ரொம்பப் பயமா இருக்கு!'' என்று பில்டப் பீடிகையுடன் ஆரம்பித்தார் அமலா பால்.
''என்ன ஆச்சு அமலா... எதுவும் மிரட்டலா..?''
என்று
பதறி விசாரித்தால், ''இல்லைங்க... சமந்தா, லட்சுமி மேனன்லாம் நடிப்புல
அசத்துறாங்க. கொஞ்சம் அசந்தா என்னை ஜஸ்ட் லைக் தட் காலி பண்ணிடுவாங்க.
அதான் பயமா இருக்கு!'' - கலகலவெனச் சிரிக்கிறார் அமலா பால்.
''விஜய், விக்ரம் மாதிரி சீனியர்
ஹீரோக்களுக்கும் உங்களைப் பிடிக்குது. 'ஜெயம்’ ரவி, ஆர்யா மாதிரி ஜூனியர்
ஹீரோக்களுக்கும் உங்களைப் பிடிக்குதே... எப்படி?''
''அவங்ககிட்டலாம் நானே கேட்கணும்னு நினைச்சேன். அறுந்த வாலோ...
அப்பாவிப் பொண்ணோ எந்த கேரக்டருக்கும் நான் செட் ஆகுறேன்ல... அதனாலயா
இருக்கும்!''
''ஹீரோக்கள் ஓ.கே. ஹீரோயின்கள்ல யாரெல்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்?''
''காஜல் ரொம்ப க்ளோஸ். தமன்னா நல்லாப் பேசுவாங்க. அனுஷ்கா, சமீரா...
இவங்களும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். எந்த ஹீரோயின் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்
கொடுத்தாலும் உடனே அக்செப்ட் பண்ணிருவா இந்த அமலா.''
''தமிழ்ப் படங்கள் பார்க்கிறீங்களா?''
''பார்க்காம இருக்க முடியுமா என்ன? 'டேவிட்’ வரைக்கும் பார்த்துட்டேன்.
'பீட்சா’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு சூப்பர் சூப்பர் படங்களா
வந்துட்டு இருக்கு. என் டைரக்டர் பிரபு சாலமனோட 'கும்கி’ ரொம்பப்
பிடிச்சது.''
''காதல் புரொபோசல்கள்..?''
''நிறைய வந்துருக்கு. நானும் நிறையப் பேர் கிட்ட லவ் சொல்லியிருக்கேன்.
ஆனா, அதெல்லாம் படிச்சுட்டு இருக்கிறப்போ. நான் முதன் முதல்ல காதல் சொன்னது
எப்போ தெரியுமா? சொன்னா நம்ப மாட்டீங்க. மூணாவது படிக்கும் போது. என்
க்ளாஸ்மேட் ஒருத்தன்கிட்ட என் காதலைச் சொன்னேன். அவன் என் கஸினும் கூட.
இதயம் மாதிரி வரைஞ்சு அவன்கிட்ட கொடுத்தேன். அவன் என்னடான்னா, அழுது கிட்டே
அதை வாங்கிக்காம ஓடிட்டான். நானும் பயந்துபோய் ஓடி வந்துட்டேன்.
இன்னமும்
அப்பா, அம்மா இதைச் சொல்லிச் சொல்லியே டீஸ் பண்ணுவாங்க. என் முதல் காதலே
ஃபெயிலியர் ஆன சோகமோ என்னவோ, அப்புறம் என்கிட்ட காதல் சொன்ன எல்லாப்
பசங்களையும் அழவெச்சுப் பழி வாங்கிட்டு இருக்கேன். ஆனா, சினிமாவுக்கு வந்த
பிறகு சீரியஸா யாரும் புரொபோஸ் பண்ணலை. ஹாப்பி சிங்கிளா வாழ்க்கையை
ரசிச்சுட்டு இருக்கேன்.''
''சரி... உங்ககிட்ட எப்படிக் காதல் சொன்னா பிடிக்கும்?''
''தரைல முட்டி போட்டுட்டு, கைல சிங்கிள் ரோஸ் வெச்சுட்டு கண்ல காதலோட
புரொபோஸ் பண்ணிப் பாருங்க.... அமலாவுக்கு மட்டும் இல்லை... எல்லாப்
பொண்ணுங்களுக்கும் பிடிக்கும்!'
thanx - vikadan