Showing posts with label அன்னக் கொடியும் கொடி வீரனும். Show all posts
Showing posts with label அன்னக் கொடியும் கொடி வீரனும். Show all posts

Tuesday, April 16, 2013

அன்னக் கொடியும் கொடி வீரனும் ஹீரோ பேட்டி


சினிமா

பாரதிராஜாவை காப்பி அடித்தேன்!

மகிமைராஜன்

பாரதிராஜாவின், ‘அன்னக் கொடியும் கொடி வீரனும்படத்தில் கொடிவீரனாக ஆடு மேய்க்கும் ஹீரோ லக்ஷ்மண், எஸ்.ஆர்.எம். யுனிவர்சிடியின் எம்.பி.. ஸ்டூடண்ட். கூடவே தமிழக அளவில் கிரிக்கெட் ஆடிய பேட்ஸ்மேன். கொடி வீரனாக கோவணம் கட்டிக் கொண்டு நடித்த அனுபவம் எப்படி இருந்தது?" - கேட்டால், வேர்ல்ட் கப் மேட்ச்ல பாகிஸ்தானுக்கு எதிரா சச்சின் அடிச்ச செஞ்சுரி போல அத்தனை த்ரில்" என்று சிலிர்க்கிறார் லக்ஷ்மண்.



எப்படி வந்தது சினிமா வாய்ப்பு?

பாரதிராஜாவுக்கும் எங்க அப்பாவுக்கும் முப்பது வருட ஃப்ரெண்ட்ஷிப். பாரதிராஜா எங்க ஊர்ல நாடகம் போடும்போதெல்லாம் எங்க அப்பா தான் முதல் பார்வையாளர். அப்புறம் பிஸினஸ்ல தீவிரமாகிட்டார். எங்க தாத்தா நிலக்கோட்டையில தியேட்டர் வெச்சுருந்தார்.


 அங்ககூட பாரதிராஜா நாடகம் நடத்திருக்கிறார். ஆனா, இதுபோல எந்த அனுபவமும் இல்லாமல் இருந்த என்னைப் பார்த்தவுடன் நடிகனாக்கிட்டார். நான் தியேட்டருக்குப் போய் சினிமா பாக்கறதே கம்மி. அப்படி இருந்த என்னை நடிக்க வர்றீயான்னு கேட்டு லீட் ரோல் கொடுத்ததுல ஆரம்பத்துல திணறித் தான் போயிட்டேன்."

முதல் நாள் ஷூட்டிங்?

ஆர்ட்டிஸ்ட் செலக்ஷனுக்கு ஸ்கீரின் டெஸ்ட் பண்ணும்போது எல்லாரும் டச்சப் பண்ணிட்டு வந்தாங்க நான் கேஷுவலாதான் போனேன். என்ன நினச்சார்னு தெரியலை என்னைப் பார்த்து யூ ஆர் செலக்டட்னு சொல்லிட்டார். அப்புறம் கேமரா முன்னாடி நடிக்கறதுலையும் திணறினேன். பாரதிராஜா எப்படி நடிச்சுக் காண்பிக்கிறாரோ அப்படியே அவரைப் பார்த்து காப்பி அடிச்சேன். சீன் ஓகே ஆயிடுச்சு.


 அவர் என்னை செட்ல பார்க்கும்போதெல்லாம் நம்பிக்கையா சிரிப்பார். நடிகனா என்னை அங்கீகரிச்சுட்டார் என்பதற்கு அடையாளம் தான் அந்தச் சிரிப்பு. பதினாறு வயதினிலே கமலுக்குப் பிறகு எனக்குத்தான் பாரதிராஜா கோவணம் கட்டிவிட்டார்."

கிரிக்கெட் கனவு?

கிரிக்கெட் கிரிக்கெட்னு ஒரு காலத்துல பதறித் திரிஞ்சேன். பாலாஜி, அஸ்வின் எல்லோரும் எனக்கு க்ளோஸ். நடிகர் விஷ்ணுகூட கிரிக்கெட்லேயும் சினிமாவுலேயும் எனக்கு சீனியர். தமிழக அளவுல எல்லா மேட்ச்லையும் ஆடிட்டேன். ஆனா, நடிக்கணும் வந்துட்டேன். கிரிக்கெட்ல டெடிகேஷன் முக்கியம். நடிச்சுட்டே விளையாட முடியாது. அதனால கிரிக்கெட் கனவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சு. கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கு. சினிமாவுல ஆல்ரவுண்டரா வர உழைக்க ஆரம்பிச்சுட்டேன்."



ஹீரோயின் கார்த்திகா?

இவங்களை நினைச்சுத்தான் ரொம்ப பயந்தேன். மும்பைப் பொண்ணு. பெரிய ஹிட் படத்துல நடிச்ச ஹீரோயின். தமிழகத்தை மயக்கி வைத்திருந்த நடிகை ராதாவின் பொண்ணு... இதெல்லாம் என்னைப் பயமுறுத்துச்சு. ஆனா, பழகறதுல கார்த்திகா பக்கத்துவீட்டுப் பொண்ணு போல அத்தனை பாந்தம். என் ஆரம்பக் கட்டக் கூச்சங்களை அசால்டா சமாளிச்சாங்க. கார்த்திகாவுக்கும் எனக்கும்தான் அதிக சீன். பல சமயங்கள்ல நான் சொதப்பியிருக்கேன் அப்போ கார்த்திகா காண்பிச்ச பொறுமை அபாரமானது."


அடுத்து?

பாண்டிராஜ், சமுத்திரக் கனி... என்று பிரபல இயக்குனர்கள் கதை சொல்லியிருக்காங்க. எதுவும் முடிவு பண்ணலை. பட் இவங்க ரெண்டு பேரையும் மிஸ் பண்ணக்கூடாது. ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்வரட்டும். பிறகு அதிகாரபூர்வமாய்ச் சொல்றேன்" - சிக்கிக்காமல் சிரிக்கிறார் லக்ஷ்மண்.


நன்றி - கல்கி