ஐதராபாத் :"" நம் நாட்டுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக,
பெண்கள், நள்ளிரவில், இஷ்டத்துக்கு சுற்றித் திரியக் கூடாது,'' என, ஆந்திர
மாநில காங்., தலைவர் சத்யநாராயணா கூறியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை
அடுத்து, தான் பேசியதற்கு, அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன்.
ஆந்திர மாநில, காங்., தலைவரும், மாநில போக்குவரத்து அமைச்சருமான, பொஸ்தா சத்யநாராயணா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:நம் நாட்டுக்கு, நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்தது உண்மை தான். அதற்காக, நள்ளிரவில், ஊர் சுற்றக் கூடாது. குறிப்பாக, பெண்கள், நள்ளிரவில், வெளியில் சுற்றுவது, ஆபத்தானது. நள்ளிரவு நேரங்களில், தனியார் பஸ்களில் பயணிக்காமல் இருப்பதும், நல்லது தான்.இவ்வாறு சத்யநாராயணா கூறினார்.
இவரின் பேச்சுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக, பல்வேறு அரசியல் கட்சியினரும், எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, மாலையில், மீண்டும் செய்தியாளர் கூட்டத்தை கூட்டினார். அப்போது, அவர் கூறியதாவது:நானும், ஒரு தந்தை தான்; எனக்கும், குழந்தைகள் உள்ளன. ஒரு தந்தையாக, என் கோபத்தை வெளிப்படுத்தினேன்.
டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவம், என்னை மிகவும் பாதித்துள்ளது. இது,
கண்டனத்துக்குரியது. நாட்டையே, இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. நான்
தெரிவித்த கருத்து, பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதற்காக
வருந்துகிறேன். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு,
மத்திய, மாநில அரசுகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சத்யநாராயணா
கூறினார்.
மக்கள் கருத்து
1. இவர் கூறிய கருத்து மிக மிக சரி. பெண் சுதந்திரம் என்று கூறி கொண்டு சும்மா
இருக்கும் பெண்களை உசுப்பேற்றி அவர்களை சுதந்திரமாக நடமாட விட்டு அவர்களை
ஒரு VULNERABLE SITUATION க்கு தள்ளி விடுவார்கள். சுதந்திரம் சுதந்திரம்
என்று பெண்கள் மனதில் ஆழ பதிந்து,, என்ன செய்தால் என்ன எந்த நேரத்தில்
யாருடன் எங்கே சுற்றினால் என்ன? போன்ற கேள்விகள் மனதில் தோன்றி இதை போன்ற
விஷ பரிட்சைகளில் இறங்கி கடைசியில் மானத்தையும் உயிரையும் கூட
இழக்கிறார்கள்.
இனியும் பெண்கள் இதை போன்ற சுதந்திர போக்கை கடைபிடித்து
பாதிப்படைந்தால், பாதிக்கப்பட்ட இந்த ஒரு பெண்ணுக்காக இன்று போராடும்
மாணவர்கள் கூட திரும்பி பார்க்க மாட்டார்கள். பெண்களே நீங்கள் சுதந்திரமாக
இருங்கள் ஆனால் அதற்கு ஒரு நேரம் காலம் வைத்திருங்கள். முடிந்தவரை
பெற்றோர்களுடனோ அல்லது கூட பிறந்தவர்களுடனோ மட்டுமே செல்லுங்கள். அவர்கள்
தான் உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் உயிரை கொடுத்தாவது
காப்பாற்றுவார்கள். நீங்கள் ஒத்து கொள்கிறீர்களோ இல்லையோ ஆனால் நீங்கள் ஒரு
WEAKER SEX . உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யார் என்ன வேண்டுமானாலும்
செய்யலாம்.
இது இயற்க்கை பெண்ணினத்திற்கு இழைத்த அநீதி. இதை புரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் என்ன தான் தைரியசாலியாக இருந்தாலும் கயவர்களின்
கைகளில் மாட்டும்போது உங்களால் எதுவும் செய்ய இயலாது. சினிமாவில்
வேண்டுமானால் கூட இருப்பவன் காப்பாற்ற வருவான். ஆனால் நிஜத்தில்
பார்த்தீர்களா?. ஆகவே உங்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு பாதுகாப்பாக
இருங்கள்.
உங்கள் பாதுகாபிற்க்கு யாரவது இதை போன்ற கருத்தை தெரிவித்தால்
அதற்கு எதிர்ப்பு காட்டாதீர்கள். யார் என்ன கூறினாலும் அது உங்கள்
நன்மைக்கே என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதை போன்ற கருத்துக்களுக்கு
எதிர்ப்பு காட்டுபவர்கள் உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்ய
மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கான சுதந்திரம்
உங்களுக்கு உண்டு. அதை ஒரு வரைமுறையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
2. நேற்று நடந்த டெல்லி போராட்டத்தில் நான் பார்த்த ஒரு வாசகம் "DONT TELL HOW
TO DRESS" இந்த மாதிரி பெண்களை என்ன சொல்வது இது இவர்களின் தவறா அல்லது
இவர்களின் பெற்றவர்களின் தவறா பெண்ணுரிமை பேசுபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு
பேசக்கூடாது.இந்த அமைச்சர் சொன்னது தப்பு கிடையாது
3. தப்பு செய்தவன் உயிருடன் நன்றாக இருக்கிறான்.. பாதிக்கப்பட்ட பெண்
உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறாள்.. அவனுக்கு கடுமையான தண்டனை
தரவேண்டும் என்று ஒரு அறிக்கை விட துப்பு இல்லை.. இங்கு சிலர் பெண்களுக்கு
சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று கூட ஐடியா
கொடுக்கிறார்கள்..
இவர்களை எல்லாம் என்ன சொல்வது? வெறுப்பாக இருக்கிறது..
பிரச்னையை சரியான கோணத்தில் அணுக கூட தெரியாத அளவிற்கு நம்மவகளின் மனது
இருக்கிறது.. கேட்டால் கலாசாரம் என்கிறார்கள் இந்த நாடு தான் பெண்களை
போற்றுகிறதா என்று சந்தேகமாக இருக்கிறது.. நீங்கள் எங்களை போற்றவும்
வேண்டாம் இப்படி தூற்றவும் வேண்டாம் எங்களை உயிரோடு விடுங்கள் அது போதும்..
4. பெண்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தை ஈர்க்கும் தன்மை படைத்தவர்கள் .ஆகவே
இரவில் தனியாக சுற்றாமல் தகுந்த துணையுடன் சென்றால் பாதுகாப்பானதே என்று
சொன்ன அமைச்சரின் வார்த்தையில் தப்பில்லை
5. அவர் கூறுவது உண்மை தானே. சுதந்திரமாக நள்ளிரவில் ஊர் சுற்றிய பெண்ணுக்கு
நடந்த கொடுமை தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்து எல்லோரும்
போராடுகிறார்களே. இனியாவது பெண்கள் சுய பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும். வருமுன் காப்பது தான் சிறந்தது. இன்று இந்த ஒரு
பெண்ணுக்காக பல்லாயிரம் மாணவ மாணவிகள் போராடுகிறார்கள். அதை ENCOURAGING ஆக
எடுத்து கொண்டு ""நமக்கு ஏதாவது ஒன்று என்றால் மாணவர்கள் போராடுவார்கள்""
என்ற தைரியத்தில் இனியும் பெண்கள் இரவு வேளைகளில் பாதுகாப்பு இல்லாமல்
நடமாடினால் விளைவுகள் இன்னமும் மோசாமாக தான் இருக்கும்.
இன்று போராடும்
மாணவர்களும் சலித்து போய் இதை போன்ற குற்றங்களை JUST LIKE THAT எடுத்து
கொண்டு விடுவார்கள். பிறகு போராட யாரும் வர மாட்டார்கள். ஆகவே பெண்களே,
உங்கள் பாதுகாப்பு முக்கியம், உயிர் மற்றும் மானத்தை விட சில மணி நேர
உல்லாசம் எந்த விதத்திலும் உயர்ந்தது இல்லை. வாழ்கையை அனுபவியுங்கள். அதை
அனுபவிப்பதற்கு உயிர் முக்கியம். உல்லாசதிர்க்காக மானத்தையும் உயிரையும்
விடாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். உங்களுக்கு நீங்கள் தான் பாதுகாப்பு.
6. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற முக்கியக் காரணமே ஆண்கள் பலர் இரவு
நேரங்களில் தெருக்களில் சுற்றிக்கொண்டும், ஆங்காங்கே நின்று அரட்டை
அடித்துக்கொண்டிருப்பதும்தான். நேரத்திக்கு அவரவர் வீட்டிற்கு
செல்லவேண்டியதுதானே.... சில நேரங்களின் வேலைக்கு சென்றுவிட்டுத் திரும்பும்
பெண்கள் அதிக பணிச்சுமை காரணமாகவோ அல்லது பஸ் கிடைக்காமலோ இரவு நேரங்களில்
தெருக்களில் வரும்போது இந்த மாதிரி ரோட்சைடு ரோமியோக்களால் நோட்டம்
விடப்படுகிறார்கள். பல நேரங்களில் யார் இவர்கள் எந்த ஏரியாவைச்
சேர்ந்தவர்கள் என்று கூட தெரியாத அளவுக்கு ஆங்காங்கே கூட்டம்போட்டு அரட்டை
அடித்துக்கொண்டும் கிண்டல் செய்துகொண்டும் உள்ளனர். பெண்களுக்கு எப்போதும்
துன்பம் இதுபோன்ற ஆண்களால்தான். மொத்தத்தில் இரவு நேரத்தில் ஆணோ பெண்ணோ
தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது தவறுதான்.
ஆண்கள் செய்யும் தவறை
ஒப்புக்கொண்டு அதற்க்கு தக்க நடவடிக்கையும் தண்டனையும் கொடுக்க வேண்டும்
என்று கூற நினைக்காமல் பல ஆணாதிக்க மனப்பான்மையுடையவர்கள் இங்கே
பெண்களுக்கெதிராக வாய்கிழிய வக்கணையாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லோரும் தங்களது வீட்டு ஆண் (மகன்)களைக் கட்டுக்குள் (பெண்களுக்கெதிரான
வன்முறைகளில் ஈடுபடாமல் - ஈவ் டீசிங், தெருக்களிலும் பேருந்து மற்றும்
ரயில் பயணத்தின் போது பாலியல் கொடுமை புரிதல், ஆங்காங்கே தேவையில்லாமல்
கூட்டம் போட்டுக்கொண்டு அரட்டை அடித்தல்) கொண்டுவாருங்கள் குற்றங்கள்
தாமாகக் குறைகிறதா இல்லையா என்று பாருங்கள்.
மாறாக நாங்கள் அப்படித்தான்
இருப்போம், செய்வோம், பெண்கள்தான் அதையெல்லாம் மீறி வேலைக்கும்
சென்றுவிட்டு வீட்டுக்குள்ளும் அடங்கி இருக்க வேண்டும் என்பதெல்லாம்
சுத்த.... சொல்லக் கேவலமான வார்த்தைகள்தான் உள்ளது.
7. ஒரு புறத்தில் நமது கலாச்சாரம் பெண்களை போற்றும் சிறப்பு உள்ளது தான்.
உலகெங்கும் பெண்களை பாலியல் பொருளாக கருதும் போது, நமது கலாச்சாரம் தான்
பெண்களுக்கு கடவுளை போன்ற ஒரு தனி இடத்தை அளித்துள்ளது. அழகு போன பின்
மனைவியை விவாகரத்து செய்து விட்டு இன்னொரு இளம் பெண்ணை மணக்கும் கொடுமைகள்
இந்தியாவில் மிக குறைவு. அது நமது கலாச்சாரத்தின் சிறப்பு அம்சம்தான், அதே
சமயம் பெண்களின் சிறகுகளை ஒடித்து கூண்டுக்குள் வைப்பதிலும் நாம் தான்
முதல்வர்கள்.
அதற்கு முதலில் பெண் என்று தெரிந்ததும் ஆற்றில் வீசி
விடுவோம், தவறி உயிர் பிழைத்து விட்டால், கல்வியை தர மாட்டோம் பின் இல
வயதிலேயே திருமணம் செய்து வைத்து ஏழு எட்டு உருப்படிகளுக்கு தாயாக்கி
விடுவோம், தப்பி தவறி படித்து விட்டால், திருமணத்தின் போது நாம் போடும்
முதல் நிபந்தனையே வேலையை விட வேண்டும் என்பது தான். மேலே கூறிய அனைத்தையும்
தவறாமல் செய்பவர்கள் திமுக காரர்கள்.
பொருளாதாரத்துக்கு கணவனை சார்ந்தே
இருக்கவேண்டிய நிலையை நமது சமுதாயம் உருவாக்கியது தவறு. வாய்க்கும்
கணவர்கள் குடிகாரர்களாய், சூதாட்ட காரர்களாய் இருந்தால் அந்த பெண்ணின்
வாழ்வை சற்று நினைத்து பாருங்கள். வெளியிலும் செல்ல முடியாது, உள்ளேயும்
புழுங்கி கிடைக்கணும். இதனால் தான் தற்கொலைகள் பெருகுகின்றன. அதில் சில
தற்கொலைகள் விவசாயம் பொய்த்ததினால் வந்தது என்று தலைவரும் குடைச்சல்
கொடுக்கிறார், இத எங்க போயி சொல்லி ஒப்பாரி வைக்கிறது ???
8. அமைச்சர் சொன்னது அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து . நான் ஒரு
சாமானியன் அதனால் இதை சொல்லமுடியவில்லை. இந்தியாவிலுள்ள கோடிக்கன்னக்கான
பெண்கள் இரவில் சுற்றினால் ஒவ்வொரு பெனிற்ற்கும் இரண்டு காவலர்களை
நியமிப்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. அமைச்சரின் கூற்றிக்கு எதிர்ப்பு
தெரிவிப்பவன் இதை உணரவேண்டும்.
மேலும் இதை எதிர்பவர்களை பார்த்து நான்
கேட்கிறேன். உன் வீட்டு பெண்களை நீ தனியாக செல்ல அனுமதிப்பாயா? மனதில்
உள்ளதை அதுவும் தத்துவத்தை வெளியில் பேசுபவனே மனிதன். இரவில் கேளிக்கை
விடுதிக்கு செல்வதையும் திருமணமாவதற்குமுன் மற்ற ஆடவருடன் சுற்றுவதையும்
நமது கலாச்சாரம் சரி என்று சொல்வதில்ல. பெண்கள்ளுக்கு சாதகமாக பேசியே
அவக்களை கயவர்களின் காமவலையில் சிக்க காரனம்மகாதீர்.
அ. கோவிந்தராஜ் - துபாய்
9.ஆந்திர அமைச்சர் பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவும்,
தானே வலிய போய் இப்படிப்பட்ட சிக்கல்களில் மாட்டிகொள்ளகூடாது
என்பதற்காகவும், நல்ல எண்ணத்தில் சொன்னதை கூட sollakoodaadhu என்றால் என்ன
சொல்வது. பெண்கள் இயற்கையாகவே மென்மையானவர்களாக படைக்கப்பட்டுள்ளார்கள்
என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என கருதுகிறேன் , மறுக்கவும் முடியாது.
நடுஇரவில் பெண்கள் தனியே செல்வதை தவிர்க்கவேண்டும் என்று சொல்வதை கூட
ஏற்றுகொள்ள முடியாது என்பவர்கள் போலியாக பெண்ணுரிமை பற்றி பேசும்
நபர்களாகத்தான் இருக்க முடியும் , அமைச்சர் பெண்கள் நடு இரவில் ஊர்
சுற்றகூடாது என்று சொன்னதால் தான் பற்றிக்கொண்டு வருகின்றது
போலிருக்கின்றது . நடு இரவில் ஊர் சுற்றகூடாது , என்பதுடன் இன்னொன்றையும்
சேர்த்துக்கொள்ளவேண்டும். அதாவது பையன்களுடன் சேர்ந்து கொட்டமடித்துகொண்டு
ஊர்சுற்றகூடாது. இது போன்று இளம்பெண்களை சூறையாடியுள்ள எல்லா
குற்றவழக்குகளிலும் ஆழ்ந்து கவனித்தால் தெரியும், அந்த இளம்பெண் , ஒரு
இளைஞ்சன், அல்லது சில இளைஞ்சன்களுடன் வந்து இருப்பார். தன் பெற்றோர்களுடன்
வந்த பெண்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நடந்ததாக அதிகளவில் செய்திகள்
இல்லை. நடுஇரவில் பையன்களுடன் ஊர்சுற்றிகொண்டிருக்கும் பெண்ணை
பார்த்தமாத்திரத்தில் , அப்பெண்ணின் காரக்டரில் குறைபாடு உள்ளவளாக
தெரிகின்றது அவர்கள் கண்களுக்கு. எனவே வம்பு செய்ய தொடங்கிவிடுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் , கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் , நாகரிகம் என்கிற
போர்வையில் எந்த அளவுக்கு தன் உடம்பை காட்ட முடியுமோ அந்தளவுக்கு
காட்டிக்கொண்டு, வாலிப பசங்களை உசுப்பெற்றிவிடுவதெல்லாம் தவறாகவே
தெரியவில்லையா? . டெல்லியில் தான் கற்பழிப்பு குற்றங்கள் அதிகமாக
நடக்கின்றது என்றால் அதற்க்கு காரணம் ,நாம் நம் இந்திய பண்பாடைஎல்லாம்
மறந்து ,மேலை நாட்டு கலாசாரத்தில் மூழ்கி முத்தெடுப்பதால் தான்.
சென்ற
ஏழெட்டு ஆண்டுகளாக சென்னையில் கூட வெளி மாநில பெண்கள் அதிகளவில் வந்து
நடமாட துவங்கியதில் இருந்து , தமிழக பண்பாடு கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்து
வருகின்றதை கண்கூடாக காணலாம் . குற்றவாளிகளுக்கு கடுமையாக தண்டனை
கொடுத்தால் மட்டுமே ,குற்றங்கள் குறையும். குற்றம் செய்தபின்பு ,
குற்றவாளிக்கு மிகவும் கடுமையான தண்டனை கொடுப்பது மட்டுமல்லாமல், குற்றம்
நடப்பதை தடுக்க பெண்களும் முன்னெச்சரிக்கையுடன் , பாதுகாப்பில்லாத
நேரங்களில் , பாதுகாப்பில்லாத இடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் .
10. இன்று நமது கலாச்சாரத்திற்கும் ஓவாத தொழில் அமைப்புகள் உருவாகி விட்டன,
பெண்களுக்கு எபொழுது பனி நேரம் என்பது சட்டத்தில் இல்லை, இரவு நீதில் பனி
செய்யும் பெண்களுக்கு உத்திரவாதம் என்ன , அரசின் உத்திரவாதம் என்ன, காவ்வல்
துறையில் பெண்கள் பனி புரிகிறார்கள், காவல் துறையிலையே சில காவலர்களை
பற்றி நாம் அன்றாடம் செய்திகள் படிக்கிறோம்,
எனிவே பெண்களுக்கு இந்த
வேலைகள் எல்லாமே ஒரு சாதனை கல் தான், ஒரு பெண் ஒரு ஆணுடன் சுற்றுவது என்பது
தனக்கு பாதுக்காப்பு என்கிற அர்த்தத்திலும் வைத்து கொள்ளலாம், இன்று ஒன்று
மட்டும் சொல்லலாம் அந்த பெண்ணும் அந்த ஆன் நண்பரும் ஒன்று மட்டும்
நிச்சயம் தங்கள் மனதில் எடுத்து கொள்வார்கள் அன்று மட்டும் அந்த பயணத்தை
மட்டு படுத்தி இருக்கலாம் என்று, அது நடக்காத ஒன்று, ஆனால் நடந்து விட்டது,
இனி என்ன செய்வது, வாய்ப்புகளை நாம் மற்றவர்களுக்கு தடுத்து விட்டால்
குற்றங்கள் இல்லை,
நம் நாட்டில் பாதிக்கும் நேரத்திற்கும் மேல் மின்சாரம்
கிடையாது உதவிக்கு இருட்டில் கூட யாரையும் கூப்பிட முடியாது, பஸ்சில்
அயர்ந்து தூங்கி விட்ட சிறுமியை ஒரு கண்டக்டர் தவறு செய்ததை சிறுவயதி ல்
படித்து இருக்கலாம், அது அரசு பேருந்து, காரணம் ப்ரெய்வெட் பஸ்களை இரவு
நேரத்தில் தடை செய்யலாம் என்று சொல்லாலாம் இரவு பஸ்சில் பெண் போலிசே
துப்பாக்கியுடன் நிறுத்தலாம்,
நன்றி - தினமல்ர்