ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சினி ஃபீல்டில் ஆர்ட் டைரக்டர் . தன் முதல் படத்துக்காக தன் சொந்தக்காசைப்போட்டு ஒரு பேய் பங்களாவை உருவாக்குகிறார் . ஆனால் ஷூட்டிங்க் ஆரம்பிக்கும் தருணத்தில் படத்தின் ஹீரோ - ஹிரோயின் ஓடி விடுவதால் படம் நின்று விடுகிறது . நாயகனுக்குப்பெருத்த அதிர்ச்சி . அப்போது நாயகனின் காதலி கம் தோழி ஒரு ஐடியா கொடுக்கிறார் . அந்த பேய் பங்களாவை ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்றி சர்க்கஸ் , மேஜிக் ஷோ போல ஸ்கேரி ஷோ நடத்தினால் காசு பார்க்கலாம் என்கிறாள் . ஃபாரீனில் தான் இது போல உண்டு . முதன் முறையாக இங்கே அதை செயல்படுத்தி வெற்றியும் பெறுகிறார்கள்
ஆனால் அந்த ஸ்கேரி ஹவுசில் ஒரு ஆள் மர்மமான முறையில் காணாமல் போக அங்கே நிஜமாகவே தீய சக்திகள் உலா வருவதாக வதந்தி பரவி அந்த ஸ்கேரி ஹவுஸ் ஷோ தடை செய்யப்படுகிறது .அங்கே இருக்கும் ஒரு பழங்கால பியானோவை வாசிக்கும்போது சில அதிசயங்கள் நிகழ்கின்றன
1940 ல் வாழ்ந்த ஒரு சித்த வைத்தியர் பற்றிய கதை ஃபிளாஸ்பேக்கில்...
ஒரு ஆங்கிலேய துரையின் தங்கை முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு கை கால் செயல் இழந்து இருக்கிறார் . ஒரு சித்த வைத்தியர் 48 நாட்களில் குணப்படுத்துவதாக சவால் விட்டு அதன்படியே செய்கிறார்
இதனால் அந்த ஆங்கிலேய லேடிக்கும் , சித்த வைத்தியருக்கும் காதல் மலர்கிறது . ஆனால் புற்று நோய் போன்ற கொடிய நோய்களை குணப்படுத்தும் மருந்து சித்த வைத்தியத்தில் உண்டு என்று சொன்ன சித்த வைத்தியர் கொலை செய்யப்படுகிறார் .
அவரைக்கொலை செய்தது யார் ? எதனால் கொலை செய்தார்கள்? . படத்தின் நாயகனுக்கும் இந்த ஃபிளாஸ்பேக் கதைக்கும் என்ன சம்பந்தம்? ,. எலும்புப்புற்று நோயால் பாதிக்கப்பட்ட நாயகனின் அம்மா குணம் ஆனாரா? என்பது மீதி திரைக்கதை
நாயகன் ஆர்ட் டைரக்டர் ஆகவும் , ஃபிளாஸ்பேக்கில் ஒரு ரோலிலும் என இரு வேடங்களில் ஜீவா வருகிறார் . ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு . ஆனால் அவரை விட அதிகம் கவனம் கவர்வது சித்த வைத்தியர் ஆக வரும் அர்ஜூன் . ஆள் அந்தக்கால அர்ஜூன் போலவே இளமையாக இருக்கிறார். அவர் நடிப்பும் அருமை
நாயகி ஆக ,. ஜீவாவின் ஜோடியாக ராசி கண்ணா ,. அதிக வாய்ப்பில்லை . வந்த வரை ஒக்கே ரகம்
இன்னொரு நாயகி ஆக அர்ஜூனின் ஜோடியாக மெடில்டா கொழுக் மொழுக் என அழகாக இருக்கிறார் . படம் முழுக்க வருகிறார்
ஜீவாவின் அம்மாவாக ரோகினி பரிதாபமாக இருக்கிறார் . நல்ல நடிப்பு . . யோகிபாபு , ரெடின் கிங்க்ஸ்லி இருவரும் சும்மா வந்து போகிறார்கள் . ராதாரவி வில்லத்தனம் கலந்த காமெடி ரோல். சார்லிக்கு ஜீவாவின் அப்பா ரோல் .
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல் சுமார் ரகம் . என் இனிய பொன் நிலாவே ரீமிக்ஸ் அருமை . பின்னணி இசை ஓக்கே ரகம் . சான் லோகேஷின் எடிட்டிங்கில் 137 நிமிடங்கள் படம் ஓடுகிறது . தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு பிரமிக்கும்படி இருக்கிறது .
ஆர்ட் டைரக்சன் கலக்கல் ரகம் . ஸ்கேரி ஹவுஸ் செட்டப் , அதிலேயே ஃபிளாஸ்பேக் கதை நிகழ்வது என வெரைட்டி காட்டி இருக்கிறார்கள்
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பது ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே என்னும் பாடலுக்காக தேசிய விருது பெற்ற பாடல் ஆசிரியர் கம் இயக்குனர் பா விஜய்
சபாஷ் டைரக்டர்
1 முதல் பாதியை திகில் , காமெடி என ஜாலியாகக்கொண்டு போனது
2 ஃபிளாஸ்பேக் போர்சனில் அர்ஜூன் தோற்றமும், நடிப்பும், காதல் காட்சிகளூம்
3 சித்த வைத்தியத்தின் பெருமைகளை சொல்லும் வசனங்கள்
ரசித்த வசனங்கள்
1 ஜெயிக்கனும்னு ஆசைப்படும் எல்லோரும் ஜெயிப்பதில்லை துணிச்சலுடன் முடிவு எடுப்பவர்கள் தான் ஜெயிக்கிறார்கள்
2 அதிகார வர்க்கம் மக்களை ஏமாற்றத்தான் இலவசங்களை அறிவித்தது
3 பயங்கரவாதியை விட பகுத்தறிவு வாதி ரொம்ப அபாயகரமானவன்
4 உன் ஆழ் மனதில் எது நடக்கும்னு நினைக்கிறாயோ அது நடந்தே தீரும்
5 செம்பருத்திப்பூவில் செம்பு அதிகமாக இருக்கும்
6 கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு கடவுள் கை கொடுப்பதில்லை , கஷ்டத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என நினைப்பவர்களுக்குத்தான் கடவுள் கை கொடுப்பார்
7 சித்த மருத்துவம் சாகா மருத்துவம் மட்டுமல்ல, யாரையும் சாக விடா மருத்துவமும் கூட
8 இங்க்லீஷ் மெடிசனுக்கு எக்ஸ்பயரி டேட் உண்டு , இயற்கைக்கு ஏது எக்ஸ்பயரி டேட் ?
9 பியானோ வில் நான் செவந்த் கிரேடு
நான் டெந்த்
ஃபெயிலா?
இல்லை , நாலாவது வருசம்
10 சார் . உள்ளே எவ்ளோ நேரம் இருக்கலாம் ?
10 நிமிசம்
ஒரு அரை மணி நேரம் இருந்துக்கவா?
எதுக்கு ?\
\
கேர்ள் ஃபிரண்டோட வந்திருக்கேன்
11 அம்மாவுக்கு கீமோதெரஃபி கொடுக்கும் வரை உயிரோடு இருப்பாங்க ., உயிரோடு இருக்கும் வரை கீமோதெரஃபி கொடுக்கலாம்
12 மலைகளூம் , காடுகளும் தான் மூலிகைகளின் கருவறை
13 பார்த்த்தா பச்சிலை மருந்து பத்திக்கிட்டா வெடி மருந்து
14 டேய் ஸ்டுப்பிட்டு
என் பேரு ஸ்டுப்பிட் இல்லீங்க ராஸ்கோலு
15 எல்லா மாலைகளூக்குப்பின்னாலும் ஒரு மலர் வளையம் இருக்கு
16 போராளிக்குக்கொஞ்சம் பொறுமையும் முக்கியம்
17 அறிவை யாராலும் அழிக்கவும் முடியாது , திருடவும் முடியாது
18 ஆயிரம் அருகம்புல் அழிஞ்சாதான் ஒரு ஆலமரம் வளரும், 1000 அறிவாளிகள் அழிந்தால் தான் ஒரு முட்டாள் பயல் ஆட்சிக்கு வர முடியும்
19 எந்த வியாதிக்கும் அமெரிக்காவில் தான் மருந்து / தீர்வுன்னா ஏழைங்க சாவதா?
20 படைப்பாளி சாகலாம், ஆனா படைப்பு சாகக்கூடாது
21 எந்த ஒரு தீய சக்தியையும் அழிக்க ஆண்டவன் ஒரு ஆயுதத்தைப்படைச்சிருப்பாரு
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சித்த வைத்தியத்தின் பெருமைகளை சொல்வது சரி , ஆனால் அதற்காக ஆங்கிலேயெ மருத்துவத்தை மட்டம் தட்டுவது தவறு
2 ஒரு வேரைக்காட்டி மதம் கொண்ட யானையை நிறுத்துவது எல்லாம் டுபாக்கூர் ரகம்
3 சித்த வைத்திய , ஆயுர்வேத வைத்தியக்கூடங்களில் மக்கள் அதிகம் வருவதில்லை . ஆங்கிலேய மருத்துவமனைகளில் தான் கூட்டம் அலை மோதுகிறது காரணம் உடனடி தீர்வு கிடைப்பதால் , இதை உணராமல் வைக்கப்பட்ட காட்சிகள்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - யூ
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கமர்ஷியல் படத்துக்குரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஜாலியாக ஒரு படம் , பார்க்கலாம், ஆனந்த விகடன் மார்க் 41 . ரேட்டிங்க் 2.5 / 5
Aghathiyaa | |
---|---|
![]() Theatrical release poster | |
Directed by | Pa. Vijay |
Written by | Pa. Vijay |
Produced by |
|
Starring | |
Cinematography | Deepak Kumar Padhy |
Edited by | San Lokesh |
Music by | Yuvan Shankar Raja |
Production companies |
|
Distributed by | PVR Inox Pictures |
Release date |
|
Running time | 135 minutes[1] |
Country | India |
Language | Tamil |
Box office | ₹2.15 crore[2] |