Showing posts with label அரசிளங்குமரி (1961) (தமிழ்) - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அரசிளங்குமரி (1961) (தமிழ்) - சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 11, 2022

அரசிளங்குமரி (1961) (தமிழ்) - சினிமா விமர்சனம்


  எம் ஜி ஆர்  ரசிகர்களுக்கு  ஒரு  அதிர்ச்சியான  செய்தி  , இந்தப்படத்தில் நாயகன்  எம் ஜி ஆரை  விட  வில்லன்  நம்பியாருக்குதான் காட்சிகள்  அதிகம், முக்கியத்துவமும்  அதிகம் , திரைக்கதை  முழுவதும்  வில்லனைச்சுற்றியே  தான்  பின்னப்ப்ட்டிருக்கும், ஹீரோ  சும்மா  பேருக்குத்தான்  வருவார் 

ஸ்பாய்லர்  அலெர்ட்



வில்லனான  தளபதி  தான்  ஒரு  சாதாரன  படை  வீரன்  என  சொல்லிக்கொண்டு நாயகனின்  தங்கையை  காதலிப்பது  போல  நடிக்கிறான். சாதாரண  விவசாய  குடும்பமான  நாயகனும்  நாயகனின்  தங்கையும்  அவன்  சதி  தெரியாமல்  திருமணத்துக்கு  ஏற்பாடு  பண்றாங்க 


 திருமணமும்  நடக்குது.  மூன்று  மாதங்கள்  ஒன்றாக  குடித்தனம்  நட்த்தி  விட்டு  அவள்  கருவுற்றதும்  கம்பி  நீட்டுகிறான்  வில்லன்.  அரசாங்கப்பணி  என்னை  அழைக்கிறது , விரைவில்  வருகிறேன்  என  சொல்லிட்டுப்போறான்


 இடைப்பட்ட  அந்த  மூன்று  மாதங்களாக  தளபதி  இல்லாம  அந்த  நாடு  என்ன  பாடுபட்டுச்சோ? ஒருவர்  கூடவா  தளபதியைத்தெரியாமல்  இருப்பாங்க ? 

நாட்டின்  தளபதி  தான்  வில்லன். மன்னரைக்கடத்தி  மறைத்து  வைத்து  விட்டு  மன்னர்  எழுதியது  போல  பொய்யான  சாசனம்  ஒன்றை  அவர்  ரெடி  பண்றார். அதில்  பட்டத்து  ராணி  இளவரசிதான், ஆனால்  அவரை  தளப்தி  தான்  கட்டிக்கொள்ள  வேண்டும், ஆட்சியில்  உதவி  புரிய  வேண்டும் . 


 தன்னைத்தேடி  அரண்மனைக்கே  வந்த  தன்  மனைவியை  யார்  என்றே  தெரியாது  என  சாதித்து  துரத்துகிறான்  துணைக்குக்கூட  வந்த  மாமாவையும்  கொன்று  விடுகிறான்


நாயகனின்  தங்கை  வேறு  வழி இல்லாமல்  தற்கொலைக்கு  முயல  அவளைக்காப்பாற்றி  தன்  வீட்டில்  சேர்த்துக்கொள்கிறாள்  அரண்மனை  சலவைக்காரி 


நாயகனின்  தங்கைக்கு  குழந்தை  பிறக்கிறது . குழந்தையின்  அப்பா  யார்  என்று  கேட்டும்  செய்து  கொடுத்த  சத்தியத்தால்  சொல்ல  மறுத்து  விடுக்றாள்


நாட்டின்  இளவரசிக்கு  நாயகனின்  மீது  காதல். தளபதியை  வெல்ல  நாயகனுக்கு  இருக்கும்  ஒரே  வழி  வாள்  சண்டை  கற்றுக்கொண்டு  அவனை  வெல்வதே .


 ஒரு  குருநாதரிடம் ஒரு  நாட்டின்  இளவரசன்  என  பொய்  சொல்லி  வாள்  சண்டை  கற்றுக்கொண்டு  எப்படி  தளபதியை  வெற்றி  கொள்கிறான்  நாயகன்  என்பதே  கதை 


 நாயகனாக, அறிவ்ழகனாக  எம் ஜி ஆர் . முன்  பாதி  முழுக்க  வில்லனின்  ஆக்ரமிப்பே  என்பதால்  பின்  பாதியில்  நாயகன்  ஆக்கிரமிப்பு . மன்னாதி மன்னன்ல  பத்மினியை  ஜோடியாகப்பார்த்து  விட்டு  இதில்  தங்கையாகப்பார்க்க  என்னவோ  மாதிரி இருக்கிறது . அபூர்வ ராகங்கள்  படத்தில்  கமலுக்கு  ஜோடியாக  நடித்த  ஸ்ரீ  வித்யா  அபூர்வ  சகோதரர்கள்  படத்தில்  கமலுக்கு  அம்மாவாக  நடிக்கவில்லையா?  அந்த  கொடுமைக்கு  இந்தக்கொடுமை  எவ்வளவோ தேவலாம் 


நாயகனின்  தங்கையாக  அன்புக்கரசியாக  பத்மினி  கணவன்  வஞ்சகன்  என  அறிந்தும்  அவனைக்காப்பாற்றும்  அபலைப்பெண்ணாக  அபாரமாக  நடித்திருந்தார் 


எம்  ஜி  யாருக்கு  ஜோடியாக  அழகு  ராணியாக  ராஜ  சுலோசனா . கச்சிதமான  நடிப்பு 


மணி  மாற  பூபதியாக  அசோகன்  , அதிக  வாய்ப்பில்லை , புலிகேசியாக  முத்து ராமன்  கொடுத்த  வேடத்தை  கச்சிதமாக  செய்திருக்கிறார் 


  வேலப்பன்  என  பொய்  சொல்லி  தளபதி  வெற்றி  வேலாக  கலக்கலான  வில்லன்  வேடத்தில்  நடித்திருக்கும்  எம்  என்  நம்பியார் தான்  கதையின்  முதுகெலும்பு . 

டாக்டர்  கலைஞர்  தான்  கதை ,  வச்னம். பல  இடங்களில்  சபாஷ்  போட  வைக்கிறது 


ஜி  ராமநாதன்  இசையில்   11  பாடல்கள்  , கவிஞர்  கண்ணதசன் , உடுமலை  நாராயண  கவி , பட்டுக்கோட்டை  கல்யாண  சுந்தரம்  உட்பட  6 கவிஞர்கள்  இணைந்து  தந்திருக்கிறார்கள் . 


சின்னபயலே  சின்னப்பயலே  சேதி  கேளடா  கலக்கலான  பாட்டு 

தாரா  அவர்  வருவாரா?  செம  மெலோடி 

அதே  மெட்டில்  அத்தானே  ஆசை  அத்தானே    பாடல்  செம 


சபாஷ்  டைரக்டர்


1    நாயகன்  சாதாரணன் , நாயகி  அரச  குடும்பம்  எனும்  சாதா  ஃபார்முலாதான்  கதைக்கரு , ஆனா  சுவராஸ்யமான  திரைக்கதை  உட்கார  வைக்கிறது


2  பெண்கள்  செண்ட்டிமெண்ட்டைக்கவரும்  வகையில்  வில்லனான  கணவனைக்காட்டிக்கொடுக்காத  நாயகனின்  தங்கை  கச்சிதமான  திரைக்கதை 


3   காமெடி  டிராக்  தனியே  துருத்துக்கொண்டிராமல்  கதையோடு  ஒட்டி   வருவது 


4  கலைஞரின்  வசனத்தில்  நாட்டின்  சமூக  சீர்கேடுகளை  சாடிய  விதம் 


5  இரும்புக்கை  மாயாவி  போல  கைகளில்  இரும்புக்கவசத்துடன்  சாண்டோ  சின்னப்ப தேவ்ருடன்  எம் ஜி ஆர்  போடும்    ஃபைட்  புதுமை . அந்தக்காலத்தில்  ஏகோபித்த  வரவேற்பு  பெற்ற  சண்டைக்காட்சி 



 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  நாட்டின்  தளபதி  சாதா  ஆளாக  ஊருக்குள்  வந்து  3  மாதம்  தங்கி  ஒரு  பெண்ணின்  வாழ்வில்  கணவனாக  நடித்துச்செல்வது  நடைமுறையில்  சாத்தியம்  இல்லாதது 


2  ஹீரோவுக்கு  வாள்  சண்டை உட்பட  வீர  சாகசக்கலைகள்  ஏதும்  தெரியாது  என  வசனம்  வருகிறது. பயிற்சி  பெறுகிறார்  ஆனால்  அதற்கு  முன்பே  ஒரு  மல்யுத்த  வீரனிடம்  போராடி  ஜெயிப்பது  எப்படி ? 


3  இளவரசியிடம் இருக்கும்  மனன்ரின்  சாசனத்தை  இளவரசி  க்ளைமாக்ஸ்  வரை  படிக்காமல்  இருப்பது  எப்படி ? 


4 நாட்டின்  இளவரசியை  தளபதி  அடிமை  போல்  நடத்துவது  எப்படி  ?  வீரர்கள்  எப்படி  அதை  சகித்துக்கொள்கிறார்கள் ? 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  நல்ல பொழுது  போக்கு சித்திரம்  தான். பாடல்காட்சிகள்  அருமை .  நம்பியார்  ர்சிகர்கள்  கொண்டாடுவார்கள்  ரேட்டிங் 2.5 / 5 

அரசிளங்குமரி
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர் பிக்சர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
பத்மினி
வெளியீடுசனவரி 11961
ஓட்டம்.
நீளம்17875 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்


திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயண கவி, இரா. பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எஸ். ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]a


எண்.பாடல்பாடியவர்/கள்பாடலாசிரியர்கால அளவு
1சின்னப் பயலேடி. எம். சௌந்தரராஜன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்03:39
2ஏற்றமுன்னா ஏற்றம்டி. எம். சௌந்தரராஜன் & சீர்காழி கோவிந்தராஜன்03:11
3கண்டி கதிர்காமம் ... கழுகுமலை பழனிமலைசீர்காழி கோவிந்தராஜன்01:58
4நந்தவனத்தில் ஓர் ஆண்டிடி. எம். சௌந்தரராஜன்00:54
5செத்தாலும் உனை நான் விடமாட்டேன்என். எஸ். கிருஷ்ணன் & எஸ். சி. கிருஷ்ணன்03:32
6தில்லாலங்கடி தில்லாலங்கடிபி. சுசீலாகண்ணதாசன்03:32
7தாரா அவர் வருவாராஎஸ். ஜானகிகு. மா. பாலசுப்பிரமணியம்03:36
8ஊர்வலமாக மாப்பிள்ளை பெண்ணும்சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலாஇரா. பழனிச்சாமி02:19
9அத்தானே ஆசை அத்தானேபி. லீலாகே. எஸ். கோபாலகிருஷ்ணன்02:10
10தூண்டியிலே மாட்டிக்கிட்டு முழிக்குதுகே. ஜமுனாராணி, சீர்காழி கோவிந்தராஜன் & எஸ். சி. கிருஷ்ணன்முத்துக்கூத்தன்02:39
11ஆவ் ஆஹாவ் என் ஆசை புறாவே ஆவ்பி. சுசீலாஉடுமலை நாராயண கவி