Showing posts with label அனுராதா. Show all posts
Showing posts with label அனுராதா. Show all posts

Monday, April 15, 2013

மு களஞ்சியத்துக்கு எதிராக கொந்தளித்த அஞ்சலி ரசிகர்கள் - ஜூ வி கட்டுரை

ரசிகனுக்காக கிளிசரின் அழுகை... நிஜத்தில் உறவுக்காக ரத்தக் கண்ணீர்... இது​தான் நடிகைகளின் மேக்கப் இல்லாத வாழ்க்கை. 


தாத்தாக்களின் கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி, தன் சகோதரர்களுக்காக சம்பாதித்துக் கொடுத்​தார். கல்யாணம் செய்துகொள்ளாமலேயே காலமானார். மனநிலை தவறிய தனது கணவரை பச்சிளங்குழந்தையாகப் பராமரித்தார்


, கவர்ச்சி நடிகை அனுராதா. குடும்பத்தை நிர்க்கதியாய் தவிக்கவிட்டுத் தன் தந்தை மறைந்தபோது, திரையில் நடித்த பணத்தில் தங்கை, தம்பிகளைக் கரையேற்றி... அனாதையாக்கிய அப்பா ஆனந்தனுக்குக் கடற்கரைச் சாலையில் நினைவு மண்டபம் அமைத்தார், டிஸ்கோ சாந்தி.


இப்போது அஞ்சலியின் வாழ்க்கை...


சினிமா, சென்டிமென்ட் பூமி. அஞ்சலி முதலில் தெலுங்கில் நடித்த இரண்டு படங்களும் தோல்வி. அதனால், அஞ்சலியை பேக்-​அப் செய்துகொண்டு சென்னை வந்தார், பாரதிதேவி. அப்போது அவரை அம்மா என்று சொன்னார்கள். இப்போது சித்தி. இங்கேதான் இயக்குநர் மு.களஞ்சியத்தை சந்தித்தார்.



'சத்தமின்றி முத்தமிடு’ படத்தில் ஒப்பந்தம் ஆனார். தெலுங்கு படங்களாவது வெளிவந்து தோற்றன. 'சத்தமின்றி முத்தமிடு’ ரிலீஸே ஆகவில்லை. 'ராசியில்லாத நடிகை...’ என்ற முத்திரையோடு வலம்வந்த அஞ்சலியை 'கற்றது தமிழ்’ மூலம் திரும்பிப் பார்க்கவைத்தார் இயக்குநர் ராம். 


 'அங்காடித் தெரு’வில் பிரமாதமான கதாபாத்திரத்தைக் கொடுத்து உச்சத்தில் உட்காரவைத்தார் இயக்குநர் வசந்தபாலன். சக நடிகைகளுக்கு நடிப்புத்திறன் காட்டி மிரட்சிகொடுத்தார், அஞ்சலி.  எந்த தெலுங்கு சினிமாவில் தோல்வி அடைந்தாரோ, அதே சினிமாவில் அஞ்சலி நடித்து வெளியான படம் சூப்பர் ஹிட்டானது. தமிழிலும் தெலுங்கிலும் மார்க்கெட் ப்ளஸ் சம்பளம் உயர்ந்தது. அப்புறம் என்ன? ஓடுகிற குதிரை கைவசம். எந்த லாயத்தில் கட்டுவது என்று ஒரிஜினல் அம்மாவுக்கும் ஒண்ணுவிட்ட அம்மாவுக்கும் ஈகோ போர் ஆரம்பமானது.



ஏப்ரல்-8: ஹைதராபாதில் இருந்த அஞ்சலியிடம் இருந்து போன். அழுகையுடன், 'இதுவரை நான் அம்மான்னு அறிமுகப்படுத்தினது என் அம்மாவே இல்லை, அவங்க என் சித்தி பாரதிதேவி. சித்தியும் களஞ்சியமும் சேர்ந்து என்னோட பணத்தை எல்லாம் பறிச்சுக்கிட்டு, என்னை டார்ச்சர் பண்றாங்க. என்னால தாங்க முடியல...’ என்று பொரிந்து தள்ளினார்.
ஏப்ரல்-9: அஞ்சலியின் புகார் குறித்து விளக்கம் கேட்க பாரதிதேவியின் செல்போனுக்கு அழைத்தால் அது, ஸ்விட்ச் ஆஃப். விஷயத்தைக் கேள்விப்பட்டு நம் லைனுக்கு வந்த களஞ்சியம் 'நான் ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகப் போராடுறவன். 



புதுக்கோட்டை, விழுப்புரத்தில் நடக்கும் மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வர்றேன். என்னோட புகழையும் பிம்பத்தையும் உடைக்கிறதுக்கு யாரோ திட்டமிடுறாங்க. அந்த வலையில் அஞ்சலி சிக்கியாச்சு. ஆந்திராவில் இருந்து சினிமா சான்ஸ் கேட்டு வர்றது... இப்போ வளர்ந்த பிறகு இங்கே இருக்கிறவன் மேல புகார் சொல்றதா?’ என்று சீறினார்.



ஏப்ரல்-10: எப்போதும் அஞ்சலியின் அருகில் பற்பசை விளம்பரம் மாதிரி புன்னகை போஸ் கொடுத்துவந்த பாரதிதேவி போலீஸில் புகார் கொடுத்துவிட்டு, கொந்தளிக்க ஆரம்பித்தார். 'பள்ளிக்கூடத்தில் ப்ளஸ் டூ படிக்கும்போதே ஒருத்தனோட அஞ்சலி ஓடிப்போயிட்டா. முன்னாடி ஜெய்யைக் காதலிச்சா... யாரோ அவளுக்குப் பின்னாடி இருந்து செயல்படுறாங்க. அவளுக்கு ஒரு ரகசிய நோய் இருக்கு. அதை இப்போ சொல்ல மாட்டேன். அப்புறமா சொல்றேன்...’ என்று பகீர் செய்தியைப் பகர்ந்துவிட்டுப் பறந்தார்.  



ஏப்ரல்-11: தெலுங்கு டி.வி-9 சேனலைச் சேர்ந்த சென்னைப் பகுதிப் பொறுப்பாளர்கள் அஞ்சலியின் சித்தி பாரதிதேவியைப் பார்க்கச் சென்று இருக்கிறார்கள். அஞ்சலி விஷயத்தில் தெலுங்கு சினிமா உலகம் உங்களை வில்லியாகப் பார்க்கிறது. அதனால், உங்களுக்கு ஆதரவாக எங்கள் சேனலில் பேட்டி எடுக்க வந்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். சந்தோஷமாகத் தலையாட்டியபடி பேட்டிக்குத் தயாரான பாரதி, எதேச்சையாக தனது வீட்டில் இருக்கும் டி.வி-9 சேனலை போட்டு இருக்கிறார். 'சித்தி கொடுமையால் நடுத்தெருவுக்கு வந்த நடிகை’ என்று அஞ்சலியைப் பற்றி செய்தி வரவே, அதிர்ந்துபோன பாரதி, 'தூள்’ சொர்ணக்கா ரேஞ்சுக்கு சத்தம்போட்டாராம்.    



ஏப்ரல்-12: இதற்கிடையில், அஞ்சலியின் சித்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், என் கணவருடன் ஹைதராபாத் ஹோட்டலில் ஒன்றாகத் தங்கியிருந்த அஞ்சலி திடீரென்று காணாமல் போனார். இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், அவரது உறவினர் சிலரிடம் செல்போனில் பேசுவதாக அறிகிறேன். என் மகள் அஞ்சலியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். நாளைக்கே 'சித்தீ’ என்று சொல்லி அஞ்சலியும் பாரதிதேவியும் சேர்ந்து பேட்டி கொடுக்கலாம். ஆனால், நடிகைகள் பலரின் வாழ்க்கை திரையில் மட்டுமல்ல... சொந்த வாழ்க்கையிலும் நடித்துத்தான் வாழ வேண்டி இருக்கிறது!



- எம்.குணா


 வாசகர் கருத்து 


1. களஞ்சியம் அல்ல சாக்கடை..


2. நீ களஞ்சியம் இல்ல..களங்கசியம். ...



3. நான் ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகப் போராடுறவன் - இன்னும் எவ்வளவு பேருங்க இப்படி சொல்லி ஆலயவீங்க?
ஆந்திராவில் இருந்து சினிமா சான்ஸ் கேட்டு வர்றது... இப்போ வளர்ந்த பிறகு இங்கே இருக்கிறவன் மேல புகார் சொல்றதா? - களஞ்சியம் நு பேரு வெச்சிக்கிட்டு மாநில வேறுபாடுகளெல்லாம் பார்க்கிறதா?
சும்மா உங்களுக்கு ஒரு விளம்பரம்நு நினைச்சுக்கிட்டு வேலைய பாருங்க களஞ்சியம் சார்.



4. உலகத் தமிழருக்கு போராடுபவர் ஏன் ஆந்த்ராவில் இருந்து வந்த பெண்ணுக்கு வாய்ப்பு தந்தாராம்? உள்ளூர் தமிழ் பெண் கிடைக்கலியா? கிடைக்க மாட்டாள். ஏன்னா இவங்க யோக்கியதைதான் தெரியுமே. 



5. அவளுக்கு ஒரு ரகசிய நோய் இருக்கு. அதை இப்போ சொல்ல மாட்டேன். அப்புறமா சொல்றேன்." .. ...... ச்ச்சீய்ய்ய் ..... இதான் பெத்தவங்களுக்கும் வளர்த்தவங்க்களுக்கும் உள்ள வித்தியாசம் .....

சாலமன் தீர்ப்புக் கதை நினைவுக்கு வருகிறது (பைபிளில் வரும் என்று நினைக்கிறேன் ) ..... ஒரு குழந்தைக்கு நாந்தான் அம்மா என்று இரண்டு பெண்கள் வந்து முறையிடுவார்கள் .... அப்போது அரசர் சொல்லுவார் ... உண்மை எதுவென்று தெரியவில்லை .... அதனால் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்கு ஒரு பாகம் தருகிறேன் என்று .... ஒரு பெண் ஓக்கே சரி என்பார் .... இன்னொரு பெண் அய்யோ ... வெட்டுவீர்களா ... வேண்டாம்.... குழந்தை அந்தப் பெண்ணிடமே இருந்துவிட்டுப்போகட்டும் என்பார் .... உடனே தாய்மையின் பிரதிபலிப்பை உணர்ந்த அரசர் அந்த இரண்டாம் பெண்ணிடம் குழந்தையைத் தந்து வெட்டுவதற்கு ஓக்கே சொன்ன பெண்ணை சிறைக்கு அனுப்புவார் !!!!


6. நான் ஒட்டுமொத்த உலகத் தமிழருக்காகப் போராடுறவன்' - ஏன்டா அடுத்த வேளை சோத்துக்கு லோட்டேரி இது உலகத் தமிழருக்காகப் போராடுறவன் எதிர் வீட்டு பாட்டிக்க போராடுறவன் ஒரு பில்டுப் வேற. அந்த பொண்ணை வச்சு எல்லாம் நல்ல தின்னிக இப்போ மாட்டிகிட பிறகு "தமிழ்காக போரடுறேன்னு ஒரு டயலாக்". பாவம் அந்த பொண்ணு, ஒழுங்கா அவல வாழவிடு இல்லானே அந்த கடவுள் உன்னை சும்மா விடமாட்டார்.


7. ஒரு சிறு வயது பெண்ணை "வாங்கி" எப்படியாவது ஒரு சினிமாக்காரன் தயவை பெற்று பிறகு அந்த பெண்ணை வைத்து எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதித்து அவளையும் நாசமாக்கி தானும் நாசமாகும் எத்தனையோ பேர் சினிமாத்துறையில் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்.

வெளிவராத படம் ஒன்றில் நடிக்க வைத்ததற்காக அவர்கள் குடும்பம் தன்னிடம் அடிமைப்பட்டு கிடந்ததாக ஒருத்தன் சொல்வதும் தான் வளர்த்த பெண்ணுக்கு ரகசிய நோய் இருப்பதாக நேற்றைய தாய் சொல்வதும் தெளிவாக்குவது ஒன்றுதான் .... இந்த இரண்டு அயோக்கியர்களிடமும் இருந்து அந்த பெண் தப்பித்தாள்.


8. அந்த குருவிக் கூடு தலையன் மீது பெருத்த சந்தேகம்.
பாவம் அந்த பொண்ணு. 


9. களஞ்சியம் சொல்வது காமெடி. இந்த கொடுமையை செய்த இவர் ஒரு இயக்குனர் என்பது யாருக்கும் தெரியாது.உலகத்தமிழருக்கு இவரால் ஒன்றும் கிழிக்க முடியாது.

நன்றி - ஜூ வி