Showing posts with label அப்புச்சி கிராமம் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அப்புச்சி கிராமம் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, November 14, 2014

அப்புச்சி கிராமம் - சினிமா விமர்சனம்

 கோவை  மாவட்டம்  பல்லடம் அருகே  உள்ள  ஒரு கிராமம்  தான்  கதைக்களம். 10,000  டன்  எடை  உள்ள  விண்கல்  ஒண்ணு  பூமியை  நோக்கி  வந்துட்டு  இருக்குன்னு  டி வி  செய்தில சொல்றாங்க. உடனே  கிராமத்து  மக்கள்  எல்லாம் பதட்டமா  இருக்காங்க, இதை  இப்டியே காட்டினா   டாக்குமெண்ட்ரி  படம் மாதிரி ஆகிடுமேன்னு  இரு கிளைக்காதல் கதை.

ஹீரோ  ஹீரோயின்  வீட்டுல   ஒரு டைம்  கார் டிரைவரா  வேலை பார்க்கறாரு. பொதுவாவே   இந்த  லாரி டிரைவருங்க, கார்  டிரைவருங்க  எல்லாம்  வண்டியை நல்லா ஓட்றாங்ளோ  இல்லையோ  கார் ஓனர்  பொண்ணை  நல்லா  ஓட்டுவாங்க.அது  போல்  ஹீரோவும்  ஹீரோயினை  ஓட்டிட்டு  இருக்கார். ஒரு  டூயட்டும்  பாடிடறார்.


கிராமத்துல  ஒரு பெரிய  மனுசன். அவருக்கு  2 சம்சாரம். பெரிய மனுசன்னாலே  2 சம்சாரம்  இருப்பதும் அவரைச்சுத்தி  பல சமாச்சாரம்  ஓடுவதும்  சகஜம்  தானே. அவரைச்சுத்தி  கொஞ்சம்  சம்பவங்கள்  காட்றாங்க. 

 டக்னு 1  மணி  நேரத்தில்  இடைவேளை  வந்துடுது.


படம்  ரிலீஸ் ஆகும் முன் ட்ரெய்லரோ  டீசரோ  வருவது  மாதிரி  விண்கல் வரும்  முன்    அதோட  சிறு சிறு  பகுதிகள்  வந்து  விழுது. கிராம மக்கள் அதை  மாரியாத்தா  என  கும்பிட ஆரம்பிக்கறாங்க.டி வி ல  சி எம்  பேசி  மக்களை சாந்தப்படுத்தறார், மக்கள்  என்ன பண்றாங்க ?  என்ன  ஆகுது ? என்பதே  கதை.

பெரும்பாலும்  புது  முகங்கள்  தான். ஹீரோ   சுமார்  ரகம் . இன்னொரு  ஹீரோ  பரவாயில்லை. ஹீரோயின்கள்  2  பேரும் கண்ணுக்குக்குளிர்ச்சியா  தான்  இருக்கு. ஓக்கே .


படத்தின்  பெரிய  பலவீனமே  திரைக்கதை  சின்ன  சின்ன சம்பவங்களா  தனித்தனியா  அங்கங்கே  தொக்கி  நிற்பதே.விண்கல்  விழுவதால்  ஏற்படும்  விளைவுகளைப்பற்றிய  சயின்ஸ்  ஃபிக்சன் படம்  மாதிரி  எடுத்திருப்பாங்கன்னு  பார்த்தா  2 காதல்  கதைகளை   மேலோட்டமா  சொல்லி இருக்காங்க. விண்கல்  பத்தி  அதிக,ம்  இல்லாதது  ஏமாற்றம்

படத்தில் ஆறுதல்  கஞ்சா  கறுப்பும்  , சிங்கம் புலியும்  தான்   பிரமாதமான  காமெடி  இல்லைன்னாலும்  சுமாரா  இருக்கு. 


மரணம்  நெருங்கப்போவது  தெரிந்தால்  மனிதன்  மனம்  பல விதமாக  சிந்திக்கும்  ,நாட்டில்  கலவரம்  வெடிக்கும் அது  போல்   சிந்தனையில்  அதன் விளைவுகளை  படம்  பிடிக்காமல்  அசால்ட்டா  விட்டது  ஏனோ?











மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  ஏண்டா? எதிர்  பொண்ணு  வயசுக்கு வந்தாலும்  குடிக்கறே.பக்கத்து  வீட்டுப்பொண்ணு  எவன்  கூடவோ  ஓடிப்போனாலும்  குடிக்கறே


2  அவன்  ஒரு கஞ்சப்பையனாச்சே,பொண்டாட்டி பாவாடை நாடாவை அரணாக்கயிறா இடுப்புல  கட்றவனாச்சே?# அ கி

3 மனுசன்  நிம்மதியா  இருக்கத்தான் சாமி.அந்த சாமியையே  நிம்மதி இல்லாம பண்றவன் தான் மனுசன் # அ கி

4  நான்  பனங்கள்ளு  கேள்விபட்டிருக்கேன்.பாறாங்கல்  கேள்விபட்டிருக்கேன்.,அது  என்னடா விண் கல்> ?# அ கி


5 சரவணன்கற பேர்  மாத்தின பின் தான்  சூர்யா க்கு டைம் செட் ஆச்சு

 அதை  விடு. ஜோதிகா  செட் ஆச்சே? # அ கி


6  இதுவரைநான் வாழ்க்கைல ஆசைப்பட்டஎதுவும்  எனக்கு கிடைச்சதில்லை.அப்டியே கிடைச்சாலும் அது நிலைச்சதில்லை.அது போல் காதலும் ஆகிடுமோனு பயமா இருக்கு


7  இந்த மனசு  எதைப்பத்தி  அதிகம்  நினைக்குதோ அது   எப்படியும்  நடந்தே  தீரும் # அ கி

8  காந்தி  ஜெயந்தி அன்னைக்கு   எவன்  கடையைத்திறந்து  வெச்சிருக்கானோ  அவன்  கடைல வியாபாரம்  நல்லா  ஆகும் .இதுதான் பிஸ்னெஸ் ட்ரிக் # அ கி

9  ”இந்த ”  மாதிரி  விஷயங்கள் ல  ஆம்பளைங்களை  விட பொண்ணுங்க  தான்  விபரம் ஜாஸ்தி @ அ கி


10  மனிதர்கள்  அழிந்தாலும்  அவங்க  எழுதுன  புத்தகங்கள் அழிஞ்சுடக்கூடாது, பின்னால் வரும்சந்ததிக்குப்பயன்படனும்  # அ கி


 11  சுனாமி   . பூகம்பம்  மாதிரி இயற்கைச்சீற்றங்கள்  பிரிஞ்சிருக்கும்  நம்மை  ஒண்ணு சேர்த்தத்தான்  வருதோ  என்னமோ ? # அ கி 





படம் பார்க்கும்போது  போட்ட ட்வீட்ஸ்

1  அப்புச்சி கிராமம் -117 நிமிடங்கள். இந்த கிராமம்  கோவை  மாவட்டம்   பல்லடம்   அருகே  இருக்கு




2  என் கண்ணுக்குள்ளே  ஒரு சிறுக்கி  கண்ணைக்கட்டிப்புட்டாளே  இறுக்கி  செம  மெலோடி @ அ கி






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 சுஜாதா  எழுதின  கரை  எல்லாம் செண்பகப்பூ  உட்பட்ட  சில நாவல்களில்  இருந்து  சம்பவங்கள  சுட்டிருப்பசயின்ஸ்து  சபாஷ்


2 போஸ்டர் டிசைனில்  , மார்க்கெட்டிங்கில்  இது  ஏதோ  ஒரு  வித்தியாசமான   சயின்ஸ்  ஃபிக்சன்  கதை  என்பது  போல்  பில்ட்ப்  கொடுத்து ஆடியன்சை  வர  வைத்தது 

3 இசை  ஒளிப்பதிவு  எல்லாம்  சராசரி தரத்துக்கு மேலேயே  இருக்கு. 2 பாட்டு  ஹிட் ஆகும்



இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 டிரைவரா வர்ற  ஹீரோவை இன்னொரு க்கா பார்க்க  வாட்சை கார்லயே வெச்ட்டு வந்துட்டதா  பொய்  சொல்லும் நாயகி  அதை  மறைப்பா வைக்க  இடமே  இல்லாம  இடுப்புல சாவிக்கொத்து போல் வைத்திருப்பது  ஏனோ? 


2  விண்கல்  பற்றிய  சயின்ஸ்  ஃபிக்சன்  கதைல எதுக்கு   ஜவ்வு  லவ்வு கதை ? சுவராஸ்யத்துக்கு பஞ்சமா? த்ரில்லரா  கொண்டு  போய் இருக்கலாம். 


3 தெரிஞ்சோ  தெரியாமயோ  இது  முண்டாசுப்பட்டி  பட  கதைக்கருவை  நினைவுபடுத்துது

4   எல்லா   டி வி லயும்  விண்கல்  பத்தி  நியூஸ்  வந்தும்  அந்த  2 கிராம  மக்களும்  பரஸ்பரம்  அடிச்சுக்குவது  ஏனோ? கல்லை  விட்டு  எறிஞ்சது  நீங்க  தானா?   என  கேட்பது , அடிச்சுக்குவது  ஓவர்

5 படத்தின்  கடைசி  20  நிமிடங்களில்  வரும்  நல்லவைகள்  விக்ரமன பட திரைக்கதை  போல்  இருக்கு.மரண  பயம் வரும்போது  மனிதன்  பெரும்[பாலும் நெகடிவ்வாகத்தான்  சிந்திப்பான்.அது  பற்றி  தகவலோ  காட்சியோ இல்லை









சி  பி  கமெண்ட்- அப்புச்சி  கிராமம்- வித்தியாசமான சிந்தனை,ஆனால் கோர்வையான  திரைக்கதை இல்லை . புட்டுக்கிச்சு. சிரமம் . விகடன் மார்க் = 40 ரேட்டிங்=2.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - ஓக்கே



 ரேட்டிங் - 2.5 / 5



புதுக்கோட்டை  விஜய்  தியேட்டர்ல  படம் பார்த்தேன். விஜய் படம்  தான்  ஏமாத்திடுச்சுன்னு  பார்த்தா  விஜய்  தியேட்டர்ல போட்ட  படமும் ஏமாத்திடுச்சே!!