ஆனந்த விகடன் பத்திரிக்கையில் பணியாற்றும்போதே பிரமாதமான ஆர்ட்டிக்கிள்ஸ் எழுதி மக்கள் மனம் கவர்ந்த சுசி கணேசன் இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக பம்பாய் , இருவர் , உயிரே ( தில் ஸே ) ஆகிய படங்களில் பணியாற்றினார். இவரது முதல் படமே ஃபைவ் ஸ்டார் தான் . இது தமிழக அரசின் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது .. சினேகா அறிமுகம் ஆன விரும்புகிறேன் 2004 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்றுத்தந்தது . 2003 ம் ஆண்டில் ரிலீஸ் ஆன திருட்டுப்பயலே தமிழக அரசின் சிறந்த படத்துக்கான விருதைப்பெற்றதோடு கமர்ஷியலாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்தது . மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆன கந்தசாமி அட்டர் ஃபிளாப் படமாக அமைந்ததால் அதற்குப்பின் இவருக்கு எல்லாமே சறுக்கல் படங்களாக அமைந்தன
ஸ்பாய்லர் அலெர்ட்
காலேஜ் நண்பர்கள் ஐந்து பேர், அதில் மூன்று ஆண்கள், இரு பெண்கள் . இந்த ஒன்லைனைக்கேட்டதும் உங்கள் கற்பனையில் எழும் கதையே இதில் இல்லை
ஐந்து பேரும் ஒரே கம்பெனியில் ஒன்றாக வேலை செய்ய ஆசைப்படுகிறார்கள் . அதற்காக சில வேலை வாய்ப்பையும் இழக்கிறார்கள் . அவர்கள் ஆசைபப்படி ஒரே கம்பெனியில் வேலை கிடைக்கும்போது அந்த ஐவரில் ஒருவனுக்கு மட்டும் கம்பெனியின் மும்பை பிராஞ்ச்சில் போஸ்ட் கேட்க சென்னை பிராஞ்ச்சில் போஸ்ட் கிடைத்த மற்ற நான்கு பேரும் திடுக்கிடுகிறார்கள்
கிராமத்தில் அப்பாவின் வற்புறுத்தலால் ஒரு கிரமாத்துப்பெண்னை திருமணம் முடித்த கையோடு அவளை அங்கேயே விட்டு விட்டு இங்கே வந்திருக்கும் நண்பன் அந்த அவமானத்தை மறைக்கத்தான் இவர்களோடு பணி புரிய ஆசைப்படவில்லை என தெரிகிறது
அந்த ஐந்து பேரில் மற்ற இரு பெண்களுக்கும் ஒரு ஆணுக்கும் வெவ்வேறு இடத்தில் திருமணம் முடிகிறது
சம்பவம் நடந்து இரு வருடங்கள் கழித்து நாயகன் ரயிலில் ஒரு பெண்ணைப்பார்த்து காதல் கொள்கிறான். நாயகி பணி புரியும் இடத்திற்கு அடிக்கடி வந்து பழக்கம் வைத்துக்கொள்கிறான். நாயகியின் வீட்டுக்கு தன் நண்பர்களுடன் வந்து பிரப்போஸ் பண்ண நினைக்கும் தருணத்தில் தான் நாயகி தங்கள் ஓடிப்போன நண்பனின் மனைவி என தெரிகிறது
அதிர்ச்சி அடைந்த அனைவரும் ஓடிப்போன நண்பனைக்கண்டு பிடித்து நாயகியிடன் சேர்த்து வைக்க முடிவெடுக்கிறார்கள்
ஓடிப்போன நண்பனை வில்லன் என வைத்துக்கொள்வோம், நாயகி மீது ஆசைப்படும் நண்பனை நாயகன் என வைத்துக்கொள்வோம், இப்போது நாயகன், நாயகி , வில்லன் என முக்கோண சிக்கல் கதை தான் மீதி திரைக்கதை
நாயகனாக பிரசன்னா அருமையான நடிப்பு . நாயகி தன் நண்பனின் மனைவி என தெரிந்து அதிர்ச்சி காட்டும் இடம் கச்சிதம் . ரயிலில் பாடும் காட்சியில் இவரது நடன அசைவுகள் நளினம்
ஹாலிவுட்டின் சிறந்த உதட்டழகி என அஃபிஷியலாக அறிவிக்கப்பட்ட ஏஞ்சலீனா ஜூலியின் தங்கையோ என வியக்க வைக்கும் கோலிவுட்டின் உதட்டழகி கனிகாவின் லிப்ஸ் க்ளோசப் ஷாட்ஸ் கலக்கல் ரகம், ஒளிப்பதிவாளர் ரசனையோ ரசனை . ரயிலில் நாயகனுடன் காம்போ காட்சிகள் , ஷாப்பிங் காம்ப்ளெக்சில் மேனேஜராகக்காட்டும் கம்பீரம் , கிராமத்தில் வாளுடன் கிராமத்தில் காட்டும் க்ளைமாக்ஸ் வீரம் என படம் முழுக்க நாயகிக்கு ஸ்கோப் உள்ள கதை , கனிகா உணர்ந்து நடித்திருக்கிறார்
வில்லனாக கிருஷ்ணா கனகச்சிதம், க்ளைமாக்சில் அவரது மாறுபட்ட கெட்டப் அடடே போட வைக்கிறது
மற்ற நண்பர்களாக சந்தியா பிரகாஷ் , மங்கை , கார்த்திக் மூவரும் ஓக்கே ரகம்
வில்லனின் அப்பாவாக உதிரிப்பூக்கள்விஜயன் அருமையான நடிப்பு, இவர் குணச்சித்திரம் , வில்லத்தனம் , நாயகன் என எந்த கேரக்டர் கிடைத்தாலும் அதில் முத்திரை பதிப்பவர்
டிடிஆர் ஆக சிட்டி பாபு ஒரே ஒரு சீனில் காமெடிக்கு /
ஸ்ரீராம் பரசுராம், அனுராதா ஸ்ரீராம் இருவரும் தான் இசை எல்லாப்பாடல்களும் செம ஹிட் , மணி ரத்னம் படம் பார்ப்பது போல் இருக்கிறது பிஜிஎம் கச்சிதம்
ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில் காட்சிகள் கலர் ஃபுல்
வெளிநாட்டுக்காட்சிகள் கண்ணுக்குக்குளுமை
ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் கடைசி 30 நிமிடங்கள் தவிர்த்து அனைத்தும் கச்சிதம் இரண்டரை மணி நேரம் படம் ஓடுது ,
சபாஷ் டைரக்டர்
1 தன் விருப்பத்துக்கு மாறாக கிராமத்துப்பெண்ணை அப்பாவின் வற்புறுத்தலால் திருமணம் செய்யும் நபர் மண மேடையில் பெண்ணைப்பார்க்கும்போது அங்கே கல்யாணக்கோலத்தில் கண்டிஷன் ஆன அப்பா உட்கார்ந்திருப்பது போல் கற்பனை செய்வது
2 படம் ஆரம்பித்த முதல் 20 நிமிடங்களிலேயே அடுத்தடுத்து 3 கொண்டாட்ட பாடல்களுடன் மணிரத்னம் பாணியில் ஜாலி வாலி பட்டாசு
3 பிரசன்ன கனிகாவை ரயிலில் பார்த்த நிமிடமே விருப்பப்பட்டு பின் பழகிய பின் அவரை நினைத்து துள்ளாட்டத்துடன் பாடும் மெகா ஹிட் மெலோடி சாங்க்,,, அந்தக்காட்சியில் கனிகாவுக்கான க்ளோசப் ஷாட்கள் , பிரசன்னாவின் நடிப்பு
4 நாயகன் ஒருதலையாய் காதலித்த பெண் நண்பனின் மனைவி என்று அறிந்ததும் தான் கொண்டு வந்த மியூசிக் கிஃப்டை தராமல் மறைத்து வைக்க முற்படும்போது அது எதேச்சையாக கீழே விழுந்து ” ஈஸ்வரி உன்னைக்கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்” என ஓப்பன் ஆகி பாட்டு வரி வரும்போது நாயகியும் , அவள் குடும்பத்தாரும் அதிர்ச்சி ஆவது , நண்பர்கள் முகம் சுருங்கிப்போவது
5 நாயகி கிஃப்டாகத்தந்த பேண்ட் சர்ட்டை ஹேங்கருடன் அந்தரத்தில் தொங்க விட கற்பனையில் அந்த டிரஸுக்குள் இருந்து நாயகி சோளக்கொல்லை பொம்மை போல முளைத்து வந்து டான்ஸ் ஆடும் காட்சி
6 நிச்சயக்கப்பட்ட திருமணங்களில் இரு தரப்பு சம்மதமும் பெற வேண்டும், அப்படி செய்யாமல் நடக்கும் திருமணங்கள் ஆபத்தே என்ற கதைக்கருவை கமர்ஷியலாக சொன்ன விதம் அருமை
செம ஹிட் சாங்க்ஸ்
1 சண்டே... ( ஓப்பனிங் சாங் கொண்டாட்ட பாடல் )
2 எங்களுக்கு ( ஃபிரண்ட்ஸ் எஞ்சாய் மொமெண்ட் சாங்)
3 ஃபைவ் ஸ்டார் ஃபைவ் ஸ்டார் ஹொரே ஹுர்ரே ( நண்பர்கள் வேலை கிடைத்த சந்தோஷப்பாடல் )
4 ரயிலே ரயிலே ஒரு நிமிஷம் ( ஹீரோ ஹீரோயினை நினைத்துப்பாடும் மெலோடி)
5 ஈஸ்வரி உன்னைக்கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன், திரு திருடா திரு திரு திருடா தீஞ்சுவை தானடா ( லவ் ப்ரப்போஸ் ட்ரீம் சாங் )
6 எங்களுக்கு நல்ல காலம் இது ( இன்ஸ்ட்ரூமெண்ட்டல் ம்யூசிக் சாங்)
7 எங்கிருந்து வந்தாயடா எனை பாடுபடுத்த எனைத்தேடி எடுக்க
ரசித்த வசனங்கள்
1 ஆணும் பெண்ணும் சேர்ந்து பழகுனா அது காதலாதான் இருக்கனும்னு அவசியம் இல்லை
2 இங்கே பீச்சுக்கு வர்றவங்க பலர் நண்பர்களா வந்து காதலர்களா மாறிடறாங்க , அல்லது காதலர்களா வந்து நண்பர்களா பிரிஞ்சுடறாங்க
3 சமையல்காரான்னா அவ்ளோ கேவலமா? எல்லா ஹோட்டல்களிலும் ஆண் தான் சமையல், ஒரு ஹோட்டல்லயாவது பொம்பளை சமைச்சுப்பார்த்திருக்கீங்களா?
4 இத்தனை பேரு என்னைக்காதலிச்சப்ப என் கணவர் உங்களுக்கு மட்டும் ஏன் என்னைப்பிடிக்காம போச்சு ? அப்டினு கேட்கப்போறேன்
5 தொலைஞ்சு போனவனைக்கண்டு பிடிக்கலாம், ஆனா மறைஞ்சு நிக்கறவனை எப்படிக்கண்டுபிடிக்க ?
6 தொலைஞ்சு போன புருசனைக்கண்டு பிடிக்கப்போறோம்கற சந்தோஷத்தை விட ஜாலியா ஃபாரீன் டூர் சுத்திப்பார்க்கலாம்கற சந்தோஷம் தான் அதிகம், இல்லையா?
சரி , நான் வர்ல
7 அப்பன் மகனுக்கு செஞ்சதை , அண்ணன் தங்கைக்கு செஞ்சதை சொல்லிக்காட்டக்கூடாது
8 கோபம் வந்தா கொட்டித்தீர்ப்பதுதான் கிராமத்து அப்பாக்களின் பழக்கம்
9 உலகத்துல சந்தேகப்படாத புருசன் கிடைச்சுட்டா அதை விட சந்தோஷம் பெண்ணுக்கு வேற இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 தனக்கு கிராமத்துக்குப்போக விருப்பம் இல்லை என்று கூறும் நண்பனை வலுக்கட்டாயமாக ரயில் ஏற்றி அனுப்பும் நண்பர்கள் அவன் பாதி வழியில் இறங்கி ரூட் மாற வாய்ப்புண்டு என்பதை ஏன் மறந்தார்கள்:? யாராவது ஒருவர் அவர் கூட போய் விட்டு வந்திருக்கலாமே? கதைப்படி அவர் பாதி வழிலயே இறங்கிடறார்
2 நாயகி தான் அந்த ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மேனேஜர் , அவரது ஃபோட்டோ வை டெவலப் பண்ண ஹீரோ அவரது ஃபோட்டோஷாப்பிலேயே கொடுக்கிறார். அதை டெவலப் பண்ணி பிரிண்ட் போட்ட ஆள் மேனேஜரிடம் அதை தெரிவிக்க மாட்டாரா? அட்லீஸ்ட் இது மேனேஜர் ஃபோட்டோ ஆச்சே? என வியக்க மாட்டாரா?
3 விஜயன் தற்கொலை செய்ய முயற்சிக்கும் காட்சி உதிரிப்பூக்கள் க்ளைமாக்ஸ் காட்சியை நினைவுபடுத்துகிறது. அதைத்தவிர்த்திருக்கலாம்.அந்த தற்கொலையால் மகன் ஃபாரீனில் இருந்து சாவு சடங்குக்கு திரும்பி வருவதாகக்காட்டி இருந்தால் கூட ஏதாவது பிரயோஜனமாக இருந்திருக்கும், அதுவும் இல்லை என்பதால் அந்தக்காட்சி தண்டம்தான்’
4 படத்தின் கடைசி அரை மணி நேரம் தேடுதல் வேட்டை என்பதால் கொஞ்சம் போர் அடிக்கிறது, இதே போல் திரைக்கதை அம்சம் கொண்ட ஆறு மெழுகுவர்த்திகள் , உட்பட பல படங்கள் அந்த ஸ்லோனெஸ் காட்சிகள் கொண்ட படங்கள் தான்
5 நாயகியின் கணவன் கடைசி வரை தன் தவறை உணர்ந்ததாகவே தெரியவில்லை . அவனுக்கு ஒரு படிப்பினைக்காட்சி வைத்திருக்கலாம்
6 படம் முழுக்க தன் கணவனைக்காண ஆவலாக இருந்த நாயகி கணவனின் யோக்யதை தெரிந்ததும் இனி நான் எதுக்காக அவனுக்காக அழனும் என ஒரே வசனத்தில் பல்டி அடிப்பது கொஞ்சம் செயற்கை தட்டும் காட்சியாக இருந்தது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்- க்ளீன் ய்யூ சர்ர்டிஃபிகேட் ஃபிலிம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ரொமாண்ஸ் பட ரசிகர்கள் , மணிரத்னம் ரசிகர்கள் , கனிகா ரசிகர்கள் பார்க்கலாம், ஜாலியான டைம் பாஸ் லவ் மூவி , ரேட்டிங் 3.25 / 5