Showing posts with label அம்மா உணவகம். Show all posts
Showing posts with label அம்மா உணவகம். Show all posts

Monday, June 02, 2014

தமிழகம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்களை திறக்க முதல்வர் ஜெ உத்தரவு

மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் உள்பட மாநிலம் முழுவதும் புதிதாக 360 அம்மா உணவகங்களைத் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 



இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், " 'குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசினை நானிலமே போற்றும்' என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கிணங்க, தமிழகத்தின் தேவைகளையும், தமிழ்நாட்டு மக்களின் நாடித் துடிப்பையும் தெளிவாக உணர்ந்து, அதற்கேற்றபடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்துகின்ற அரசாக எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு விளங்கிக் கொண்டு இருக்கின்றது. 



அந்த வகையில், விலைவாசி உயர்வு என்னும் கொடூரத் தாக்குதலிலிருந்து தமிழக மக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் விடுபட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, மலிவு விலையில் தரமான உணவினை ஏழை எளிய மக்கள் வயிறார உண்ணும் வகையில், 15 அம்மா உணவகங்களை சென்னை மாநகராட்சி பகுதிகளில் 19.2.2013 அன்று நான் திறந்து வைத்தேன். பின்னர், இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவாக்கப்பட்டது. 



மக்களின் விருப்பத்தினைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள பிற மாநகராட்சிப் பகுதிகளிலும், சென்னையில் உள்ள அரசு பொது மருத்துவமனையிலும் 'அம்மா உணவகங்களை' காணொலிக் காட்சி மூலம் நான் திறந்து வைத்தேன். 



தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 203 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனை, கஸ்தூரிபாய் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகங்கள் அமைப்பதற்கான கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 



மதுரை மாநகராட்சியில் 11 அம்மா உணவகங்களும், இதர மாநகராட்சிகளில் தலா 10 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் தற்போது 294 அம்மா உணவகங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. 



இந்த அம்மா உணவகங்களில், காலை 7 மணி முதல் 10 வரை இட்லி, சாம்பார் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகின்றன. 



சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில், காலை சிற்றுண்டியின் போது, இட்லி தவிர, பொங்கல், சாம்பார் ஐந்து ரூபாய்க்கும்; மதிய உணவின் போது, எலுமிச்சை சாதம் அல்லது கறிவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும்; மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள், அன்றாட கூலி வேலை புரிபவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். 



விலைவாசி உயர்விலிருந்து ஏழை, எளிய மக்களைப் பாதுகாக்கும் இந்த அம்மா உணவகங்கள் குறித்து அகில உலக அளவில் பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. 




புதிதாக 360 உணவகங்கள்


 
ஏழை, எளிய மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கும் அம்மா உணவகங்களின் பயன் பிற நகர்ப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, அடுத்தகட்டமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளில் கூடுதலாக தலா ஒரு அம்மா உணவகம் வீதம், 200 அம்மா உணவகங்கள்; ஏற்கெனவே அம்மா உணவகங்கள் நிறுவப்பட்ட மதுரை, வேலூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர்த்து, ஏனைய மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் தலா ஒன்று வீதம் 27 அம்மா உணவகங்கள், 124 நகராட்சிகளில் 129 அம்மா உணவகங்கள்; திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளில் தலா ஒன்று வீதம், 



2 அம்மா உணவகங்கள்; கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகராட்சிகளில் கூடுதலாக தலா ஒன்று வீதம் 2 அம்மா உணவகங்கள் என மொத்தம் 360 புதிய அம்மா உணவகங்களை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன். 



இந்த அம்மா உணவகங்கள் விரைவில் செயல்படத் துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்மா உணவகங்களுடன், இவற்றையும் சேர்த்து, மொத்தம் 654 அம்மா உணவகங்கள் மக்களின் தேவையை நிறைவு செய்யும். 



எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, மலிவான விலையில் தரமான உணவை மேலும் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பெற வழி வகுக்கும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 




 
 
  • pandaram  from Kumar
    பேசாம எல்லா நியாயவிளைக்கடைகளியும் அம்மா உணவகமாக மாத்திட்ட தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் வேலை செய்ய வேண்டிய அவசியம் இராது.
    about 14 hours ago ·   (2) ·   (4) ·  reply (0) ·  promote to News Feed
  • ANTHONY  from Perth
    நல்ல திட்டம் .
    about 13 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ப.கவிதா குமார்  
    தமிழகத்தில் இதுவரை செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களுக்கு ஏன் தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லையென்று கேட்ட கேள்விக்கு பதில் தர முடியாத முதல்வர், மேலும் கடை திறக்கப்போகிறேன் என ஏமாற்றுகிறார். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல மாநகராட்சிகளின் நிதியை எடுத்து அம்மா உணவகம் நடத்துகிறார். மக்கள் மீது பாசம் கொண்டவர் ஜெயலலிதா என்றால், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளின் ஒரு நாள் வசூல் பணத்தை வழங்கத் தயாரா? - ப.கவிதா குமார்,மதுரை.
    about 12 hours ago ·   (4) ·   (1) ·  reply (0) ·  promote to News Feed
    tknithi   Up Voted
  • Naresh  
    அம்மா உணவகங்களைத் கிராமம் , பஞ்சயாத் பகுதியில் துவங்கினால் அ.தி .மு.க , வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும்.
    about 11 hours ago ·   (3) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • dandy  
    தமிழா நாட்டில் மாத சாராய விற்பனை 90 கோடி அம்மாடியோவ் ....இதை தொடக்கி ..இலவச சாராயம் கொடுத்த கோபாலபுரம் கோமாளி யால் மக்கள் பட்டினி ...இந்த அம்மா உணவகங்கள் அவர்கள் வயிற்ரை நிரப்பட்டும்
    about 10 hours ago ·   (1) ·   (5) ·  reply (0) ·  promote to News Feed
    kailawsh   Down Voted
  • ramakrishnan  from Chennai
    மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரிக்க வேண்டும் ,விலை வாசி குறைய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதுதான் சிறந்த அரசு நிர்வாகம் அதை விடுத்து இட்லி கடை தண்ணி வியாபாரம் ,மக்கள் வரிப்பணத்தில் செய்துவிட்டு ,தமிழ்நாட்டு மக்களை முட்டாள்கள் ஆக்க வேண்டாம்
    about 9 hours ago ·   (6) ·   (3) ·  reply (0) ·  promote to News Feed
  • saravanan  from Chennai
    ஒருவேளை அதிமுகாவின் மகத்தான வெற்றிக்கு இதுதான் காரணமாக இருக்குமோ? என்னதான் நாம் இந்த திட்டத்தை பற்றி குறை சொன்னாலும், இப்போது உள்ள விலைவாசியில் அடித்தட்டு மக்களுக்கு இந்த உணவகங்கள் ஒரு வரப்ரசாதம் தான்.
    about 9 hours ago ·   (6) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Vasudevan Venugopal  
    அட்ரா சக்க. எகிப்து பாதுஷா அம்மா கட இட்லியை சாம்பார்ல கொழச்சி அடிச்சாலும் அடிச்சாரு, நமக்கு அடிச்சுது சான்சு. இப்ப கூடுதலா 360 கட. ஒரு கடையில பொங்கல்னா இன்னொரு கடையில சப்பாத்தி!! கொண்டாட்டம்தான். உலகம் போற்றும் அம்மா வாழ்க. இனி திமுக அவ்வளவுதான் போல!!
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • Dorairaj Anandaraj  from Mumbai
    தனது கட்சியினரை வாழ்விக்க உருவாக்க பட்ட திட்டம்.சி.எ.ஜி. தணிக்கை செய்து அரசு ஏற்பாட்ட இழப்பினை தெரிவிக்க வேண்டும். இது பிச்சைக்கு போவது போல் உள்ளது. ஏழ்மையின் அடையாளம் தானே.
    about 9 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  •  from Chennai
    அதென்ன 360 கூடு தொகை 9 ல வருது ?? இந்த அறிவிப்பு 37 தொகுதியில வெற்றி பெற்றுவிட்டோம் என்பதற்கு நேர்த்திகடனா ?மக்கள் காசிலேயே மக்களுக்கு அல்வாவா ??
    about 8 hours ago ·   (1) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • செந்தில் kumar  from Chennai
    திறந்து வைத்தார் சரி சாப்பிட்டாரா ??????????????????//
    about 8 hours ago ·   (0) ·   (0) ·  reply (0) ·  promote to News Feed
  • ஜெய்.ரமணா  from Chennai
    எந்த நம்பூதிரியின் கட்டளையோ தெரியவில்லை ? அப்படி நம்பூதிரியின் கட்டளையாக இருந்தால் இப்படி மக்களின் வரி பணத்தில் செய்யாமல் தனது சொந்த காசில் (60 ரூ .சம்பளத்தில் 69 கோடி சேர்த்த ) செய்து அம்மா உணவகம் ,இல்லைனா "ஜெயா உணவகம் " ன்னு பேர் வச்சு கிட்டா இன்னும் புண்ணியம் அதிகமாக கிடைக்கும் அல்லவா ?அப்படியே அறிவிக்கிறதும் அறிவிக்கிறீங்க ஜூன் 3 ம் தேதி அறிவிச்சா போனா போயிட்டு போகுது அந்த ஆளுக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைக்கும் இல்ல !
    about 8 hours ago ·   (2) ·   (2) ·  reply (0) ·  promote to News Feed
  • vsankar Sankar  from Chennai
    rationil வழங்கப்படும் விலை இல்லா அரிசிக்கும் மலிவு விலை பருப்புkகும் ஆபத்து தான்.
 நன்றி - த இந்து