Showing posts with label அனுஷ்காசர்மா. Show all posts
Showing posts with label அனுஷ்காசர்மா. Show all posts

Saturday, December 20, 2014

PK - சினிமா விமர்சனம் (ஹிந்தி)


எப்பவும்   ஆக்சன் ஹீரோ படத்துல எடுத்ததும்  ஹீரோவைக்காட்டக்கூடாது,பெப் போகிடும்.எல்லாரையும் காட்டிட்டு எப்போ வருவார் எப்போ  வருவார்னு ஏங்க வெச்சு திடீர்னு காட்டனும்.அப்போதான்  ரசிகன் ஏய் ஓய்-னு தியெட்டர்ல  விசில் அடிப்பான்.இந்த  ஃபார்முலாவை  எல்லா  இந்திய மொழி இயக்குநர்களும் நல்லாவே  புரிஞ்சு  வெச்சு இருக்காங்க .

ஹீரோயின் சானியா மிர்சா மாதிரி  ஒரு பாகிஸ்தான்காரனை லவ்வுது. எதிர் வீட்டு ஏகாம்பரத்தை  ரூட்  விட்டாலே ஏசித்தள்ளும்  உலகம் இது.அண்டை நாடு,அதுவும் நம்ம  ஜென்மப்பகை நாட்டுக்காரனை  லவ்வுனா விட்டுடுமா?எதுக்குது( எதுக்கு  இது?-னு  கேட்கக்கூடாது.கொங்குத்தமிழ்ல எதிர்க்குது).உடனே  ஹீரோயின்  நாளைக்கே நாம  மேரேஜ்  பண்ணிக்குவோம்  வா-ன்னு கூப்பிடறா.லவ்வர்  வர்லை.நாம எந்தக்காலத்துல  மேரேஜ்னா  வந்திருக்கோம்? லவ் பண்ண , கடலை  போடன்னா  ரெடி தான்.லவ்  புட்டுக்கிட்ட சோகத்துல  இருக்கும்போதுதான்  நம்ம  ஹீரோ எண்ட்ரி ஆகறார்.

ஹீரோ  ஒரு  வேற்றுக்கிரகவாசி.அவர்  பூமியை  சாம்ப்பிள்  பார்க்க   பூமிக்கு  வர்றார். அமரர் சுஜாதா  எழுதிய  சயின்ஸ்  ஃபிக்சன்  கதைகள்  பலவற்றில்  வருவது  போல்  வேற்றுக்கிரகத்துக்கு  உண்டான   ரிமோட்டை  பூமியில்  தொலைச்சிடறார். அதைத்தேடி  அலையறார்,

எல்லாரும் கடவுள்  கிட்டே  கேட்டா  கிடைக்கும்னு  சொல்றாங்கன்னு  இவரும்  கோயில்  மசூதி  சர்ச் அப்டினு  எல்லா இடமும்  சுத்தி  அடிக்கறார். அன்பே  சிவம்  படத்துல  கமல்  என்ன என்ன வசனம்  எல்லாம்  சீரியசா   பேசுனாரோ  அதை  இவரு  காமெடியாப்பேசறாரு.


ஹீரோயின்  டி வி  சேனல்ல  இவரை  வெச்சு  டி ஆர்பி  யை  ஏத்த  நினைக்குது. நம்ம நித்யானந்தா  மாதிரி  ஒரு டுபாக்கூர் சாமியார்  மக்களை  ஏமாத்தி  சொற்பொழிவை ஆத்து ஆத்துன்னு ஆத்திட்டு  இருக்கார்.அவரை  முதல்வன் பட அர்ஜூன் - ரகுவரன்  பேட்டி  மாதிரி  மடக்கி  ஒரு  ஷோ  காட்டறார்.

 அவர்   ரிமோட்  கிடைச்சுதா?  அதை  விட  முக்கியம் அவருக்கு  ஹீரோயின்  கிடைச்சாரா? அப்படியே  கிடைச்சாலும்  ஏலியன் எப்படி   ஒரு  பூமிகாவை ( பூமியில்  இருக்கும் ஃபிகர் பூமிகா)லவ்வ  முடியும் ? என்பதெல்லாம்  மிச்ச  மீதித்திரைக்கதை.


ஹீரோவா  பாலிவுட் கமல் ஹாசன் அமீர்கான். ஆள் அசத்தல்  நடிப்பு .சார்லி சாப்ளின்  பாடி லேங்குவேஜ் ,ஜிம்  கேரியின்  துறு துறு  என  இவர்  நடிப்பின்  புதிய  பரிமாணத்தையே  தொட்டிருக்கார்.எல்லா  ஹிந்தி  ஹீரோ மாதிரி  இவரும்   டாப்லெஸ்சா  13  காட்சிகள் ல  வர்றார்.இவருக்கு  ஹீரோயின்  கூட  லிப்  கிஸ்  இல்லாதது  பெரிய  அதிர்ச்சி  ( தமிழன்  எதுக்கெடுத்தாலும்  அதிர்ச்சி ஆகிடறான் இல்ல?  )


ஹீரோயினா  அனுஷ்கா சர்மா.பாப்பா  கொழுக்  மொழுக்னுதான்  இருக்கு. ஆனா   பாப் கட்டிங்  அல்லது  பாய்ஸ்  கட்டிங்  அடிச்சாதான்   மாடர்ன்  கேர்ள்  லுக்  வரும்னு  எந்த  யுனிவர்சிட்டில  சொல்லிக்கொடுத்தாங்களோ / ?  பெரும்பாலான  சினிமா  மாடர்ன் கேர்ள்கள்  இப்டித்தான்  வர்றாங்க . ஒரு கிளுகிளுப்பே  வர  மாட்டேங்குது ?  ( எதுக்காக  கிளுகிளுப்பு வரனும் ? ) க்ளைமாக்ஸ்  காட்சியில்  நடிப்பில்  கலக்கல்  ரகம். உதடும் , புருவமும்  பாப்பாவுக்கு  ரொம்ப  மெல்லிசா  இருப்பது மைனஸ்.

சஞ்சய்  தத்  ஹீரோவின்நண்பராக  வந்து  அப்ளாஸ் அள்ளறார்.

வசனம்  தான்  படத்தின்  உயிர் நாடி . ஆத்திக  கருத்துகளை அநாயசமா முறியடித்து  பகுத்தறிவுக்கேள்விகளை  படம்  பூராத்தூவி  விட்டிருக்கிறார். அவருக்கு  ஒரு சபாஷ்.


பாடல்கள்  எல்லாம்  சுமார்  ரகமே .பின்னணி  இசை  இன்னும்  பிரமாதப்படுத்தி   இருக்கலாம். ஒளிப்பதிவு ஓக்கே  ரகம் . 


 


மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1 மம்மி.நான் ஒரு பாகிஸ்தான் காரனை லவ் பண்றேன்.


 வாட்?

எந்த பாகிஸ்தான்? ஒரே ஒரு பாகிஸ்தான் தான் இருக்கு



2  திருமணம் என்பது இரு தனி நபர் சந்தோஷமா இருப்பதற்காக அல்ல.இரு தரப்பு குடும்பங்களும் மகிழ



3 கடவுளைத்தேடுதல் என்பது மதம் சார்ந்த விஷயம்.கடவுள் கிடைச்ட்டா அது ஹாட் நியூஸ்


4   காணிக்கையை கோயில் உண்டியல்ல போட்டா அதுக்கான பலா பலன் அதே இடத்துலதானே கிடைக்கனும் ? #pk


5 கடவுளை புரிஞ்சுக்கனும் /பார்க்கனும்/உணரனும் னா நான் இந்துவா இருக்கனுமா? முஸ்லீமா இருக்கனுமா?கிறிஸ்டியனா இருக்கனுமா?#PK 


6
ஏம்மா,தப்பு  செஞ்சா  லாக்கப்ல உள்ளே  தள்ளிடுவேன்.

தெரியும்,அவரும் உள்ளே  இருக்கார்,அதான் ,அவரை சந்திக்க  இந்த ஐடியா

7   குழந்தை கிட்டே  என்ன தேடறே?

கடவுளோட லேபிள்  இருக்கா?னு பார்க்கறேன்.இது  இந்துவா?முஸ்லீமா?கிறிஸ்டியனா?னு எப்படி  கண்டுபிடிக்கறீங்க?


8 என்னை எப்படி நீ நம்பறே?

எல்லாருமே  என் கிட்டே  இருந்து பணத்தை எடுத்துட்டுப்போகும்போது நீ மட்டும் தான் என் பணத்தை சட்டை செய்யலை  ( தூங்காதே  தம்பி தூங்காதே பட டயலாக்)


9 ஏன் டல்லா இருக்கே?

யாராவது  அவங்க வீட்டுக்குப்போக முடியாம தவிச்சுட்டு இருந்தா நான் சோகம் ஆகிடுவேன்


10 சாமியார் இருக்காரா?



அவர் செத்துட்டார்.


வாட்?பைல்ஸ் ஆபரேசன் ல  எப்டி சாவு வரும்?
ஆபரேசனை தப்பா செஞ்சா வரும்( taken from sv sekar drama)


11 கடவுள் அப்பா மாதிரின்னா  இந்த அங்கப்பிரதட்சணம்  எல்லாம் நடக்குதே அது எப்படி?


 எந்த அப்பாவாவது தன் குழந்தை சிரமப்படுவதை சகிச்சுக்குவாரா?




12  கண்ணை மூடிக்கிட்டு நான் செய்யற மாதிரியே  செய்யனும்.

அதெப்பிடி?நான் கண்ணை மூடிக்கிட்டா  நீ செய்வது  தெரியும்?

ஆ! அப்போ திறந்துக்கோ




13 இது என்ன?


காண்டம்.இதை போட்டுக்கிட்டா பர்த்கண்ட்ரொல் ஆகும்,


அதெப்பிடி?நீங்க ஒரு ஆள் காண்டம்  போட்டா  உலகம்பூரா பர்த் கண்ட்ரோல் ஆகும்?








14 ஒரு மனிதனின்  பெயர்  சும்மா  ஒரு அடையாளத்துக்கான  பெயர்ச்சொல்லா மட்டும் இருக்கக்கூடாது,அவனோட குணாதிசியத்தை  பிரதிபலிக்கனும்


15  கடவுள்  சொர்க்கத்தில்  இருக்கார்னு  நினைக்கறேன்,நாம எல்லொரும் இங்கே அவரைத்தேடிட்டு இருக்கோம்


16 எப்போப்பாரு  கடவுளைக்காணோம், அவர் ஒரு ராங்க் நெம்பர்னு சொல்றியே , அப்போ ரைட் நெம்பர் யாரு? அடையாளம் காட்டு


17 நாளை நல்ல நாளா  விடியும் என்ற நம்பிக்கைல தான் ஒவ்வொரு நாள் இரவும் படுக்கப்போறோம்.இந்த நம்பிக்கைல தான் எல்லார் வாழ்க்கையும் ஓடுது


18 கடவுள்  2 வகை .


1   மனிதர்களைப்படைத்த  கடவுள் 

2 மனிதர்கள் படைத்த  கடவுள்

19  கடவுளைக்காப்பாத்த  ஒரு  பூசாரியோ  , அல்லது சாமியாரோ  தேவை இல்லை . அவர்  தன்னைத்தானே  காப்பாத்திக்குவார்







 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


PK - நேர்த்தியான திரைக்கதை ( சுஜாதாவின் தேவன் வருகை போல் ) ,அமீர்கான் ன் சார்லிசாப்ளின் டைப் நடிப்பு ,காமெடி # இடைவேளை


சயின்ஸ் பிக்சன் கதை சொல்லும் சாக்கில் 3,மதவாதிகளின் கடவுள் நம்பிக்கை ,மூட நம்பிக்கையை துவைச்சுக்காயப்போடறாங்க #PK





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  மதவாதிகள்  ஹீரோ  கன்னத்தில்  அடிக்க  வரும்போது  இரு  கன்னக்கதுப்புகளிலும்  ஹீரோ  கடவுள் ஸ்டிக்கரை  ஒட்டிக்கொள்வதும்  , அடிக்க  வருகிறவர்கள்  திகைப்பதும்


2   அமீரின்  பாடி  லேங்குவேஜ்  கலக்கல் . படம்  பூரா   அவர்  மனித  இனம்  இல்லை என்பதை உணர்த்த  எந்த  மெனக்கெடலும்  தேவையே  இல்லாமல்  செய்து  விட்டது அந்த   உடல்  மொழி .  ஹாட்ஸ்  ஆஃப்



3  ஹீரோ  போலீஸ்   ஜீப்பில்  ஏற   வடிவேல்  போல்  செய்யும்  காமெடி  அலப்பரையும் , அதை பெருமிதமாக  ஹீரோயினிடம்  காட்டுவதும்



4   ஓ, அச்சே   ஹேங்  இந்த  இரண்டு  வார்த்தைகளுக்கும்   வெரைட்டி   மாடுலேசனில்   பேசி  நடித்துக்காட்டும்  இடம்  அமீர்கான்  ரசிகர்களுக்கு அல்வா


5   காந்தி  படம்  போட்ட  பேப்பர்   பணம்  என்பதை உணராமல்   காந்தி   ஃபோட்டோ  போட்ட  காலண்டர்  தந்து  ஏமாறுவது   இயக்குநர் டச்


6  கடவுள்   சிலைல   50  ரூபா   30 ரூபா   20  ருபா  என  எதுக்கு  வித்தியாசம் ? கம்மி  பவரா? என  கேட்கும்  காட்சி  மாஸ்


7  விதவை வெள்ளைப்புடவையில்  வருவார்  என்பதை  அறியும்  ஏலியன்  ஹீரோ   ஒரு சர்ச்  மேரேஜ்  ஃபங்க்‌ஷனில்  மணப்பெண்ணிடம்   உன் புருஷன் அவுட்டா?    என  கேட்கும்  காமெடி  காட்சி

8   ஹேர்  இழை  தவறினாலும்  ஆபாசமாகிவிடும்  ஆபத்துள்ள  அந்த   காண்டம்  காமெடி  காட்சி  யைக்கையாண்ட விதம்  நுனுக்கமான இயக்கம்


9 ஹே  பகவான்  தூ  கஹாங்  ஹை (  ஏய்  கடவுளே! நீ  எங்கே  இருக்கிறாய்? )  பாடல்  காட்சி நல்ல  மெலோடி . படமாக்கப்பட்ட  விதமும்  ஓக்கே


10   ஓப்பனிங்கில்  ஹீரோ  ஹீரோயின்   பாடும்  பாடல் காட்சி



இயக்குநரிடம்  சில கேள்விகள்





1   படத்தின்  மையக்கருத்தாக  வரும் நாத்திக வசனங்கள்  எல்லாமே   கமல் படங்களான  அன்பே  சிவம் , விஸ்வரூபம் உட்பட படங்களில் அவர்  பேசியதிலிருந்தே  உருவியது.  காமெடிக்காட்சிகள்  12 வருது . அதில்  3  எஸ்  வி சேகர்  டிராமாவில்  இருந்தும்  1  கிரேசி  மோகன்  டிராமாவில்  இருந்தும்  உருவி  இருக்காங்க


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டாக  வரும்  அந்த  சீன்  ஏத்துக்கவே  முடியலை . பயங்கர  லாஜிக்  சொதப்பல் . ஹீரோயினுக்கு  ஹீரோ  கையெழுத்தே  தெரியாதா?  யாருக்கோ  தந்த  கடிதம்  தவறுதலா  அவர்  கைக்கு  வந்தா  தன்னுடைய காதலன்  தான்  எழுதுனதுன்னு  எப்படி  நம்பறா? ஃபோன்  பண்ணி  கன்ஃபர்ம்  பண்ண  மாட்டாளா? லைன்  கிடைக்கலைன்னா  ஒரு எஸ் எம் எஸ்  அனுப்ப  மாட்டாளா? அவுட்  கோயிங்  போக  பேலன்ஸ்  இல்லைன்னா  ஸ்கைப் அக்கவுண்ட்ல  பேசக்கூடாதா?


3  ஆன்மீகச்சொற்பொழிவு ஆற்றும் அந்த  டுபாக்கூர் சாமியார்  ஹீரோ கேட்கும் ஒவ்வொரு  கேள்விக்கும் ஏன் அப்படி  திணறனும்?  கொஞ்சம்  கூட  சமாளிஃபிகேசன்  பதில்  கை வசம்  இருக்காதா?


4  சிவன்  வேஷம்  போட்ட ஆளை  ஹீரோ  துரத்திச்செல்லும்   பஜார்  சேஸிங்  காமெடி  ஆல்;ரெடி   ரஜினி யின் உழைப்பாளியில்  ,  கமலின் பம்மல்  கே சம்பந்தம் ல  வந்தாச்சு.


5 எந்த  ஐடி கார்டும்  ஆதார் அடையாள  அட்டையும்  இல்லாம  ஹீரோ  சுத்தறார்.  போலீஸ்  கண்டுக்கவே  இல்லை?



6  ஏலியன்ஸ்  ஹீரோ மனசில்  ஹீரோயின்  மேல்  லவ்  வந்தாச்சு  ஓக்கே  . ஆனால்  ஹீரோயினுக்கு  ஹீரோ  மேல  லவ்வா  /?  இல்லையா?ன்னு  தேங்காய்  உடைச்ச  மாதிரி  சொல்லாம  ஏன் மென்னு  முழுங்கனும்?பழைய   காதலன் வந்ததும்  பல்டி  அடிக்கனும்னா?





சி  பி  கமெண்ட் - PK - கனகச்சிதமான  திரைக்கதை, நறுக் சுருக்  வசனங்கள், பிரமாதமான  நடிப்பு ,அன்பே சிவம் கதையில்  சயின்ஸ் ஃபிக்சன் முலாம்-ரேட்டிங் = 3.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  50  (  ஹிந்திப்படத்துக்கு  மார்க் போடுவதில்லை. ஒரு மதிப்பீட்டுக்காக )



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) - நன்று 



 ரேட்டிங்  = 3.7  / 5

a