Showing posts with label அனுபவம் நாளைய இயக்குநர் குறும்பட விமர்சனம். Show all posts
Showing posts with label அனுபவம் நாளைய இயக்குநர் குறும்பட விமர்சனம். Show all posts

Monday, May 23, 2011

நாளைய இயக்குநர் - சைக்கோ த்ரில்லர் கதைகள் - விமர்சனம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihWKj9-NVkXiBzK0qlVTypn8jpsN2OtjvAUSPSQtji5z_hLzFH4g6u0EmJp8wgOFhahwhaCn7XluJDwSbA_3YK0mNdrUdTahWQQi7fRmRfOMDCDF-1htB8GV4pNwXQxXzjE0zv5G3dNguY/s1600/cowboy2.jpg 

நாளைய இயக்குநர் நிகழச்சில இன்னைக்கு (22.5.2011)ஹாய் மதன் கோட் சூட்லயும் ,பிரதாப் போத்தன் ஃபார்மல் டிரஸ்லயும் வந்தாங்க.. ஹாய் மதன் ரெகுலரா ஒரு ஓப்பனிங்க் இண்ட்ரோ தொகுப்பாளினி கிட்டே கொடுக்கறாரு.. நல்ல விஷயம் தான். ஆனா அதை அவர் பிரதாப் கிட்டேயே சொல்லலாம். ஏன்னா 1. தொகுப்பாளினி கிட்டே பேசறப்ப அவரோட பாடி லேங்குவேஜ்ல ஒரு செயற்கைத்தன்மையும்,லைட்டான அலட்டலும் வெளிப்படுது 2. அந்தப்பொண்ணு அவர் அளவு நாலெட்ஜ் இல்ல.. ஒர்த் இல்ல.. சும்மா கிளாமருக்காக ஒப்புக்கு சப்பாணி மாதிரி மப்புக்கு ஊறுகாய் மாதிரி.. 

இன்னைக்கு தொகுப்பாளினி போட்டிருந்த டிரஸ் போன வாரம் போட்டிருந்த அளவு கேவலமா இல்லை.. ஓரளவுக்கு கேவலமா இருந்தது.. கிராமங்கள்ல பொண்ணுங்க நைட்டி போட்டுக்கிட்டே காலைல மளிகைக்கடைக்கு வந்துடுவாங்க.. அந்த மாதிரி .. பார்க்கற மத்த ஆண்களுக்கு சந்தோஷம்.. அந்த பொண்ணோட புருஷனுக்கு சங்கடம்.. ஹி ஹி

அப்புறம் அந்த பொண்ணு ஜட்ஜ்ங்களை நீங்க போய் உங்க சீட்ல உக்காருங்கன்னு சாதாரணமாத்தான் சொல்றாங்க.. ஆனா எனக்கு பார்க்க அவங்க ஆர்டர் பண்ணுன மாதிரி இருக்கு.. மேல்சாவனிஷம் என்பது இது தானோ?


1. காஃபி - தீபன்

பொதுவா சைக்கோ திரில்லர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கறதில்லை.. ஆனா எனக்கு ரொம்ப பிடிக்கும்( ஒரு வேளை நானும் ஒரு சைக்கோவோ?#டவுட்டு)ஓப்பனிங்க் ஷாட்ல ஹீரோ க்ளோஷப்ல நம்ம கிட்ட கதை சொல்றார். அவர் காஃபிக்கு அடிமை.. காஃபில மட்டும் 43 ஃபிளாவர் இருக்கு.. என்னால காஃபி சாப்பிடாம இருக்கவே முடியாது.. ப்ளா ப்ளா.. இத்யாதி,,

அவரோட மனைவி லேட் நைட்ல வீட்டுக்கு வர்றப்ப ஏன் லேட்?னு கேட்கறார். அதுக்கு மனைவி உன்னை மாதிரி சைக்கோவுக்கு அதை கேட்க உரிமை இல்லை.. அப்டின்னு சொல்றப்பவே பாப்பா எங்கேயோ போய்ட்டு வந்திருக்கு தப்பான்னு தெரிஞ்சிடுது.. தொடரும் உரையாடல்ல அவ தொடர்ந்து அவனை கேவலப்படுத்திட்டே இருக்கா.. 

மனைவி கேவலப்படுத்துனா  கணவன் கண்டுக்கக்கூடாதுங்கற பேசிக் நாலெட்ஜ் இல்லாம ஒரு கட்டத்துல அவளை போட்டுத்தள்ளிட்டு காஃபி குடிக்கற வேலையை தொடர்றான். 

இந்த ஷாக்கை விட க்ளைமாக்ஸ் ஷாக் ஒண்ணு இருக்கு.. 

இது வரை நம்மை பார்த்து கதை சொல்லிட்டு இருந்த  ஹீரோவோட முகம் பார்க்கும் கேமரா அப்படியே திரும்புது.. எதிரே ஒரு டாக்டர்.. 

ஏன் டாக்டர்..? எனக்கு காஃபி பிடிக்கும்னு தெரிஞ்சும் எனக்கு குடுக்காம நீங்க மட்டும் குடிக்கலாமா?

பார்த்தா டாக்டர் வாய்ல சிசர் ஏறி செத்துக்கிடக்கார்.. அந்த லூஸ் அவரையும் போட்டு தள்ளிட்டான் போல..

 கதை ஓக்கே.. நீட் டைரக்‌ஷன்.

ஆனா ஹாய் மதனும், பிரதாப்பும் இந்த கதை எந்தளவு சாத்தியம்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.. கமல் ஒரு படத்துல பழமொழி சொன்ன அனுபவிக்கனும், ஆராயக்கூடாதுன்னு சொல்வாரு.. அந்த மாதிரி சைக்கோ கதைகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு கற்பனை.. அதை ஜாலியா எடுத்துக்கனும்..

இந்தப்படத்துக்கான கே பாலச்சந்தர் கமெண்ட்.. - சிம்ப்பிள் & இண்ட்ரஸ்ட் நேரேஷன் ஆனா நம்பகத்தன்மை குறைவு..


2.  மனு தர்மம் - அருண் வர்மா

ஹீரோவுக்கு ஏதோ பணத்தேவை.. யாருக்கோ ஒரு பெரிய தொகை கொடுக்க வேண்டிய கட்டாயம்.. அந்த டைம்ல பாத்ரூம்ல அப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட்.. யாரோ அவரை காயப்படுத்திட்டாங்க..  அங்கே போனா அவன் கண் முன்னால அப்பா உயிருக்கு போராடிட்டு இருக்கார். அவன் நினைச்சா காப்பாத்தலாம். ஆனா அவர் இறந்துட்டா இன்சூரன்ஸ் பணம் வரும்னு ஹீரோ நினைச்சு காப்பாத்த முயற்சியே பண்ணலை.. 

அப்புறம் ஹீரோவை குற்ற உணர்ச்சி வாட்டுது.. தன் அண்ணனுக்கு ஃபோன் பண்ணி வர சொல்லி  அம்மாவை நல்லா பாத்துக்கன்னு சொல்லிட்டு குற்ற உணர்ச்சில தற்கொலை பண்ணிக்கறார்.. 

இது கொஞ்சம் விபரீதமான கதை தான். இது பார்க்கறவங்க மனசை பாதிக்கும்.. இதை எல்லாம் சென்சார் பண்ணனும்னு தோணுது.. ஏன்னா பார்க்கறவங்க மனசுல 1000 பேர்ல ஒருத்தருக்காவது அப்டி பண்னலாமோன்னு ஒரு எண்ணம் வந்தாலே டேஞ்சர் தான்.. 

திரைக்கதைல கொஞ்சம் குழப்பம்.. கேமரா சுமார்.. பேசற வசனம் புரில.. ( ஒரு வேளை மணி ரத்னம் மாதிரி ட்ரை பண்றாரோ என்னன்வோ?)


3.  அருண் - 00.00 ( 12 மணி மிட்நைட்)

இந்தக்கதை செம த்ரில்லிங்கா இருந்தது.. 

ஒரு பொண்ணு மிட்நைட்ல ஒரு தனிமையான இடத்துல வெயிட்டிங்க்.. அப்போ 2 ரவுடிங்க அவளை பலவந்தமா கடத்திட்டு போய் பக்கத்துல இருக்கற ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துல  அட்டெம்ப்ட் ரேப்பிங்க்.. 
அப்போ ஒருத்தன் அங்கே எண்ட்ரி ஆகறான். அப்பாடா.. ஹீரோன்னு பார்த்தா அவனும் வில்லன்.. அவன் அந்த 2 பேர்ட்ட சனடை போட்டு அவளை அடைய நினைக்கறான்..

சேசிங்க்ல ஒரு கட்டத்துல எல்லாரும் செத்துடறாங்க.. அப்போ அந்த பொண்ணோட ஆன்மா மட்டும் சொல்லுது

” எனக்காக அவன் காத்துட்டு இருப்பானே ? நான் எப்படி போவேன்?”

அந்த கதறல் இன்னும் என் காதுல ஒலிச்சுக்கிட்டே இருக்கு..

 இந்தப்படத்தை கே பாலச்சந்தர் ரொம்பவே பாராட்னார்.... 

கே பாலச்சந்தர் பாராட்றப்ப அதுல உள்ளார்ந்த சந்தோஷம் தெரியுது.. சக படைப்பாளியை  பாராட்டனும், கவுரவிக்கனும் என்ற பக்குவமும், அனுபவ ஆற்றலும் அவர் கிட்டே வெளிப்படுது.. 
ஹாய் மதன் பாராட்றப்ப அவரோட மேதா விலசத்தை லைட்டா வெளிப்படுத்திடறாரு.. அதாவது அவர் பார்த்த மற்ற ஃபாரீன் படங்களை உதாரணமா காட்டி தனக்கு பல படங்கள் பார்த்த அனுபவம் இருக்குன்னு சொல்லாம சொல்றார்..

பிரதாப் போத்தன் பாராட்றதே இல்லை .. பெரும்பாலும்.. அப்படியே பாராட்னாலும் வேண்டா வெறுப்பா முகத்தை வெச்சுக்கறார்.. பாவம் வீட்ல எப்பவும் சண்டை போல..