Showing posts with label அஞ்சான் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label அஞ்சான் - சினிமா விமர்சனம். Show all posts

Friday, August 15, 2014

அஞ்சான் - சினிமா விமர்சனம்

  ஹீரோவோட அண்ணன் ஒரு மாபியா கேங்க் லீடர்.ஆளைக் காணோம். அவர் என்ன ஆனார்னு பார்க்க அவர் தம்பியான ஹீரோ  கன்யாகுமரி ல இருந்து மும்பை வர்றார்.

ஃபிளாஸ்பேக்.மாபியா கேங்க் ல இருக்கும் அண்ணன் , அவர் ஃபிரண்ட் இருவருக்கும் எதிரிகள் அதிகம் . இது போதாதுன்னு ஒரு டைம்  போலிஸ் கமிஷனர் பொண்ணையே தூக்கி மிரட்டிடறாங்க . இன்னொரு மாபியா கேங் லீடரை அசால்ட்டா தூக்கி மிரட்றாங்க . 

அண்ணனோட ஃபிரண்டை யாரோ போட்டுத்தள்ளிடறாங்க. போலிஸ் கமிசனரா? அந்த கேங்க் லீடரா? கூடவே இருந்த துரோகியா? யார் எதிரி? என்பது தான்  மிச்ச மீதிக்கதை. 

இது போக கதை ல 2 ட்விஸ்ட் இருக்கு .

ஹீரோவா மாறுபட்ட இரு வேடங்களில் நாளை மறு நாள்  சூப்பர் ஸ்டார் சூர்யா.  ஓப்பனிங் ல  பூ விழி வாசலிலே ரகுவரன் மாதிரி காலை சாய்ச்சு சாய்ச்சு அமைதியா வரும்  தம்பி கேரக்டரில் அண்டர்ப்ளே ஆக்டிங்க் அசத்தல் . 
 அவர் மாபியா வா வரும் அண்ணன் கேரக்டரில் அரங்கம் அதிருது .அந்த  தீக்குச்சி ஸ்டைல் , நடை  எல்லாம் கலக்கல் . ஆனால் சிங்கம் , சிங்கம் 2  வில் காட்டிய காக்கிச்சட்டை கம்பீரம்  இதில்  மிஸ்சிங். ஆனால் மாற்றான்  படம் தந்த  காயம்  இதில் ஆறிடும் . 

நாயகியா சந்தனச்செப்புச்சிலை சமந்தா. டபுள் பேமண்ட் -னு நினைக்கிறேன். செம காட்டு காட்டி  இருக்காங்க .இந்த தமிழ்  சினிமா  ஹீரோயின்கள் திறமையைக்காட்றாங்களோ இல்லையோ கிளாமரை வஞ்சனை இல்லாம காட்டிடறாங்க . நமக்கும் அதானே வேண்டும் . எதிரிக்கு அஞ்சான்  ஹீரோன்னா எதுக்கும் அஞ்சாள்  ஹீரோயின் . ஒரு சீன்ல டூ பீஸ் டிரஸ் ல ஸ்லோ  மோசன் ல ஓடி வருது பாருங்க . அடடா!! 80 மார்க் அந்த ஒரு சீனுக்கே. படம் பூரா  டவுசர்  தான் போட்டுட்டு வருது . ராமராஜன், ராஜ் கிரண்க்கு டஃப் ஃபைட்  தான் . 

ஹீரோவோட அண்ணனோட நண்பனா துப்பாக்கி பட வில்லன் . ஆள்  படு ஸ்மார்ட் . விரைவில்  ஹீரோவாகவே ஆகலாம். அவர்  போடும்  ஒரு ஃபைட்டுக்கு ஆடியன்ஸ் அப்ளாஸ் அள்ளுது . 

பிரம்மானந்தம்  தெலுங்கு ரசிகர்களைத்திருப்திப்படுத்த  ஒரே ஒரு சீனில் வர்றார்.

2  குத்துப்பாட்டு  இருக்கு. 2 மெலோடி சாங்  இருக்கு . அந்த ஏக் தோ தீன் சார் பாட்டு  செம  ஹிட் ஆகிடும் . கலர்  ஃபுல் கலக்கல்

 

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1.சூர்யா விடம் நண்பர்  “ வில்லனைத்தூக்கிட்டே இல்ல? “ என கேட்கும்போது  சூர்யா காட்டும் மாறுபட்ட இரு ஆக்சன் கள் அபாரம்  

2  சேஷிங்  சீனில்  கோஷாப்பழத்தின் மேல்  புல்லட் பட்டு தெறிக்கும் காட்சி மாஸ் . அந்த  சீன்  பூரா கேமரா அள்ளுது  

3  க்ளைமாக்சில்  வில்லன் ஆட்கள்  ரூட் மாறுவது சூர்யா காரை  பல கார்கள் பாதுகாப்புக்கு  கொண்டு வருவது  

4 இது போக  படத்தில்  வரும்  இரு திருப்பங்கள் . ( எல்லாருக்கும்   தெரிஞ்ச திருப்பம்  தான் ) 

இயக்குநரிடம் சில கேள்விகள் 


1   வில்லன்   சூர்யா வின் நண்பனை  மிரட்டி ஃபோன் பண்ணி வரச்சொல்லுங்கறான் . அதுக்கு பேசாம  வில்லனே   சூர்யா வுக்கு  மெசேஜ் அனுப்பி  இருக்கலாம். அந்த ஃபோன் ல  இருந்து . அர்ஜெண்ட் , கால் பண்ண முடியலை , இன்ன இடத்துக்கு வா அப்டின்னு

2  பொண்ணு கடத்தப்பட்டா என்றதும் எந்த ஜெர்க்கும் இல்லாம கமிஷனர்  இருப்பது  மைனஸ்


3  ஹீரோயின்    லூஸா ? அந்த கேரக்டரை வடிவமைச்ச இயக்குநர்  லூசா?


4  படத்தின்  நீளம்  அதிகம். பின் பாதியில்   இன்னும்  ட்ரிம் பண்ணனும்


5  இடைவேளையோட படம்  கிட்டத்தட்ட  முடிஞ்சிடுது . அதுக்குப்பின்  ஹீரோ  ஒவ்வொருவரா  மிரட்டுவது சலிப்பு


6  பெண்களைக்கவரும்  காட்சிகளே அதிகம்  இல்லை . டம் டம்  டமார்  தான் . காது வலிக்குது .

மனம் கவர்ந்த வசனங்கள்


1.என்னதான் ஒருத்தன ஹிந்தில திட்டினாலும் தமிழ்ல திட்டுரப்போ கிடைக்குற சந்தோஷம் கிடைக்காது-சூரி #அ


2 ராஜூ நை.. ராஜூ பாய் போலா


3 தங்கத்தை பீரோல வெச்சு பாத்துருக்க.. புறால வெச்சு பாத்துருக்கியா.. பாத்துருக்கியா..:-))


4 நான் சாகுறதுன்னா அத நான் தான் முடிவு பண்ணனும் .. ; நீ சாகணும்னாலும் அத நாந்தான் முடிவு பண்ணனும்


தப்பு பண்னிவன் தான் தலைமறைவா இருப்பான்னு அர்த்தம் இல்ல.. உயிருக்கு பயந்தவனும் தலைமறைவா இருப்பான் 


தப்பு நடந்துருக்குன்னு தெரியும்... அது எப்படி நடந்ததுன்னு எனக்குத் தெரியனும்


உனக்கும் உன் அண்ணனுக்கும் ஒரு வித்யாசம் இருக்கு.. உன் அண்ணன் குச்சிய ஸ்டைலா வாய்ல வெச்சுருப்பான்.. நீ கைல வெச்சுருக்க-//


சாவு பக்கத்துல இருக்கும்போது உனக்கு என்னடா சிரிப்பு?" "ஹாஹா..... யாரோட சாவு?"-


9 வைரத்த வைரத்தாலதான் அறுக்கணும்... தீய தீயாலத்தான் அணைக்கணும்... துரோகத்த துரோகத்தாலதாண்டா அழிக்கணும்.


10  "அச்சா கிதர்"ஐ விடவும் பாப்புலராகப்போகும் வசனம்: "எப்படி சுடுவ?" "பன்னிய சுடுரதுபோல சுடுவேன்" ".. எப்படி சுடுவ.." .. .. x 3 times ;-))



படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்S  

என் சாவையும் நான்தான் முடிவு பன்னனும், உன் சாவையும் நான்தான் முடிவு பன்னனும்-அஞ்சான்# டைட்டில் எமன் னு வெச்சிருக்கலாம்


சூரி = எங்கே போகனும்?

சூர்யா = வந்தேரி வரை போகனும்.

டாக்சி டிரைவர் சூரி = வந்தேறி வண்டில உக்காரு



ராஜு பாய் பேரைக்கேட்டாலே எல்லாரும் உச்சா போவாங்க # ஏன் பாத்ரூம் போகாம அத்தனை பேரு இருந்தாங்க?


நீ பேசியே கொல்றே.உங்கண்ணன் ராஜூ பாய் கொன்னுட்டுதான் பேசுவாப்டி # அஞ்சான்

கதைக்களம் மும்பைன்னா  டயலாக்ஸ் ஹிந்தி ல போகும்போது தமிழ் ல சப் டைட்டில் போடனும்.இது கோடம்பாக்க விதி.அஞ்சான் ல மிஸ்டு

பரிசல் காரன் கதையை உல்டா பண்ணிட்டாங்க.ஹீரோ லேப் டாப்பை தொலைக்கறாரு.திருடுனவனே கொண்டாந்து தர்றான். # அஞ்சான்

வில்லன் மேல்மருவத்தூர் மாடர்ன் பக்தன் போல.சிவப்புக்கலர் ல பேண்ட் சர்ட் கோட் சூட். ;-))

ராஜூ பாய் ஓப்பனிங் சீன் ல பிஜிஎம் முத்து படத்துலஒருவன்  ஒருவன் முதலாளி பாட்டு உல்டா பிஜிஎம்

ஹீரோ , வில்லன் ,அடியாட்கள் ,வாட்ச்மேன் ,குப்பை கூட்ற குப்பம்மா எல்லாரும் கூலிங் க்ளாஸ் போட்டிருக்காங்க.மெகா பட்ஜெட் படம் போல ! #அஞ்சான்

படம் போட்டு 30 நிமிசம் கழிச்சி சந்தன தேவதை  =தா இன்ட்ரோ

சமந்தா  = நானும் யாரையும் லவ் பண்ணலை.என்னையும் யாரும் லவ் பண்ணலை.கமிஷனர் பொண்ணுன்னா தலை தெறிக்க ஓடிடறானுங்க

தமிழ் சினிமா ஹீரோயின் னா கேரக்டர் ல கேனம் மாதிரி யும்  கெட்டப் ல பூனம் மாதிதியும் கேவலமா இருக்கனும்.மசாலா பார்முலா

ஏப்பா பொட்டு வெச்சுப்பார்க்கறப்ப ரொம்ப நல்லவனாத்தெரியற.
ஏற்கனவே  நான் அப்டித்தாம்பா # அஞ்சான்

சமந்தா வுக்கு மேக்கப் விமன் யாரு? ஐ டெக்ஸ் மையை புருவத்துல அப்பி வெச்சிருக்கு

ச = எனக்கான ஆளை நான் முடிவு பண்ணிட்டேன்
சூ = யாரு ?
ச = நீ தான் # ஆடியன்ஸ் = இவங்க நம்மை லூசாக்கிடுவாங்க போலயே @ அஞ்சான்

சமந்தா = உன் கால் தரைல படல. நீ நிதானமா இல்லை.முதல்ல நல்லா நில்லு.அப்புறம் வந்து உன் காதலை சொல்லு #  அண்ணன் தம்பி 2 பேருமே அப்டிதானுங்

சமந்தா = ஏண்டா போனை எடுக்கலை?
சூ = ஏய்.அடிக்காத.படாத இடத்தில் பட்டுட்டா உனக்குத்தான் எதிர்காலத்துல இழப்பு # அஞ்சான்

சார்.சமந்தா சார்.டூ பீஸ் பிகினி ல பீச் ல ஸ்லோ மோஷன் ல ஓடி வருது சார் # கலக்கல் கிளாமர் சீன் ஆப் 2014

தொழில் பழகும்போது சம்பாதிக்கனும்னு நினைக்கக்கூடாது.தொழில் பண்ணிட்டு தான் சம்பாதிக்கனும் 

சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.சாதா ஜனங்களுக்கு திண்டாட்டம்.மாமூல் மசாலா.சலிக்க வைக்கும் மாபியா க்ளிஷே .86 நிமிடம் கழித்து இடைவேளை

ஏன் பொறாமைப்படறீங்க? தெம்பு ,எனர்ஜி இருக்கறவன்  மேலே ஏறி போய்க்கிட்டே இருப்பான் - அஞ்சான்  # அஜித் ,விஜய் க்கு செக் வைக்கும் டயலாக்கோ?

பார்க்கறதுக்கு  சின்னப்பசங்க மாதிரி இருக்கீங்க.இதுக்கு மேல ஒரு அடி எடுத்து வெச்சாலும்  தீர்த்துடுவேன் # எங்கே ? இதுவே அடி வாங்கிடும் போலயே

தப்பு பண்ணாதவன் அழ மாட்டான்.
சரி சிரிக்கறேன்.
தப்பு பன்றவன் இப்டி சிரிச்சிட்டு இருக்க மாட்டான் # குழப்பிட்டாங்கப்பா

சாதா காட்சில கூட சமந்தா குனிஞ்சு குனிஞ்சு நடக்குது.சொந்த ஊரு குனிய முத்தூரா?  # கிளாமர் காட்ட  ஷார்ட் கட் ரூட்டா?

லிங்குசாமி = சூர்யா கிட்டே நீங்க கதையே சொல்லலையாமே? 
கவுதம் = படமே ரிலீஸ் ஆகியும் நீங்க கூடத்தான் கதையே சொல்லலை

எதிரி கிட்டேக்கூட துரோகி இருக்கக்கூடாது # அஞ்சான்

சி பி கமெண்ட்

அஞ்சான் = மாமூல் மசாலா மாபியா கேங் ரிவஞ்ச்  கதை -
லேடீசை கவர்வது சிரமம் -


எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் = 41

குமுதம் ரேட்டிங்க் = ok

ரேட்டிங் =  2.5   /  5
  


thanx -
கருத்து கந்தன்©karuthujay ( 1st  10 டயலாக்ஸ் டேக்கன் ஃப்ரம் ஹிஸ் டி எல் )


டிஸ்கி - பெண் ரசிகைகளின் வேண்டுகோளுக்கிணங்க  சமந்தா ஸ்டில்ஸ் இரவு வெளிடப்படும் . அட்ரா சக்க  செண்ட்ரல் கவர்மெண்ட் மாதிரி . நடு நிசில அவங்க பெட்ரோல் விலை ஏத்துவது போல்  கிளாமர் ஸ்டில்ஸை மிட் நைட்டில் ஏத்தும்  


டிஸ்கி-

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - சினிமா விமர்சனம்

-http://www.adrasaka.com/2014/08/blog-post_61.html 



DISKI - THE DAY AFTER TOMORROW SUPER STAR SURYA'S ANJAAN - FILM REVIEW-