நான் துக்ளக் பத்திரிகையின் ரசிகை!'' என்கிறார் துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் திரு. சோவின் மனைவி திருமதி சௌந்தரா.
சி.பி - அடடா.. நான் பெண் வாசகிகளை மதிப்பதும் இல்லை, அவர்களை கண்டு கொள்வதும் இல்லைன்னு சோ சொன்னாரே.. அது உங்களைவெச்சுத்தானா?
''அவர் அஷ்டாவதானிபோல் பல தொழில்களில் ஈடுபட்டு இருந்தாலும், எனக்கு என்னமோ பத்திரிகை ஆசிரியரா அவர் ஈடுபட்டு இருப்பதுதான் நிறைவைத் தருகிறது. அதிலும் அவர் ஆளும் கட்சியை நாசூக்காகக் குத்திக்காட்டி எழுதும் பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது!''
சி.பி - என்னங்க இப்படி சொல்லீட்டீங்க? எனக்கென்னவோ அவர் நாடக் ஆசிரியரா, காமெடி வசனம் எழுதறவரா இருக்கறதுல தான் அதிக திறமை வெளிப்படுத்துன்னு தோணுது.. பத்திரிக்கைல என்ன பண்றார்? கலைஞரை, காங்கிரசை திட்டி ஜெவை, பி ஜே பியை ஆதரிக்கறார்.. அது ஈசி வேலை ஆச்சே.?
''துக்ளக் பத்திரிகை வந்தவுடன், முதலில் எதைப் படிக்க ஆவலாக இருப்பீர்கள்?''
''அட்டைப் பட கார்ட்டூனை ரசித்துவிட்டு, நான் பரபரப்புடன் பக்கங்களைத் தள்ளிப் பார்ப்பது கேள்வி-பதில் பகுதியைத்தான். நான் மிகவும் ரசித்துப் படிக்கும் பகுதி அது.''
சி.பி - அதானே? சமையல் குறிப்புத்தான் வர்றதில்லையே? அடுத்தவங்க என்ன பேசிக்கறாங்க அப்படின்னு ஒட்டுக்கேட்கறதுலதான் பெண்களுக்கு எவ்வ்வள்வு ஆர்வம்? துக்ளக் சத்யாவின் கார்ட்டூன் கிண்டல்கள் தான் பெரும்பாலான வாசகர்களின் முதல் சாய்ஸ்
'' 'என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்’ நாடகத்தைப் பார்த்தீர்களா?'' என்று கேள்வி கேட்ட உடனேயே, ''ஓ! நான்கூட சுதந்திய தாகம் டாமா பாத்தேன்...'' என்று மழலை மொழியைச் சிந்தியபடி நடந்து வருகிறாள் சோவின் மகள் சிந்துஜா.
''டிராமாவிலே அப்பா எப்படி வர்றார்?''
''உம்... உம்... கையில பூ கட்டிண்டிருக்கா. மேக்-அப் போட்டுப்பா... டாமாவிலே உள்ளே போவா... வெளியே வருவா...'' என்று அவள் சொல்லச் சொல்ல, திருமதி சோ தன் மகளைப் பெருமையுடன் அணைத்துக்கொள்கிறார்.
''இவள் அப்பா மாதிரியே... இன்டெலிஜென்ட்... சுறுசுறுப்பு எல்லாமே. சிந்துஜா, அப்பா மாதிரி 'துக்ளக்’ நடை நடந்து காட்டு'' என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, ''அப்பா இப்படித்தான் நடப்பா...'' என்று குதித்து நடந்து காண்பிக்கிறாள்.
''ஆபட்ஸ்பரியில் நடந்த துக்ளக் கருத்தரங்குக்கு வந்திருந்தீர்களா?''
''ஓ... வந்தேனே. ஆனா, கடைசியிலதான் என்னால வர முடிஞ்சது. கருத்தரங்குக்கு வந்திருந்தவங்களைப் பார்த்துப் பிரமிச்சுட்டேன். இந்தச் சின்ன வயசுல அவருக்கு இவ்வளவு பெரிய அளவில் மக்களின் அன்பு இருக்கிறதைப் பார்த்துதான் பூரிச்சுப்போயிட்டேன். பெருமையும்படறேன். ஆனால் அதே சமயத்திலே, ''இனிமே இவர் இன்னும் இது மாதிரி கருத்தரங்குகள் நடத்தணும்... நிறையக் கூட்டம் வரணும்... யார் கண் திருஷ்டியும் படாம இருக்கணும்’னு உடனே ஆண்டவனை வேண்டிக்கிட்டேன். இன்னமும் வேண்டறேன்.
துக்ளக் இன்னும் நல்லா... தமாஷா இருக்கணும். லேடீஸைப் பொறுத்தவரை இது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு... இங்கிலீஷ்ல வெளி வந்தாக்கூட நல்லதுதான். மொத்தத்துல இது ஒரு அகில உலகப் பத்திரிகை ஆகணும்னு எனக்கு ரொம்ப ஆசை.''
சி.பி - அதுக்கு சோ ஆல் ஓவர் வோர்ல்டு பெருந்தலைகளை திட்டனும். அவருக்கு கலைஞரை திட்டவே டைம் பத்த மாட்டேங்குது.
''துக்ளக் பறிமுதலைப் பற்றி...''
''என்னவோ பண்ணப்போறாங்கனு இரண்டு நாளைக்கு முன்னாடியே வதந்திகள் நிறைய வந்தன. பறிமுதல் செய்த அன்னிக்கு இவர் விடியற்காலையிலேயே எழுந்து போயிட்டார். இவர் தீர்மானிச்சு செய்ற எந்தக் காரியமும் நல்ல படியா முடியும்கிற நம்பிக்கை எங்க எல்லாருக்கும் உண்டு. அதனால நாங்க கொஞ்சம்கூடப் பயப் படலை!'' என்று கணவர் மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் திருமதி சோ.
''நிறைய டெலிபோன் கால்கள் வந்துஇருக்குமே?''
''லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட பத்திரிகை ஆசிரியராயிற்றே... வராமலா இருக்கும்? ஒரு நிமிஷத்துக்கு ஒரு போன் கால் வந்துட்டே இருக்குது. அதிலும் குறிப்பா நிறைய லேடீஸ்தான் போன் பண்றாங்க. அவங்க என்னைக் கூப்பிட்டுச் சொல்றதெல்லாம், 'இதுக்கு சரியான 'ஆக்ஷன்’ எடுக்கணும்’, 'இது ரொம்ப அநியாயம்...’ எல்லாரும் தவறாம சொல்ற ஒரு வார்த்தை: 'உங்க கணவரை ஜாக்கிரதையாப் பார்த்துக்குங்க!’ அவர்களுடைய அன்பை நினைத்துக் கண் கலங்கினேன்...'' என்று தழுதழுத்த குரலில் கூறுகிறார் திருமதி சோ.
''மொத்தத்திலே துக்ளக்கைப் பறிமுதல் செய்ததால, அவருடைய பத்திரிகைக்கு நிறைய பப்ளிசிட்டி கிடைச்சிருக்கு. தமிழ்நாடு மட்டும்அல்ல, வட நாட்டிலே உள்ள எல்லாப் பத்திரிகையிலேயும் இதைப் பற்றி வந்திருக்கு. இப்போ அவர் அகில இந்தியாவுக்கும் தெரியற 'பிக் பெர்சனாலிட்டி’ ஆயிட்டாரு. இந்தச் சமயத்துல இன்னும் இரண்டு மூன்று புதிய பகுதிகளைச் சேர்த்து, துக்ளக் பக்கங்களை அதிகமாக்கிக் கொண்டுவரலாம்!'' என்று சொல்லிக்கொண்டே எழுந்திருக்கிறார்.
அவரிடம் விடைபெற்று வருகிறோம். வழியில் ஒரு விதமான கலக்கத்துடன் சோவின் தாய் திருமதி ராஜம்மாவைச் சந்திக்கிறோம்.
''எல்லோரும் சேர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக வீட்டைக் கட்டியிருக்கான். ஆனால், அவனே காலையில போனா ராத்திரி நேரம் கழிச்சுதான் வரான். அவன் வந்து சேர்ற வரை மனசு 'திக்திக்’குனு அடிச்சுக்கறது. அவனோட டிராமா, சினிமாவெல்லாம்கூட நான் பார்த்தது இல்லை. ஊரிலே அவனைப் பத்தி எல்லாரும் பெருமையா பேசிக்கறானு சொல்றா. ஜெயமிருக்கும் வரை பயமில்லை - அவன் நன்னாயிருக்கணும்!'' என்கிறார் ஒரு துணிவு மிக்க பத்திரிகையாசிரியரை நமக்குத் தந்த திருமதி ராஜம்மா.
சி.பி - விகடன் பொக்கிஷம் பகுதில பல வருடங்களுக்கு முன்பு வந்த பேட்டி இது