Showing posts with label அரசியல்.நகைச்சுவை. Show all posts
Showing posts with label அரசியல்.நகைச்சுவை. Show all posts

Thursday, February 24, 2011

ராணிமுகர்ஜி VS நமீதாஜி - 2 ஜி ஊழல் @ காமெடி கும்மி

http://kingrdx.com/data/Wallpaper/Bollywood%20Actress%20Wallpaper/Rani%20Mukharji/KingRDX.CoM-Rani%20Mukharji.jpg

1. நடிகை: என்  ஃபேஸ்புக்  அட்ரஸ்  வேணும்னு  ரசிகர்கள்  ரொம்ப  வேண்டி  விரும்பி  கேட்கறாங்க...  சொல்றேன்...  நோட்  பண்ணிக்குங்க.

நிருபர்: அப்படியே  உங்க  ஹிப் ( HIP) புக்  அட்ரஸ்,  செஸ்ட்  (CHEST) புக்  அட்ரஸையும்  சொல்லிடுங்க.

------------------------------------------------------


2. ட்விட்டர்-குவாட்டர்  என்ன  வித்தியாசம்?


ட்விட்டர்னா  140 (லெட்டர்ஸ்) ,      குவாட்டர்னா  180 (ml.)

-----------------------------------------


3. டைரக்டர்  சார்.  2Gயை  base  பண்ணி  படம்  எடுக்கப்  போறீங்களாமே?


ஆமா...  ராணி  முகர்ஜிதான்  ஹீரோயின்...  நமீதாஜிதான்  வில்லி.

-----------------------------------------------------

4. டாக்டர்...  என்  துரதிர்ஷ்டம்  பாருங்க...  24  மணி  நேரமும்  விடாம ‘லொக்  லொக்’-னு  இருமல்  வருது...

ஓஹோ...  அதிர்ஷடம்  இருந்தா  மட்டும் ‘லக்  லக்’- (LUCK) னு வந்திருக்குமாக்கும்?

-----------------------------------


5. டாக்டர்...  டெய்லி  மிட்நைட்ல  எனக்கும்,  என்  மனைவிக்கும்  தூக்கம்  வர்றதில்லை...

ஹி...  ஹி...  இது  எல்லாருக்கும்  வர்ற  நடு நிசி  நோய்கள்தான்.

------------------------------------------------------
http://www.extramirchi.com/gallery/albums/userpics/10003/namitha_0129.jpg

6. என்  லவ்வர்  வீட்டு  ஃப்ரிஜ்-ல  எப்பவும்  4  பீர்  பாட்டிலாவது ஸ்டாக்  இருக்கும்.

ஓஹோ...  காதலர்  ‘குடி’ இருப்பு  4-ன்னு  சொல்லு.

---------------------------------------


7. சார்...  உங்க  கம்பெனி  வாட்ச்மேன்  வேலையை  ரிசைன்  பண்றேன்.

ஏன்?

மாசாமாசம்  சம்பளமா  ஒரே  ஒரு  வாட்ச்  மட்டும்  தர்றீங்க. அது எப்படி  பத்தும்?

-------------------------------------



8. இன்ஸ்பெக்டர்  இண்டர்நெட்  பைத்தியம்  போல...

ஏன்?

கொலைகாரனை  GOOGLE  Search-ல  போய்  தேடறாரே?

----------------------------------



9. தலைவரே!  அரசியல்  நாகரீகம்-னா  என்ன?

50  சீட்  எதிர்பார்த்து  கூட்டணிப்  பேச்சுவார்த்தைக்குப்  போறப்ப  வெறும்  8  சீட்  கிடைச்சாக்கூடக்  கோபப்படாம  O.K. சொல்றதுதான் அரசியல்  நாகரீகம்.

----------------------------------------


10.( Dear...  I  Like  You..). டியர் ஐ லைக் யூ,   நீயும்  சொல்லு...

Sorry...  இந்த  ஜென்மத்துல  அது  நடக்காது. Better  Luck  Next ஜென்மம்.

-----------------------------
டிஸ்கி -1 :முதல் படத்துல ராணி முகர்ஜி கட்டி இருக்கற சேலை தீப்பெட்டி சேலை. அதாவது ரொம்ப மெல்லிசா இருக்கும். அந்த புடவையை தீப்பெட்டி சைஸ் டப்பாவுல அடக்கிடலாம்.ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு ஈஸியா எடுத்துட்டு போலாமாம்.# இனிமே பொது அறிவு சம்பந்தமான தகவல்களை நான் எழுதறதே இல்லைன்னு யாராவது சொல்வீங்க?

டிஸ்கி -2 : ஸ்டில் இரண்டில் இருக்கும் மச்சான் புகழ் நடிகை தனது வாழ்க்கையில் முதன் முதலாக சேலை கட்டிய நாள் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.நான் பதிவு டைப் பண்ண 27 நிமிஷம்தான் ஆச்சு. இந்த ஃபோட்டோ தேடி கண்டுபிடிக்க 45 நிமிஷம் ஆச்சு.படைப்புக்காக இப்படி மெனக்கெடற எனக்கு யாராவது பதிவுலக கமல்னு விருது குடுத்தா வேணாம்னு சொல்லவே மாட்டேன்.. ஹி ஹி

Friday, February 04, 2011

எட்டுப்பட்டியும் எள்ளி நகையாடிய ராசா - காமெடி கும்மி

http://www.tamilcnn.com/images/stories/tamilcnn/january2011/india/anchalii.gif 
.1. ஊழல் வழக்குல கைதான தலைவரை எல்லோரும் பாராட்டறாங்களே..?

கைதாகி  24 மணி நேரம் ஆகியும்  அவருக்கு இன்னும் நெஞ்சு வலி வர்லையே..

---------------------------------------

2.கூட இருந்தே குழி பறிக்கறவங்க நம்ம கட்சில ஜாஸ்தினு எப்படி சொல்றீங்க தலைவரே,..?


பின்னே என்னய்யா..?நான் கைதானதும் எல்லாருக்கும் ஸ்வீட் குடுத்து  நம்ம கட்சி ஆளூங்களே கொண்டாடுனா...?

--------------------------------------------------

3 தலைவரோட அலம்பலுக்கு ஒரு அளவே இல்லைன்னு எப்படி சொல்றே,,?

என்னை கைது செய்தது இயற்கைக்கே பொறுக்கலை..அதனாலதான் என்னை அரெஸ்ட் பண்ணுன அதே நாள் ஜப்பான்ல எரிமலை வெடிச்சுதுன்னாரே..?

----------------------------------------

4.தலைவர் எப்பவும் தன்னையும்,தன் குடும்பத்தையும் ஏழையாவே நினைச்சுக்கறார்..

எப்படி சொல்றே..?

இறுதி மூச்சு உள்ளவரை ஏழை மக்களுக்காக பாடுபடுவேன்னாரே...

--------------------------------------------------------------------------------


5.தலைவரே.. நீங்க கைது ஆனதா பேப்பர்ல நியூஸ் பார்த்தேன்,பதட்டமே இல்லாம இருக்கீங்களே..?

விடப்பா.. நாளைக்கே நான் ஜாமீன்ல வந்ததா நியூஸ் வரும் பாரு..

--------------------------------------------
http://www.southdreamz.com/wp-content/uploads/2010/06/neetu-chandra-17a.jpg

6. தலைவரு இப்படி எல்லாம் பெருமை அடிச்சுக்கக்கூடாது...

ஏன்?


சின்ன வயசுல இருந்தே நான் ஊழல் பண்ண ஆரம்பிச்சுட்டேன் அப்படிங்கறாரே?

------------------------------------------------------------

7.கபாலிக்கு லொள்ளு ஜாஸ்தி ஆகிடுச்சு..

ஏன்?

நான் ஒரு தலீத் அப்படிங்கறதாலதான் என்னை லாக்கப்ல போட்டீங்க அப்படின்னு கேட்டு  பிரச்சனையை திசை திருப்பறானே...

-------------------------------------------

8.பாட்டுப்போட்டிக்கு வந்தவன் ரஜினி ரசிகன் போல ...

எப்படி  சொல்றே..?

ஸாரி.. நான் வாய்ஸ் தர மாட்டேன்கறானே..

-----------------------------------------------------


9.தலைவரே. உங்க லட்சியம் என்ன?

எல்லாரும் இந்த 1 3/4  லட்சம் கோடி ஊழலையே பெரிசா பேசறாங்க..அதை பிரேக் பண்ற மாதிரி ஊழல் பண்ணனும்.,

---------------------------------------------

10. நடிகை - முதல்லயே சொல்லிடறேன்.. எனக்கு ழ சரியா வராது...

டைரக்டர் - முதல்லயே வராதுன்னா கடைசில வருமா?


----------------------------


டிஸ்கி 1 -  இன்னைக்கு 3 படங்கள் ரிலீஸ் ஆகுது. தூங்கா நகரம் பட அஞ்சலி ஸ்டில் தான் முதல்ல இருக்கறது.. யுத்தம் செய் பட நீது சந்திரா ஸ்டில்தான் 2வது..இஷா கோபிகர் நடிச்ச சீன் படமான மின்சாரக்காதலி  பட ஸ்டில் ரொம்ப ஓவரா இருந்ததால போடல. இன்னைக்கு ஆஃபீஸ்க்கு ஓபி அடிக்க வாய்ப்பு கிடைச்சா மூணுல ஏதாவது ஒரு படம் பார்த்து விமர்சனம் போடலாம்னு ஒரு ஐடியா..


டிஸ்கி 2 -  கடைசியா போட்ட நடிகை ஜோக்குக்கும் ,நீது சந்திராவுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

Friday, January 07, 2011

கேப்டன் போடும் கணக்கு

ஆர்.டி.ஓ ஆஃபீசருக்கும்,விஜய்காந்த்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு.என்ன அது?
ஆர்.டி. ஓ ஆஃபீசர் 8 போட்டு காட்ட சொல்வார்.விஜய்காந்த் 8 % ஓட்டு கைவசம் இருக்கு என்பார்.
இது பழைய கணக்கு.இப்போது இவரின் ஓட்டு 12.8 %.தி.மு.க,அ.தி.மு.க,காங்கிரஸ் போன்ற பாரம்பரியமான கட்சிகள் பல வருடங்களாக கட்டிக்காத்து வந்த தொண்டர்கள்,மக்கள் ஆதரவு,ஓட்டு வங்கி இவை அனைத்தையும் குறுகிய காலத்தில் அசைத்துப்பார்க்க ஆயத்தமானவர்.
கே.பாக்யராஜ்,டி.ராஜேந்தர்,சிவாஜி போன்றவர்கள் சினிமா புகழில் வந்த செல்வாக்கை அரசியலில் புகுத்தி தனிக்கட்சி தொடங்கிய போது மக்கள் ஆதரவு பெரிய அளவில் கிடைக்கவில்லை.ஆனால் விஜய்காந்த் தனி ரகம்.

தி.மு.க,அ.தி.மு.க 2 கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என துணிந்து கருத்து கூறினார்.இவர் ஒரு குடிகாரர் என ஜெ கூறிய போது அருகில் இருந்து ஊற்றிக்கொடுத்தாரா எனக்கேட்டு அதிர வைத்தார்.
இவர் போகும் இடங்களெல்லாம் கூட்டம் கூடினாலும் ,கலைஞர் சொல்வது போல் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது.
 எம் ஜி ஆர்க்குப்பிறகு எந்த நடிகரும் அரசியலில் வென்ற சரித்திரம் இல்லை என கலைஞர் நினைக்கிறார்.விதிவிலக்காக விஜயகாந்த் திகழ ஒரு வாய்ப்பு இருப்பதாக அவரது ரசிகர்கள் நினைக்கிறார்கள்.பொதுவாக நடிகர்களின் 100வது படம் ஹிட் ஆவதில்லை.(விதிவிலக்கு எம்.ஜி ஆரின் ஒளிவிளக்கு,சிவாஜியின் நவராத்திரி)ரஜினி சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்த ஸ்ரீ ராகவேந்திரர்,கமலின் முதல் சொந்தப்படமான ராஜபார்வை,சத்யராஜின் சொந்தப்படமான வாத்தியார் வீட்டுப்பிள்ளை 3 படங்களும் அவரவரின் 100வது படம்தான்.3மே தோல்விப்படங்கள்.ஆனால் விஜயகாந்த்தின் 100வது படம் கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படம்.அதற்கும்,அரசியலுக்கும் என்ன சம்பந்தம் என கேட்டால் அவரது ரசிகர்கள் சினிமாவில் விதிவிலக்காக 100வது படத்தை வெற்றிப்படமாக்கியவர்ரால் அரசியலிலும் ஏன் வெற்றி பெற முடியாது என்கிறார்கள்.
நடுநிலையாளரும்,சிறந்த அரசியல் நையாண்டி பத்திரிக்கையாளருமான சோ அவர்கள் ஒரு வாசக்ரின் கேள்விக்கு அளித்த பதில் சிந்திக்க வைக்கிறது.
கே- 2011 சட்ட மன்றத்தேர்தலில் அ.தி.மு.க + ம தி மு க + காங்கிரஸ்+ தே மு தி மு க + கம்யூனிஸ்ட் கூட்டணி அமைந்தால் அந்தக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்?
ப- அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் அது கூட்டணி அல்ல.அதுதான் அசெம்ப்ளி.
அவரது கருத்து சரிதான்.ஏனெனில் அரசியலில் அரித்மேட்டிக் கால்குலேஷன் இருக்கிறது.ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத ஓட்டு உண்டு.

அ.தி.மு.க 26 %,  தி. மு.க 28 %,காங்கிரஸ் 20 %.,பா ம க 4 %,ம தி மு க 3%, என ஒரு கால்குலேஷன் உண்டு.கலைஞர் சிறந்த ராஜ தந்திரி என்பதால் சோ நினைப்பது போல் ஒரு கூட்டணி அமைக்க விடமாட்டார்.
விஜயகாந்த் நினைப்பது என்ன?தி மு க கூடவோ,அ.தி.மு.க கூடவோ கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 25 சீட் தான் கிடைக்கும்.அதுவே காங்கிரஸ் கூட தனியாக கூட்டணி வைத்தால் 50 % சீட் நிச்சயம்.கட்சியை வளர்த்து விடலாம்.
ராகுல்காந்தி அதேபோல் காங்கிரசை தனிப்பெரும் சக்தியாக வளர்க்க நினைப்பதால் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல் ராகுல் விஜய்காந்த் கூட்டணியில் ஆர்வமாக உள்ளார்.பொதுவாக ஜெ யாரையும் மதிக்க மாட்டார் என்ற பேச்சு முத்துசாமி கட்சியை விட்டு விலகியபோது நீர்த்துப்போனது.எப்போதுமில்லாத அதிசியமாக “எப்போது வேண்டுமானாலும் கட்சியினர் என்னை சந்திக்கலாம் எனக்கூறி அ தி மு க தொண்டர்கள் மனதில் ந்ம்பிக்கையை விதைத்தார்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.விஜயகாந்த் தனியாக நின்றதால் கிடைத்த 12% ஓட்டுகள் தி மு க வுடனோ,அ தி மு க வுடனோ கூட்டணி வைத்தால் அதே அளவு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எனவே இப்போது இருக்கும் நிலவரப்படி விஜயகாந்த் காங்கிரஸ் உடன் கூடணி காண்பதே அவரது கட்சி வளர்ச்சிக்கு நல்லது.ஆனால் 50 வருடங்களுக்கு மேல் பொது வாழ்க்கையில் அனுபவம் நிறந்த கலைஞர் அதற்கு வழி விடுவாரா என்பதில்தான் கேப்டனின் எதிர்காலமும் ,தமிழக அரசியலின் போக்கும் தீர்மானிக்கப்படும்.
பி.கு-என்னைப்பொறுத்தவரை அவர் அரசியலில் பிரகாசிப்பதே நல்லது ஏன் எனில் எங்கள் ஆசான்,சபரி,காந்தி பிறந்த மண் மாதிரி படங்களில் அவரைப்பார்ப்பதற்கு அது ஒன்றும் மோசம் அல்ல.

Wednesday, November 24, 2010

ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்ட தலைவர்



1. கண்டதும்  காதலில்  விழுந்தேன்; அவளோட  அப்பா  இன்ஸ்பெக்டர்னு தெரிஞ்சதும்,  ‘பொத்’ தென  காலில்  விழுந்தேன்!



2. “தலைவரே,  ஆள்  இல்லாத  ரயில்வே  கிராஸிங்ல  அடிக்கடி  ஆக்சிடென்ட் நடக்குதே...  இது  பத்தி  என்ன  நினைக்கறீங்க?”

“அதான்  எனக்கும்  புரியல.  ஆளே  இல்ல;  எப்படி  ஆக்சிடென்ட்  நடக்குது?”



3. “தலைவலின்னு  ஒரு  நாள்  லீவ்  எடுத்தே...  ஓ.கே!  கால்  வலிக்கு  ஏன் ரெண்டு  நாள்  லீவ்  கேக்கறே?”

“தலை  ஒண்ணுதான்  இருக்கு;  ஆனா  கால்  ரெண்டு  இருக்கே...”

“சரி  சரி... பல்  வலி  வராம  பார்த்துக்கோ!”



4. “இந்த  ஒற்றன்  வேலைக்குப்  புதுசா...?”

“எப்படி  மன்னா  கண்டுபிடித்தீர்...?”

“ ‘போர்  அபாயம்...  ஓடுங்கள்’  என்று  குரல்  தராமல்,  ‘கிளம்புங்கள் போர்க்களத்திற்கு’ என்று  உளறுகிறானே...”



5. “போர்களத்தில்  முள்  குத்தியதால்  மன்னர்  துடிக்கிறார்!”

“யாரிடமாவது  குண்டூசி  வாங்கி  முள்ளை  எடுப்பதுதானே?”

“வேண்டாம்.  போர்க்களத்தில்  பின்வாங்கினோம்  என்ற  அவப்பெயர்  வந்துவிடும்!”



6. “மாறுவேடத்தில்  மன்னர்  நகர்வலம்  வந்தது  வேஸ்ட்  ஆகிவிட்டதா?”

“ஆமாம!  ‘மன்னர்  மாறுவேடத்தில்  வருகிறார்...  பராக்...  பராக்...!’  என்று  ஒரு  சேவகன்  கத்தித்  தொலைத்துவிட்டான்!”



7. “அமைச்சரே!  நாட்டு  மக்கள்  என்னைப்  பற்றி  என்ன  பேசிக்கொள்கிறார்கள்?”

“போர்க்களத்தில்  மண்ணையும்,  அந்தப்புரத்தில்  பெண்ணையும்  அசராமல்  கவ்வும்  அசகாய  சூரர்  என்று  பேசிக்கொள்கிறார்கள்,  மன்னா!”



8. “மன்னா!  உடனடியாக  உங்கள்  எடையைக்  குறையுங்கள்!”

“ஏன்?”

“180-ம்  கிலோத்துங்க  சோழன்  என்று  அழைக்கிறார்கள்!”



9. “அரண்மனைக்குள்  இருப்பதற்கு  நேர்  எதிராக  மன்னர்  வெளியில்  இருக்கும்போது  நடந்துகொள்வார்.”

“எப்படி?”

“அரண்மனையில்  ‘யாரங்கே’ என்று  அதிகாரமாக  கேட்பார்.  நகர்வலம்  போக  வெளியே  வந்தால்  ‘அங்கே  யாரு’ என்று  பம்முவார்!”



10. “புறமுதுகிட்டு  ஓடிவரும்போது  மன்னர்  தனியாக  ஓடி  வராமல்  வீரர்களுடன்  சேர்ந்தே  ஓடி  வருகிறாரே?”

“ஒன்றுபட்டால்  உண்டு  வாழ்வு  என்பதைக்  கடைபிடிக்கறாராம்!”