கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் தங்கும் விடுதியில்
10-க்கும் மேற்பட்ட மாணவிகள் சில மாதங்களுக்கு முன்பு பலாத்காரம்
செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி
காப்பாளர் மற்றும் சமையல்காரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீஜாப்பூர் மாவட்டம் சிந்தகி அருகே அலமேல் பகுதியில் 'கித்தூர் ராணி
சென்னம்மா' பெயரில் அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்குள்ள விடுதியில்
6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை 152 மாணவிகள் தங்கி
பயில்கின்றனர்.
இந்த விடுதியில் உள்ள மாணவிகள் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக கடந்த
3 ஆண்டுகளாக புகார் வந்துள்ளது.ஆனால் இது தொடர்பாக விடுதி காப்பாளரோ,
தலைமையாசிரியரோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ மாணவிகளிடம் உரிய விசாரணை
மேற்கொள்ளவில்லை.
10-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம்
இந்நிலையில் அங்குள்ள மாணவிகள் சிலர் ஒன்று சேர்ந்து, கடந்த ஒரு
மாதத்திற்கு முன்னர் சிந்தகி மகளிர் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடிதம் எழுதி
யுள்ளனர். அதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை மகளிர் காவலர்கள் சிலர்
அரசினர் விடுதியில் உள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது
மாணவிகளில் சிலர், 'விடுதி சமையல்காரர் விஜயகுமார் என்டுமனே(33) மாணவிகளை
மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், சிலருக்கு தொடர்ந்து பாலியல்
தொல்லை அளித்து வருவதாகவும்’ கூறியுள் ளனர்.
இந்த தகவல் வெளியானதும் பீஜாப்பூர் கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும்
காவல்துறை அதிகாரிகள் விடுதிக்கு விரைந்தனர். மாணவிகளிடமும், சுற்றுப்பகுதி
மக்களிடமும் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாணவிகள் அளித்த
புகாரின் அடிப்படையில் விடுதியின் சமையல்காரர் விஜயகுமார் என்டுமனே கடந்த
வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விடுதி காப்பாளர் ஹிரேமட் உதவியுடன்தான் அவர் இத்தகைய கொடும் செயலை
செய்துள்ளார் என்பதால், விடுதியின் காப்பாளரும் கைது செய்யப்பட்டார்.அரசு
உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியர் கத்தியப்பா இதனை கண்டிக்க தவறியதால்
அவரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.
போராட்டம்
அரசு விடுதி மாணவிகளுக்கு பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சம்பவத்தை
கண்டித்து, அலமேல் பகுதியில் உள்ள கடைகள்,அலுவலகங்கள் அனைத்தும்
மூடப்பட்டன.பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பேருந்துகள் அனைத் தையும்
நிறுத்தி முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.
உரிய நடவடிக்கை வேண்டும்
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பு ஆணைய தலைவி சுனந்தா,பாதிக்கப்பட்ட மாணவிகளை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,''இந்த சம்பவம் பல ஆண்டுகளாக நடந்து வந்திருப்பது தெரிய வருகிறது.
அரசு விடுதியில் தங்கியிருந்தவர்கள் அனைவரும் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை
மாணவிகள்.பயத்தின் காரணமாக தங்களுக்கு ஏற்பட்ட கொடுமையை பற்றி யாரிடமும்
சொல்லாமல் இருந்திருக்கிறார்கள். விடுதி காப்பாளரிடமும்,ஆசிரியர்களிடம்
இதுபற்றி கூறிய போது,'வெளியே சொன்னால் டிசி கொடுத்துவிடுவேன்'என
மிரட்டப்பட்டுள்ளனர்.
எத்தனை மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.
10-க்கும் மேற்பட்டவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டிருக் கலாம் என தெரிகிறது.
இது தொடர்பாக கர்நாடக அரசு தனிக்குழு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும்''என்றார்.
- கர்நாடக மாநிலஅரசு செயலாளர் மீது பாலியல் வழக்குத் தொடர்ந்து அதில் அவரை முதல் பிரதிவாதியாகச் சேர்த்தால் போதும். மாநிலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாது.Points620
- kusumbanஇந்த விடுதியில் உள்ள மாணவிகள் அடிக்கடி பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக கடந்த 3 ஆண்டுகளாக புகார் வந்துள்ளது.============இந்த செய்தியை சற்று மாற்றி படித்துப்பாருங்கள் 3 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது இதுவரை எந்த தண்டனையும் கொடுக்கப்படவில்லை.இது தான் தனி மனித சுதந்திரம் வாழ்க வலுவுள்ளவர்கள்.Points915
- Raja Rajanஇதுபோன்ற தவறுகளை செய்பவர்களுக்கு சவுதி அரேபியாவில் வழங்கப்படும் தண்டனைதான் சரியானது.இதுபோன்ற தண்டனைகள் இந்த பிரச்னைக்கு தீர்வாகாது என்று படித்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கக்கூடும்,ஒருமுறை பொது இடத்தில் வைத்து மூவருக்கு அதேபோல் தண்டனையை வழங்கிதான் பாருங்களேன்.அதன்பிறகு எவனுக்கு இதுபோன்ற தவறுகளை செய்ய துணிச்சல் வருகிறது என்று பார்ப்போம்.60 வருடத்திற்கு முன்பு இயற்றப்பட்ட பழைய சட்டத்திட்டங்களை இன்றும் பின்பற்றுவதை நிறுத்துங்கள்.thanx - the hindu