள்ல முதல்ல பாதிக்கப்படறது பொண்ணுங்க தான்




-----------------------


35. எல்லாரும் ஒரு ரூட்ல போய்ட்டு இருக்கும்போது நீ மட்டும் ஏன் தனி ரூட்ல போறே.. இரிட்டேட்டிங்க் ஃபெலோ



--------------------



36. பொண்ணுங்க முத டைம் ஏதாவது புகார் சொல்லும்போது அதை காது குடுத்து கேட்டிருந்தா எப்போ எது நடந்தாலும் அவ முதல்ல நம்ம கிட்டேதான் வந்து சொல்வா, நீங்க கேட்டீங்களா சார். 



--------------------


37. இந்த உலகத்துல உருப்படாதவங்கன்னு ஒரு கேட்டகிரியே கிடையாது, எல்லார்ட்டயும் தனித்திறமை இருக்கு



---------------------


38. நான் செத்தாத்தான் அவனுக்கு நிம்மதின்னா வாழறோம், நாம நல்லா வாழறோம்.. 





--------------------


39. போட்டில தோற்பது வெட்கக்கேடான விஷயம் தான், ஆனா அதை விட வெட்கக்கேடு போட்டில கலந்துக்காம வெளில நின்னு வேடிக்கை பார்ப்பது



---------------------


40. ஒரு ஸ்கூல்ல படிப்பு சொல்லித்தர்றதை விட முக்கியம் தனி மனித ஒழுக்கம் பற்றி சொல்லித்தர்றது.. நீங்களே இப்படி இருந்தா உங்க கிட்டே இருந்து வர்ற ஸ்டூடண்ட்ஸ் எப்படி இருப்பாங்க? 




-----------------------


41. இந்த உலகத்துல பசங்க புலம்பல்ஸ் என்ன தெரியுமா? எப்போ பாரு பேரண்ட்ஸ் படி படின்னு டார்ச்சர் பண்றாங்க... பேரண்ட்ஸ் தரப்புல என்ன சொல்ராங்க? பசங்க எங்க பேச்சை கேட்கரதே இல்லை.. பலூன்ல எவ்ளவ் காத்து போக முடியுமோ அவ்ளவ் தான் போகும் , அதிகமா திணிச்சா வெடிச்சுடும். 



--------------------


42. ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர் ஏன்  கற்பித்தலில் கவனம் இல்லாம இருக்கார்னா அவர் சரியா வேலை செய்யலைன்னா டி பிரமோஷன்னு ஒண்ணு கிடையது, அதான்



-------------------------


43. நாலெட்ஜ் டெவலப் பண்ணின அளவு  பசங்க தங்களோட பெற்றோரை புரிஞ்சிக்க தெரியலையே?



-----


4 4  கில்லி தான் கிரிக்கெட்.. பச்சைக்குதிரைதாண்டறதுதான் ஹை ஜம்ப்



------------------------



45. ஒரு உண்மையான குருவிடம் கல்வி கற்றவங்க குரு உயிரோட இருந்தாலும் சரி இல்லைன்னாலும் சரி குரு பேரை காப்பாத்தற மாதிரி நடந்துக்குவாங்க, நடந்துக்கனும்


---------



46. தேடல் உள்ள ஒவ்வொரு மனுஷனும்  ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல எதையாவது இழந்தே தீரனும்



----------


47. கபடி கபடி இதுல க வை கட் பண்ணி படி


 படி படி 



-------------------



48. போர்டுல சிவப்புன்னு எழுதி இருக்கேன் . இது என்ன கலர்?னு கேட்டா சிவப்புன்னு சொல்லக்கூடாது , வெள்ளை நிற சாக்பீஸ்ல தான் எழுதுனேன், அதனால் வெள்ளைன்னு தான் சொல்லனும், இதுதான் க்ரியேட்டிவிட்டி பார்வை



--------









டிஸ்கி - சாட்டை விமர்சனம் -http://www.adrasaka.com/2012/09/blog-post_7166.html