ஜூ.வி. நிருபர் பட்டாளம் நடத்திய, 'மக்கள் மனசு’ என்ற
தலைப்பிலான சர்வேயின் முதல் பகுதி கடந்த இதழில் வெளியானது. வாசகர்களிடம்
இருந்து சர்வேவுக்கு ஏகோபித்த வரவேற்பு. அரசியல் வட்டாரத்தில் இந்த சர்வே
அதிர்வலைகளை உண்டாக்கியது. 5,369 நபர்கள் பங்கேற்ற அந்த சர்வேயின்
தொடர்ச்சி இது.
காதலை எதிர்க்கும் ராமதாஸின் நடவடிக்கை சாதி அரசியலே
என்பது பலரும் டிக் அடித்திருக்கும் பதில். கலப்புத் திருமணங்களை
ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆரோக்கியமானது. நாடாளுமன்றத்
தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சரிசமமான போட்டியிருக்கும் என 49
சதவிகிதம் பேரும் மகத்தான வெற்றி பெறும் என 30 சதவிகிதம் பேரும் கருத்து
சொன்னார்கள்.
அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு நரேந்திர மோடியை
58 சதவிகிதம் பேர் ஆதரித்தனர். அவருக்கு அடுத்தபடியாக, ஜெயலலிதா
இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க.,
கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது அதிகப்படியானவர்களின்
கருத்து. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த்தின் செயல்பாட்டுக்கு
மக்களிடையே பெரிய வரவேற்பு இல்லை.
சர்வே முடிவுகளைப் பாருங்கள் உங்களுக்கே தெரியும்...
மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகல்,
ஜெயலலிதாவைத் தவிர அ.தி.மு.க-வில் தலைமை ஏற்கும் பொறுப்பு யாருக்கு
இருக்கிறது? மதுவிலக்கு சாத்தியமா? தமிழக அமைச்சர்களின் செயல்பாடு என
விறுவிறுப்பான கேள்விகளின் முடிவுகள், அடுத்த இதழில்...
thanx - vikatan
readers views
1.
அடுத்த பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்படலாம் - ஆனால் அதில் பா.ம.க. இருக்காது. தேமுதிக நீர்த்துப்போவது - பாதி ஆளுங்கட்சியின் சதிச்செயலால்; மீதி செயல்படாத, குடும்ப ஆதிக்கத்தைத் திணிக்கும், கட்சியினரை மதிக்காத விஜயகாந்தால்! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும், மற்றவர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும் கரையேற வாய்ப்பில்லை.
அடுத்த பிரதமராக நரேந்திர மோடி வரவேண்டும். அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி ஏற்படலாம் - ஆனால் அதில் பா.ம.க. இருக்காது. தேமுதிக நீர்த்துப்போவது - பாதி ஆளுங்கட்சியின் சதிச்செயலால்; மீதி செயல்படாத, குடும்ப ஆதிக்கத்தைத் திணிக்கும், கட்சியினரை மதிக்காத விஜயகாந்தால்! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிட்டாலும், மற்றவர்களுடன் கூட்டணி சேர்ந்தாலும் கரையேற வாய்ப்பில்லை.
2. பாமக ராமதாஸ் ,இப்போ திடீர் என்று ஈழ பிரச்சினை முன்னிறுத்தி உள்ளார்.
வரும் தேர்தலில் ஈழ பிரச்சினையைத்தான் இவை கையில் எடுப்பாராம். மக்கள்
டிவியில் ஈழ பிரச்சினை பற்றி தினமும் தொடர் செய்தி வருகிறது.இந்த ஆள் என்ன
செய்தாலும் , மக்கள் இவரை மறந்து விட்டார்கள் என்று தெறியாது போல்
இருக்கிறது.இவர் குண்டு சட்டியில் குதிரை விட்டுக்கொண்டிருக்கிறார். முகவை
விட இவர் குடும்ப பாசம் உள்ளவர். சுயனலத்திளிவர் முகவை மஞ்சி விட்டார். ஏழை
வன்னியர்களை இவர் ஏமாற்றலாம் தமிழர்களை ஏமாற்ற முடியுமா?.
3. மோடி ....மோடி ............இப்படி எழுதி எழுதி .....எதோ மோடியை இந்தியாவை
காக்க வந்த ரட்சகன் மாதிரி ஆக்கியதில் இந்த தரம் கேட்ட மீடியாக்கள் முக்கிய
பங்கு.....................
4. ஜூவியின் சர்வேக்களை ஜூவி தான் பாரட்டிக்கொள்ளவேண்டும் . இதற்க்கு முந்தய
தேர்தல் நேர சர்வேக்கள் பிசுபிசுத்து போனது ஞபகம் இருக்கிறது . அதிலும்
ஜூவியின் சர்வேக்களை ஜுவியே பாராட்டிக்கொல்வதேல்லாம் ரொம்ப ஓவர்