Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts
Showing posts with label அங்கதம்.அனுபவம். Show all posts

Saturday, May 07, 2011

பகவான் கிருஷ்ணரை விட பீஷ்மர் பெரியவரா? ( ஆன்மீகம்)

http://2.bp.blogspot.com/_MmxeaSxLM4o/TQnzXXfdBJI/AAAAAAAAAPU/mVM5uPiXKUg/s1600/krishna-946833.jpg 
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!



லகத்து மனிதர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான கடமை இருக் கிறது. அந்தக் கடமையை அவர்கள் செய்தே ஆக வேண்டும்.
அது என்ன என்கிறீர்களா?
நம் சந்ததிகளுக்கு, அதாவது அடுத்த தலைமுறையினருக்குச் சொத்துக்களைச் சேர்த்துத் தருவது! அந்தச் சொத்துக்களைக் கொண்டு, நம் குழந்தைகள் சந்தோஷ மாகவும் நிம்மதியாகவும், குதூகலத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ்வார்கள் என்பது உறுதி!
ஒரு நிமிஷம்... இங்கே சொத்து என்று நான் காசு- பணத்தையோ, வீடு- வாசலையோ சொல்லவில்லை;

நிலங்களையும் தோப்புகளையும் சொத்து என்று நினைத்துவிடாதீர்கள். வாகனங்களையும் நகைகளையும் சேர்த்து வைத்தால், அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்று தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
 http://www.ammandharsanam.com/magazine/November2010unicode/images/Unnathavalvukku2.jpg
நான் சொல்கிற சொத்து இவையல்ல! அந்தச் சொத்து அளவிடற்கரியது; நாம் நன்றாக இருக்கவேண்டும், அடுத்தடுத்த சந்ததிகளும் குறைவின்றி நிறைவுடன் வாழவேண்டும் என்று நம் முன்னோர்கள் ஆசை ஆசையாக வைத்துவிட்டுப்போன அற்புதமான சொத்து. நமது பூர்வீகச் சொத்து!

அந்தச் சொத்து... மகாபாரதம்! வேதவியாசர், பீஷ்மர் போன்றோர் நமக்கு அருளிய மிக உயர்ந்த சொத்து இது.
இதில் நம் கடமை என்ன என்கிறீர்களா?
முதலில், வேதவியாசருக்கும் பீஷ்மருக்கும் நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? அவர்களுக்கு நன்றியை எவ்விதம் தெரிவிக்கப் போகிறோம்? ஆளுயரத்துக்கு மாலை சார்த்தி வணங்கலாமா? சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்கலாமா? ஏதேனும் ஒருநாளில் விரதமிருந்தால், இவர்கள் மனம் குளிர்வார்களா? இப்படியெல்லாம் செய்தால், அவர்களுக்கு நன்றி செலுத்தியதாக ஆகிவிடுமா, என்ன?இவை எதையுமே அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 

நாமும் நமது அடுத்தடுத்த சந்ததியினரும் மகாபாரதத்தைப் படித்து, அதன் கருத்துக்களை உள்வாங்கி, உய்யவேண்டும்; இறைவனது அருளைப் பெறவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்! அவர்கள் கொடுத்திருக்கிற அளப்பரிய சொத்தான மகாபாரதத்தை, பகவத்கீதையை, இறைவனின் சகஸ்ர நாமங்களைச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதுதான் நமது முக்கியமான கடமை! இதுதான் வேதவியாசர், பீஷ்மர் போன்ற ஆச்சார்யர்களுக்கு நாம் செய்கிற பிரதியுபகாரம்.

அதேநேரத்தில், வாழையடி வாழையாக வளரக்கூடிய நம் சந்ததிக்கு இதனைச் சரியாகவும் முறையாகவும் எடுத்துச் சென்றோம் என்றால், அவர்கள் இறைவனின் பேரருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்!
'என்னதான் சொன்னாலும், மகாபாரதம் படிக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே..! அவ்வளவு சுலபத்துல புரியாதே!’ என்று மலைக்கத் தேவையே இல்லை.


இன்றைய காலகட்டத்தில், வேதங்கள் தெரிந்த நல்ல அறிஞர்கள் பலர், மகாபாரதத்தைச் சுவையாகவும் எளிமையாகவும் அழகுறத் தந்துள்ளனர். அவை அனைத்துமே புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. சொல்லப்போனால், நம் தாத்தாக்களும் அப்பாக்களும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படித்து, கீதையின் சாரத்தையும் ஸ்ரீகிருஷ்ண நாமங்களையும் தெளிவுறத் தெரிந்து வைத்துள்ளனர். 

கொஞ்சம் நம் வீட்டு அலமாரிகளிலும் பரணிலும் தேடினாலே, அந்தப் புத்தகங்கள் நமக்குக் கிடைக்கலாம். அல்லது, கடைகளில் இருந்து அந்தப் புத்தகங்களை வாங்கி, நம் குழந்தைகளுக்குப் பொறுமையாக எடுத்துரைக்கலாம்.

இன்னொரு விஷயம்... ஒண்ணேகால் லட்சம் கொண்ட கிரந்தத்தில், நமக்காகவே வடிகட்டி, சலித்து, பிரித்து, ஸ்ரீபகவத் கீதையையும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தையும் படித்தாலே போதுமானது எனத் தந்திருக்கிறார் ஸ்ரீவேதவியாசர்.

இந்த இரண்டிலும் எது முக்கியம் என்று கேட்பவர்கள் இருக்கிற உலகம் அல்லவா இது!

பெட்டிக்கடை வைத்திருந்த ஒருவர் மிகமிகச் சோம்பேறி. அந்தக் கடைக்கு வந்த ஒரு ஆசாமியும் சோம்பேறிதான். கடைக்காரரிடம் 'ஒரு வாழைப்பழம் வேண்டும்’ என்று கேட்க, உடனே கடைக்காரர், 'கல்லாவுல காசைப் போட்டுட்டு, பழத்தைப் பிய்ச்சு எடுத்துக்குங்க’ என்றார். 

உடனே பழம் வாங்க வந்தவர், 'அப்படின்னா, பழத்தை யார் எனக்கு உரிச்சுத் தருவாங்க?’ என்று சோகத்துடன் கேட்டாராம்! அதேபோல், அத்தனைப் பிரமாண்ட மகாபாரதத்தில், ஸ்ரீபகவத் கீதையையும் பகவானின் சகஸ்ர நாமங்களையும் படித்தாலே போதும் என்றால், அந்த இரண்டில் எது ரொம்ப ரொம்ப முக்கியம் என்று கேட்பது மனித இயல்புதானே?!


சகஸ்ரநாம அத்தியாயங்களைப் படிப்பதே சாலச் சிறந்தது. அதாவது, ஸ்ரீகண்ணனின் திருநாமங்களைத் தெரிந்துகொள்வதே போதுமானது!


'என்னடா இது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்ததுதான் கீதை. அந்தக் கீதையும், அவனது திருநாமங்களும் உசத்தி என்று சொல்லிவிட்டு, பிறகு... கீதையைவிட, அதாவது பகவான் அருளியதை விட, அவனது திருநாமங்களைப் படிப்பதே விசேஷம் என்கிறானே?!’ என்று குழப்பமாக இருக்கிறதா?

கீதை பகவான் சொன்னது; அவனது திருநாமங்களைச் சொன்னவர்கள் வேதவியாசரும் பீஷ்மரும்! அப்படி யிருக்க, பகவான் சொன்ன கீதையை விட, ஆச்சார்யர்கள் சொன்ன விஷயங்களா உசத்தி என்கிற உங்களின் சந்தேகம் நியாயமானதுதான்!

ஆனால், இப்படி நான் சொல்லவில்லை.
பிறகு, யார் சொன்னார்கள்?
அந்த ஆண்டவனே சொல்லியிருக்கிறான். ஆமாம், பகவான் ஸ்ரீகிருஷ்ணரே இப்படிக் கூறியிருக்கிறார்.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisT-FyafZ2ZTE4H-NQqkHwwnBBfMaKz-OC4gL_I5LQYtBKhTLzMZRjdLkQnNrMfZzraKOva4qYiG4zm0luphMJbQ6Z_appqOf6t-KeMe8Hgrmy8XHTdOxV9GE-0JPnEMu_fA4qwympj3k/s400/keethaasaram+(1).jpg
முதலில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆச்சார்யர்கள், அடியவர்கள், பக்தர்கள் எல்லாரும் பகவானின் அடிமைகள். ஆக, பக்தர்கள் என்பவர்கள் ஒரு ஜாதி; இறைவன் வேறொரு ஜாதி. அதாவது பரமாத்மா! 'நான் படுகிற கஷ்டத்தைப் பார்த்தாயா?’ என்று பக்தன் ஒருவன் முறையிட்டால், அதனைக் கேட்டு இறைவன் உடனே வருகிறானோ இல்லையோ... ஆச்சார்யர்கள் என்பவர்கள் ஓடிவருவார்கள். ஏனெனில், இறைவனை அடைவதற்கு அவர்கள் படாத கஷ்டமா? அடையாத அவமானமா? ஆக, நம்முடைய வேதனையை அறிந்து உணரக்கூடியவர்கள் ஆச்சார்யர்கள்!

அம்புப் படுக்கையில் பீஷ்மர் இருந்தபோது, பகவான் கிருஷ்ணர், ''பீஷ்மர் என்பவர் ஞானசக்தி. அவர் இறந்துவிட்டால், பின்பு இந்த உலகில் ஞானம் என்பதே ஒருவருக்கும் வாய்க்காது போய்விடும்'' என யுதிஷ்டிரர் முதலானவர்களிடம் சொல்லி வருந்தினாராம்.

இத்தனைக்கும் யுத்தத்தின் முதல்நாளே, கீதையைச் சொல்லிவிட்டார் ஸ்ரீகிருஷ்ணர். பத்தாம்நாளில், அம்புப் படுக்கையில் கிடக்கிறார் பீஷ்மர். 'நான் சொன்ன கீதையே போதும்; அது உலக மக்களை உய்விக்கும்’ என்று சொல்லிக்கொள்ளவில்லை அந்தப் பரம்பொருள். மாறாக, 'ஸ்ரீகிருஷ்ணராகிய என்னுடைய வாக்கியத்தை விட, பீஷ்மரின் வாக்கியமே ஞானத்தை அளிக்கக் கூடியது’ என்பதைச் சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார் பகவான். அதுதான், ஸ்ரீகிருஷ்ணரின் பெருங்கருணை!

இப்போது புரிகிறதா, இறைவனின் திருநாமங்கள் உசத்திதான் என்று!
அடியவர்களைக் கௌரவப்படுத்தி, அன்பும் அரவணைப்பும் கொண்டு அவர்களுக்கு மரியாதை செய்கிற அவதார புருஷன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.
அவனது திருநாமங்களைச் சொல்லச் சொல்ல... மனசு, தாமரையாய் பூரிக்கும்; பூரித்து நிறைவுற்றிருக்கிற இதயத்தில், ஸ்ரீகண்ணனின் ராஜ்ஜியம் ஆரம்பமாகி விடும்!

நன்றி - விகடன்

Tuesday, April 26, 2011

அழகு உள்ளவர்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி

http://2.bp.blogspot.com/_TWFTNARrwjI/SjfoH-BxzfI/AAAAAAAABkY/9fozEEn9lk8/s400/beauty_parlour_mumbai_PE_1_20061106.jpg

 தரமான பியூட்டி பார்லர்களுக்குப் போக வேண்டுமென்றால்... ஐந்து நட்சத்திர ஓட்டல்களின் வளாகத்தில் இருக்கக்கூடிய பார்லர்களுக்குத்தான் போக வேண்டும் என்றிருந்த காலகட்டத்தில், 'எல்லா தரப்புப் பெண்களுக்கும் கட்டுப்படியாகக் கூடிய கட்டணத்தில், ஐந்து நட்சத்திர பார்லர்களின் சர்வீஸை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்!’ என்ற கனவோடு பத்து ஆண்டுகளுக்கு முன் வீணா சென்னையில் ஆரம்பித்ததுதான், 'நேச்சுரல்ஸ்!’ இன்று தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களையும் தாண்டி, இந்தியாவின் பல பாகங்களிலும் படர்ந்திருக்கிறது!

'சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும்? அதுபோல உடம்பு, சருமம், முடி... இந்த மூன்றும் பூரண ஆரோக்கியத்தோடு பொலிவாக இருந்தால்... அதுதான் பேரழகு. இந்த மூன்றையும் மாசு மருவில்லாமல் எப்படி பொலிவோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுவதுதான் எங்கள் பிரதான வேலை!'' என்று சொல்லும் வீணா, 'என்ன அழகு... எத்தனை அழகு..!’ எனும் இத்தொடரை படைக்கிறார்.

இதைப் படிக்கப் போகும் உங்களின் அழகையும் பொலிவையும் கூட்டுவதோடு அவர் நிறுத்திக் கொள்ளப்போவதில்லை... உங்களை அழகுக்கலை நிபுணராகவே மாற்றப்போகிறார்... பின்னே... உங்களின் கணவர், அம்மா, அப்பா, மாமியார், மாமனார், மகள், மகன், நாத்தனார், சகோதரிகள் என்று குடும்பம் மொத்தத்தையும் நீங்கள் அழகுபடுத்திப் பார்க்க வேண்டுமே!ஓவர் டு வீணா!

 http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/Sjfo3PqHt5I/AAAAAAAABkg/DmmZ_umo9uQ/s400/chd5.jpg
''வெறும் மஞ்சளும் சந்தனமும் மட்டுமே அழகு சாதனங்களாக இருந்த அந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகு சாதனங்களுக்கென்று பிரத்யேக சூப்பர் மார்க்கெட்டுகள் செயல்படும் இந்தக் காலமாக இருந்தாலும் சரி... அழகுக்கான இலக்கணம் மட்டும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது!


'மீனை ஒத்த கண்கள், எள்ளுப் பூ நாசி, ஆப்பிள் கன்னம், செர்ரி உதடு... என்றிருப்பதுதான் அழகு!’ என்று எண்ணத் திரையில் கற்பனை செய்து வைத்திருக்கும் எல்லாமும் ஒரு பெண்ணிடம் இருக்கிறது. ஆனால்... அந்தப் பெண் கூன் வீழ்ந்த முதுகோடும், சோர்வான முகத்தோடும் பொலிவிழந்து காணப்பட்டால்... நிச்சயம் அது அழகில்லைதானே! ஆகவே, ஒளிபடைத்த கண்களும், உறுதி படைத்த உடலும் நெஞ்சமும்தான் அழகுக்கான அடிப்படை தேவை.

அழகுக்கு பல பரிமாணங்கள் உண்டு. நமது உடம்பின் மிகப் பெரிய அவயம்... ஸ்கின் எனப்படும் சருமம். வெளி உலகத்தோடு நேரடியான தொடர்பில் இருப்பதும் இந்த ஸ்கின்தான். புறத்தின் அழகை மட்டுமல்ல... உடல் ஆரோக்கியம் எனும் அகத்தின் அழகையும் முகத்தில் இருக்கும் ஸ்கின் காட்டிவிடும்.

அந்த ஸ்கின்னுக்கு போடுவதுதான் 'மேக் - அப்’ (Make-up). இந்த ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம், சமாளித்தல்! எதைச் சமாளித்தல்? ஒரு முகத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறைத்து, சாதகமான அம்சங்களை தூக்கலாக காட்டிச் சமாளிப்பது!
 http://tym.dinakaran.com/Ladiesnew/L_image/ld521.jpg
வறவறவென்று இருக்கும் 'ட்ரை ஸ்கின்’, எண்ணெய் பிசிறுள்ள 'ஆய்லி ஸ்கின்’, அதுவாகவும் இல்லாமல்... இதுவாகவும் இல்லாமல் இருக்கும் 'காம்பினேஷன் ஸ்கின்’, 'நார்மல் ஸ்கின்’ என்று சருமத்தின் வகைகளை நான்கு விதமாகப் பிரிக்க முடியும். யாருக்கு எந்த வகையான சருமம் இருக்கிறது என்று கண்டுகொண்டால்தான் அவருக்கு என்ன மாதிரியான மேக் - அப் சரி வரும் என்பதை முடிவு செய்ய முடியும். - தொடரும்

நன்றி - அவள் விகடன்

 டிஸ்கி- இந்தப்பதிவுக்கு உண்மையான டைட்டில் -  மேக்கப் போடுவது எப்படி?
( ஒன்லி ஃபார் லேடீஸ்) என்பது தான்.. ஆனால் எனக்கு இயற்கையாகவே கூச்ச சுபாவம் உள்ளதால் தலைப்பை மாத்தீட்டேன் ஹி ஹி

Saturday, April 23, 2011

என் கண்ணைப்பார்த்து மயங்கிய ரஜினி, நடிகை ராதா மகள் கார்த்திகா கில்மா பேட்டி - காமெடி கும்மி

http://www.dailomo.com/tamil/content_images/1/images1/radha-daughter-karthika-hot/radha-daughter-karthika-pics-1.jpg 

'1. ' 'கோ’ ரிலீஸ் ஆகப்போகுது. அதில் உங்க பங்கு என்ன?'' 

''கே.வி.ஆனந்த் சார் என்னை முதல் முறை சந்திச்சப்போ, 'பரபரன்னு திரியுற ஒரு ஜர்னலிஸ்ட் கேரக்டர். பார்க்கும்போதே 'இவ எதுவும் பண்ணுவா!’னு ஆடியன்ஸ் நினைக்கணும்’னு சொன்னார்.

( எதுவும் பண்ணுவா ன்னா?... ஓஹோ.. தமிழ் ரசிகன் அவன் மனசுக்குபிடிச்ச ஃபிகர்னா அவளுக்காக எதுவும் பண்ணுவான்னா.. ஹி ஹி ரைட்டு.. )


வழக்கமா தமிழ்ப் படங்களில் ஹீரோ பில்டப்தான் அதிகம் இருக்கும். ஆனா, இதில் எனக்குத் தான் பில்ட்-அப் ஜாஸ்தி. 'சொன்னதும் பளிச்னு புரிஞ்சுக்கிறாங்க’னு அப்பப்ப ஷூட்டிங் ஸ்பாட்ல கே.வி சார் என்னைப் பாராட்டும்போது எல்லாம், முறைச்சுப் பார்ப்பார் ஜீவா.

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது அம்மணி.. ஆனானப்பட்ட ஐஸ்வர்யாராயே அடக்கிதான் வாசிக்கறாங்க.. நோட் இட்


எனக்கு ஒரே டார்கெட்தான். நான் சினிமாவுக்கு வந்தது பணம் சேர்க்கணும்னு இல்லை. பெஸ்ட் பெர்ஃபார்மர்னு பேர் வாங்கணும். அதைச் சீக்கிரமே வாங்கணும். அவ்வளவுதான்!''


2. ''ஜீவா என்ன சொன்னார்?'' 

''நிறைய ஹெல்ப் பண்ணினார்.

ஹி ஹி  நோ  கமெண்ட்ஸ்


படத்துல அவர் போட்டோ ஜர்னலிஸ்ட். அதனால, எப்பவும் கேமராவும் கையுமாதான் இருப்பார்.

(ஜப்பான் மொழில கேமரான்னா கார்த்திகான்னு அர்த்தமா? ரைட்டு.. )


கேமராவில் விளையாட்டா ஸ்டில்ஸ் எடுத்துட்டு இருந்தவர், படம் முடியும்போது புரொஃபஷனல் போட்டோகிராபர் ஆகிட்டார். என்னை வித விதமா, அழகழகா போட்டோக்கள் எடுத்துக் கொடுத்தார்.

ஓப்பனிங்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஃபினிஷிங்க்ல பிரச்சனை வராம இருந்தா சரி.. எப்படியோ ஜீவா நல்லா டெவலப் பண்ணீட்டார் போல.. ஸ்டில்சை.. 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEieKOv5_SIZcTseUvMXhwTVAs994MhMzpJ2nsfmUvzA04-q8tiaxYp0VxtaBPksfPaoxExeoAhXyGOT7L3RiE_isfGwo9UVSnz-mBv0M0n1JOKXm_6dLikYw7xdXTNdv13CTL3M95yDF7JW/s400/karthika-hot-sexy2.jpg

'3. 'தமிழில் கார்த்திக்கின் பையன் கௌதமுடன் மணிரத்னம் படத்தில் அறிமுகம் ஆகப்போறீங்கனு நியூஸ் வந்ததே?'' 


''ஆங்... நானும் கேள்விப்பட்டேன். ஆனா, அது உண்மை இல்லை. நான் கௌதமைப் பார்த்ததே இல்லை.


பார்க்காமயே எப்படி? ஹி ஹி


அதனால என்ன... சான்ஸ் கிடைச்சா அவர்கூடவும் ஒரு படம் நடிச்சிரலாம். எனக்கு இவர், அவர்னு இல்லை. இப்போ இண்டஸ்ட்ரியில் மாஸா, க்ளாஸா யார் எல்லாம் இருக்காங்களோ, அவங்க எல்லோ ருடனும் நடிக்கணும்!''

 மாஸா க்ளாஸா இருந்தா மட்டும் போதாது.. பார்ட்டி நல்ல பீஸா என பார்த்து நடிங்க.. 




4''விட்டா... ரஜினி கூட நடிக்கணும்னு சொல்வீங்க போல?'' 

''ஏன், நான் நடிக்கக் கூடாதா? எய்ட்டீஸ் ஹீரோ - ஹீரோயின்கள் கெட் டு கெதரின்போது என் அம்மாகிட்ட ரஜினி அங்கிள், 'உன் பொண்ணு படத்தை பத்திரிகையில் பார்த்தேன். அவ கண்ணு சூப்பரா இருக்கு.

நல்லவேளை.. கண்ணு சூப்பர்ன்னார்.. பொண்ணு சூப்பர்னு சொல்லலை..

கே.வி நல்லாப் படம் பண்ணுவார். உன் பொண்ணுக்கு நல்ல என்ட்ரி கிடைக்கும்’னு வாழ்த்தினாராம். அம்மா சொன்னதும் அவ்வளவு ஹேப்பியா இருந்தது. அடுத்த தடவை சென்னை வரும்போது எப்படியும் ரஜினி அங்கிளைச் சந்திக்கணும்!''

 ராதா கூட ரஜினியை அங்கிள்னு தான் கூப்பிடுவார்.. நீங்களும் அப்படியே கூப்பிட்டா ... எப்படி?தாத்தா முறை ஆகலை?
http://img.xcitefun.net/users/2008/08/9441,xcitefun-karthika-5.jpg

டிஸ்கி -1  ராதா கால ரசிகர்கள் யாரும் கார்த்திகா ஸ்டில்சை ரசிக்காதீங்க.. ஏன்னா மக முறை ஆகுது.. ராதாவையும் ரசிச்சிட்டு கார்த்திகாவையும் ரசிச்சா எப்படி? ஹி ஹி

டிஸ்கி 2 -பதிவே முடிஞ்ச பின்னால கடைசியா எதுக்கு ஒரு ஸ்டில்லுன்னு கேட்கறவங்களுக்கு மட்டும் ஒரு வார்த்தை.. இதுதான் ஃபினிஷிங்க் டச்.. ஹி ஹி

Wednesday, April 20, 2011

ஈரோடு மாவட்டத்தில் தழைத்தோங்கும் வாழை விவசாயம்

http://farm4.static.flickr.com/3062/3041844520_081b6957f6.jpg

''இனிப்பான வருமானம் தரும் இயற்கை இலைவாழை’!

ஜி. பழனிச்சாமி  
 பளிச் பளிச்...
ஏக்கருக்கு 1,700 கன்றுகள்.
சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.
வாரத்துக்கு இரண்டு அறுவடை. 
அன்றாடம் தேவைப்படும் தக்காளி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய விளைபொருட்களில் வாழை இலையும் ஒன்று. கோயில் விழாக்கள், குடும்ப விழாக்கள்... என எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, கண்டிப்பாக அங்கே வாழை இலைக்கு முக்கிய இடமுண்டு.

இத்தகைய சந்தை வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு இலைக்காகவே வாழை சாகுபடி செய்பவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவராகத் தொடர்ந்து இயற்கை முறையில் இலை வாழை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார், ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அடுத்துள்ள பெரியவீரச்சங்கிலி கிராமத்தைச் சேர்ந்த நல்லசிவம்.
பயிற்சிக்குப் பின் இயற்கை! 
அறுவடை செய்யப்பட்ட வாழை இலைகளை மனைவி சொர்ணாவுடன் இணைந்து கட்டுக் கட்டிக் கொண்டிருந்த நல்லசிவம், அப்படியே நம்மிடமும் பேச ஆரம்பித்தார்.
''எனக்கு ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. எங்க பகுதி கடுமையான வறட்சிப் பகுதி. கிணத்துத் தண்ணியை வெச்சுதான் வெள்ளாமை. அந்தத் தண்ணியும் ஒரு ஏக்கருக்குதான் பாயும். அதனால இறவையில மஞ்சள், மரவள்ளி, வாழைனு மாத்தி மாத்தி சாகுபடி பண்ணிக்குவோம். மீதி நிலத்துல மானாவாரியா கடலை, எள், ஆமணக்குனு வெள்ளாமை வெப்போம்.
ஆரம்பத்துல நானும் ரசாயன விவசாயம்தான்.ஈரோடுல நடந்த 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்பு, 'இனியெல்லாம் இயற்கையே’ களப்பயிற்சி ரெண்டுலயுமே கலந்துக்கிட்டு பயிற்சி எடுத்துருக்கேன். இப்போ மூணு வருஷமா முழு இயற்கை விவசாயம்தான் செஞ்சுக்கிட்டு இருக்கோம்'' என்று மகிழ்ச்சி பொங்க முன்னுரை கொடுத்தவர்,

 http://img.dinamalar.com/data/images_news/tblgeneralnews_58661615849.jpg
''போன போகத்துல தக்காளி போட்டிருந்தோம். 30 டன் மகசூல் கிடைச்சுது. அதை அழிச்சிட்டு புரட்டாசிப் பட்டத்துல இலைவாழை நடவு செஞ்சோம். தை மாசத்துல இருந்து அறுவடை பண்ணிக்கிட்டுஇருக்கோம்.

நாமே வேலை செய்தால்... கூடுதல் லாபம்! 
இயற்கை முறையில் சாகுபடி செய்யுறதால தளதளனு நல்லாவே வளர்ந்திருக்கு வாழை. ஒரு ஏக்கர்ல மட்டுமே வெள்ளாமை பண்றோம். மருந்தடிக்க, உரம் வெக்கனு இந்த வேலைகளுக்கெல்லாம் ஆளுங்கள வெக்கிறதில்ல... நாங்களேதான் பாத்துக்குறோம்.

வாழையைப் பொறுத்தவரைக்கும் உழவுக்கு, நடவுக்கு, களை எடுக்குறதுக்கு மட்டும்தான் வெளியாட்கள். அறுவடையெல்லாம் நாங்க ரெண்டு பேரே பாத்துக்குவோம். இதனால எங்களுக்குக் கூடுதல் லாபம்தான்'' என்ற நல்லசிவம், ஒரு ஏக்கருக்கான இலை வாழை சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.
ஆடியில் சணப்பு... புரட்டாசியில் வாழை! 
''புரட்டாசி மாதத்தில் வாழை நடவு செய்ய வேண்டும் என்பதால், ஆடி மாதத்திலேயே நிலத்தை நன்கு உழுது, 35 கிலோ சணப்பு  விதைகளை ஏகத்துக்கும் விதைத்து, வாரம் ஒரு தண்ணீர் விட்டுவர வேண்டும். 40 நாட்கள் கழித்து அதை மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, 10 டன் தொழுவுரத்தைக் கொட்டி இறைத்து ஓர் உழவு செய்ய வேண்டும்.


ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook

ViewMore FromTagsCommentsShareSendFavoriteTwitterFacebook
http://farm4.static.flickr.com/3167/2681755070_cbb269bbfa.jpg
ஐந்தடி இடைவெளி! 
பிறகு... வரிசைக்கு வரிசை, பக்கத்துக்குப் பக்கம் ஐந்தடி இடைவெளி விட்டு குழிகள் எடுக்க வேண்டும் (வழக்கமாக வாழைக்கு அதிக இடைவெளிவிட வேண்டும். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது குறைந்த இடைவெளி இருந்தாலே போதுமானது. இலைகளை அடிக்கடி அறுவடை செய்வதால், இந்த இடைவெளியிலேயே தேவையான சூரியஒளி மற்றும் காற்றோட்டம் வாழைக்குக் கிடைத்து விடும்).

ஒவ்வொரு குழியும் அரை அடி ஆழம் மற்றும் அகலத்துடன் இருக்க வேண்டும். மண்வெட்டி மூலமே குழி எடுத்து விடலாம். இந்த இடைவெளியில் குழி எடுக்கும்போது நிலத்தின் வாகைப் பொறுத்து 1,700 குழிகள் வரை எடுக்க முடியும் (இவர் 1,600 குழிகள் எடுத்திருக்கிறார்). பிறகு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்துக்கொள்ள வேண்டும்.
நாட்டுரக வாழைக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும் (இவர் பூவன் ரகக் கன்றுகளை நடவு செய்திருக்கிறார்). நாம் குழிகளை எடுத்து நிலத்தைத் தயார் செய்து வைத்துவிட்டால், கன்று விற்பனை செய்யும் வியாபாரிகளே நடவு செய்து கொடுத்து விடுவார்கள். பிறகு, நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.

மாதம் ஒரு முறை ஜீவாமிர்தம்! 
நடவு செய்த 20ம் நாளில் களையெடுத்து, 200 லிட்டர் வடிகட்டிய ஜீவாமிர்தக் கரைசலை சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும். தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை ஜீவாமிர்தத்தை இதேபோல சொட்டுநீருடன் கலந்துவிட வேண்டும்.

40ம் நாள் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் அடங்கிய ஆர்கானிக் உரத்தை, கன்றுக்கு 60 கிராம் வீதம் அடிப்பகுதியில் வைத்து நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் (ஏக்கருக்கு 100 கிலோ உரம் தேவைப்படும்).

ஐந்தாம் மாதத்திலிருந்து அறுவடை! 
60ம் நாள் மீண்டும் ஒரு முறை களையெடுத்து மண் அணைத்துவிட வேண்டும். 90ம் நாள் 1,600 கிலோ மண்புழு உரத்துடன் 2 கிலோ சூடோமோனஸ் மற்றும் 2 கிலோ டிரைக்கோடெர்மாவிரிடி ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு கன்றுக்கும் அடிப்பகுதியில் ஒரு கிலோ அளவுக்கு இட்டு பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கை வைக்க வேண்டும்.
 http://yananwritings.files.wordpress.com/2010/09/banana-leaf.jpg
நடவு செய்த ஐந்தாம் மாதத்தில் இருந்து இலைகளை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். தொடர்ந்து 13 மாதங்கள் வரை அறுவடை செய்யலாம். ஏழாம் மாதம் தேவைப்பட்டால், சாம்பல்சத்து அடங்கிய ஆர்கானிக் உரத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல பயிர் ஊட்டம் குறைந்து காணப்பட்டால், 3 லிட்டர் பஞ்சகவ்யா அல்லது 5 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை             100 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.
இலைவாழைக்கு இரண்டு தழைவுகள்! 
அறுவடையைத் தொடங்கும் ஐந்தாம் மாதத்திலேயே பக்கக்கன்றுகளும் முளைத்து வந்து விடும். இவற்றில் தரமானக் கன்றுகளை விட்டுவிட்டு மற்றவற்றைக் கழித்துவிட வேண்டும். பக்கக் கன்றுகளிலும் ஐந்து மாதத்துக்குப் பிறகு இலைகளை அறுவடை செய்யலாம்.

தாய் மரங்களில் அறுவடை முடிந்த ஐந்து மாதங்கள் வரை பக்கக் கன்றுகளில் அறுவடை செய்யலாம். அதன்பிறகு, மொத்தமாக எல்லா மரங்களையும் அழித்துவிட வேண்டும். பழங்களுக்காக வாழை சாகுபடி செய்யும்போது மூன்று அல்லது நான்கு தழைவு வரை பக்கக் கன்றுகளை விடுவார்கள். ஆனால், இலைக்காக சாகுபடி செய்யும்போது இரண்டாம் தழைவோடு நிறுத்தி விட வேண்டும்.
இயற்கை முறையில் சாகுபடி செய்யும்போது மரங்கள் நல்ல வலிமையாக இருப்பதோடு வெயில், மழை ஆகியவற்றையும் தாண்டி நிற்கும். இலைகளும் தடிமனாக இருப்பதால் அதிகமாகக் கிழியாது.’
இரண்டரை லட்ச ரூபாய் லாபம்! 
சாகுபடிப் பாடத்தை நல்லசிவம் முடிக்க, மகசூல் மற்றும் வருமானம் பற்றி ஆரம்பித்தார் அவருடைய மனைவி சொர்ணா.
''வாரத்துக்கு இரண்டு முறை இலைகளை அறுக்கலாம். ஆரம்பத்துல கம்மியாத்தான் கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா மகசூல் கூடும். அறுப்புக்கு 1,300 இலைகள் வீதம் மாசத்துக்கு 10,000 இலைகள் சராசரியா கிடைக்கும்.                 18 மாசத்துக்கு இப்படி தொடர்ந்து அறுவடை பண்ணலாம். இயற்கை முறையில விளைவிக்கறதால ரெண்டு, மூணு நாள் வரைக்கும்கூட எங்க இலைகள் வாடாம இருக்குனு வியாபாரிங்க சொல்வாங்க.
 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibO1-YcH15ku932R2gmQnZ0g2iZTMD-Ar_TmKSwfJo0VPMOfY_nIkPxS2tY-BFigsFcfAR0nnvBkZhnfD3Fcm5oT6m3yBrNT3djcsvywVA7JKZcUS_BIOUdAtTG8GxGGNN4vauu0nQI_av/s320/vaazhaimaram-01.jpg
அதனால, இலைக்கு பத்து பைசா கூடுதலாவும் கொடுக்கறாங்க. இலைக்கு ரெண்டு ரூபாய் வரைக்கும் விலை கிடைக்குது. எப்படிப் பாத்தாலும், மொத்தத்துல ரெண்டரை லட்ச ரூபாய்க்குக் குறையாம லாபம் கிடைக்கும்'' என்றார் மகிழ்ச்சியாக. 

 தொடர்புக்கு


எஸ். நல்லசிவம், அலைபேசி: 98422-48693.
'பசுமைத்தாய் உழவர் மன்றம்!’
நல்லசிவம், தன்னுடைய பகுதியில் இருக்கும் 13 விவசாயிகளை ஒன்றிணைத்து தோட்டக்கலைத்துறை உதவியுடன் 'பசுமைத்தாய் உழவர் மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம், இயற்கை விவசாயம், கருவிகள் பயன்பாடு போன்றவற்றைப் பற்றி  பயிற்சி முகாம்கள் நடத்துவதோடு பசுமைச் சுற்றுலாவுக்கும் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

Monday, April 18, 2011

ஒரு சின்னப்பையன் சமையல் குறிப்பு பற்றி எதுவும் சொல்லக்கூடாதா? என்ன கொடுமை சார் இது?

http://tamil.webdunia.com/entertainment/tvtime/news/0911/27/images/img1091127022_1_1.jpg

பிக்னிக், டூர் என்றாலே, 'போகிற இடத்தில் நல்ல சாப்பாடு கிடைக்குமா?' என்கிற கேள்வி வந்து நிற்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் கட்டுச்சோறுடன் கிளம்பினார்கள் நம்மவர்கள். 'இப்ப அதுக்கெல்லாம் ஏது நேரம்?'னு சொல்பவர்களுக்காக... நொடியில் தயாரிக்கக்கூடிய பலவிதமான ரெடி மிக்ஸ்களை இங்கே பார்சல் கட்டித் தருகிறார் சென்னையைச் சேர்ந்த 'சமையல் கலைஞர்' தேவிகா காளியப்பன்.

பெட்டிப் படுக்கைகளைத் தூக்கும் போதே... ஒரு இன்டக்ஷன் ஸ்டவ்  மற்றும் சில பாத்திரங்களோடு இந்த மிக்ஸ்களையும் கையில் எடுத்துக் கொண்டால் போதும்... போகிற இடத் தில் ஆரோக்கியமான மற்றும் அறுசுவையான உணவுக்கு நீங்கள்தான் உத்தரவாதம்!

சரி, சமையல் ரெசிபிகள் தொடர்பான அளவுகளை ஒரு டீஸ்பூன், ஒரு டேபிள்ஸ்பூன், ஒரு கப் என்றெல்லாம்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால், இந்த அளவுகள் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எடுத்துக் கொண்டு குழம்புவது சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
'ஒரு கப் உளுந்துனு போட்டிருக் காங்களே... அது எத்தனை கிராமா இருக்கும்? நூறு கிராம் அரிசினு போட்டிருக்காங்களே அது கால்படியா... அரைக்கால் படியா ஒண்ணும் புரியலையே!' என்றெல்லாம் ஆரம்பித்து, எல்லாவற்றி லுமே சந்தேகம் எட்டிப் பார்த்து... சமயங் களில் சமையலையே அது காலி செய்துவிடுவதும் உண்டு.
அவர்களுக்கெல்லாம் உதவுவதற்காக குறிப்பிட்ட சில அளவு முறைகள் இங்கே இடம் பிடிக்கின்றன. பொதுவாக படிக் கணக்கு என்பது இன்னமும் வீடுகளில் வழக்கத்தில் இருக்கத்தான் செய்கின்றன. அரைப்படி, கால்படி, அரைக்கால்படி எனப்படும் அந்த அளவைகள்... உரி, உழக்கு, ஆழாக்கு என்று பகுதிக்கு பகுதி வெவ்வேறு பெயர்களில் இவை வழங்கப்படுகின்றன. அவற்றில் கால்படியில் தானியங்கள் மற்றும் மாவுகளை அளந்தால் எத்தனை கிராம் இருக்கும் என்பது மேலே தரப்பட்டிருக்கிறது.

1. சத்துமாவு மிக்ஸ் 

தேவையானவை: கோதுமை, ராகி - தலா 100 கிராம், கம்பு, பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை - தலா 50 கிராம், பாதாம், முந்திரி - தலா 10, வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, சர்க்கரை, நெய், பால் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் கோதுமை, ராகி, கம்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை தனித்தனியே வாசனை வரும் வரை சிவக்க வறுக்கவும். இதனுடன் பொட்டுக்கடலை, பாதாம், முந்திரி, வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

தேவைப்படும்போது இந்த மாவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து சத்து உருண்டையாக செய்து சாப்பிடலாம். மாவில் தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து கஞ்சி போல் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.
இதனை சாப்பிட்டால்... சத்தும், நல்ல புத்துணர்வும் கிடைக்கும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்த லாம்.

--------------------------------------------------

2. ரவா தோசை மிக்ஸ் 

தேவையானவை: வெள்ளை ரவை - 100 கிராம், அரிசி மாவு - 75 கிராம், மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஒன்றிரண்டாக பொடித்த மிளகு - சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரி - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய காய்ந்த கறிவேப்பிலை - சிறிதளவு.

தோசை செய்ய: பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ரவை, அரிசி மாவு, மைதா மாவு, பொடித்த மிளகு, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைத்துக் கொள்ளவும். தோசை தேவைப்படும்போது, ரவா தோசை மிக்ஸ்,  உப்பு, வெங்காயம், கொத்தமல்லி சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு ரவா தோசை பதத்தில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து  இதில் சேர்க்கவும்.

சூடான தோசைக்கல்லில் கரைத்த மாவை பரவலாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மொறுமொறுப்பாக வந்ததும் ஹோட்டல் தோசை போல் திருப்பிப் போடாமலே எடுத்துப் பரிமாறவும். ஒரு மாதம் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
http://tamildigitalcinema.com/wp-content/uploads/2010/08/Pasumai-Samayal4.jpg
---------------------------------------------
 3. தேங்காய் பொடி 

தேவையானவை: தேங்காய் - அரை மூடி, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பையும் காய்ந்த மிளகாயையும் சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும். கறிவேப்பிலை போட்டு வறுக்கவும். தேங்காயைத் துருவி சிவக்க வறுக்கவும். இதனுடன் மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.

இட்லி மிளகாய்ப்பொடிக்கு பதிலாக இதை பயன்படுத்தலாம். வித்தியா சமான சுவையில் இருக்கும். சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிட லாம். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

-----------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKPHpnT8esxNmCtkReAk9nRTxe-ZgPLULgHYiFNpDnpfnnGG4lh3xf-f7RVHi_BJVWj5P5VNMaSeLkosTCN88JMcwmyQOmn2toW2pCte1fddxkSqMqPrErBd_7gOX3JlpCOf4BkTsRdCUc/s1600/Tamanna_Red_Green_Half_Saree.jpg
4.சேமியா பகாளாபாத் மிக்ஸ் 

தேவையானவை: சேமியா - 100 கிராம், சீரகம் - ஒரு டீஸ்பூன், நறுக்கி காய வைத்த இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 2, முந்திரி - 10, திராட்சை - 10. உலர்ந்த கறிவேப்பிலை, நெய், எண்ணெய் - சிறிதளவு.

பகாளாபாத் செய்ய:  உப்பு, புளிப்பில்லாத தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சீரகம், இஞ்சி, மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை போட்டு வறுத்து, திராட்சை சேர்த்து வறுக்கவும். சேமியாவைத் தனியாக நெய் விட்டு வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

சேமியா பகாளாபாத் தேவைப்படும்போது கடாயில் தண்ணீர் ஊற்றி (ஒரு பங்கு சேமியா கலவைக்கு இரண்டு பங்கு தண்ணீர்),  கொதித்ததும் சேமியா கலவை, உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி ஆற வைத்து, புளிப்பில்லாத தயிர் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவி பரிமாறவும். இரண்டு வாரங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

--------------------------------------

5.ரெடிமேட் வத்தக்குழம்பு மிக்ஸ் 

தேவையானவை: கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 7, வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும். இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

---------------------------------


 டிஸ்கி 1  - பெண்கள் படிக்கற மாதிரி சி பி எழுதறதே இல்ல என்ற அவப்பெயர் இன்றோடு தொலைந்தது.. ஹி ஹி

டிஸ்கி 2 - அவள் விகடன் ல இருந்த கட்டுரையைத்தான் இதுல போட்டிருக்கேன்.. அதனால இதுல ஏதாவது டவுட்னா என்னை கேட்காதீங்க.. எனக்கு ருசியா யாராவது சமைச்சா சாப்பிட மட்டுமே தெரியும்..

டிஸ்கி 3  - சி பி க்கு என்ன ஆச்சு? வீட்ல சண்டையா? சொந்த சமையலா? மாமியார் வீட்ல மனைவியா ?போன்ற கமெண்ட்கள் கடுமையாக மறுக்கப்படும்.ஹி ஹி 

டிஸ்கி 4 -  நம்பி வந்தவங்களை நட்டாத்துல விடற ஜெ புத்தி எனக்கு கிடையாது என்பதால் என் தளத்துக்கு ரெகுலரா வர்றவங்க  வை கோ  மாதிரி ஏமாந்து போகாம இருக்க சில ஸ்டில்களை இணைத்துள்ளேன்.. பார்த்து ரசித்து விட்டு செல்லவும்..