எங்க ஊர் திருவிழாக்கள்ல ஆர்க்கெஸ்ட்ரா அல்லது பட்டி மன்றங்கள் தான்
முக்கிய பங்கு வகிச்ச கால கட்டம்.. முதல் முதலா மதுரை அபிநயா நடன
நாட்டிய நிகழ்ச்சி சென்னிமலை தேர்த்திருவிழால தொடங்குச்சு.. இதுல என்ன
மாதிரி செய்வாங்கன்னா டேப்ல பாட்டு போட விட்டு அந்த பாட்டுக்கு தக்க படி
பிரபல நடிகர்கள் மேக்கப்ல, கெட்டப்ல டான்ஸ் ஆடுவாங்க..
இதுல என்ன புதுமைன்னா மேடைல ஒரு எம் ஜி ஆர் லதா கிட்டே டூயட் பாடிட்டு இருக்கும்போது இன்னொரு எம் ஜி ஆர் ஆடியன்ஸ் தரப்புல இருந்து எந்திரிச்சு வந்து மக்கள்ட்ட கை காட்டுவார்.. இன்னொரு எம் ஜி ஆர் ஏதோ ஒரு வீட்டு பால்கனில டான்ஸ் ஆடுவார் .. லைட்டை அங்கே ஜூம் பண்ணுவாங்க.. மக்கள்ட்ட அமோக ஆதரவு..
இந்த மாதிரி டான்ஸ் ட்ரூப்ல சில நடிகர்கள் சாயல்ல யார் இருந்தாலும்
அவங்களை வளைச்சுப்போட்டுக்குவாங்க.. அச்சு அசல் சத்யராஜ் மாதிரியே
இருக்கும் ஒரு பையன் செம ஃபேமஸ் ஆன தருணம் அது.. ஏன்னா ரஜினி மாதிரி ஆள் சிக்குவது ரொம்ப ஈஸி.. ஹேர் ஸ்டைலை கலைச்சு விட்டு ஒரு கூலிங்க் கிளாஸ் மாட்டி விட்டா ரஜினி ரெடி.. ஆனா இந்த மாதிரி ஆள் கிடைப்பது தான் சிரமம்.. ஆர்க்கெஸ்ட்ரால எப்படி மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்க்கு ஒரு மவுசு இருந்துச்சோ அந்த மாதிரி இந்த “போல “ நடிகர்கள் தாக்கம் அதிகமா இருந்த நேரம்..
எங்க ஊர்ல மெய்யப்பன்னு ஒருத்தர் இருந்தார்.. தி முக கட்சிக்காரர்..
அவர் அப்பாவோட பிறந்த நாள்க்கு வருஷா வருஷம் ஒரு நாள் ஸ்டேஜ் ஷோ, அல்லது டிராமா போடுவார்.. அவர் சொல்படி அந்த வருஷம் நடன நாட்டிய நிகழ்ச்சி போட ஏற்பாடாச்சு..
எனக்கு டான்ஸ் சுத்தமா வராது.. இருந்தாலும் ஏதோ ஒரு ஆர்வத்துல அந்த
ட்ரூப்ல ரிகர்சல்ல கலந்துக்கிட்டேன்.. உள்ளத்தை அள்ளித்தா பட பாடலான
அழகிய லைலா.. பாட்டுக்கு ஒன் ஆஃப் த குரூப் டான்ஸர்.. தனியா ஆடும்போது
எல்லாரும் சுமாரா ஆடி நல்ல பேர் எடுக்கலாம்.. இந்த கூட்டத்தோட கோவிந்தா
போடறது அரசியல்வாதிகளுக்கு வேணா ஈசியா இருக்குமோ என்னவோ டான்ஸர்களூக்கு ரொம்ப சிரமம்.. சின்னதா ஒரு ஸ்டெப் விட்டுப்போனாலும்
காட்டிக்கொடுத்துடும்..
அப்போ சரத்குமாரா கெட்டப் போட்டவர் ஒரு கருத்து வேறுபாடு காரணமா ட்ரூப்பை விட்டு போய்ட்டார்.. அப்போ எனக்கு ஒரு சான்ஸ் அடிச்சது.. என்
முகத்துக்கும் சரத் முகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. இதை ராதிகா
வந்துதான் சொல்லனும்கறது இல்லை , எனக்கே தெரிஞ்சுடுச்சு.. இருந்தாலும்
ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது மாதிரி நயன் தாரா
கோவிச்சுட்டு போனதும் ஹன்சிகாவை டெம்ப்ரவரி லவ்வரா லவ்வுற பிரபு தேவா மாதிரி இன்சிடெண்ட் சரத் குமார் ஆனேன்..
ஆல்ரெடி ஜிம்முக்கு எல்லாம் போய்ட்டு இருந்ததால மஸில்ஸ் எல்லாம் ஓரளவு ஏறி இருந்துச்சு.. இருந்தாலும் கமல் மாதிரி மனசுக்குள்ள ஒரு
டெடிகேஷன்க்காக வாழற மாதிரி டெயிலி ஜிம் போய் உடம்பை எல்லாம் ஏத்திட்டு இருந்தேன்..
நாட்டாமை படத்துல வர்ற கொட்டைப்பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும் பாட்டுக்கு தான் டான்ஸ்.. அதை டான்ஸ்னு சொல்ல முடியாது.. ஒரு பொண்ணு டான்ஸ் ஆடும்.. நாம சும்மா நடந்து இங்கிட்டும் அங்கிட்டும் போனா போதும்..
எனக்கு என்ன நப்பாசைன்னா ரிகர்சல் டைம்ல குஷ்பூவா வர்ற நாடக நடிகையை ஜஸ்ட் டச் பண்ணிப்பார்க்கலாம்.. அப்டினுதான்.. மற்றபடி வேற ஒண்ணும் பெரிய லட்சியம் எல்லாம் இல்லை.. ஆனா விதி பயங்கரமா விளையாடிடுச்சு...என்னன்னா ஒவ்வொரு நாளும் ரிகர்சல் அன்னைக்கு அந்த குஷ்பூவோட அம்மாவும் வந்துடும்..
கண்டிஷன் எல்லாம் பயங்கரமா போடும்.. தொடாம தான் டான்ஸ் ஆடனும், தேவை இல்லாம யாரும் மகளோட பேசக்கூடாது ( தேவை இருக்கறதால தான் பேசறோம்?)
இந்த டான்ஸ் ஆடற ஆளுங்களை விட டான்ஸ் மாஸ்டர்களுக்கு செம சான்ஸ் ..
எப்படின்னா இப்படி ஆடனும்.. இப்படி ஸ்டெப் வைக்கனும்னு..
சொல்லிக்குடுக்கும்போதே அங்கே இங்கே டச் பண்ணித்தான் பேசுவாங்க..
பார்க்கறவங்க எல்லாம் பொங்கி வழிவாங்க பொறாமைல ..
நான், அய்யப்பன், அங்குராஜ் மூணு பேரும் சதி ஆலோசனை நடத்தினோம்..
எப்படியாவது அந்த குஷ்பூவை இடுப்புல அட்லீஸ்ட் ஒரு கிள்ளாவது
கிள்ளிடனும்னு.. அதுக்கு என்ன வழி? அதான் யோசனை..
ரிகர்சல் அப்போ அவங்கம்மா தொட விடாததால டைரக்டா மேடைல டான்ஸ் ஆடறப்போ நைசா கிள்ள பிளான்..
ரிகர்சல்ல அந்த பொண்ணு யார் கிட்டேயும் பேசலை.. பொதுவா பசங்களுக்கு அவன் கூட ஒரு பொண்ணு பேசுனா அது நல்ல பொண்ணு, பேசலைன்னா அது கெட்ட பொண்ணு.. இதுதான் பெண்களுக்கான டெஃப்னிஷன்..
எல்லா ஊர்லயும் எல்லா பசங்களும் ஃபாலோ பண்ற மேட்டர் இது.. எல்லா
பொண்ணுங்களும் எல்லா பசங்க கிட்டேயும் பேசற பழக்கம் இல்லை.. சில பெண்கள் சில பசங்க நடவடிக்கை பிடிச்சிருந்தா பேசுவாங்க.. பிடிக்கலைன்னா பேச மாட்டாங்க.. பேசாத பெண்கள் மீது பசங்க கோபத்தை எப்படி காட்ட முடியும்? ஏதாவது அவதூறு பேசித்தான்.. அந்தப்பொண்ணு ராங்கிக்காரி.. உம்மணாமூஞ்சி இப்படி ஏதாவது பேசி அவனவன் ஈகோவை சமாதானம் பண்ணிக்குவாங்க..
அந்த சைக்காலஜி பிரகாரம் எங்களுக்கு அந்த குஷ்பூ பொண்ணு ராங்கா
தெரிஞ்சுது.. அந்த பொண்ணு பேர் கூட கேட்டுக்கலை.. ( அண்ட் காட்
கிரியேட்டட் விமன்( AND GOD CREATED WOMAN) அப்டினு ஒரு படத்துல ஓப்பனிங்க் சீன்ல ஒரு கப்பல்ல உளவு பார்க்க ஹீரோ ஒளிஞ்சு ஒளிஞ்சு போவார். அப்போ வேற ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு அழகி டிரஸ்ஸே இல்லாம அங்கே நிக்கும்.. ஹீரோ அவளை பார்த்ததும் மேத்தமேட்டிக்ஸ் பண்ணி மேட்டர் முடிச்சுட்டு கிள்ம்பறப்ப அந்த பொண்ணு டிரஸ் போட்டுட்டிருக்கும்.. அப்போதான் ஹீரோ கேப்பாரு - வாட் ஈஸ் யுவர் நேம்?-னு.. அப்போ தியேட்டர்ல வந்தது பாருங்க ஒரு கிளாப்ஸ்..
அந்த கிளாப்ஸ் எதுக்குன்னா பேரே தெரியாம , எந்த அறிமுகமும் இல்லாம கில்மா முடிச்சுட்டானே அப்டினுதான்.. )
இதை எதுக்கு சொல்ல வந்தேன்னா அந்த மாதிரி எந்த விஷயமும் நாங்க ட்ரை
பண்ணலைன்னாலும் அந்த பெண் கிட்டே பேர் கூட கேட்காத உத்தம பத்தினன்களா இருந்தோம்கறதை பறை சாற்றத்தான்..
எங்க சதி ஆலோசனைல எப்போ எந்த லைன் வர்றப்போ தெரியாம கை படறது மாதிரி அந்த பெண்ணை கிள்ளுவது என்பது பற்றித்தான்.. அங்குராஜ் இந்த மாதிரி வேலைல கில்லாடி.. கேடி.. அவன் ஆல்ரெடி ஊத்துக்குளி ஒரத்துப்பாளையம் அணைல இஞ்சினியரா பணி ஆற்றும்போதே 2 பேரை அட்டர் டைம்ல டாவ் அடிச்சவன் அவன் தான் எங்க கில்மா குரு.. அவன் ஆலோசனைப்படி .. ” நாக்கு சிவக்க சுண்ணாம்பு வேணும், நானும் சிவக்க அப்டிங்கற லைன் வரும்போது அந்த பெண்ணோட முந்தானை தலைப்பு இடுப்புல சொருகி இருக்குமே அதை இழுக்கற மாதிரி ஒரு ஸ்டெப்.. அப்போ டச் பண்ணிடலாம்னு..
ஆனா பாருங்க அந்த பெண்ணோட அம்மா செம விபரம்.. ரிகர்சல்லயே ஏதோ கண்டு பிடிச்சுடுச்சு.. இந்த சீன்ல அவன் முந்தானைத்தலைப்பை இழுக்க வேணாம்.. என் பொண்ணே எடுத்து விடும்.. அவன் சும்மா கையை மட்டும் அங்கே கொண்டு போனா போதும்.. அப்டினு கண்டிஷனா சொல்லிடுச்சு.. சொன்னதோட மட்டும் இல்லாம ரிகர்சல் நடக்கும்போது பக்கத்துலயே இருந்து கவனமா பார்த்துக்கிச்சு..
எங்க பிளான் என்னான்னா ரிகர்சல் அப்போதானே அவங்க அம்மாக்காரி கூட
இருக்கா? மேடைல புரோகிராம் நடக்கும்போது அப்படி க்ளோஸா வாட்ச் பண்ண
முடியாதே? அதுவும் இல்லாம மேடைல நாங்க ஆடும்போது அவங்கம்மா பின்னால மேக்கப் ரூம்ல தானே இருப்பாங்க அப்டினு நினைச்சுக்கிட்டோம்..
புரோகிராம் நாள் வந்தது.. அந்த பாட்டு வந்தப்போ நான் சரத் மாதிரி மேடைல
இங்கேயும் அங்கேயும் நடந்து கை தட்டல் வாங்கிட்டேன்.. எக்சசைஸ் பாடி
பில்டர்ஸ் எல்லாம் சாதாரணமா நடக்க மாட்டாங்க.. நல்லா நோட்
பண்ணிப்பார்த்தா இது தெரியும்.. காக்கிச்சட்டைல கமல் ஹாசன் போலீஸ்
செலக்சனுக்கு நிக்கறப்போ 2 கையையும் ஒரு மாதிரி தள்ளி வெச்சு நடப்பார்..
அந்த மாதிரி ஜிம் ஆள்ங்க எல்லாம் என்னையும் பார் என் நெஞ்சையும் பார்ங்கற மாதிரி ரோபோ மாதிரி செயற்கையா நடப்பாங்க.. நானும் அப்படித்தான்
நடந்தேன்..
இங்கே தான் நான் ஒரு தப்பு பண்ணினேன்.. மகாபாரதத்துல சிறந்த வில்லாளன்
அர்ஜூன் தான் அப்டினு ஒரு பேச்சு வந்தப்போ நானும் தான் அவர் மாதிரியே
அம்பு விடறேன்னு சொன்ன நகுலன்கிட்டே கைல அம்பு வில் எல்லாம் கொடுத்து பயிற்சியாளர் அதோ அங்கே உனக்கு என்ன தெரியுது?ன்னு கேட்டாராம் அதுக்கு அவன் :” மரம்.. அதுக்கு அருகே ஒரு ஆள், அவன் தலைல ஒரு ஆப்பிள் இருக்கு , இப்போ நான் ஆப்பிளை அம்பு வீசி கொய்யனும்னானாம்.. அதே கேள்வியை அர்ஜூன் கிட்டே கேட்டப்போ எனக்கு ஆப்பிளோட பாகம் மட்டும் தெரியுதுன்னானாம்..
அந்த மாதிரி நம்ம இலக்கு எதுவோ அது மேல தான் பார்வை இருக்கனும்கற ஒரு அர்ஜீன் பார்வையோட நான் இருந்தது தப்பா போச்சு .. அதாவது நான் அந்த
பாட்டோட ஆரம்பத்துல இருந்தே அந்தபேண்ணோட இடுப்பையே பார்த்துட்டு
இருந்தேன்.. ஏன்னா அங்கே தானே நாம கை வைக்கப்போறோம்? கேரம் போர்டு ஆடறவன் ரெட் காயினையே குறி வைப்பது போல்.. அது அந்தப்பொண்ணு பார்த்துடுச்சு..
பொதுவாவே பொண்ணுங்களுக்கு ஒரு உள்ளுணர்வு உண்டு.. 2 கி மீ தொலைவுல எவனாவது ஒரு பொறம்போக்கு அவ மாராப்பை பார்த்தா இவங்க இங்கே இருந்தே அவங்க மாராப்பை சரி பண்ணிக்குவாங்க.. அப்படி ரத்தத்துலயே விழிப்புணர்வு ஊறுன ஒரு தமிழ்ப்பொண்ணு இப்போ மேடைல இவன் ஏதோ ஏடாகூடமா பண்ணப்போறான்னு கண்டு பிடிச்சுடுச்சு..
அந்த குறிப்பிட்ட லைன் வந்தப்போ நான் என் கையை அந்தப்பொண்ணு இடுப்பு
கிட்டே கொண்டுபோனேனோ இல்லையோ அது டக்குன்னு “ அய்யய்யோ அம்மா.. கிள்ள வர்றான்” அப்டினு கத்திட்டு மேடைக்குப்பின்னால ஓடிடுச்சு..
எல்லாரும் ஸ்டன் ஆகிட்டாங்க .. அப்புறம் டக்குனு லைட்ஸ் ஆஃப் பண்ணி
எப்படியோ சமாளிச்சு வேற பாட்டு போட்டு விட்டாங்க/..
ஒண்ணுமே பண்ணாத நான் அந்த ஊர் கன்னிப்பெண்கள் பார்வைல வில்லன்
ஆகிட்டேன்.. அப்போ இருந்து இப்போ வரை என்னைப்பார்த்தாலே
வில்லனைப்பார்க்கற மாதிரி தான் பார்க்கறாங்க.. இதனால் சொல்ல வர்ற நீதி
என்னான்னா நான் ரொம்ப நல்லவன்ங்கோவ்..
குஷ்பூவை ,மேடைல யாரோ கிள்ளுனதா ஒரு நியூஸ் படிச்சப்போ இந்த
உண்மைசம்பவம் ஞாபகம் வந்தது.. மற்றபடி ஒரிஜினல் குஷ்பூவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவங்களை நான் நேர்ல பார்த்தது கூட இல்லை.. இதை படிச்சுட்டு குஷ்பூவை கிள்ளிய குணகேடன் இவனா இருக்குமோ? அப்டினு யாரும் நினைக்க வேண்டியதில்லை :)
டிஸ்கி 1 -
குஷ்பூவைக்கிள்ளிய குணகேடன் யார்? கோர்ட்டில் வழக்கு- கல கலப்பு, கை கலப்பு, கிளுகிளுப்பு http://www.adrasaka.com/2012/ 06/blog-post_648.html
எ மேன் அண்ட் 2 விமன் -http://www.adrasaka.com/2011/டிஸ்கி 2-ரெகுலராய் ஒரே பஸ்ஸில் போய் ஃபிகர்களை சைட் அடிப்பது எப்படி? ( என்னை கேவலப்படுத்திய ஃபிகர்கள் பாகம் 2 http://www.adrasaka.com/2011/