Showing posts with label அரசியல்.அங்கதம். Show all posts
Showing posts with label அரசியல்.அங்கதம். Show all posts

Wednesday, March 16, 2011

அதோ அந்த பதிவர் போல ட்வீட்ட வேண்டும்.. ...

http://wallpapers.oneindia.in/d/124594-2/ileana-wallpaper17.jpg

பொழுது போகாத நேரத்தில் டி வி முன் உட்கார்ந்த நேரம் எல்லாம் ஹில்ஸ் ஏறிப்போய் விட்டது..ட்விட்டர் முன் உட்கார்ந்தால் ஆளாளுக்கு கலக்கு கலக்கு என கலக்கித்தள்ளிக்கொண்டிருக்கிரார்கள்.. பதிவு எழுதுவதை விட, பதிவு படிப்பதை விட ட்வீட்ஸ்களைப்படிப்பது சுவராஸ்யமான ஒன்றாய் மாறி இருக்கிறது....


1. RajanLeaks சுயமரியாதையுடன் அதிமுக அணியில் இருந்து விலகுகிறோம்: கார்த்திக் # அப்பிடியே மானமரியாதையோட போயி தாத்தா கிட்ட சேர்ந்துகுங்க

------------------------------------------- 

2.
RajanLeaks தேர்தல் நடத்தை விதிமுறையை மீறமாட்டேன்: அழகிரி உறுதி # ஹா ஹா ஹா! யாரு கிட்ட சொல்றீங்கண்ணே! காங்கிரஸ் கிட்டயா?

----------------------------------------- 

3. 
RajanLeaks RT @kolaaru: சென்னை, கோவை, மதுரைனு காங்கிரஸ் கேட்டு வாங்கிருக்கே,எலெக்‌ஷ்ன்ல நிக்க போறான்களா இல்ல டிராவல்ஸ் பஸ் விட போறான்களா
---------------------------------------------




4.
Sangakavi உன்னை நானும் என்னை நீயும் சமரசமாய் திருடிக்கொண்டோம் .. அங்கே பார் காதலும் நட்பும் தமக்குள் சண்டை இட்டுக்கொள்கின்றன நம்மை திருட

----------------------------------------------------


http://tamilactressphotos.in/wp-content/uploads/2010/06/ileana25.jpg
5. Sangakavi தலைவர்கள் எல்லாம் சென்னையில் போட்டியிடாமல் சொந்த ஊர்ல போட்டியிடுகிறார்களாம்... தொகுதிக்கு நல்லது செய்திருந்தால் ஏன் தொகுதி மாறனும்?????
 
----------------------------------------------
6.
kolaaru இந்த சீட்ட வாங்குறதுக்கு எதுக்கு ஐவர் குழு,வெண்ணிலா கபடி குழுவே போதும் இத வாங்குறதுக்கு

---------------------------------------------
7.
Aaryan66 ஒதுக்கிய தொகுதியில் ஜெயிக்க வைக்க வில்லையென்றாலும் சிபிஐ பாயுமோ?


-----------------------------------------------

8.
karaiyaan அவமதித்து விட்டார் ஜெ.- கார்த்திக் 'பரபரப்பு' பேட்டி / எப்ப மதித்தார் தற்போது அவமதிக்க! RT @Kaniyen

--------------------------------------


http://www.idlebrain.com/movie/photogallery/anjali/images/newpg-anjali9.jpg
9. isr_selva வளையல்கள் கணக்கிட்ட முத்தங்களின் எண்ணிக்கையை, கொலுசுகள் மறுத்துக் கொண்டிருக்க, நானும் அவளும் முத்தங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

 ------------------------------

10.
iamkarki வைகோ மேல‌ உன‌க்கு என்ன‌ கோவ‌ம்னு கேட்ப‌வ‌ர‌க்ளுக்கு.. உங்க‌ளுக்கு ஏன் கோவ‌மில்லைன்னு சொல்லுங்க‌ முத‌ல்ல‌.
 
------------------------------------------


11.
UVMP 25-30 தொகுதியில் போட்டியிடுவோம்-கார்த்திக்//என்ன பொசுக்குன்னு சொல்லிடீங்க, அவ்வளவு பேருக்கு எங்க போவது,இது என்ன நம்ம கட்சி மாநாடா
 
--------------------------------------------


12. 
kanapraba விக்ரமன் மீண்டும் "இளமை நாட்கள்" என்ற படத்தை இயக்குகிறாராம், நலிவடைந்த லலாலா கோரஸ் பாடகர் சங்கம் நன்றி நவில்கின்றது

--------------------------------------------  http://tamil.galatta.com/entertainment/photogallery/tamil/actress/Anjali/anjali-new05.jpg
13. kolaaru ஜெயிச்சா வீட்டுக்கொரு வாஷிங் மெஷின்-மன்சூரலிகான் # ஜெயிக்கலேனா வீட்டுக்கு வந்து கையால துவச்சு கொடுப்பாரு வாரமொருமுற





--------------------------------------------------


14.
thennarasu எவ்வளோ கொடுத்தாலும் வாங்கிப்பாரு...வைகோ ரொம்ப நல்லவருன்னுட்டாங்கய்யா அம்மா! 


-------------------------------------


15. navi_n திருமணத்தின் முன்பே தம்பதிகள் ஆனாலும் திருமணத்தின் பின் மருந்துக்குக் கூட காதலர்கள் ஆக மறந்துவிடுகிறார்கள்.


டிஸ்கி - எனக்கு இப்போ சூர்யனின் பார்வை உச்சத்தில் இருப்பதால்( சூர்யக்கதிர் புக் அல்ல) நேரம் சரி இல்லை என சித்தோட்டு ஜோதிடர் எச்சரித்து உள்ளார்.. எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றாலும் சொன்ன ஜோதிடர் நண்பர் என்பதால் அதற்கு கட்டுப்பட்டு நோ டிஸ்கி.. ஹி ஹி 

Tuesday, March 08, 2011

நமீதா பாவம்... மீ பாவம்

http://www.oopps.info/wp-content/uploads/2009/05/hot-namitha-wallpaper-3.jpg
1. தலைவர் சினிமா அதிகம் பார்க்கறதில்லை போல... ..

எப்படி சொல்றே..?

படத்துல நமீதாவைப்பார்த்துட்டு “ பாவம், ரொம்ப ஏழை போல.உடுத்திக்கவே நல்ல டிரஸ் இல்லாம கஷ்டப்படறார்,அரை குறையா டிரஸ் பண்றார்னு வருத்தப்படறாரே...?

-----------------------------
2. என்னது ? மேடைல தலைவர் எழு ,மேலே சிரிப்பு நிகழ்ச்சி வழங்கறாரா?

அதான்பா, ஸ்டேண்ட் அப் காமெடி... ( STAND UP COMEDY)

------------------------
3.  ஏம்மா .. பொண்ணு .. இந்தா டிக்கெட்.. வாங்கிக்க...

சாரி.. கண்டக்டர் சார்.. வெளில தனியா போறப்ப யார் எது குடுத்தாலும் வாங்கிக்கக்கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்கு....

-----------------------------

4.சைபர் கிரைம்ல தலைவர் சம்பந்தப்பட்டிருப்பார்னு எப்படி சொல்றே..?


அவருதான் எல்லா விஷயத்துலயும் பூஜ்யம் ஆச்சே..?

---------------------------------

5. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்கன்னு மணமக்களை வாழ்த்தி தலைவரு 16 சீட் வேணும்னு சூசகமா கூட்டணிக்கட்சித்தலைவருக்கு உணர்த்திட்டாரே....

நோ யூஸ்.. ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம்,இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்னு சொல்லி தலைவர் சமாளிச்சிட்டாரே..

=------------------------------------------

http://www.cinehour.com/gallery/cinenews/39028028vijayalakshmi.jpg
6. கூட்டணிக்கு அழைச்ச தலைவர்ட்ட நம்ம தலைவர் ரொம்ப அல்பமா நடந்துக்கிட்டாராமே..?

சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்படும்னு கூட்டணிக்கு அழைச்சீங்களே.. அந்த கம்பளத்தை  நான் வீட்டுக்கு எடுத்துட்டு போயிடலாமா?ன்னு கேட்டுட்டார்.

-------------------
7. எனக்கு  இன்னும்  முதுகெலும்பு  முறிந்துவிடவில்லை.  10 சீட் பத்தாது-னு சொன்னது தப்பா போச்சு  தலைவரே!

ஏன்?

உங்களை  உதச்சு  முதுகெலும்பை  முறிக்க  ஆட்டோல  ஆட்கள்  வந்திருக்காங்க.

-----------------------
8. சாரி...  உங்களுக்கு 80 சீட்  தரமுடியாது.  4  சீட்தான்.

இது கூட்டணி  தர்மம்  இல்லை.  இது  கூட்டணி  பிச்சை.

----------------------
9. எதுக்காக  தியேட்டரை  பூட்டறீங்க?

திறந்தா ஆடியன்ஸ்  ஓடிடுவாங்க.

------------------------
10. தலைவர்  ஏன்  கோபமா  இருக்காரு?

கூட்டணி  பேச்சு  வார்த்தைக்கு  போனப்ப  வாசல்ல NO ENTRY போர்டு  வெச்சு  கேவலப்படுத்தீட்டாங்களாம்.

-------------------------------

டிஸ்கி (v)- மகளிர் தினத்தை முன்னிட்டு என்ன ஸ்பெஷல்?னு கேட்டவங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு நான் பெண் பார்த்த அனுபவங்கள் பற்றி ஒரு மேட்டர் போடப்போறேன்.

Thursday, March 03, 2011

ஈரோடு டாஸ்மாக் கடைகளில் நடக்கும் ஊழல்கள் + வேரோடு களையப்படவேண்டிய மோசடிகள்


http://dilipnaidu.files.wordpress.com/2010/09/tasmac-semester-1-ovbe-1.jpg 
தன்னைப்பற்றியும், தன் குடும்பத்தைப்பற்றியும் எப்போதும் சிந்திக்காமல் இப்பொழுதும், அப்பொழுதும்,எப்பொழுதும்,முப்பொழுதும் தமிழக மக்களின் நலனைப்பற்றியே சிந்திக்கும் முத்தமிழ் வித்தவர் சாரி வித்தகர் டாக்டர் கலைஞர்  மது விலக்கு சாத்தியம் இல்லை என தனது நிரந்தரக்கூட்டாளியும்,பச்சோந்தி போல் மாறும் அரசியல்வாதிகளுக்கு நடுவே மாறாத குணமும்,தனது கட்சியில் தனது குடும்ப வாரிசுகளின் ஆதிக்கம் இருந்தாலோ. வாரிசுகளுக்கு பதவி கொடுக்கபட்டாலோ நடு வீதியில் என்னை செருப்பால் அடியுங்கள் என டயலாக் பேசி வன்னியர்களின் ஓட்டைக்கவர்ந்தவருமாகிய 2011-ன் சிறந்த தியாகி டாக்டர் ராம்தாஸ் அவர்களிடம் கூறியபோது நான் கூட அதை உண்மை என்றும் வேறு வழி இல்லை போல என்றும் நம்பி இருந்தேன்.

ஈரோட்டில் உள்ள ஒரு டாஸ்மாக்கில் எனது நண்பன் டாஸ்மாக் ஊழியனாகப்பணி புரிந்து வருகிறான்.டிகிரி முடித்தவன்.ரொம்ப நாளுக்குப்பிறகு நேற்று அவனை சந்தித்தேன்.

வாப்பா.. எப்படி போயிட்டிருக்கு வேலை.. எல்லாம்?

ம் ,ம் ,நல்லா போயிட்டிருக்கு.

எவ்வளவு சம்பளம்?

பிடித்தம் போக ரூ 3000 வருது..

ரொம்ப கம்மியா இருக்கே.. எப்படி குடும்பத்தை சமாளிக்கறே,...

சம்பளம் கம்மியா இருந்தா என்ன? கிம்பளம் கிடைக்கும் அல்ல?

ஆமா... நீ என்ன ஆ ராசாவா?டெண்ட்டர்ல கையெழுத்தைப்போட உனக்கு தேடி வந்து மொய் வைக்க...?

ஆஃப் குவாட்டர் சிஸ்டம் இருக்க பயம் ஏன்?

புரியலையே....
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_q4lWGcoI_l8GCrU0aPt0hs1lU68-L1M3HpzjIp99l0lhjoBkV2m04gsagqL1nykCrxcL8RwkrPNL51WswL6AWADrS5Mq8aTkW8sr69jqmTutp5xhCRBo2FSSjkg3BFkJDqSGcgNiE2M/s400/8.jpg
தம்பி...மானிட்டர்,ஷிவா,கோல்கொண்டா,மெக் டவல்,ஓல்டுமங்க் உட்பட கிட்டத்தட்ட 45 வெரைட்டி ஐட்டம் இருக்கு.ஒவ்வொரு ஐட்டம் ஃபுல் பாட்டில்ல சீல் உடைச்சு ஒரு ஆஃப் குவாட்டரை எடுத்து ஒரு குவாட்டர் பாட்டில்ல ஊத்திக்க வேண்டியது.அப்புறம் அந்த ஃபுல் பாட்டில்ல புனல் வெச்சு தண்ணி ஊத்திட வேண்டியது.பழையபடி சீல் ஒட்டிட வேண்டியது.அவ்வளவுதான் ,மேட்டர் ஓவர்.....

அடேங்கப்பா.. குடிக்கற ஆளுங்களுக்கு தண்ணீர் கலந்திருக்கற விஷயம் தெரியாதா?

ரெகுலரா குடிக்கறவங்களுக்கு நாக்கு மரத்துடும். இது எப்படின்னா ஒரு மைசூர்பாக்கை நீ வாரம் ஒரு தடவை சாப்பிட்டா ஸ்வீட்டா இருக்கும்.தொடர்ந்து கேப் விடாம சாப்பிட்டு பாரு,நாக்கு மரத்துடும், நாக்கின் சுவை அரும்பு மொட்டூக்கள் உணர்வு சக்தியை இழந்திடும்.

சரி.. அதையும் மீறி நம்ம ராம்சாமி அண்ணன் மாதிரி மதி நுட்பமும், துல்லியமான டேஸ்ட் கண்டு பிடிப்புத்திறனும் உள்ளவங்க வந்து கண்டு பிடிச்சுட்டா என்ன பண்ணுவே..?

அந்த மாதிரி ஆளுங்களுக்கு நல்ல சரக்கா(!!!) குடுப்பேன்.

சரி.. இதுல உனக்கு என்ன வந்துடப்போவுது..?ஒரு 500 ரூபா..?

தம்பி.. நீ இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு..கிட்டத்தட்ட ரூ 3000 டூ ரூ 3500 தேறும்.

http://photo.outlookindia.com/images/gallery/20100804/wine_shop_chennai_20100816.jpg
கலைஞர் நல்லாட்சி நடத்தறார்னு சொல்லி இருந்தாக்கூட அப்படி அதிர்ச்சி அடைஞ்சிருக்கமாட்டேன்..எனக்கு தலை சுத்துச்சு...அப்போ இவனோட மாத வருமானம் மாவட்டக்கலெக்ட்டர் வாங்கற சம்பளத்தை விட டபுள் மடங்கு ஆச்சே...

சரி.. நீ எப்படி கால்குலேட் பண்ணி பணம் எடுப்பே..?குழப்பம் வராது.?

ஹா ஹா .. அப்பப்ப எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்.. உதாரணமா ஒரு ஆஃப் குவாட்டர் தண்ணி கலந்தது விற்கறேன்னா அதுக்குண்டான அமவுண்ட் ரூ 30 அல்லது ரூ 25  எடுத்து பாக்கெட்;ல போட்டுக்குவேன்.டியூட்டி முடிஞ்சு போறப்ப அந்த சில்லரைகளை(!!) எல்லாம் கல்லாவுல போட்டுட்டு 500 ரூபா நோட்டா எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவேன்..

சரி.. உனக்கு வருத்தம்னு ஒண்ணு ஏற்படவே ஏற்படாதா?

ம்.. 31 நாளும் நாமளே டியூட்டி பார்க்கனும்னு நினைப்பேன். ஆனா ஆள் மாத்தி விட்டுடுவாங்க.. 15 நாள் தான்.

அட.. பாவி.. அதை நான் கேட்கலை.. இப்படி எல்லாம் அடிக்கறமே... மனசாட்சி உன்னைக்கேள்வி கேட்காதா?


அடப்போடா.. இவனே.. நாட்ல எவன் யோக்கியனா இருக்கான்?ஒரு டிராஃபிக் கான்ஸ்டபிள்  அப்பாவி டி வி எஸ் 50 காரன் சிக்குனா ரூ 300 தேத்திடறாரு.கவர்மெண்ட் ஊழியர்கள் எல்லாரும் அவங்கவங்கவேலைல எந்த அளவு சுருட்ட முடியுமோ அதை சுருட்டீட்டுதான் இருக்காங்க.. நான் மட்டும் யோக்கியமா நடக்க நான் என்ன இளிச்சவயனா?
http://m3chennai.com/wp-content/uploads/2010/11/Lekha-Washington-hot-2.jpg
அவனை விட்டு நான் ஆஃபீஸ் போனேன்.. மேலும் சில டாஸ்மாக் கடைகளுக்கு ஃபோன் போட்டு விசாரித்தேன்.சிலர் ஒத்துக்கொள்ளவில்லை.. சிலர் யாருங்க நீங்க என கேட்டார்கள்.

நான் அனைவரிடமும் எனது நண்பனின் தங்கைக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகி இருக்கு. மாப்பிள்ளை டாஸ்மாக் ஊழியன். சம்பளம் கம்மியா இருக்கேன்னு நாங்க யோசிச்சப்ப மாப்பிள்ளை சம்பளம் கம்மியா இருந்தா என்ன? சைடு வருமானம் வருதுன்னு ஒரு பெரிய தொகையை சொல்றாரு.. இது உண்மையா? என கேட்டபோது சிலர் மென்று முழுங்குனாங்க.சிலர் என்னை வம்புல மாட்டி விடாதீங்க என்றார்கள். சிலர் ஆமாங்க ஓரளவு வருமானம் இதுல இருக்கு என ஒத்துக்கொண்டார்கள்.

ஒரு கடை நிலை ஊழியனுக்கே டாஸ்மாக் கடையில் வேலை கிடைச்சா இவ்வளவு சம்பாதிக்க முடியும்னா அந்த கடையை நடத்தற கவர்மெண்ட்டுக்கு லீகலா. இல்லீகலா எவ்வளவு வருமானம் கிடைக்கும்.?

பொதுவா ஆஃபீஸ்ல வேலை செய்யறவங்க ஏதாவது சாக்கு சொல்லி லீவ் கேட்பாங்க.. ஆனா இந்த டாஸ்மாக் வேலைல இருக்கறவங்க மட்டும் லீவே எடுக்கமாட்டாங்களாம்.எடுத்தா ரூ 3000 அல்லது ரூ 4000 வருமானம் போச்ச
Delete
டிஸ்கி 1 - எனவே குடி மக்கள் பீர், ஒயின் மட்டும் குடித்து உங்கள் உடம்பை மட்டும் கெடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.அல்லது அடிச்சா ஒரு ஃபுல் குவாட்டர் இல்லைன்னா இன்னைக்கு நோ மேட்டர் என கொள்கை ரீதியான முடிவுக்கு வரவும்.

டிஸ்கி 2 - சரக்கு அடிக்கற பழக்கம் இல்லாத உனக்கு எதுக்கு இந்த சரக்கு பற்றிய ஆராய்ச்சி என கேட்பவர்களுக்கு ... நமக்கு ஊழல் பண்ணிக்கூடத்தான் பழக்கம் இல்ல ,ஆனா ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி ஆராய்ச்சி பண்றதில்லையா? அதைப்பற்றி பேசறது இல்லையா?

டிஸ்கி 3 - கட்சிகள் தங்கள் கொள்கைல இருந்து மாறி கூட்டணி அமைத்துக்கொண்டாலும் அட்ரா சக்க இணைய தளம் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து சமூக விழிப்புணர்வுப்பதிவில் கூட வ குவாட்டர் கட்டிங்க் பட நடிகை ஸ்டில் போட்டு ஆற்றிய மக்கள் தொண்டை மெச்சிக்கொள்கிறது # கலைஞர் தனக்குத்தானே பாராட்டு விழா நடத்திக்கறமாதிரி.. ஹி ஹி

டிஸ்கி 4 -Blogger Thirumalai Kandasami said...குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி. http://tasmac.tn.gov.in ,,இங்கு விலை பட்டியல்(புட்டியல்) ,சரக்கு நிலவரம் அனைத்தும் கிடைக்கும். TASAMC அரசு வருமானம் Just a simple calculation of Tamilnadu Government - TASMAC sale per day,based on following URL. http://new.vikatan.com/news.php?nid=467 Daily Beer usage - 73,800 case So total Beer Bottles - 73800 * 12 - 885600 Approx cost ,70 Rs per bottle - 885600 * 70 - 6,19,92,000 Beer sales (per day)- 6 Crore and 19 Lakhs and 92 Thousands - 20 % of Whole sale So Approx Total sales(per day) - 30,99,60,000 Approx total - 31 Crores per day !!! Total sales in USD per day - 6866002.2148 $