1. பிரதமர் மன்மோகன் சிங்: தவறான கணிப்பின் காரணமாக, மத்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டுவிட்டார். இதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
உங்களுக்கு அந்த அளவுக்கு பவர் இருக்கா..? சொக்கத்தங்கம் சோனியா ஓக்கே சொல்லீட்டாங்களா?
------------------------------------------
2. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி: காங்கிரஸ் கட்சி, ஒழுக்கக் கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடித்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டவர்கள் போட்டியிடாமல் ஒதுங்கியிருக்க வேண்டும்.
ஒழுக்ககட்டுப்பாடுன்னா.. என்ன அர்த்தம்? தலைமைக்கு தெரியாம எந்த ஊழலையும் பண்ணக்கூடாதுன்னு அர்த்தமோ?
-----------------------------------------------
3. மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்: மார்க்சிஸ்ட் கட்சி ஊழல், தாராளமயமாக்குதல் ஆகியவற்றுக்கு எதிரானது. ஆகவே, தி.மு.க.,வுடன் உடன்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. அ.தி.மு.க.,. தரப்பில் இருந்து தேர்தல் உடன்பாடு குறித்து பேசுவதற்காக மார்க்சிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளது. இரு கட்சிகளின் குழுவினரும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச இருக்கிறோம்.
வெற்றி வாய்ப்பு உள்ளவருடன் மட்டுமே கூட்டணிங்கறது உங்க கொள்கை போல...
---------------------------------------------------------
4. மத்திய உரத் துறை அமைச்சர் அழகிரி பேட்டி: தி.மு.க., - காங்கிரஸ் நல்லுறவில் விரிசல் என்று, ஊடகங்களில் தான் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனால், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில், எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை; இரு கட்சித் தொண்டர்களும், இணைந்து பணியாற்றுவோம். எங்கள் கூட்டணி மக்கள் ஆதரவுடன் மகத்தான் வெற்றியைப் பெறும்.
அதெல்லாம் சரி.. உங்களுக்கு அப்புறம் வந்தவங்க எல்லாம் ஏகப்பட்ட ஊழல்ல மாட்டி இருக்காங்க.. நீங்க வெறும் வாய்தான்.. இது வரை ஒரு ஊழல்ல கூட மாட்டலையே.. அம்புட்டு நல்லவரா நீங்க..?
-------------------------------------------------
5. என்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேச்சு: முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு எனக்கு கட்சித் தலைமை கட்டளையிட்டது. கட்சித் தலைமையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அப்பதவியை ராஜினாமா செய்தேன். அதன் பின் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில், காங்கிரஸ் ஆட்சி கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில், மக்களுக்கு எந்த புதிய திட்டங்களும் அமல் செய்யவில்லை. பொய்யான குற்றச்சாட்டுக்களை என் மீது சுமத்தி முதல்வர் பதவியில் இருந்து என்னை விலகுமாறு கூறிய சோனியா, தற்போது நடக்கும் மோசமான ஆட்சியை கண்டிக்கவில்லை.
எப்படிய்யா கண்டிப்பாங்க..?ஒரு அயோக்கியனை மிரட்டனும்னா முதல்ல நாம யோக்கியமா இருக்கனும்...
---------------------------------------
6. மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் பேட்டி: இரு ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஒரு பணியிலுள்ள அதிகாரி ஆகிய மூன்று பேரை சி.வி.சி., பதவிக்கு பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பரிந்துரை செய்தது. இந்த விஷயத்தில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இது குறித்து பிரதமர் கூறியிருப்பது மிகச் சரியானது. எல்லாவற்றையும் அவரே போய்ப் பார்க்க முடியாது. அவர் முன், என்னென்ன விவரங்கள் வைக்கப்பட்டனவோ அவற்றைக் கொண்டுதான் அவர் முடிவெடுக்க முடியும்.
ஆமாமா.. எல்லாத்தையும் அவரே பார்க்க முடியாதுதான்.. ஆனா பேசுனபடி கமிஷன் தொகையை மட்டும் சரியா தராம டபாய்ச்சசிடறாங்க.. அதான் இப்போ பிரச்சனை
--------------------------------------
7. முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா பேச்சு : தேர்தல் நேரத்தில் கட்சியினர் உண்மைகளை திரித்துக் கூறுவதை தவிர்த்தால், பிரச்னைகள் வருவதை தடுக்கலாம். ஜாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையில், கட்சியினரின் பேச்சு அமையக் கூடாது.
ஜாதி ஓட்டுக்களை எப்படித்தான் அவங்க வாங்குவாங்க பாவம்..?நல்ல ஜாதில பொறந்திருந்தா எதுக்கு ஜாதி அரசியலுக்கு வர்றானுங்க..?
----------------------------------
8. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: அரசின் நல்ல திட்டங்களை வரவேற்றோம்; பிடிக்காத திட்டங்களை எதிர்த்தோம். டாஸ்மாக், சாராயம், லாட்டரியை எதிர்த்தோம். இனி வரும் காலங்களிலும் தொடர்ந்து எதிர்க்கத்தான் போகிறோம்; இது நம் கொள்கை. இதை மாற்றிக் கொள்ள முடியாது.
ஏம்ப்பா அவ்வளவு கஷ்டம்.. ஏன் கூட்டு சேர்றீங்க? நீங்க சொல்றது எப்படி இருக்குன்னா பொண்டாட்ட்டி நடத்தை தவறுனா கண்டிப்போம்னு சொல்ற மாதிரி இருக்கு. காலுக்கு ஆகாத செருப்பு எதுக்கு.. யோக்கியமா இருந்தா அதை கழட்டி எறிய வேண்டியது தானே,..?
-------------------------------------------
9. வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் பேச்சு: கிராமப்புறங்களில், வேலை வாய்ப்பை பெருக்க வேண்டும். இதுவே, பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை. தற்போது, தகவல் தொழில்நுட்பமானது, நகரங்களை மையப்படுத்தியே உள்ளது; இது, கிராமங்களை சென்றடைய வேண்டும். தகவல் தொழில்நுட்பத்தின் இத்தகைய மாற்றம் தான் உலகளவில் இந்தியாவை உயர்த்த உதவும்.
கவர்னர் ஆட்சி வந்தாத்தான் தமிழனுக்கு நல்ல காலம் பொறக்கும். இந்த அரசியல்வியாதி வந்தானுங்கன்னா சுரண்டீட்டே தான் இருப்பாங்க..சுரண்டுற அளவு மாறும், ஆனா சுரண்டறது மாறாது..
-------------------------------------
டிஸ்கி -1 : இன்று டிஸ்கில எந்த மேட்டரும் இல்ல.. ஏன்னா பதிவுங்கறது நாம போய்ப்பார்க்கற பொண்ணு மாதிரி.. டிஸ்கிங்கறது பொண்ணுக்கு தோழி மாதிரி.. சும்மா சப்போர்ட்டுக்கு.. ஆனா நம்மாளுங்க என்ன பண்றாங்க ? பொண்ணை விட பொண்ணோட தோழி நல்லாருக்கே அப்படின்னு கமெண்ட் பண்ணிடறாங்க..ஹி ஹி
டிஸ்கி 2 - பாருங்க அட்ரா சக்க போடற டிஸ்கி ல கூட கருத்து இருக்கு.. நாம தெரிஞ்சுக்க வேண்டிய நீதி என்னான்னா பொண்ணு பார்க்கப்போறப்ப பொண்ணோட தோழியையோ, பொண்ணோட தங்கையையோ சைட் அடிக்கறது தப்பு...அப்படியே அடிச்சாலும் அதை வெளில சொல்லக்கூடாது.. ஹி ஹி